Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Birundhavanam
En Birundhavanam
En Birundhavanam
Ebook312 pages1 hour

En Birundhavanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ராதா, முரளி சிறுவயதில் தாயை பறிகொடுத்து, சித்தியின் கொடுமையால் வளர்ந்தவர்கள் ஒருபுறம். தாயின் பாசத்திலும் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவர்கள் வாசுவும், ராதிகாவும் மறுபுறம். எல்லாத்தையும் போல இவர்களின் தாய் தன் குழந்தைகள் வசதியான வீட்டில் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை. இவர்களுக்குள் என்ன நடக்கிறது இவர்களின் வாழ்வில் நடந்த மாறுதல்கள் என்ன! இவர்களின் வாழ்வு பிருந்தாவனமாய் மாறியதா? இறுதியில் வனத்தின் பூத்த மலர்களின் நிலை என்ன என்பதை வாசித்து அறியலாம்.

Languageதமிழ்
Release dateJan 22, 2021
ISBN6580147807475
En Birundhavanam

Read more from A. Rajeshwari

Related to En Birundhavanam

Related ebooks

Reviews for En Birundhavanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Birundhavanam - A. Rajeshwari

    https://www.pustaka.co.in

    என் பிருந்தாவனம்

    En Birundhavanam

    Author:

    அ. ராஜேஸ்வரி

    A. Rajeshwari

    For more books

    https://www.pustaka.co.in/home/author/a-rejeshwari

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    "ராதே ராதே ராதே கோவிந்தா

    கோவிந்தா கோவிந்தா ராதே கோவிந்தா

    ராதே கோவிந்தா ராதே கோவிந்தா

    கோவிந்தா ராதே கோவிந்தா"

    என்று பாடிக் கொண்டே சைக்கிளில் வேகமாகப் போனான் வேணு.

    திண்ணையில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த வாசு குரல் வந்த திசை நோக்கினான். யாரோ ஒரு பையன் பக்தியோடு பஜனை பாடிக்கொண்டே போகிறான்.

    சினிமாவே கதி என்று லயித்துக் கிடக்கும் இந்தக் காலத்தில் இப்படிப் பக்திப் பரவசமாக அலைகிறான். இவனைப் பெற்றவள் கொடுத்து வைத்தவள். தறுதலையாக இராமல் ராதே கோவிந்தா என்று கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே போகிறான். பிழைத்துக் கொள்வான்.

    வாசு, வீட்டு பால்கனி ஊஞ்சலில் உட்கார்ந்து தன் நண்பன் நந்துவிடம் பேசிக் கொண்டிருந்தான். என் வீட்டு வழியே சைக்கிளில் போனவன் ராதே ராதே கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ராதே கோவிந்தா என்று பாடிக் கொண்டே போனான். இன்றும் அதே போலவே நினைத்தேன். எங்கள் ஊரில் ராம நவமி கொண்டாட்டம் நடைபெறுவதால் பெருமாள் கோவிலில் எப்போதும் ஏதாவது பஜனை, சொற்பொழிவு, பக்திப் பாடல்கள் என்று ஏதாவது நடந்து கொண்டே இருந்தது.

    என் வீட்டுக்கு அருகில் பெருமாள் கோவில் இருந்ததனால் அவன் என் வீட்டு வழியே ராதே கோவிந்தா ராதே கோவிந்தா என்று பாடிக்கொண்டே போனது எனக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. மறுநாளும் அதேபோல நடந்தது.

    அதற்கு அடுத்த நாள் வெளித் திண்ணையில் அமர்ந்து இவன் இந்த நேரம் தானே வருவான் என்று வாட்ச் பண்ணிக்கொண்டு வழிமேல விழிவைத்துக் காத்திருந்தேன்.

    ஏதோ ஒரு திசையிலிருந்து மின்னலாய் வந்தவன் ஊமையாக சைக்கிள் ஓட்டிக் கொண்டு வந்தான். என் அருகில் வந்தவுடன் ராதே கோவிந்தாவை ஆரம்பித்துவிட்டான்... எப்போதெல்லாம் போகிறானோ அப்போதெல்லாம் என்னைக் கண்டவுடன் நெருங்கும் தூரத்தில் ராதே கோவிந்தாவை ஆரம்பித்து விடுவான்.

    இதில் ஏதோ விஷயமிருக்கிறது. நம்மை நெருங்கும்போது ராதே கோவிந்தா என்கிறானே, என்னவாக இருக்கும்? என்று மண்டை காய ஆரம்பித்துவிட்டது.

    திரும்பவும் கொஞ்ச நேரத்தில் ராதே கோவிந்தா வந்துவிட்டது.

    சைக்கிளை மறித்து, என்னடா உன் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறாய் சாதாரணமா போகும்போது அமைதியாய்ப் போகிறாய். என்னருகில் வந்தவுடன் ராதே கோவிந்தா போடுகிறாய். இன்றைக்கு எனக்கு இது பற்றி இரண்டில் ஒன்று தெரிந்தே ஆக வேண்டும்.

    ஐயோ அண்ணா! சும்மா பஜனையை முணு முணுத்துக் கொண்டே போனேன். இதைப் போய்ப் பெரிதாக எடுத்துக் கொள்கிறீர்களே.

    சரி, சரி, பிழைத்துப் போ. இதுதான் முதலும் கடைசியும். இனி என்னருகில் ராதே கோவிந்தா கேட்டது தோலை உரித்துத் தொங்கப் போட்டு விடுவேன். தெரிகிறதா?

    க்ளுக் கென்று சிரித்தான் வேணு.

    நெற்றி நிறையத் திருமண்ணிட்டு, ஈர்க் குச்சி உடம்பும் அரிசிப் பல்லுமாச் சிரித்தவனைப் பார்த்ததும் ஏதோ ராமனே அவன் ரூபத்தில் வந்ததுபோல மனசு குளிர்ந்தது.

    அவன் கன்னத்தில் லேசாகத் தட்டி, தம்பி! இனிமேல் இப்படியெல்லாம் செய்யாதே என அனுப்பிவிட்டேன்.

    டேய் வாசு கடவரைக்கும் போய்யிட்டு வாப்பா. பருப்புப் பாயசத்துக்கு வெல்லம் வாங்கிக் கொண்டுவாப்பா

    நான் சட்டையை மாட்டிக்கொண்டு படியைவிட்டு இறங்கும் போது ராதே கோவிந்தா வந்து விட்டது. வேகமாக அவனை சைக்கிளிலிருந்து இறக்கி கைகளைத் திருகவிடாமல் பிடித்துக் கொண்டேன்.

    இதில் ஏதோ விஷயமிருக்கிறது. மரியாதையாகச் சொல்லி விடுகிறாயா இல்லை சின்னப் பையன் என்றும் பாராமல் சொல்ல வைக்கட்டுமா.

    ஐயோ அண்ணா, அண்ணா

    என்னடா அண்ணா! நொண்ணா! என்னைப் பார்த்தால் உனக்குக் கேலிக் கூத்தாகிவிட்டது அப்படித்தானே.

    திரு திரு என்று தன் முட்டைக்கண் கரு விழிகளை உருட்டி விழித்துச் சிரித்து ராதே கோவிந்தாவை எத்தனை தடவை சொல்லிருப்பேன் சொல்லுங்கள் பார்க்கலாம்.

    அதையெல்லாம் எண்ணிக் கொண்டிருப்பது தானா என் வேலை.

    இத்தனை முறையும் விட்டுவிட்டு இந்த முறை மட்டும் கொஞ்சம் யோசித்திருக்கிறீர்களே எதனால் அண்ணா?

    விளக்கைச் சுற்றும் விட்டில் பூச்சி போல இருந்து கொண்டு இல்லாத கிராஸ் கொஸ்ட்டின் எல்லாம் கேட்கிறாயா? இரு இன்றைக்கு உன்னை உண்டு இல்லை என்று பண்ணிவிடுகிறேன். உனக்குப் பயமே இல்லையா? சிரித்துக் கொண்டே இருக்கிறாய். நீ என்ன லூசுப் பையனாடா.

    ஏ ராதிகா இங்கே கொஞ்சம் வந்துவிட்டுப் போம்மா

    என்னண்ணா வேலையாக இருக்கிறேன்.

    இருக்கட்டும் இருக்கட்டும் வந்தவுடன் போய் விடு. இங்க ஒரு சைத்தானைப் பிடித்து வைத்திருக்கிறேன் வாம்மா.

    யாரைச் சொல்லுகிறாய் சைத்தான் கிய்த்தான் என்று உளறுகிறாய்.

    வந்து பார் தெரியும் வடைக்கு மாவு அரைத்துக் கொண்டிருந்தவள் கையைக் கூடக் கழுவாமல் அப்படியே.

    சீக்கிரம் சொல்லண்ணா. சைத்தான் கிய்த்தான் என்று உயிரை வாங்குகிறாய்.

    இதோ நிற்கிறதே இந்த சைத்தானைத்தான் சொன்னேன்.

    டேய் வேணு, அண்ணாவை என்னடா சொன்னாய்? அரிசிப் பல் தெரியச் சிரித்தான்.

    ஓர் அறை கொடுத்தால் தெரியும் உன் அரிசிப் பல்லும் சிரிப்பும்.

    நீ ஏன் அவனை அடிக்கப் போகிறாய். யாராவது சொல்லித் தொலையுங்கள்.

    "நான் இரண்டு மூன்று நாட்களாக வாட்ச் பண்ணிக் கொண்டேதான் இருக்கிறேன். சைக்கிளில் வரும் போதும், போகும் போதும் என்னை நெருங்கியவுடன்,

    ராதே கோவிந்தா, பாடுகிறான். என்னைத் தாண்டிய உடன் வாயை மூடிக்கொண்டு போகிறான்."

    டேய் வேணு என்னாச்சுடா?

    ஆமாம் அக்கா. ராதே கோவிந்தா என்றான். இது என்ன கொடுமை அவளிடம் ஏதோ சொல்லி ராதே கோவிந்தா போடுகிறான். கண்டிப்பாக ஏதோ ஒரு ரகசியம் ராதே கோவிந்தாவில் அடங்கியிருக்கிறது.

    வேணுவும் ராதிகாவும் மெள்ளக் குசுகுசு என்று பேசிக் கொண்டார்கள்.

    ஏ ராதிகா என்னவென்று சொல்லித் தொலைக்கமாட்டாயா? ஏன் என் மண்டையைக் காய வைக்கிறீர்கள். உனக்கும் வேணுவுக்கும் ராதே கோவிந்தா கோடு வேடா.

    என்ன முறைக்கிறாய்.

    ராது நீ. வயது வந்த பெண் பிள்ளை. காலம் கெட்டுக்கிடக்கிறது. அப்பாவாவது திட்டுவார். அம்மாவுக்குத் தெரிந்தால் ருத்ர தாண்டவம் ஆடி விடுவார்கள்.

    டேய் வேணு மாலை நாலு மணிக்கு வாடா.

    சரியக்கா என்று ஓடிவிட்டான் சைக்கிளில்.

    மக்கு அண்ணா, மக்கு அண்ணா. இரு கையை அலம்பிவிட்டு வருகிறேன்.

    அதற்குள் அம்மா என்னடி அரையுங்குறையுமாக மாவை அரைத்துவிட்டு எங்கே போனாய். அங்கென்ன வாசலில் பேச்சு வேண்டிக்கிடக்கிறது பெண் பிள்ளைக்கு.

    ம் சொன்னேனல்லவா. சரியாக அம்மா என்ன சொல்கிறார்கள் என்று பார்.

    இப்போது உனக்கு திருப்தி தானே அண்ணா, கல்லூரிக்குப் போனோமா! படித்தோமா! வந்தோமா! என்று இரு. எதையாவது செய்து வீட்டை ரணகளமாக்கிவிடாதே. இன்னொரு முறை அந்தப் பொடியன் இங்கு வரட்டும் நாலு அறை விடுகிறேன் பார்.

    "பேசி முடித்து விட்டாயா. அண்ணா சரியான லொடலொட வாய். என்னைக் கொஞ்சம் பேச விடு நான்ஸ்டாப்பாய் பேசிக்கொண்டே இருக்காதே.

    என் கூடப் படித்தாளே ராதா, அவள் வேணு வீட்டுக்குப் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறாள்."

    அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்.

    பொறப்பா பொறு.

    ராதாவைப் பொட்டிக்கடை நாராயணனுக்குக் கல்யாணம் பேசி இருக்கிறார்களாம்.

    அதற்கென்ன?

    ராதா ரொம்பவும் அழகாக இருப்பாள். வெள்ளை வெளேரென்று கொடிபோல நீள தலை முடியுமாய் மூக்கும் முழியுமாக கடைந்தெடுத்த விக்ரகம் போல இருப்பாள் அண்ணா

    "பிளஸ் 2வில் அவள் தான் பஸ்ட். ஸ்டேட்ரேங்க். போன வருடம் அவள் அண்ணா ஸ்டேட் ரேங்க். படிப்பில் இருவருமே சுட்டி. ஆனால் பணக் கஷ்டம் அவர்கள் குடும்பத்தில்.

    அம்மா இல்லை. ராதாவின் அப்பா ரெண்டாங் கல்யாணம் செய்து கொண்டார். அதனால் வந்த வினை தான் இப்போது ராதாவும் அவள் அண்ணன் முரளியும் சிக்கலில் தவிக்கிறார்கள்.

    குடும்பத்தில் ராதாவின் அப்பா பேச்சு எதுவும் எடுபடுவதில்லை. வச்சால் குடுமி, சிரைத்தால் மொட்டை என்பது போல எல்லாம் ராதாவின் சித்தி வைத்தது தான் சட்டமாகிவிட்டதாம். அப்பா வாயில்லாப் பூச்சியாகிப் போனார். குழந்தைகளை அவரால் ஒன்றும் கவனிக்க முடியவில்லை. அப்பா அடங்கிப் போனார்.

    எப்படியாவது ராதாவை நாராயணன் தலையில் கட்டிவிட்டால் தேவலை என நினைக்கிறாள் சித்தி. வேறு எங்காவது கல்யாணம் செய்து கொடுத்தால் சீர் செனத்தி செய்ய வேண்டும். பொட்டிக்கடை நாராயணன் எனக்குப் பெண்ணை மட்டும் கொடுங்கள் போதும். எந்தச் சீராட்டும் வேண்டாம் என்று தினமும் ராதாவின் வீட்டில் போய் ஜொள் வடித்துக் கொண்டு சித்திக்காரிக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கிறான்.

    ராதாவுக்கு இன்னும் நிறையப் படித்து சாதிக்க வேண்டும் என்று ஆசை கொட்டிக் கிடக்கிறது. அவள் சித்தி படித்து என்னத்தைக் கிழிக்கப் போகிறாய். பேசாமல் நாராயணனைக் கட்டிக்கொண்டு குடும்பம் நடத்து என்கிறாள்."

    ராதாவின் அண்ணன் முரளி பெரியவன் தானே. தங்கைக்காக சித்தியிடம் எடுத்துச் சொல்லக் கூடாதா.

    "சித்தியிடம் முரளியின் சொல்லோ, அப்பாவின் சொல்லோ, ராதாவின் சொல்லோ எடுபடாது.

    அவள் அரற்றினால் அண்டமே நடுங்குவதுபோல இருக்குமாம். ராதாவின் அண்ணன் என்ஜினியரிங் மெடிக்கல்னு சேர முடியாமல் ஈவினிங் காலேஜில் மேத்ஸ் குரூப் எடுத்துப் படிக்கிறான். காலேஜ் போகும்வரை ஒரு ஹோட்டலில் வேலை செய்வதாக ராதா என்னிடம் சொன்னாள்.

    ராதா ஏதாவது ஒரு வேலைக்குப் போய்ப் படிக்கலாம் என்றால் சித்திக்காரி நோ சொல்லிவிட்டாளாம். கல்யாணம் பண்ணும் வரை வாசல் படி தாண்டினாய் சூடு போட்டு விடுவேன் என மிரட்டுகிறாள். பாவம் அண்ணனும், தங்கையும் இரு தலைக் கொள்ளிகளாகத் தவித்துத் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். என்றைக்கு அவர்களுக்குப் பெருமாள் நல்வழி காட்டுவானோ தெரியவில்லை அண்ணா."

    நீ ஏதாவது ஹெல்ப் பண்ணு ராதிகா.

    "தெரியாத்தனமாய் ஒரு முறை ராதாவுக்குப் பீஸ் கட்டிவிட்டேன். மறுநாள் ராதாவின் அண்ணன் சம்பளத்தில் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்துவிட்டான். அம்மா என்னைக் குடைந்தெடுத்துவிட்டாள்.

    இங்கேயே நாரப்பிழைப்பாய்க் கிடக்கிறது. இந்த லட்சணத்தில் அவளுக்கு நீ உபகாரம் பண்ணப்போய் விட்டாயாக்கும். இந்த நாட்டாமைத் தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விடு. வாலை ஒட்ட நறுக்கி விடுவேன் நறுக்கி என்று என்னைப் பிழிந்து எடுத்து விட்டாளாக்கும்."

    கேட்கவே பரிதாபமாக இருக்கிறது. ராதா பாவம் தான். முரளி படித்து முடித்து வேலைக்குப்போய் விட்டானானால் அவர்கள் கஷ்டம் தீர்ந்து விடும்.

    அதற்குள்தான் பொட்டிக் கடை நாராயணனுக்கு ராதாவை தாரை வார்த்துக் கொடுத்து விடுவாளே.

    அவன் சரியான தண்ணி வண்டி. சரியான ஜொள்ளு பார்ட்டி. அவன் வாயில் எப்போதும் கரி எஞ்சின் போல சிகரெட் புகைவிட்டுக் கொண்டிருக்கும். கடை திறந்து வியாபாரம் செய்யணும் என்ற எண்ணமே கிடையாது. தண்ணியில் மிதந்து கொண்டுதான் இருப்பான். அவனுக்கு ஒரு ‘ஸ்டெப்னி’ வேறு உண்டாம்.

    இத்தனையும் உனக்கு எப்படித் தெரிந்தது ராதிகா.

    தெரிந்தவர்கள் சொன்னார்கள் அண்ணா

    அப்போ, இது உண்மையாக இராது சும்மா. வேண்டுமென்றே யாராவது சரடு விட்டிருக்கலாம் இல்லையா?

    இல்லை அண்ணா, ராதா இப்போது படிக்கவும் இல்லை. ரொம்பவும் கஷ்டத்தில் இருக்கிறாள். இவ்வளவு கஷ்டம் இருந்தும் முரளி தங்கையை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்கிறான் அண்ணா.

    பாவம் நாம் என்ன செய்ய முடியும் ஒரு தாய் இல்லாமல் பிள்ளைகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், பார்.

    நீ அம்மாவைத் தவறாக எடைபோடாதே ராதிகா. எல்லாம் நம் மீதுள்ள பாசத்தாலும், அக்கறையாலும் தான்.

    ராதாவை கரஸில் படிக்கச் சொல்லம்மா.

    பீஸ் கட்ட வேண்டாமா அண்ணா? நீ முடிந்தால் என் தோழிக்குக் கொஞ்சம் உதவி செய்யேன்.

    அம்மாவைப் பற்றிக் கவலை இல்லையா ராதிகா.

    எல்லாம் தெரியாமல் தான் செய்யணும்.

    அது தப்பு ராதிகா.

    வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாதது போலத்தான், அண்ணா.

    சரி.

    வெண்கலப் பானை உருளுவதுபோல உருண்டு கொண்டே ரேவதி, அத்தை, அத்தை என்று அழைத்துக்கொண்டே உள்ளே வந்தாள்.

    வாசுவை விழுங்கி விடுவது போலப் பார்வையை வீசி விட்டுத்தான் வந்தாள்.

    அடி என் தங்கமே, செல்லமே எப்போதடி ஊரிலிருந்து வந்தாய். வருகிறேன் என்று ஒரு வார்த்தை போன் பண்ணி இருந்தால் ஸ்டேஷனுக்கு இந்தத் தடியனை அனுப்பி இருப்பேனே. இங்கே சும்மா வெட்டியில் கடலை போட்டுக் கொண்டுதானே இருக்கிறான்.

    அது சரியம்மா. எங்கே அண்ணா, அண்ணி எல்லாம் காணோமே.

    அவர்கள் லக்கேஜை இறக்கிக் கொண்டிருக்கிறார்கள் அத்தை.

    வாசு உன் மாமா தனியாக லக்கேஜை இறக்கிக் கொண்டிருக்கிறான். கூடமாட ஒத்தாசை பண்ணுடா.

    "நம் வீடு இடுக்கலில் இருப்பதால் கார் வர சௌகரியப்படவில்லை. தெரு முனையிலேயே காரை நிறுத்தி இறக்கிக் கொண்டிருக்கிறான். நீ

    என் இங்கே யாருடன் கடலை போட்டுக் கொண்டிருக்கிறாய்."

    நானும் ராதிகாவும் தான் உட்கார்ந்திருக்கிறோம்.

    அண்ணா சீக்கிரமாகக் கிளம்பு.

    என்ன, நீ விரட்டுகிறாய், சட்டைகிட்டை போட வேண்டாமா. வெற்றுடம்போடவா போகச் சொல்கிறாய்.

    உன்னை யாரும் சைட் அடித்து விடமாட்டார்கள் போப்பா.

    என் அத்தை பெற்ற சிகாமணி யானைக் குட்டியிடம் ஏதாவது ஒரு லக்கேஜைக் கொடுத்திருக்கலாமல்லவா.

    என்னவாம் இப்படி திடீர் விஜயம். உதட்டைப் பிதுக்கி இரு கைகளையும் விரித்தாள் தங்கை ராதிகா.

    நான் வரும் வரை இங்கேயே இரு. குடு குடு என்று ஓடிவிடாதே. உன்னிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டும்.

    என்னவாம்.

    ஏதோ இரண்டு மாதம் தங்குவதுபோல லக்கேஜ் இருந்தது. பரிதாபமாக தூக்க முடியாமல் இரண்டு கைகளிலும் இழுத்துப் பறித்துக்கொண்டு வந்தான் வாசு.

    அம்மா அடுப்படியிலிருந்து குடுகுடுவென்று ஓடி வந்து ஒவ்வொன்றாகத் தூக்கி உள் அறையில் வைத்தாள்.

    மாமாவும் அத்தையும் பட்டாளத்துச் சிப்பாய்போல இரு கைகளையும் வீசி உள்ளே தஸ்சு புஸ்சு என்று அலுத்துப்போய் வந்தனர்.

    மாமா, என்னம்மா நீ என்று இந்த இடுக்கலில் இருந்து வேறு இடத்துக்கு எப்போது மாறப் போகிறாய் என்று அலுப்பாகக் கேட்டார்.

    2

    "டேய் வாசு குழந்தை பிரியாவை பெருமாள் கோவில் பஜனைக்குக் கூட்டிக் கொண்டு போ.

    அங்கு நிறைய பெண் பிள்ளைகள் இருப்பார்கள் இவளையும், உன் தங்கை ராதிகாவுடன் உட்கார வைத்துவிட்டு வா."

    வேண்டாம் அத்தை நான் போகவில்லை. எனக்குப் பஜனை கிஜனை எல்லாம் பிடிக்காது. ஏதாவது புதுப்பட சி.டி இருந்தால் கொடுங்கள். நான் பாட்டுக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    அடி என் கண்ணே. வெளியே போகக் கூச்சப்படுகிறாயா?

    ம்ம்.

    ஏய் இப்போது தான் பஜனையெல்லாம் பிடிக்காது என்றாய். உன் அத்தை கூச்சப்படுகிறாயா என்றவுடன் உம் கொட்டுகிறாயா. கள்ளி. முழியைத் தோண்டி விடுவேன். மரியாதையாக இப்படியே நேராக நடந்து போனாலே பெருமாள் கோவில் வந்து விடும். ராதிகா அக்காவுடன் உட்கார்.

    அஅத்த் தை.

    அத்தையும் இல்லை சொத்தையும் இல்லை. வெளியில் போயாச்சு. நீ கிளம்பு.

    நீ ஒன்றும் இளைத்துத் துரும்பாகி விட மாட்டாய்.

    அத்தையும் மாமாவும் குளித்து முடித்து விட்டார்கள் என்பதை சென்ட் வாசனையிலேயே புரிந்து லார் கொண்டேன்.

    அம்மா இறக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்தாள்.

    டேய் வாசு, இலை அறுத்துக் கொண்டுவாப்பா.

    இலை போட்டு நெய் வாசம் மணக்க வெண் பொங்கல், வடை, இட்லி என அம்மா அமர்க்களப்படுத்தி இருந்தாள்.

    ‘ராதிகா காரியவாதி பிழைக்கத் தெரிந்தவள் எஸ்கேப்பாகி பஜனைக்குப் போகிறேன் பேர்வழி என்று ஓடிவிட்டாளே.

    நான் மக்கு. மாட்டிக்கொண்டு திருதிருவென்று விழித்துக் கொண்டிருக்கிறேன் பார்.’

    வாசு சி.டி கடைக்கு பிரியாவை உன் வண்டியில் கூட்டிப் போய், அவளுக்குப் பிடித்த சிடியை வாங்கிக் கொடுடா. பிள்ளை அதையாவது பார்த்துக் கொண்டிருக்கட்டும்.

    அம்மா கொல்லையில் பூத்திருக்கும் பூக்களைப் பறித்து வருகிறேன். நீங்கள் அதை அவள் கமல பாதங்களில் போட்டு பூஜை செய்யுங்கள் என்று கூறிவிட்டு வேகமாகக் கோவிலைப் பார்த்து நடையைக் கட்டி விட்டான் வாசு.

    ஸ்ரீராம நவமி என்றாலே எல்லா தேச மக்களும் கொண்டாடும் விழா. இங்கு யாதவ குல மக்கள் வாழ்வதால் மிகப் பெரிய விழாவாகவே கொண்டாடுவார்கள். ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ள பட்டி தொட்டிகளிலெல்லாம் யாதவ மக்கள் வாழ்ந்து வந்ததால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தில் யாரையோ கண்கள் தேடிக் கொண்டிருந்தது. அங்கே ராஜாவுக்குச் செக் வைத்துபோல நின்றது அவன் கண்கள். அங்கே ராதா கண்களை மூடி பஜனை

    Enjoying the preview?
    Page 1 of 1