Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வேரினை வெறுக்கும் விழுதுகள்
வேரினை வெறுக்கும் விழுதுகள்
வேரினை வெறுக்கும் விழுதுகள்
Ebook125 pages46 minutes

வேரினை வெறுக்கும் விழுதுகள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“அம்மா!”
பலமாக அதிர்ந்தாள் ராதா .
‘என் அம்மா. என் அம்மாவை இவளுடைய அத்தை. என் அம்மாவா இரண்டாங்கல்யாணம் பண்ணிக் கொண்டாள்? நான் அப்பாவாக எண்ணிக்கொண்டிருப்பவர் என் அப்பா இல்லையா? அப்படியானால் சுந்தரமூர்த்தி என் தாயின் இரண்டாவது புருஷனா? என் அப்பா இல்லையா?
ராதாவின் இதயம் கசக்கிப் பிழியப்பட்டது. வாழ்க்கையில் கனவில் கூட அவள் நினைத்திருக்கமாட்டாள். எதிர்பாராத இந்த அதிர்ச்சி அவளை நடுங்க வைத்து விட்டது. இதுவரை அனுபவித்தறியாத ஒருவித பயங்கரமான உணர்வுகளை அவளின் உள்ளமும் உடம்பும் அனுபவித்தது. கால்கள் ஆயிரம் மால் ஓடி வந்ததை போல் தளர்வுற்று வலித்தன. கண்களில் கண்ணீர் கட்டிக் கொண்டது. வழிய மறுத்து வலித்தது. ஆர்த்தியின் எதிரே தன் உணர்வுகளை எப்படிக் கட்டுக் கட்டுப்படுத்துவதென தெரியாமல் தடுமாறினாள். அழுகை வெடித்து கண்ணீர் பீறிட்டு ஏதோ ஒரு நொடியில் வந்து விடும் போலிருந்தது நடுங்கும் கைவிரல்களை ஒன்றுடன் ஒன்று பிணைத்துக் கொண்டாள். பற்களை நறநறவென கடித்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது. நாக்கு மேல ஒட்டிக் கொண்டது. இனிமேல் பேசவே முடியாதோ என்றொரு எண்ணத்தை உண்டு பண்ணியது.
“என்னடி அதிர்ச்சியடைஞ்சு உட்கார்ந்திட்டே பார். என் அத்தை எவ்வளவு அழகாயிருக்காங்க. ஆனா... புத்திதான் சரியில்லை. ராணி மாதிரி இந்த வீட்ல இருந்திருக்கலாம். பாவம்... எங்க இருக்காங்களோ.”
ராதா மௌனமாகவே இருந்தாள். ஆர்த்தி மட்டும் ஏதேதோ பேசினாள். அத்தை பற்றிய விஷயத்தை விட்டுவிட்டு வேறு ஏதேதோ விஷயத்திற்க்குத் தாவினாள். போனவாரம் தொலைக்காட்சியில் போட்ட படத்தைப் பற்றிப் பேசினாள். அதில் சிவாஜி கணேசனின் நடிப்பைப் பற்றி புகழ்ந்தாள். வழக்கமாய் தன் பின்னாடி சுற்றும் பக்கத்துக் கல்லூரி ராஜேஷை இரண்டு நாளாய் காணாததைப் பற்றி பேசினாள். மறுநாள் நடக்கப் போகும்கிரிக்கெட் டெஸ்ட்கூட பார்க்க முடியாமல் டியூஷன் இடைஞ்சலாக இருப்பதை எண்ணி வருத்தப்பட்டாள். ஆனால் ராதாவின் மனம் எதிலும் லயிக்கவில்லை.
அவளின் மனம் சிதறிப் போயிருந்தது. எண்ணங்கள் எரிந்து போயிருந்தது. சிந்திக்க முடியாத அஃறிணையாக இருந்தாள்.
ஆர்த்தியின் தாய் காபி டிபனோடு மேலே வந்தாள். இருவரையும் சாப்பிடும்படி கூறிவிட்டு கீழிறங்கிப் போனாள். ஆர்த்தி சூடான அல்வாவை அவளிடம் நீட்டினாள். ராதாவால் அதை ருசிக்க முடியவில்லை. குமட்டிக் கொண்டு வந்தது. பெயருக்குக் கொஞ்சமாய் வாயில் போட்டு அப்படியே விழுங்கினாள். ராதா ஒரு மாதிரியாக இருப்பதைக் கண்டு ஆர்த்தி துணுக்குற்றாள்.
“ஏண்டி ஒருமாதிரி இருக்கே?” என்றாள்.
“ஒண்ணுமில்லே...” சமாளித்தாள் ராதா. பின் சிறிதுநேரம் கழித்து “ஆர்த்தி நான் கிளம்பறேன்” என்றாள்.
“என்னடி... அதுக்குள்ள? இப்ப போய் என்ன செய்யப் போறே. ஆறு மணிக்கு மேல போயேன்.
“இல்லடி, இன்னைக்கு டான்ஸ் க்ளாஸ் போகணும். மறந்து போய்ட்டேன். இப்ப திடிர்னு ஞாபகம் வந்தது. வரட்டுமா?”
“நீ கொடுத்து வச்சவடி ராதா. உங்க அப்பா உன்னை டான்ஸ் கத்துக்க அனுப்பறார். மியூசிக் கத்துக்க அனுப்பறார். ஆனா எங்கப்பா சுத்த மோசம். என்ன வசதியிருந்து என்ன புண்ணியம்? இதெல்லாம் பொம்பளை புள்ளைக்கு எதுக்கும்பார்.”
அவள் அப்படிச் சொன்னதும் சுந்தரமூர்த்தி கண்ணெதிரே வந்தார்.
‘என்னை டான்ஸ் க்ளாஸ் அனுப்புகிறார். மியூசிக் க்ளாஸ் அனுப்புகிறார். ஆனால் என் அப்பா இல்லையே.’
தொண்டையில் பந்தாய் ஏதோ உருண்டது.
“ஆர்த்தி நான் வர்றேன்” சொல்லிவிட்டு வெளியே வந்தாள். ஆர்த்தி தாயிடத்திலும் சொல்லிவிட்டு அவள் வெளியே வந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு சாலைக்கு வந்தாள். கால்கள் வீட்டை நோக்கி மிதித்தன

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
வேரினை வெறுக்கும் விழுதுகள்

Read more from ஆர்.சுமதி

Related to வேரினை வெறுக்கும் விழுதுகள்

Related ebooks

Reviews for வேரினை வெறுக்கும் விழுதுகள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வேரினை வெறுக்கும் விழுதுகள் - ஆர்.சுமதி

    1

    "ஏய்... ராதா..." மெல்ல கிசுகிசுத்தாள் பக்கத்திலிருந்த ஆர்த்தி.

    பேராசிரியை நடத்திக் கொண்டிருந்த படத்தில் கவனமாக இருந்த ராதா மெல்ல காகத்தைப் போல் தலையைப் பக்கவாட்டில் சாய்த்து ‘என்ன?’ என்பதைப் போல் புருவத்தை உயர்த்தி விழியால் வினவினாள்.

    பேராசிரியையின் குரலும் கரும்பலகையில் அவர் சுண்ணாம்புக் கட்டியால் எழுதும் ‘கீச்’ ஒலியும் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த அறையில் ஆர்த்தியின் குரல் ரகசிய தொனியில் ஒலித்தது.

    இன்னைக்கு ஜென்ஸ் காலேஜ்ல ஸ்டிரைக்காம்.

    ஏனாம்? மறுபடியும் விழியாலேயே வினவினாள் ராதா.

    பிரின்ஸ்பாலுக்கும் ஸ்டூடன்ஸூக்கும் ஏதோ பிரச்னையாம். சரியாத் தெரியலை. அநேகமா நம்ப காலேஜும் இன்னிக்கு லீவா இருக்குமின்னு நினைக்கிறேன்.

    அதுக்கென்ன, பேசாம பாடத்தை கவனி கிசுகிசுப்பான குரலில் சொல்லிவிட்டு ராதா பாடத்தை கவனிக்க ஆரம்பித்தாள்.

    ஆர்த்தியும் பாடத்தை கவிப்பதைப் போல் சற்று நேரம் மௌனமாகப் பேராசிரியையே பார்த்துக் கொண்டிருந்தாள். தோண தொணவென பேசும் வாய் அவளைப் பேசும்படி தொந்தரவு செய்தது.

    ராதா...

    என்னடி...

    இன்னிக்கு லீவா இருந்தா...

    கண்டிப்பா உன்கூட சினிமாவுக்கு வரமாட்டேன்.

    சினிமாவுக்கு வரவேணாம். என் வீட்டிற்கு வா.

    ஆர்த்தி இதைச் சொன்னதும் ராதா யோசிப்பதைப் போல் இருந்தாள்.

    என்ன யோசிக்கறே? வரலாமா வேண்டாமான்னா. நானும் காலேஜ்க்கு வந்த ஆன்னியிலேர்ந்து எங்க வீட்டுக்கு கூப்பிடறேன். ஒரு தடவையாவது வந்திருக்கியா? இது மூணாவது வருஷம். இன்னும் சில மாதத்துல காலேஜ் முடிஞ்சுடும். எங்க அம்மாக்கிட்ட உன்னைப்பத்தி தினமும் சொல்லிக்கிட்டிருக்கேன்.

    "சரிதான். நீ மட்டும் எங்க வீட்டுக்கு வந்திருக்கியா என்ன? பக்கத்துல எங்க அப்பாவோட ஆபீஸ்

    எங்க அப்பாகிட்ட மட்டும் பேசிட்டு அப்படியே ஓடிடுவே. நானும்தான் எங்க அம்மாகிட்ட தினமும் உன்னைப் பத்தி சொல்லுவேன். முதல்ல நீ எங்க வீட்டுக்கு வா. அப்புறம் நான் உங்க வீட்டுக்கு வர்றேன்.."

    இப்படி செஞ்சா என்ன?

    எப்படி

    காசை சுண்டிவிட்டு பார்ப்போம். தலை விழுந்தா நான் உங்க வீட்டுக்கு வர்றேன். பூ விழுந்தா நீ எங்க வீட்டுக்கு வரணும். சரியா?

    சரி...

    இவ்வளவு உரையாடலும் மற்றவர் காதில் விழாத வண்ணம் கிசுகிசுப்பாகவே நடந்தது.

    ஆர்த்தி தன கைப்பையைத் திறந்து அதிலிருந்து ஒரு ரூபாய் காசு ஒன்றை எடுத்தாள். சுண்டினாள். காசு அவளின் கையிலிருந்து நழுவி ‘சிலுங்’ கென்ற சத்தத்துடன் தரையில் விழுந்தது.

    பேராசிரியை சட்டென பாடத்தை நிறுத்தி ஆர்த்தியைப் பார்த்தாள்.

    ஆர்த்தி... என்னது?

    மேடம்... என்று நின்ற ஆர்த்தி ஆடு திருடியவளைப் போல் விழித்தாள். வகுப்பில் அனைவரின் கண்களும் அவளையே மொய்த்தது.

    வந்து காசு கைதவறி விழுந்துட்டு...

    "நீ என்ன ஒண்ணாவது ரெண்டாவது படிக்கறியா? கையில காசு வச்சுக்கிட்டு விளையாடறே. இது மூணாவது

    வருஷம். கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா க்ளாஸைவிட்டு வெளியே போ..."

    மேடம்...

    போன்னு சொன்னேன். பேராசிரியை தன் வாள் விழியினால் முறிக்க புத்தகங்களை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.

    ராதாவிற்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. ஜன்னல் வழியே ஆர்த்தியைப் பார்த்தாள். ஆர்த்தி பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு வெளியே நின்றாள்.

    அவளின் முகத்தைப் பார்த்ததும் ராதாவிற்கு பாவமாக இருந்தது. வகுப்பு முடிந்ததும் அனைவரும் சென்றுவிட ராதா தனது புத்தகங்களை அள்ளிக் கொண்டு எழுந்தாள். இடத்தைவிட்டு வந்து அந்தக் காசு ஓடிய இடத்தை அடைந்தாள். காசு அங்கே கிடந்தது. குனிந்து பார்த்தாள். பூ விழுந்திருந்தது. காசைக் கையில் எடுத்துக் கொண்டாள். வெளியே வந்தாள். வெளியே நின்று கொண்டிருந்த ஆர்த்தியின் அருகில் வந்து அவளுடைய தோளில் கை வைத்தாள்.

    ஏட்றீ கையை. எல்லாம் உன்னாலதான்.

    ஏய்... நானா காசைச் சுண்டிப் போடச் சொன்னேன்

    கோபமாக இருந்த ஆர்த்தியை ராதா ஆதரவாக அணைத்தாள்.

    நீ வரேன் வரலைன்னு சொல்லியிருந்தா நான் ஏண்டி காசை சுண்டறேன்.

    சரி... போகட்டும் விடு. தப்பு எம்மேலதான். மன்னிப்புக் கேட்டுக்கறேன். எதாவது தண்டனை வேணுமின்னாலும் கொடுத்திடு.

    தண்டனையா? தர்றேன். இப்ப இல்லே. சமயம் வரும்போது.

    சரி. காசுல பூ விழுந்திருந்தது. நான்தான் உங்க வீட்டுக்கு வரணும். ஆனா காலேஜ் லீவா என்னன்னு ஒண்ணும் தெரியலையே...

    அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே ஒருத்தி ஓடி வந்தாள்.

    ராதா இன்னிக்கு காலேஜ் லீவு. ஜென்ஸ் காலேஜ்ல ஸ்டிரைக்காம். ப்யூப் லீடர் எல்லாரையும் வீட்டுக்கு போகச் சொல்லிட்டா...

    ஐய்... ஜாலி... என குதித்தாள் ஆர்த்தி.

    அரைநாள் பாடம் போகுதேன்னு உனக்கு வருத்தமே கிடையாதா? என ஆர்த்தியைப் பார்த்து ராதா கேட்க ஆர்த்தி அலட்சியமாய் தோள்களைக் குலுக்கினாள்.

    போடி எனக்கு லெக்சரரே தேவை இல்லை. நானே பத்து பேருக்கு சொல்லிக் கொடுப்பேன்.

    ஓ... மூளையில் அவ்வளவு சரக்கு இருக்கா?

    ஆமா...

    அதான் நேத்து வச்சு டெஸ்ட்ல ஃபெயில் மார்க் வாங்கினியா?

    போடி. அது டெஸ்ட்தானே. பரீட்சையில் பாரு காலேஜ் ஃபர்ஸ்ட் நான்தான்.

    பார்ப்போம்.

    சரி... வா எங்க வீட்டுக்கு.

    போவோம். அதுக்கு முன்னாடி ஒரு போன் பண்ணி எங்க அப்பாக்கிட்ட விஷயத்தை சொல்லிடறேன். எங்க அப்பா மதியம் வீட்டுக்கு சாப்பிடப் போகும்போது சொல்லிடுவாரு. இல்லாட்டி எங்கம்மா தேடுவாங்க.

    சரி... வா... என ஆர்த்தி ராதாவின் தோளில் கைபோட்டு நடந்தாள்.

    இருவரும் கல்லூரியை விட்டு வந்தனர். பொது தொலைபேசி நிலையத்திற்கு வந்து ராதா தன் தந்தையுடன் பேசினாள்.

    அப்பா நான் ராதா பேசுறேன்.

    சொல்லும்மா. என்ன விஷயம். அவசரமா காலேஜ்க்கு ஏதாவது பணம் கட்டணுமா?

    அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா. இன்னிக்கு மதியானம் காலேஜ் லீவு.

    ஏம்மா.

    பக்கத்துல ஜென்ஸ் காலேஜ்ல ஏதோ பிரச்னையாம்.

    இந்த ஆம்பளைப் பசங்களே இப்படித்தாம்மா. நாலு நாளிக்குத் தொடர்ந்து காலேஜ் போனா அஞ்சாவது நாள் ஸ்டிரைக் பண்ணலைன்னா அவன்களுக்கு தலை வெடிச்சிடும்.

    அதனால நான் என் ஃபிரண்ட் ஆர்த்தி வீட்டுக்குப் போறேன். வர லேட்டானா அம்மாவைக் கவலைப்பட வேண்டாம்னு சொல்லுங்கப்பா.

    சரிம்மா.

    போனை வச்சுடட்டா.

    வை...

    போனை வைத்துவிட்டு வெளியே வந்தாள். இருவரும் அவரவர் சைக்கிளில் ஏறி அமர்ந்து மிதிக்கத் தொடங்கினர். ஆர்த்தி கேட்டாள்.

    ராதா... உங்க அப்பா ரொம்ப கண்டிப்பா?

    இல்லடி. எங்க அம்மா ரொம்ப கண்டிப்பு. நான் எங்க அப்பா செல்லம். எங்கப்பா என் பக்கம். ஏதாவது ஒண்ணுன்னா எங்க அம்மாதான் என்னைக் கண்டிப்பாங்க. எங்க அப்பாவை வச்சு நான் தப்பிச்சுடுவேன்.

    இப்படிப் பேசிக் கொண்டே அவர்கள் சைக்கிளை மிதித்தனர். ஆர்த்தியின் வீட்டினை அவர்கள் அடைவதற்குள் அவர்களின் அழகைக் கொஞ்சமாய் வர்ணித்து விடலாம்.

    ஆர்த்தியைவிட பளிச்சென தெரிந்தாள் ராதா. கோதுமை நிறத்தில் மேனி இருந்தாலும் ஆப்பிள் நிறத்தில் கன்னங்கள் இருந்தன. அளவான உயரம், சரியான சதைப்பிடிப்பில் இருந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1