Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அன்பிற்கு தலைவணங்கு!
அன்பிற்கு தலைவணங்கு!
அன்பிற்கு தலைவணங்கு!
Ebook105 pages36 minutes

அன்பிற்கு தலைவணங்கு!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுபாஷ் வீட்டிற்கு வந்தபோது அப்பா சுப்பையா வாசலிலேயே அமர்ந்திருந்தார். கையில் செய்தித்தாள் இருந்தது. அவருக்கு வயது அறுபதாகப் போகிறது. இன்னும் முகத்தில் கம்பீரமும், கடுமையும் விட்டுப் போகவில்லை. அவர் சாதாரணமாகப் பார்த்தாலே யாருக்கும் பயம் ஏற்படும். அப்படி ஒரு பார்வை.
அவரைப் பார்த்தாலே... அந்தப் பார்வையை சந்தித்தாலே சுபாஷுக்கு குலை நடுங்கும். அந்தப் பார்வைக்காகத்தான் அவன் எதையெல்லாம் இழந்திருக்கிறான்! அவர் அந்தப் பார்வையினால் எதையெல்லாம் சாதித்திருக்கிறார்!
சுபாஷுக்கு ஓவியம் வரையும் திறமை இருந்தது. அதிலேயே தன்னை அர்ப்பணிக்கத் துடித்தான். அவனுடைய ஆசை, லட்சியம் எல்லாம் இதோ இந்த பார்வையாலேயே அழிந்தது.
‘டிராயிங் வரைஞ்சே குடும்பத்தைக் காப்பாத்திடுவியா? டிராயிங் போடற வேலையைப் போட்டுட்டு பொழைக்கற வழிய பாரு. ஒழுங்கா படி.’
- என்று ஆரம்பித்து ‘ஓவியக் கல்லூரியில் சேர வேண்டும்’ என்ற அவனுடைய ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
ஆத்மா ஆசைப்படும் வேலையிலிருந்து விடுபட்டு அப்பாவின் சொற்களுக்கு பயந்து அவர் கைகாட்டிய படிப்பை படித்து, அவர் வேலை வாங்கித் தந்த நிறுவனத்தில் உழைத்து...
அவனைப் பொறுத்தவரை திருப்தி இல்லாத வாழ்க்கை.
மனதிற்குள் முதன் முதலாய் முளைவிட்ட காதலை தனக்குத்தானே நசுக்கிக் கொண்டதும் இதோ இந்த அப்பாவிற்கு பயந்துதான்.காதல் என்று இறங்கிவிட்டு பின்னால் அப்பாவை எப்படி எதிர் கொள்வது’ என்ற கேள்வி, காதலின் ஆரம்பத்திலேயே எழ, அதை அடியோடு அழித்துக் கொண்டான்.
அதிலும் அவன் தோல்வியுற்றான்.
இப்பொழுதும் மனதிற்குள் சங்கமித்திரையின் முகம் வந்து போகும், தன்னையும் மீறி கலங்குவான்.
அவளிடம் கூட தன் காதலை அவன் சொன்னதில்லை. யாருக்கும் தெரிவிக்காமல் மனதிற்குள்ளேயே வைத்திருந்து அழித்துவிட்டான்.
காரணம் -
பயம். அப்பாவிற்கு முன் அடிமை போல் குறுகிப் போவான். அப்படி வளர்ந்தான். அந்த வளர்ப்பு அவனை பரம சாதுவாக்கியிருந்தது. அதனால் அவனுக்கு நண்பர்கள் அதிகம் இல்லை. அதட்டிப் பேசும் பழக்கம் அவனிடம் இல்லை. யாராக இருந்தாலும் பணிந்து போய் பழக்கப்பட்டவன். எதிர்த்துப் பேசும் எண்ணம் இல்லாதவன். பல அப்படிப்பட்டவனால் எப்படி இப்பொழுது பயப்படாமலிருக்க முடியும்?
உள்ளே நுழைந்ததும் அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு படிப்பதைப்போல் பாவனை செய்தார்.
இந்த நேரத்தில் அவர் எப்பொழுதும் வீட்டிலிருக்கமாட்டார். ஓய்வு பெற்று வந்த பணத்தை வட்டிக்கு விட்டிருக்கிறார். அதை வசூலிக்க தினமும் வெளியே செல்வார். இன்றைக்கு அவனுக்கு சம்பள தேதியாதலால் இருக்கிறார். அவருக்கு எப்பொழுதும் மனம் பணத்திலேயே இருக்கும்.
உள்ளே வந்தவன் சட்டையைக் கூட கழற்றாமல் நேரே தன் படுக்கையறைக்குள் நுழைந்து அப்படியே படுத்துவிட்டான்.
தங்கை சுசிலா உள்ளே சமையலறையில் அம்மாவுடன் ஏதோ பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்து கொண்டிருந்தது.
சில நிமிடங்களில் அம்மா லோகநாயகி அவனுடைய அறையினுள் நுழைந்தாள்.
“என்னடா... வந்ததும் படுத்திட்டே? உடம்பு சரியில்லையா?” என அவனுடைய நெற்றியில் கை வைத்தாள்அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா. சும்மாதான் படுத்திருக்கேன். ஒரே களைப்பா இருக்கு” என்றான்.
“வேலை அதிகமா?” என்றாள்.
“ஆமாம்மா.”
“சரி படுத்திரு. நான் போய் காபி கொண்டு வர்றேன்” என உள்ளே சென்றாள்.
அம்மாவின் நடையில் ஒரு வேகம் இருந்தது.
காரணம் - இன்றைக்கு சம்பள நாள்.
‘எல்லோரையும் ஏமாற்றப் போகிறேன்.’
அம்மா காபியுடன் வந்தாள்.
“எழுந்திரிப்பா.”
எழுந்து உட்கார்ந்தான். காபியை வாங்கும்போதே கைகள் நடுங்கின.
“ஏம்பா... கையெல்லாம் இப்படி நடுங்குது? என்ன ஆச்சு?”
“அது வந்து...”
வாங்கிய காபியை குடிக்க முடியவில்லை.
கை நடுங்கியதில் காபி தளும்பியது. தொடையில் சிந்தியது. சுட்டது.
“சொல்லுப்பா... என்ன விஷயம்?”
“அம்மா...” என அழைத்தபடியே காபியை அம்மாவின் கையிலேயே கொடுத்தான்.
“என்னப்பா ஆச்சு? ஏன் இப்படியிருக்கே?”
“அம்மா... வந்து என்னோட... என்னோட...”
“சொல்லுப்பா.”
“என்னோட சம்பளப் பணம் காணாம போயிட்டு.திக்கென அதிர்ந்தாள் அம்மா

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
அன்பிற்கு தலைவணங்கு!

Read more from ஆர்.சுமதி

Related to அன்பிற்கு தலைவணங்கு!

Related ebooks

Reviews for அன்பிற்கு தலைவணங்கு!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அன்பிற்கு தலைவணங்கு! - ஆர்.சுமதி

    1

    சுபாஷுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தன. உடல் உதறியது. கையிரண்டும் கழன்று விழுந்துவிடும் போலிருந்தது. ஒரே நொடியில் ‘உடலைத் தாங்க மாட்டேன்’ எனப் பாதமிரண்டும் முரண்டு பிடித்தன. சில நிமிடங்களில் வியர்வை சிற்றாறாய் ஓடியதில் சட்டை நனைந்துவிட்டது.

    இங்கேதானே வைத்துவிட்டுப் போனேன்? எங்கே போனது...?

    அவனுடைய கைகள் இயந்திரத்தனமாய் பரபரத்து தேடின. படபடப்பில் எதிரே இருக்கும் பொருள்கள் எதுவும் தெரியாததைப் போன்ற ஒரு உணர்வு எழுந்து மறைந்தது.

    அவனால் அவனை நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லை. பயம் பாதி, படபடப்பு பாதி அவனை இயங்க விடாமல் செய்தன.

    மேசை மீதிருந்த அத்தனை கோப்புகளையும் கலைத்துப் பார்த்துவிட்டான். பேண்ட் பாக்கெட், சட்டை பாக்கெட் எல்லாவற்றிலும் பார்த்துவிட்டான்.

    இல்லை!

    இந்த மாதம் உழைத்ததற்கான பலன் காணாமல் போயிருந்தது.

    சில மணி நேரங்களுக்கு முன் வாங்கிய சம்பளம் ஏழாயிரம் ரூபாய் மொத்தமாக பறிபோயிருந்தது. பேருந்தின் நெரிசலிலோ, சாலையோர கூட்டத்திலோ பறி கொடுக்கவில்லை.

    அலுவலகத்திலேயே... சம்பளத்தை வாங்கிய இடத்திலேயே காணவில்லை.

    தொப்பென இருக்கையில் அமர்ந்தான். மேசை மீது கவிழ்ந்தான். ‘ஓ’வெனக் கதற வேண்டும் போலிருந்தது.

    ஏழாயிரம் ரூபாய்! எப்படி போயிருக்கும்? இந்த இழுப்பறையில் வைத்துவிட்டுப் போனது எங்கே போயிருக்கும்? யார் எடுத்திருப்பார்கள்?

    யாராவதுதான் எடுத்திருக்க வேண்டும்!

    யாராக இருக்கும்?

    மெல்ல நிமிர்ந்தான்.

    அந்தப் பெரிய கூடத்தின் இருபுறமும் கோப்புகள் அடங்கிய மேசைகளும் அதற்குப் பின்புறம் இருக்கைகளும், அதற்குப் பின்புறம் அலமாரிகளும் மட்டும்தான் இருந்தன.

    அவனைத் தவிர அனைவரும் போய் விட்டிருந்தார்கள். போனவர்களில் யாராவதுதான் எடுத்திருக்க வேண்டும்.

    யார் அது?

    கிட்டத்தட்ட இருபது பேர். அவர்களில் யார் எடுத்திருப்பார்கள்?

    இந்த அறையைத் தவிர வெளியே பல அறைகள் உண்டு. அதில் அமர்ந்து வேலைப் பார்ப்பவர்கள் சிலரும் அடிக்கடி இங்கே வருவார்கள், போவார்கள். அவர்களில் யாரேனும் எடுத்திருக்கலாம்!

    எல்லோருமே கண்ணியமானவர்கள். கைநிறைய சம்பாதிப்பவர்கள்.

    யாரை சந்தேகப்படுவது? அனைவருமே அவனிடம் அன்பாக பழகக் கூடியவர்கள். அவர்களில் யார்மேல் குற்றம் சுமத்துவது?

    ஆனால், திருடன் வெளியே இருந்து வரவில்லை.

    இரண்டு மணி நேரம் மேலாளருடன் இருந்த நேரத்தில் போய் விட்டிருக்கிறது.

    என்ன செய்யலாம்? மேலாளரிடம் சென்று சொல்லலாமே? அவன் நினைத்த அதே நேரம் -

    மேலாளரின் கார் சத்தம் கேட்டது. அலுவலகத்தை விட்டு அவர் செல்வது புரிந்தது.

    ஐயோ... நான் என்ன செய்வேன்? குழம்பினான். குழப்பம் அவனைக் குத்திக் கீறியது...

    வீட்டிற்கு எப்படிச் செல்வேன்?

    அப்பாவின் முகம் கண்ணெதிரே வந்து நின்றது. உடம்பு மறுபடியும் உதறிக் கொண்டது.

    சார்... குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தான்.

    பணியாள், சக்திவேல் நின்றிருந்தார். வயதானவர். பாதி முடி வெளுத்து விட்டது. வாழ்க்கையின் மேடு பள்ளம் அனைத்தும் அவருடைய முகத்தில் தெரிந்தன. அனுபவங்கள் அவருடைய முக சுருக்கங்களாகத் தெரிந்தன.

    சார்... வீட்டுக்குப் போகலையா? என்றார்.

    கேட்டவர், அவனிடமிருந்து பதில் வருவதற்கு முன்பே அவனுடைய முகத்தைப் பார்த்து துணுக்குற்று மறுபடியும் அவரே பேசினார்.

    சார்... என்னாச்சு? முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு? என்றார்.

    அவர் கேட்டதும் அவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

    சக்தி... என்னோட... என்னோட சம்பளப் பணத்தைக் காணோம்.

    அவன் சொன்னதும் அதிர்ச்சியை வாங்கினார் சக்திவேல்.

    சார்... என்ன சொல்றீங்க?

    ஆமா. சம்பளக் கவரை இந்த இழுப்பறையில்தான் வச்சேன். இப்படி ஆயிடுச்சு.

    இங்க வச்சது எப்படி சார் காணாமப் போகும்?

    அதான் எனக்குத் தெரியலை. யார் எடுக்கப் போறாங்கன்னு அலட்சியமா பூட்டாம போய்ட்டேன். மேனேஜர் ரூம்ல வேலையா ரெண்டு மணி நேரம் இருந்தேன். அந்த நேரத்துல காணாமப் போயிருக்கு.

    சார் அப்படின்னா இங்க உள்ளவங்கதான் யாராவது எடுத்திருக்கணும்!

    யாரைன்னு நாம சொல்றது?

    மேனேஜர்கிட்ட சொன்னீங்களா?

    இல்லை. இப்பத்தான் பணம் காணாமப் போனது தெரிஞ்சது. அதுக்குள்ள அவர் போய்ட்டாரு.

    நாளைக்கு வந்ததும் அவர்கிட்ட சொல்லுங்க.

    சொன்னாலும் கிடைக்குமா? எடுத்தவங்க கொடுப்பாங்களா?

    அப்ப என்ன செய்யப் போறீங்க?

    தெரியலை என தளர்வாய் எழுந்தான். பணம் இருக்கும்போது திறந்து போட்டுவிட்டு சென்றவன், இப்பொழுது பூட்டிக் கொண்டு கிளம்பினான்.

    அலுவலகத்தைவிட்டு இறங்கியதுமே அதுவரை இல்லாத ஏதோ ஒரு கலக்கல் அடிவயிற்றில் உண்டானது. அப்பாவிடம் எப்படி சொல்வது? சொன்னால் வானத்துக்கும், பூமிக்குமாக குதிப்பாரே! அம்மா அதற்கு மேல் ஆடுவாளே?

    ஐயோ... அவனுக்கு பணம் காணாமல் போனதைவிட, அப்பாவிடம் இதை எப்படி சொல்வது என்றுதான் பயமாக இருந்தது. இருந்தது.

    அந்தப் பயம் அவனைக் கொன்றது.

    திருமண வயதிலிருக்கும் ஆடவன் அவன். மனதளவில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன். அப்பாவின் கண்டிப்பிற்கு பயந்தவன். அவருடைய அதிகாரத்திலேயே ஆமைபோல் ஒடுங்கி வளர்ந்தவன்.

    நிலைகுலைந்து வீட்டிற்கு வந்தான்.

    2

    சுபாஷ் வீட்டிற்கு வந்தபோது அப்பா சுப்பையா வாசலிலேயே அமர்ந்திருந்தார். கையில் செய்தித்தாள் இருந்தது. அவருக்கு வயது அறுபதாகப் போகிறது. இன்னும் முகத்தில் கம்பீரமும், கடுமையும் விட்டுப் போகவில்லை. அவர் சாதாரணமாகப் பார்த்தாலே யாருக்கும் பயம் ஏற்படும். அப்படி ஒரு பார்வை.

    அவரைப் பார்த்தாலே... அந்தப் பார்வையை சந்தித்தாலே சுபாஷுக்கு குலை நடுங்கும். அந்தப் பார்வைக்காகத்தான் அவன் எதையெல்லாம் இழந்திருக்கிறான்! அவர்

    Enjoying the preview?
    Page 1 of 1