Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மயக்கத்திற்குரிய மந்திரமே!
மயக்கத்திற்குரிய மந்திரமே!
மயக்கத்திற்குரிய மந்திரமே!
Ebook125 pages44 minutes

மயக்கத்திற்குரிய மந்திரமே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக வரும் என அறிவிப்பு வந்தது.
“என்னடா கபி... ஒரு மணி நேரம் லேட்டுங்கறாங்க?” இளங்கோ கவலையாகக் கேட்க,
“வரட்டுமே... இப்ப என்ன? பள்ளிக்கூடம், காலேஜ், ஆபீசுன்னு எத்தனையோ தடவை நாம லேட்டா போயிருக்கோம். ஆனா மத்தவங்க லேட் பண்ணினா எரிச்சல் வருது. அதுல இந்த ட்ரெயினும் ஒண்ணு “ என்றான் கபிலன்.
“சரி... உனக்குப் படிக்க ஏதாவது புத்தகம் வாங்கிட்டு வரட்டா.”
“வாங்கிட்டு வா.”
இளங்கோ பக்கத்திலிருந்த புத்தகக் கடையிலிருந்து அவனுக்கு வேண்டிய வார, மாத பத்திரிக்கைகளை வாங்கிக் கொண்டு வந்தான்.
அவற்றை வாங்கிப் பையில் வைத்துவிட்டு ஒரு பத்திரிகையை மட்டும் பிரித்தவாறே கபிலன், “அண்ணா... அம்மா ரொம்ப கவலைப்படறாங்க” என்றான்.
“அதான் தெரிஞ்ச விஷயமாச்சே! நீ பக்கத்திலேயே இருக்கணும்னு ஆசைப்படறாங்க. ஒரு ஆறு மாசம் அங்க இருந்துட்டு திரும்ப சென்னைக்கே வர முயற்சி பண்ணு.”
“அம்மா என் பிரிவுக்காக வருத்தப்படறது உண்மைதான். அதை விட அதிகமா உன்னை நினைச்சு வருத்தப்படுறாங்க.”
இளங்கோ அமைதியாக இருந்தான்.
“நீ இப்படிப் பிடிவாதமா கல்யாணமே வேண்டாம்னு இருந்தா எப்படி? நேத்து நீ அப்படி நடந்துக்கிட்டிருக்கக் கூடாது.இளங்கோவின் முகம் மாறியது. முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
நேற்று நடந்த சம்பவம் கண் முன்னால் ஓடியது.
அவன் அலுவலகத்திலிருந்து வந்தபோது தரகர் கிருஷ்ணராஜன் கூடத்தில் அமர்ந்து அப்பாவுடன் பேசி கொண்டிருந்தார்.
அப்பா வரச் சொல்லியிருப்பார் போலும்.
“பெரியவனுக்கு நல்ல இடமா பாருங்க. எப்படியும் இந்த வருஷத்துக்குள்ள அவனுடைய கல்யாணத்தை முடிச்சுடணும். சின்னப் பிள்ளைக்கும் வயசாகுது. அவனுக்கும் அடுத்த வருஷத்துல முடிச்சுடணும்.”
“சந்தோஷமா பார்த்துடலாம். சின்னப் பிள்ளை கூட வெளிநாட்லயிருந்து வந்துட்ட மாதிரி தெரியுது. நேத்து வழியில் பார்த்தேன்.”
“ஆமா! கம்பெனி விஷயமா வெளிநாடு போயிருந்தான். ரெண்டு வருஷ ட்ரெயினிங்... இப்போ நாக்பூர்ல இருக்கற அவனோட கம்பெனியோட பிராஞ்சுக்கு ப்ரமோஷன்ல போறான்.”
“அப்படியா சந்தோஷம்... நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க. ரெண்டு பிள்ளைகளுக்குமே பொண்ணு பார்த்துடறேன். ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா நடத்திடலாம்.”
கணேசன் சிரித்தார்.
“சின்னவன் கபிலனுக்கு சொந்தத்திலேயே பொண்ணு இருக்கு. என் அக்கா பொண்ணு. அந்தப் பொண்னை சீக்கிரம் இந்த வீட்டுக்கு அனுப்பிடணும்னு நினைக்கிறாங்க. பெரியவனுக்கு கல்யாணம் முடிச்சாத்தானே சின்னவனுக்கு பண்ண முடியும்.”
“சரிதான்.”
அம்சவேணி காபியும் சிற்றுண்டியும் கொண்டு வந்து வைத்தாள்.
“அம்சா... இளங்கோவோட ஜாதகத்தை கொண்டு வா.”
உள்ளே சென்ற அம்சவேணி, சில நிமிடங்களில் ஜாதகத்துடன் வந்தாள்.“இந்தாங்க. கையோட ஜாதகத்தையும் கொண்டு போங்க. எந்த வரனாயிருந்தாலும் முதல்ல பொண்ணு வீட்ல ஜாதகத்தைக் கொடுங்கள். பொருந்தியிருந்தா மட்டும் நாம் போய் பார்க்கலாம். அதே மாதிரி பொண்ணோட ஜாதகத்தை முதல்ல வாங்கிட்டு வாங்க...”
அதே சமயம் உள்ளே வந்த இளங்கோ நேராக தரகரிடம் சென்றான்.
“கொஞ்சம் அந்த ஜாதகத்தைக் கொடுங்க” என அவருடைய கையிலிருந்து ஜாதகத்தை வாங்கிய இளங்கோ யாருமே எதிர்பாராதவண்ணம் சுக்கல் சுக்கலாகக் கிழித்தான்.
அனைவர் முகத்திலும் அதிர்ச்சி. தரகர் கிட்டத்தட்ட மிரண்டே போய்விட்டார்.
“இதப்பாருங்க.... நீங்க எந்தப் பொண்ணையும் எனக்காகப் பார்க்க வேண்டாம்.”
சட்டென்று மறுநிமிடம் அந்த இடத்தை விட்டு அகன்றான்.
அதிர்ச்சி விலகாத கண்களோடு தன்னைப் பார்த்த தரகரைப் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தார் கணேசன்.
அம்சவேணி கலங்கிவிட்ட கண்களோடு சட்டென்று சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
தரகர் மெளனமாக எழுந்து வெளியே வந்தார். அவருடன் வந்தார் கணேசன்.
தோட்டத்தில் இறங்கி நடந்த தரகர் கூடவே வந்த கணேசனைப் பார்த்துக் கேட்டார்.
“பையன் ஏன் இப்படி நடந்துக்கறான். கல்யாணமே வேண்டாம்னு சொல்றான். ஜாதகத்தைக் கிழிச்சுப் போட்டுட்டான். அவனோட விருப்பத்துக்கு மாறா நீங்க பொண்ணு பார்க்கறீங்களா? பையன் யாரையாவது காதலிக்கிறானா? அந்தப் பொண்ணை உங்களுக்குப் பிடிக்கலையா?”
“இல்ல... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை... நான் நாளைக்கு அவனோட ஜாதகத்தோட இன்னொரு காப்பி எடுத்து உங்கக்கிட்டே கொண்டு வந்து தர்றேன். நீங்க பொண்ணு பாருங்க.”
“பையன் இப்படிச் சொல்றானே!”
“அவன் அப்படித்தான் சொல்லுவான். அவன் மனசை நாங்க மாத்திடுவோம். நீங்க எதையும் மனசுல போட்டுக்காம நல்ல பொண்ணாப் பாருங்க” என்றார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
மயக்கத்திற்குரிய மந்திரமே!

Read more from ஆர்.சுமதி

Related to மயக்கத்திற்குரிய மந்திரமே!

Related ebooks

Reviews for மயக்கத்திற்குரிய மந்திரமே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மயக்கத்திற்குரிய மந்திரமே! - ஆர்.சுமதி

    1

    "அவசியம் நீ போய்த்தான் ஆகணுமா?" என்றபடி வந்து நின்ற அம்மாவை நிமிர்ந்து பார்த்தான் கபிலன்.

    அம்மாவின் கண்களில் வண்டி வண்டியாய் ஏக்கம்,

    ரெயில் டிக்கெட்டை எடுத்து ஒரு முறை சரி பார்த்துக் கொண்டிருந்த கபிலன் அதை சூட்கேஸில் வைத்து மூடிவிட்டு அம்மாவைப் பார்த்துச் சிரித்தான்.

    அம்மா... என்னம்மா நீ? என்னைப் பெரிய படிப்பு படிக்க வச்சதெல்லாம் எதுக்கு? பக்கத்திலே உட்கார் வச்சுக்கவா? நான் வேலைக்குப் போக வேண்டாமா?

    யார் வேண்டாம்னு சொன்னது? இங்கயே சென்னைலேயே இருந்துடறேன்னு மேலிடத்துல சொல்லி பாரேன்.

    அட... என்னம்மா நீ? ரெண்டு வருஷம் ட்ரெயினிங்க்காக வெளிநாடு போயிருந்தேன். அப்பக்கூட நல்லாத் நானே இருந்தே! இப்போ இந்தியாவுக்குள்ள தானே இருக்கப் போறேன். இதுக்குப் போய் வருத்தப்படறே?

    அம்சவேணி கண்கள் கலங்கிவிடும் நிலைக்கு வந்தாள்.

    ‘நீ வெளிநாட்டுல இருக்கும்போது ட்ரெயினிங் முடிஞ்சு வந்து சென்னையிலேயே இருப்பேன்னு பொறுமையா இருந்தேன். ஆனா... நீ என்னடான்னா வந்ததும் வராததுமா... நாக்பூர் கிளைக்கு மாத்திட்டாங்கன்னு குண்டைத் தூக்கிப் போட்டுட்டே... சரி... என் கூட ஒரு பதது இருபது நாளாவது இருந்துட்டுப் போவேன்னு பாத்தா இப்படி உடனே கிளம்பிப் போறே..."

    "அம்மா... என்னம்மா நீ? சின்னப் பிள்ளை மாதிரி.

    இந்த தேதியில ஜாயின் பண்ணணும்னு மேலிடத்திலேர்ந்து உத்தரவு. அங்கே எனக்காக வேலைகள் காத்துக்கிட்டிருக்கு. நான் போய்தான் புதுப் புது வேலைசுளை ஆரம்பிக்கணும். இங்கே உனக்கு பக்கத்திலேயே அண்ணன் இருக்கான். அப்பா இருக்கார். கூப்பிடற துரத்துல அக்கா இருக்கா. என்னமோ யாருமே இல்லாத மாதிரி பேசறே?"

    ஆமா! உன் அக்காக்காரிதானே! அவ தன் புருஷனை விட்டு ஒரு நிமிஷம் கூட அங்க இங்க நகர மாட்டா. வந்தா சுடு தண்ணிய கால்ல கொட்டிக்கிட்ட மாதிரி ஓடுவா.

    இப்படி ஒரு பதிபக்தியான பெண்ணைப் பெத்ததுக்கு நீ பெருமைப்பட வேண்டாமா? எத்தனைப் பொண்ணுங்க அம்மா வீட்ல வந்து மாசக்கணக்கா டேரா போடுறாங்க.

    "ஆமாடா... நீதான் மெச்சிக்கணும். இவ இப்படின்ன வீட்ல இருக்கானே உன் அண்ணன் அவன் சுத்த மோசம் நல்ல காலத்திலேயே பேசமாட்டான். அதிலும் இப்பவெல்லாம் ரொம்ப மோசம். வீடே சூன்யமாயிருக்குற மாதிரி இருக்கு. நீ இருந்தா வீடு கலகலப்பாயிருக்கும்.

    அதுக்காக நான் வேலைக்குப் போகாம வீட்லயே இருக்க முடியுமா? அதான் டி.வி. இருக்கே. பார்த்தா பொழுது ஓடிடப் போகுது.

    அவன் சொன்ன அதே நேரம் அப்பா கணேசன் கையில் அர்ச்சனைக் கூடையுடன் உள்ளே வந்தார்.

    கபிலா... எல்லாம் மறக்காம எடுத்து வச்சுக்கிட்டியா? டிக்கெட்டும் பணமும் பத்திரம்.

    எடுத்து வச்சுக்கிட்டேம்பா.

    இந்தா விபூதி பூசிக்க. உன் பேர்ல அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன்.

    கணேசன் விபூதியை எடுத்து பயபக்தியுடன் மகனுடைய நெற்றியில் பூசினார்.

    பிரயாணம் நல்லபடியா அமையணும்.

    அப்பா... அண்ணன் எங்கே?

    "என் கூடத்தான் கோவிலுக்கு வந்தான். அப்படியே கையோட டாக்ஸி கொண்டு வர்றேன்னு போயிருக்கான்

    அப்பா சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது.

    என்னமோ டாக்ஸி கொண்டு வர்றான்னு சொன்னீங்க... ஆட்டோ கொண்டு வந்திருக்கான்.

    அம்மா வாசலை எட்டிப் பார்த்தாள்.

    ஆட்டோவிலிருந்து பத்மினி இறங்கினாள். கையிரண் டிலும் பெரிய, பெரிய பை.

    ஆட்டோக்காரனுக்கு பணத்தைக் கொடுத்து விட்டு தூக்க முடியாமல் இரண்டு பைகளையும் தூக்கிக் கொண்டு படியேறினாள்.

    கணேசனின் ஒரே மகள். எல்லோருக்கும் மூத்தவள். கல்லூரிப் படிப்பு முடிந்ததுமே நல்ல வரனாக வந்தான் சிவநேசன் என்று முடித்து விட்டார்.

    சிவநேசனுக்கு கூட்டுறவு வங்கி ஒன்றில் வேலை. போதுமான சம்பளம். ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்.

    பத்மினி சிவநேசனின் மேல் உயிரையே வைத்திருக்கிறாள். அம்மா வீடு பக்கத்தில்தான் என்றாலும் பொசுக் பொசுக்கென வந்து நிற்க மாட்டாள்,

    தூக்க முடியாமல் பைகளைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்த பத்மினியை அம்மா வரவேற்றாள்.

    என்னடி இது? இவ்வளவு பெரிய பைகளைத் தூக்கிட்டு வந்திருக்கே அம்மா கேட்கவும் பைகளை வைத்து விட்டு சோபாவில் அமர்ந்தாள் பத்மினி.

    ‘அப்பா... ஒரே டயர்டா இருக்கு. என்னடா கபி... கிளம்பிட்டியா?"

    ஆமாக்கா... கிளம்பிட்டேன். ஏழரைக்கு ட்ரெயின். இளங்கோ டாக்ஸி கொண்டு வரப் போயிருக்கான்.

    அதான் விழுந்தடிச்சுக்கிட்டு ஓடி வர்றேன். நான் போறதுக்குள்ள நீ பாட்டுக்குப் போய்ட்டின்னா... நான் ரெயில்வே ஸ்டேஷன் வரை ஓடி வந்திருக்கணும். இந்த மூட்டைகளைத் தூக்கிட்டு.

    என்ன கொண்டு வந்திருக்கே?

    என்ன கொண்டு வந்திருக்கேனா? எல்லாம் உனகுத்தான்.

    அக்கா ஒவ்வொரு எவர்சில்வர் டப்பாவாக எடுத்து வெளியே வைக்க அம்மா அப்படியே தரையில் அமர்ந்து ஆசையாக ஒவ்வொன்றாகத் திறந்தாள்.

    முறுக்கு... அதிரசம்... மைசூர்பாகு, தேங்காய் பர்பி ரவா லட்டு... என்னங்க இந்தப் பொண்ணைப் பாருங்க என்னன்னமோ பண்ணிக் கொண்டு வந்திருக்கு.

    எல்லாம் கபிலனுக்குத்தான்.

    அதிரசம் ரொம்ப அருமையாயிருக்குடி. எனக்கு கூட இவ்வளவு நல்லா பண்ண வராது. யாரு மாவு இடிச்சு கொடுத்தது? உன் மாமியாரா? இத்தனை பக்குவமா வந்திருக்கு.

    ம்க்கும்! என் மாமியாருக்குத்தானே? ஒரு மண்ணும் வராது. நானே பார்த்துப் பார்த்து செய்தேன்.

    அக்கா! நான் என்ன ட்ரெயின்ல முறுக்கும் அதிரசமும் விற்கப் போறேனா? இதையெல்லாம் எவன் எடுத்துட்டுப் போவான். உனக்கு வேற வேலையே இல்லையா? கபிலன் கடுப்படிக்க,

    "டேய்.. என்னடா நீ? பாவம் அவ உனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இதையெல்லாம் செய்து எடுத்துட்டு வந்திருக்கா. அவளைப் போய் திட்டறே? அப்பா மகனை அதட்டினார்.

    ராத்திரி பூரா தூங்காம இதையெல்லாம் நான் செய்து எடுத்துட்டு வந்தா எப்படிப் பேசறான் பாருங்க. வடநா டுப் பக்கம் போறான். நம்ம ஊரு முறுக்கு, அதிரசம் எல்லாம் அங்க கிடைக்குதோ என்னவோ... அதான் ஆசை ஆசையா செய்தேன்.

    அக்கா... உன் பாச மழையில நனைஞ்சுட்டேன். போற வழியிலேயே காய்ச்சல்னு படுத்துடப் போறேன்.

    வாசலில் டாக்ஸி சத்தம் கேட்டது. இளங்கோ டாக்ஸியிலிருந்து இறங்கினான்.

    இளங்கோ அச்சு அசலாக அம்மாவைப் போல் இருந்தான். பெண்ணாகப் பிறந்திருந்தால் பலருடைய வாழ்க்கையைப் பந்தாடியிருப்பான்.

    ஆனால் பெண்ணாகப் பிறந்த பத்மினியோ அப்பாவின் நிறம், ஜாடை, இதில் பத்மினிக்கு நிறையவே மனக்குறை உண்டு. கபிலனும் அப்பாவைப் போல்தான்.

    அந்த வீட்டின் அழகன் என்றால் அது இளங்கோதான்.

    கபிலா டாக்ஸி ரெடி. கிளம்பு... நேரமாயிடப் போகுது.

    கபிலன் கிளம்பி விட்டான். பத்மினி கொண்டு வந்திருந்த டப்பாக்கள் ஒரு சிலவற்றிலிருந்து ஒரு சிலவற்றை மட்டும் எடுத்து

    Enjoying the preview?
    Page 1 of 1