Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Solli Vidai Peruvathu...
Kaadhal Solli Vidai Peruvathu...
Kaadhal Solli Vidai Peruvathu...
Ebook142 pages54 minutes

Kaadhal Solli Vidai Peruvathu...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கௌதம், தாழம்பூ இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தாழம்பூ ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்ததால் மாமியார் சாம்ராஜ்யம் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை. புகுந்த வீட்டில் தாழம்பூவின் நிலைமை என்ன? மாமியாரின் சூழ்ச்சியில் இருவரும் பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்படுமா? இதனை தாழம்பூ எப்படி கையாள்கிறாள் என்பதை வாசித்து அறிவோம்...

Languageதமிழ்
Release dateFeb 10, 2024
ISBN6580137110708
Kaadhal Solli Vidai Peruvathu...

Read more from R. Sumathi

Related to Kaadhal Solli Vidai Peruvathu...

Related ebooks

Reviews for Kaadhal Solli Vidai Peruvathu...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Solli Vidai Peruvathu... - R. Sumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதல் சொல்லி விடைபெறுவது...

    Kaadhal Solli Vidai Peruvathu...

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    தாழம்பூ கௌதமின் தோள்களில் கைகளை மாலையாக்கி கொஞ்சினாள்.

    என்னங்க...

    ம்... சொல்லுங்க அவனும் அவளுடைய அழகான மூக்கோடு மூக்கால் உரசியபடி கேட்டான்.

    நான் எங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டு வரட்டா?

    உங்கம்மா வீட்ல இப்ப என்ன விசேஷம்? உங்கண்ணனுக்கு பொண்ணு கிண்ணு பார்த்திருக்காங்களா? கல்யாணம் கில்யாணம் பண்ணப்ப போறாங்களா? அவளுடைய இடுப்பில் விரல்களால் விளையாடியவாறே சிரித்தான்.

    அதெல்லாம் ஒண்ணுமில்லை.

    அதானேப் பார்த்தேன். உங்கண்ணனுக்கு கல்யாணம் ஆகறதெல்லாம் நடக்கற காரியமா?

    சட்டென அவனுடைய தோளில் சுற்றியிருந்த தன் கை மாலையை எடுத்தாள்.

    கோபம் ஏற்றி வைத்த சுடராய் நிமிடத்தில் மின்ன அவனை முறைத்தாள்.

    ஏன்... என் அண்ணனுக்கு என்ன குறைச்சல்? அவருக்கு அழகில்லையா? படிப்பில்லையா?

    எல்லாம் இருந்து என்ன புண்ணியம்? குணம் சரி கிடையாது.

    "குணத்துல என்ன குறை கண்டிங்க?’

    சரியான சிடுசிடு பேர்வழி. நுனி மூக்குல கோபம். பொண்ணுங்க விரும்பனும்ன்னா என்னை மாதிரி சிரிச்சு பேசனும்

    ஓ... அப்ப உங்களை பல பெண்கள் விரும்பியிருக்காங்களா?

    இல்லையா பின்னே? எத்தனை பேர் சுத்தி சுத்தி வந்தாங்க. அதையெல்லாம் விட்டுட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதாப் போச்சு,

    ம்... இப்ப மட்டும் என்ன? போயி அவங்களை கல்யாணம் பண்ணிக்கங்க.

    பண்ணிக்கலாம்தான் ஆனா... சட்டத்துல இடம் இல்லையே

    அப்போ என்னை டைவேர்ஸ் பண்ணிடுங்க, வழி கிடைச்சிடும்

    பண்ணலாம்தான். ஆனா... பெண் பாவம் பொல்லாதது. அதுக்காகப் பார்க்கிறேன்.

    ம்... பார்ப்பீங்க... பார்ப்பீங்க... செல்லமாக அவனுடைய நெஞ்சில் குத்தியவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் அவளுடைய கன்னத்தில் உதடுகளால் உரசியவாறே...

    எத்தனை பொண்ணுங்க வந்தாலும் உனக்கு இணையாக முடியுமா? என கொஞ்சினான்.

    போதும்... போதும்... பேச்சை மாத்தாதீங்க. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க

    என்ன கேட்டே?

    ம்... எங்க அம்மா வீட்டுக்குப் போய்ட்டு வரட்டுமான்னு கேட்டேனே...

    இந்த மாதிரி புருஷன் கொஞ்சற நேரத்துல ஒரு பொண்டாட்டி இப்படியா அம்மா வீட்டுக்குப் போகட்டுமா? அத்தை வீட்டுக்குப் போகட்டுமான்னு கேட்பா? சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கிட்டு ஏதேதோ கேட்கனும்

    ஏதேதோன்னா...?

    ம்... உங்களை மாதிரியே அழகான குழந்தை வேணும். அப்படின்னு கேட்கனும்

    சட்டென்று அவனை உதறியவள் போதும்... உங்களுக்கு இதைவிட்டா வேற பேச்சே கிடையாதா?

    அடிப்பாவி... குழந்தையை வெறுக்கற பொண்ணை இப்பத்தான் பார்க்கிறேன்.

    நான்... வெறுக்கறேன்னு சொன்னேனா?

    பின்னே... குழந்தை வேணும்னு கேட்கமாட்டியான்னு கேட்டா பிடிச்சு தள்றே?

    ம்... அதையெல்லாம் கேட்க வேண்டிய இடத்துல கேட்டுப்பேன்.

    அடிப்பாவி... புருஷன்கிட்ட பேசற பேச்சா இது? புருஷன்கிட்ட கேட்காம இதையெல்லாம் வேற யார்க்கிட்ட கேட்பே?

    ம்... சாமிக்கிட்ட கேட்பேன். கடவுள் மனசு வச்சாத்தான் குழந்தை தரமுடியும்?

    யார் சொன்னா? புருஷன் மனசு வைக்காட்டா எந்த கடவுள் மனசு வச்சும் ஒரு புண்ணியமும் இல்லை,

    யார் சொன்னா? இன்னைக்கு விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துட்டு. புருசன் இல்லாமலேயே ஒரு பெண்ணால குழந்தைப் பெத்துக்க முடியும்

    அம்மா தாயே... வேண்டாம் விவாதம். நீ விஞ்ஞானம் அறிவியல்னு போனீன்னா இங்க அஸ்திவாரமே ஆட்டம் கண்டுடும். பயந்துபோன கௌதமைப் பார்த்து கலகலவென சிரித்தாள் தாழம்பூ.

    தாழம்பூ பெயருக்கேற்ற மாதிரியே வாசனையானவள். எப்பொழுதும் அந்த வாசனையில் கட்டுண்டு கிடக்கும் தேனீயவன்.

    அந்த தாழம்பூவின் மடல்களுக்குள் அவனை பொத்தி வைத்து நேசிப்பவள். முப்பொழுதும் அவளுடைய காதலில் கரைந்து கிடக்கும் அவனால் எப்பொழுதும் அவளை விட்டுப் பிரிய முடியாது. அதனால்தான் அவள் அம்மா வீட்டுக்குப் போகிறேன் என்றதும் அதை காதில் வாங்கிக் கொள்ள பிடிக்காமல் பேச்சை திசை மாற்றிக் கொண்டிருக்கிறான்.

    ஆனால் அவள் விடுவதாக இல்லை.

    சொல்லுங்க போய்ட்டு வரட்டுமா?

    நீ போய்ட்டா எனக்கு போரடிக்குமே. என்னால உன்னை விட்டு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது,

    அத்தனை காதலா?

    ஆமா

    இந்த பொய்தானே வேண்டாங்கறது?

    பொய் சொல்றதெல்லாம் உன்னோட தொழில். எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது

    என்னது? பொய் சொல்றதெல்லாம் என்னோட தொழிலா? அப்படின்னா நான்தான் பொய் சொல்லிக்கிட்டுத் திரியறேனா?

    ஆமா... நீ பொய் சொல்றவள்னு ஊருக்கே... ஊருக்கே என்ன உலகத்துக்கே தெரியுமே

    என்னது நான் பொய் சொல்றவள்னு உலகத்துக்கேத் தெரியுமா? அப்படி என்ன பொய் சொல்லிட்டேன்? சிரிப்பை மட்டுமே சிந்தும் அவளுடைய கண்களில் சீற்றம் தெரிந்தது.

    தாழம்பூன்;னாலே பொய் சொல்றவள்னு உலகத்துக்கேத் தெரியுமே. சிவ பெருமானோட முடியை பார்க்க முடியாம பிரம்மா தவிச்ச போது அவர் சிவபெருமானோட முடியிலிருந்து விழுந்த தாழம்பூக்கிட்ட நான் சிவனோட முடியைப் பார்த்துட்டதா பொய் சொல்லனும்னு கேட்டுக்கிட்டாராம். உடனே தாழம்பூவும் சரின்னு சொல்லிட்டு சிவன் கிட்ட பிரம்மா உங்களோட முடியைப் பார்த்துட்டார். அதுக்கு நானே சாட்சின்னு சொன்னதாம். அதனால கோபம் வந்த சிவன் இனிமே நீ என் முடியில இருக்கக் கூடாதுன்னு சாபம் கொடுத்துட்டாராம். இப்ப சொல்லு தாழம்பூன்னாலே பொய் சொல்றவள்தானே?

    மனைவியின் தாடையை அழகாகப் பற்றி அவன் கேட்க ராத்திரி பூரா சிவபுராணம் படிச்சிக்கிட்டிருந்தீங்களா?

    கேலியாக சிரித்தாள் தாழம்பூ.

    ராத்திரி பூரா சிவ புராணம்தான் படிச்சேன். இந்த பார்வதி தேவியோட என அவன் கண்ணடிக்க,

    ச்சை...! என அவனுடைய கையைப் பிடித்து தள்ளினாள்.

    தெரிஞ்சுக்க! தாழம்பூ சிவனோட தலையிலயிருந்தாத்தான் மதிப்பு. இல்லைன்னா ஒரு மதிப்பும் இல்லை. அதை மாதிரிதான் நீயும். என்னை விட்டுட்டு அம்மா வீட்டுக்குப் போக நினைச்சே உனக்கு மதிப்பு இல்லை

    தாழம்பூவை சிவன் விலக்குனதால சிவனுக்குத்தான் நஷ்டம். அந்த வாசனையை அனுபவிக்கும் பாக்கியம் பாவம் அவருக்கு இல்லை. ஆனா... தாழம்பூவோட வாசம் மத்த எல்லாருக்கும் உபயோகப்படுது. தாழம்பூ எண்ணெய், தாழம்பூ சோப்பு, தாழம்பூ பவுடர், தாழம்பூ குங்குமம்... தாழம்பூ ஊதுபத்தி, தாழம்பூ சென்ட்... இப்படி... சொல்லிக்கிட்டே போகலாம். அதனால என்னை விலக்குனா... பாவம் நீங்கதான்

    ஆமா... உன் வாசம் எனக்கு எப்பவும் வேணும் மீண்டும் அவளை இழுத்து அணைத்து கழுத்தில் முகம் பதித்து வாசம் பிடித்தான்.

    காதலாய் கிறங்கியவள் காமத்துக்குள் இறங்கும் அவனை நாசூக்காக விலக்கியவாறே கேட்டாள்.

    சொல்லுங்க. ஊருக்குப் போகட்டுமா?

    சட்டென்று மேகத்திலிருந்து விடுபடும் நிலவாய் மோகத்திலிருந்து விடுபட்டவன் அவளை உதறினான்.

    அம்மா தாயே ஆளைவிடு. இந்த வீட்ல என்னமோ நான் வச்சதுதான் சட்டம் மாதிரி என்னை அனுமதி கேட்கறே? அம்மாக்கிட்ட கேளு. போக சொன்னா போ

    அவன் அம்மா என்று சொன்னதும் அவளுடைய சிரித்த முகம் பறித்துப் போட்ட கீரைத்தண்டாய் வாடியது.

    நிமிடத்தில் சாம்ராஜ்யத்தின் முகம் வந்து போனதில் மனம் நடுபகல் தார் ரோடாய் கொதித்தது.

    அவளெதிரே போய் நின்று அனுமதி கேட்பதெல்லாம் சிங்கத்தின் எதிரே நின்று சிறு எலியின் உரையாடலைப் போல்தான் அமையும். அதனால்தான் கணவனிடம் கெஞ்சிக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் இருக்கிறாள்.

    அவனோ வல்லூறுக்கு எதிரே நடுங்கும் கோழிக் குஞ்சாய் இவளுக்கு மேல் நடுங்குகிறான்.

    இவன் மட்டுமல்ல. இவனுடைய அண்ணன்கள் இரண்டு பேரும், அவனுடைய மனைவிகளும் கூட அவளிடம் பேசத் தயங்குவர்.

    ஆனால்... மற்ற மருமகள் விஷயத்தில் சாம்ராஜ்யம் சலுகைகள் காட்டுவது உண்டு.

    அந்த சலுகைகளெல்லாம் இவளுக்கு கிடையாது.

    காரணம் அந்தஸ்து பேதம்தான். மற்ற இரு மருமகள்களும் அவளுக்கு இணையான அந்தஸ்திலிருந்து வந்தவர்கள்.

    இவள் மட்டும் ஏணி வைத்தாலும் எட்டாது, ஏரோப் ப்ளேன் வைத்தாலும் எட்டாது, தொட்டுவிட

    Enjoying the preview?
    Page 1 of 1