Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Allikonda Thendral...
Allikonda Thendral...
Allikonda Thendral...
Ebook518 pages5 hours

Allikonda Thendral...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

“Dad’s little princess” ஆக இருக்கும் நாயகி தென்றலின் கழுத்தில், எதிர்பாராத விதத்தில் நாயகன் பிரபஞ்சன் தாலிகட்ட, தந்தைக்கும், தன் கணவனுக்கும் இடையில் திணறும் நாயகி யாரைத் தேர்ந்தெடுப்பாள்? கணவனா? தகப்பனா? தெரிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்...

Languageதமிழ்
Release dateJul 1, 2023
ISBN6580109210017
Allikonda Thendral...

Read more from Infaa Alocious

Related authors

Related to Allikonda Thendral...

Related ebooks

Reviews for Allikonda Thendral...

Rating: 4.8 out of 5 stars
5/5

5 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Very sprb mam...I'm ur big fan of u mam.....I'm mostly addicted to ur novels...I'm completed ur all novels..I'm eagerly waiting for ur next novel....love u lotzz mam??

Book preview

Allikonda Thendral... - Infaa Alocious

C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

https://www.pustaka.co.in

அள்ளிக்கொண்ட தென்றல்...

Allikonda Thendral...

Author:

இன்பா அலோசியஸ்

Infaa Alocious

For more books

https://www.pustaka.co.in/home/author/infaa-alocious-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

பகுதி – 1

பகுதி – 2

பகுதி – 3

பகுதி – 4

பகுதி – 5

பகுதி – 6

பகுதி – 7

பகுதி – 8

பகுதி – 9

பகுதி – 10

பகுதி – 11

பகுதி – 12

பகுதி – 13

பகுதி – 14

பகுதி – 15

பகுதி – 16

பகுதி – 17

பகுதி – 18

பகுதி – 19

பகுதி – 20

பகுதி – 21

பகுதி – 22

பகுதி – 23

பகுதி - 24

பகுதி - 25

பகுதி – 26

பகுதி – 27

பகுதி – 1

சென்னையில் பரபரப்பான அண்ணாசாலைக்கு அருகே இருந்த அந்த பகுதியின் குடியிருப்பில்... சற்று மேல்தட்டு மக்கள் மட்டுமே புழங்கும் அந்த ஏரியா, அந்த காலை வேளையிலும் அத்தனை அமைதியாக இருந்தது.

அங்கே இருந்த ஒரு வீட்டின் முன்னால் இருந்த புல்வெளியில், ரிட்டயர்ட் கர்னல் ரத்தினம் தனது எண்பத்துமூன்று வயதிலும் தளராமல் யோகாவில் ஈடுபட்டிருந்தார்.

அவர் தன் உடலை வளைத்து, ஒற்றைக் காலில் நின்று என யோகா செய்ய, தன் கணவரையே பார்த்துக் கொண்டிருந்தார் மணிமேகலை.

கணவனின் அன்றாட அட்டவணை அனைத்தும் தெரியும் என்பதால், மணிமேகலையிடம் ஒரு அசாத்திய பொறுமையும் நிதானமும் இருந்தது.

அவர் கொண்டுவந்திருந்த சத்துமாவுக் கஞ்சி, அதன் வெம்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்க, ‘மறுபடியும் சூடுபண்ண போக வேண்டி வருமோ?’ என்ற கவலையே இன்றி அமர்ந்திருந்தார்.

கஞ்சியின் சூடு பதமாக குறைவதற்கும், ரத்தினம் மனைவிக்கு பக்கத்து இருக்கையில் வந்து அமர்வதற்கும் சரியாக இருந்தது.

அவர் தன் வியர்வையை அங்கிருந்த துவாலையில் ஒற்றி எடுக்க, இந்தாங்க, குடிக்கற பதத்துக்கு இருக்கு, குடிங்க... மனைவி கையில் கொடுத்த பவுலை வாங்கியவர் மனைவியை ஏறிட,

பிரபஞ்சன் நைட் படுக்கவே ரொம்ப லேட் ஆயிடுச்சு... இப்போ எழுந்துடுவான் கணவனின் பார்வைக்கே அவர் பதிலைச் சொல்ல, ரத்தினத்தின் முகத்தில் ஒரு பிடித்தமின்மை வெளிப்பட்டது.

என்ன சொன்னாலும் அவன் கேக்க மாட்டானா? அவரது குரல் சிறு கண்டிப்பாக வெளியேற, மேகலை அவரை அமைதியாக ஏறிட்டார்.

அவனுக்கு அதுதான் வசதிப்படுதுன்னா அப்படியே இருக்கட்டுமே, இப்போ என்ன குறைஞ்சு போகுது? தன் பொறுப்பறிந்து நடக்கும் மகனை குறை சொல்கிறாரே என்ற வருத்தம் அவர் முகத்தில் வெளிப்பட்டது.

பையனை ஒன்னு சொல்லிடக் கூடாது... ரத்தினம் அதற்கும் பேச, தன் வாயை இறுக மூடிக் கொண்டார்.

அது ரத்தினத்துக்கும் தெரிய, இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு கம்முன்னு ஆயிட்ட? தன் கஞ்சியை குடித்து முடித்தவர், பவுலை மூங்கில் டீபாவின்மீது வைத்தவாறு கேட்டவர், மனைவியின் கரத்தை மென்மையாக பற்றிக் கொண்டார்.

‘நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்...’ எண்ணியவர் அதையே பார்வையாக்கி கணவனை ஏறிட, ரத்தினம் சரண்டர் ஆனார்.

மிலிட்டரியில் இரண்டு சர்வீஸ் முடித்தவர், எதிரியை வந்துபார் என போர்க்களத்தில் எதிர்த்து நின்றவர், அவரது கையில் இருக்கும் எந்த துப்பாக்கிக்கும் அஞ்சி பின்வாங்காதவர், மனைவியின் அந்த அமைதிக்கு முன்னால் சரண்டர் ஆகிப் போவதுதான் விந்தை.

அவர் மனைவியின் அமைதியைக் கலைக்க என்ன செய்யலாம்? என யோசித்துக் கொண்டிருக்க, அங்கே இருந்த அவரது அலைபேசி இசைக்கவே, இருவரின் கவனமும் அங்கே சென்றது.

பேத்தி... மேகலையின் வாய்ப்பூட்டு அவிழ, வேகமாக அலைபேசியை எடுத்து, ஸ்பீக்கரில் போட்டார்.

பட்டு... எந்திரிச்சாச்சா? பூஸ்ட் குடிச்சியா? பிறந்தநாள் வாழ்த்துக்கள் பட்டு... மேகலை வாழ்த்த,

லவ் யூ அம்மம்மா... தேங்க் யூ சோசோசோ... மச்... உம்மா... எல்லாமே ஆச்சு, ஸ்கூலுக்கு கிளம்பிட்டே இருக்கேன் அவள் அலைபேசியில் அழுத்தமாக முத்தம் வைக்க, இந்த முதியவருக்கு அத்தனை பூரிப்பு.

பட்டுக்கு பிறந்தநாளா? என்கிட்டே நீ சொல்லவே இல்ல... இங்கே கொடு... ரத்தினம் அலைபேசிக்காக கரத்தை நீட்ட, அவரது பேச்சைக் கேட்ட, பட்டு என இவர்களால் அழைக்கப்பட்ட ‘நைனிகா’ வாய்விட்டே சிரித்தாள்.

என்ன அம்மம்மா... வழக்கம்போல தாத்தா மறந்துட்டாங்களா? அப்போ என்னோட கிப்ட்? அவள் சிணுங்குவது இங்கே இவருக்குப் புரிந்தது.

அவர் கிடக்கறார்... நான் உன் மாமாகிட்டே சொல்லி கிப்ட் வாங்கி வச்சுட்டேன். நீ எப்போ பட்டு வர்ற? மேகலாவின் குரலில் ஏக்கம் வெளிப்பட்டது.

நான் என்ன வரக்கூடாதுன்னா நினைக்கறேன்? எல்லாம் உங்க பொண்ணுதான்... பத்தாவது படிக்கற, லீவ் போடக் கூடாது... படிக்கணும், எழுதணும், டியூஷன் போகணும்னு ஒரே டார்ச்சர்... அவள் சொல்ல,

பட்டு... அம்மாவை அப்படி எல்லாம் சொல்லக் கூடாதுடா. அவ உன் நல்லதுக்கு தானே சொல்றா. அம்மா சொன்னா கேட்டுக்கணும் கண்டிப்பை கூட கொஞ்சி சொல்ல, நைனிகா முகத்தில் புன்னகை.

நல்லதுக்கு ஒரு அளவில்ல? ஒரு நாள் லீவ் போட்டு உங்களைப் பாக்க வந்தா என்ன ஆயிடுமாம்? போங்க அம்மம்மா... அவள் சிணுங்க, இவருக்கு உருகிப் போயிற்று.

முன்னர் எல்லாம் வாரம் தவறாமல் இவர்களைப் பார்க்க வந்துகொண்டிருந்த பேத்தி, பத்தாம்வகுப்பு போய்விட்ட இந்த ஏழு மாதங்களில் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு கூட வரவில்லையே என்ற ஏக்கம் அவருக்கும் எட்டிப் பார்த்தது.

உன் அம்மாகிட்டே சொல்லி, இந்த வாரம் உன்னை அழைச்சுட்டு வரச் சொல்றேன் பட்டு. இப்போ சமத்தா ஸ்கூலுக்கு போவியாம்... அவர் அவளை சமாதானப்படுத்த,

நீங்க இங்கே வாங்களேன் அம்மம்மா... அவள் ஆசையாக அழைக்க, இவருக்குமே உடனே பேத்தியை பார்க்க வேண்டும்போல் ஆயிற்று.

நான் உன் மாமாகிட்டே சொல்றேன் பட்டு... அவர் சொல்ல,

ஐ, நிஜமாவா அம்மம்மா? மாமா வருவாங்களா? உற்சாகமாக அவள் கூக்குரலிட,

பட்டு... உன் அம்மம்மா சொல்றதை நம்பாதே... ரத்தினத்தின் குரல் அவளைத் தேக்க, அவளது உற்சாகம் கொஞ்சம் வடிந்து போனது.

அப்போ மாமா வரமாட்டாங்களா தாத்தா? அவள் கவலையாகிவிட, அந்த முதியவருக்கு தாங்க முடியவில்லை. மேகலா கணவனை முறைத்துப் பார்க்க, அவரோ மனைவியை கண்டுகொள்ளாமல் தன் பேத்தியிடமே கவனமானார்.

அவன் என்னைக்கு நாங்க சொன்னதை கேட்டிருக்கான்? ரத்தினம் குறைபட,

தாத்தா, மாமாவை அப்படியெல்லாம் சொல்லாதீங்க. மாமா கிரேட் தெரியுமா? மை ஹீரோ... அவள் குரலில் அத்தனை பாசமும், பிரமிப்பும் வெளிப்பட, அவருக்கு புகைந்தது.

அப்போ நான்...? அவர் உரிமைக்கொடி பிடிக்க,

நீங்க நாட்டுக்கே ஹீரோ தாத்தா... சொன்னவள், நீங்க இன்னும் எனக்கு பெர்த்டே விஷ் பண்ணவே இல்லை அவள் முகத்தை சுருக்க, உருகிப் போனார்.

என் பட்டுக்கு ஹேப்பி பெர்த்டே டா... உன்னை நேர்ல பாக்கறப்போ தாத்தா கிப்ட் தர்றேன்... அதுவும் உனக்கு பிடிச்ச கிப்ட்... அவர் சொல்ல, அவளோ கும்மாளமிட்டாள்.

ஏய், போதும்டி... எவ்வளவு நேரம் பேசுவ? போ... போய் டிபன் சாப்பிடு, ஸ்கூலுக்கு நேரமாகுது பார். மார்னிங் கிளாஸ்க்கு போற நினைப்பு இருக்கா இல்லையா? மகளை கண்டித்த நிவேதிதா, அவள் கையில் இருந்து அலைபேசியை வாங்கினாள்.

போங்கம்மா... அம்மம்மா கிட்டே பேசக்கூட விட மாட்டேங்கறீங்க? நான் கோவமா போறேன்... சொன்னவள் அழுத்தமான காலடிகளோடு விலகிச் செல்ல, நிவேதிதா சிரித்துக் கொண்டாள்.

அம்மா, எப்படிம்மா இருக்கீங்க? அப்பா எப்படி இருக்காங்க? முட்டி வலி இப்போ எப்படி இருக்கு? ஹாஸ்பிட்டலுக்கு வாங்கன்னு சொன்னேனே, எப்போ வர்றீங்க? அப்பாயின்மென்ட் வாங்கவா? அவள் படபடக்க, பெற்றவர்களுக்கு அத்தனை நிறைவு.

நல்லா இருக்கோம்மா... கண்டிப்பா ஹாஸ்பிடல் வர்றேன், ஆனா இந்த வாரம் முடியாது. உன் சித்தி ஒருத்தி இங்கே இருக்காளே... ரேகா... அவ பொண்ணுக்கு நல்ல வரன் வந்திருக்காம்... ஜாதக பொருத்தம் பாக்கப் போகணும்ன்னு என்னையும் கூப்ட்டிருக்கா... அவர் சொல்ல, நிவேதிதாவோ மறுப்பாக குரல் கொடுத்தாள்.

ம்மா... உங்க உடம்பு இருக்கற நிலைக்கு, இப்படி அலையலாமா? ஏற்கனவே முட்டிவலி, இதில்....

என்ன செய்ய? வயசுக்கு மூத்தவங்க, உங்க தலைமையில் எல்லாம் நடக்கணும்னு கேக்கறா... என்னால மறுக்க முடியலை... மகள் வார்த்தைகளை முடிக்கும் முன்பே, வேகமாக இடையிட்டார்.

ஹம்... சொன்னாலும் கேக்க மாட்டீங்க... சரி, பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க. தம்பி எப்படி இருக்கான்? என்ன சத்தத்தையே காணோம்? தன் அக்கா மகள் பேசுகிறாள் என்றால், இடையில் வாங்கி பேசாமல் இருக்க மாட்டான் என்பதால் கேட்டாள்.

நல்லா கேளு... விடிஞ்சு இவ்வளவு நேரமாகுது, துரைக்கு இன்னும் தூக்கம் கேக்குது. இவகிட்டே கேட்டதுக்கு, என்கிட்டே முகத்தை திருப்பிக்கறா மகளிடம் வசைபாடினார்.

தம்பி இன்னுமா தூங்கறான்? அம்மா... என்னம்மா ஆச்சு அவனுக்கு? உடம்புக்கு ஏதும் முடியலையா? அவனது பத்து வயது வரைக்கும், கூடவே அன்னையாக இருந்து அவனைப் பார்த்துக் கொண்டவள், இப்பொழுதும் அவன் அவளுக்கு மூத்த மகனைப் போன்றவன் என்பதால் படபடத்தாள்.

என்னம்மா... நீயும் இவ கூட சேர்ந்துகிட்டு... தகப்பன் சொல்ல வந்ததை இரு பெண்களுமே கண்டுகொள்ளவில்லை.

கூடவே தாயின் பேச்சைக் கேட்டு அங்கே வந்த நைனிகாவும், மாமாவுக்கு என்ன? என்னன்னு சொல்லுங்க அவள் பங்குக்கு குரல் கொடுக்க, ரத்தினம் டெப்பாசிட் அங்கே காலியானது.

"நீயே சொல்லு நிவேதிதா, அவன் என்ன இன்னும் சின்னப் பிள்ளையா? CA படிச்சு முடிச்சுட்டான். ஒரு லீடிங் ஆடிட்டர் கிட்டே வேலைக்கும் போய்ட்டு இருக்கான்.

"அவங்க கொடுக்கற வேலையை இவன் முடிக்காமல் இருக்க முடியுமா? நைட் பன்னிரண்டு, ஒரு மணி வரைக்கும் உக்காந்து அதை முடிச்சுட்டு படுத்தா, காலையில டான்னு அஞ்சு மணிக்கு எழுந்து எப்படி அவனால் வர முடியும்?

அதைப் புரிஞ்சுக்காம அவனை திட்டினா நான் என்ன செய்யட்டும்? வயசான காலத்தில் அக்கடான்னு உக்காரலாம்ன்னா, எனக்கு இதெல்லாம் தேவையா? தள்ளாமை அவரைப் போட்டு புரட்ட, இந்த வயதில் கணவனுக்கும் மகனுக்கும் இடையில் இழுபட வேண்டி உள்ளதே என வருத்தமானார்.

தாத்தா... இட்ஸ் டூ பேட்... மாமாவை சத்தம்போடுவீங்களா? இன்னொரு முறை இப்படிப் பண்ணீங்கன்னா, நான் உங்ககிட்டே பேசவே மாட்டேன் நைனிகா இடையே புகுந்து கத்த, அவர் ஏன் பேசப் போகிறார்?

நைனிகா... நீ கிளம்பு, நான் பேசிக்கறேன்....

ஓகேம்மா... கிளம்பறேன்... அம்மம்மா... மாமாகிட்டே கண்டிப்பா என்னை வந்து பாக்கச் சொல்லுங்க, மாமா வந்தால்தான் நான் கேக் கட் பண்ணுவேன்....

பட்டும்மா... பொறந்தநாளும் அதுவுமா அடம் பண்ணக் கூடாது. உன் மாமா இப்போ வேலைக்குப் போறான், அவன் சூழ்நிலை என்னன்னு தெரியாதுடா. ஆனா நான் கண்டிப்பா சொல்றேன், நீ சந்தோஷமா போய்ட்டு வா மேகலா சமாதானப்படுத்த,

ம்கும், போறது ஸ்கூலுக்கு இதில் சந்தோஷமா வேற போகணுமாம் அவள் புலம்பியது அனைவரின் காதிலும் விழுந்து, சிறு புன்னகையை தோற்றுவித்தது.

அதை அடக்கிய நிவேதிதா, நைனிகா... கண்டிப்பாக குரல் கொடுக்க,

சரி... சரி... போய்ட்டு வர்றேன்... பாய்... அவள் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்ப, அவளுக்கு டாட்டா காட்டியவள், மீண்டும் இவர்கள் பேச்சுக்கு வந்தாள்.

"என்னப்பா இது? அவன் என்ன பொறுப்பில்லாத பிள்ளையா? அவனே அவன் என்னவாகணும்னு முடிவு பண்ணி, இந்த இருபத்திநாலு வயசுக்கெல்லாம் CA முடிச்சு வெளியே வந்திருக்கான்.

அதைப் புரிஞ்சுக்காம எதுக்கு பேசறீங்க? அவன் இன்னும் சின்னப்பிள்ளை இல்லை, அவனுக்கு கல்யாண வயசு வரப்போகுது... அவள் பங்குக்கு அவளும் தகப்பனிடம் பேச, ரத்தினம் சற்று அமைதியானார்.

அப்படி இல்லம்மா... நைட் செய்யற வேலையை, காலையில் வேளையோட எழுந்து செய்யலாமேன்னு கேட்டேன், வேற எதுவும் இல்லை அவன் பரிதாபமாக சொல்ல, அவளுக்கு பாவமாகப் போயிற்று.

இதே தாயும், தகப்பனும்... பத்து வருடங்களுக்கு முன்னர் வரைக்கும், மிலிட்டரி ஆபீசராகவும், கறார் தாயாகவும் வளைய வந்ததும், அவர்களது சண்டைகள், கோபங்கள் என பொறி பறக்க விவாதிப்பதும் என அவள் நினைவுக்கு வர, முதுமை வர, வர இருவரும் மனதளவிலும், உடலளவிலும் தளர்வது கண்கூடாக தெரிய மனதுக்கு அத்தனை கவலையாக உணர்ந்தாள்.

‘இதைப்பற்றி தன தம்பியிடம் பேசவேண்டும் என மனதுக்குள் குறித்துக் கொண்டாள்.

"அப்பா, அவன் அவனோட வசதிக்கு வேலை பாத்துட்டு போகட்டுமே... இன்னும் அவனை நீங்க கன்ட்ரோல் பண்ணணும்னு நினைக்கறது சரியில்லப்பா. அவனை ஃப்ரீயா விடுங்க,

அம்மா... எங்கே போறதா இருந்தாலும் என்கிட்டே சொல்லிட்டு போங்க. தம்பி எழுந்தா எனக்கு கால் பண்ணச் சொல்லுங்க... எனக்கும் ஹாஸ்பிடல் போக டைம் ஆச்சு... சொன்னவள் அலைபேசியை வைத்துவிட, மேகலா அங்கிருந்து எழுந்துகொண்டார்.

இப்போ எதுக்கு உள்ள போற? அங்கே என்ன வேலை இருக்கு? என்பது வயது நெருங்கும் நிலையில் இருப்பவருக்கு, எழுந்து நடமாடுவதே சற்று சிரமம் என்கையில், வேலையைப் பார்க்கிறேன் என கிச்சனுக்குள் சென்று நின்றுவிடுவார் என்பதால் கேட்டார்.

வேலை இல்ல, ஆனா வேலை செய்யறவங்களை கவனிக்கணுமே... இல்லன்னா அவங்க இஷ்ட்டத்துக்கு பண்ணுவாங்க சொன்னவர், மூட்டுவலியை தாங்கிக்கொண்டு நடக்க முடியாமல் சில நொடிகள் நின்றுவிட, மனைவியை கை பிடித்து அமர வைத்தார்.

அதெல்லாம் நிதானமா பாத்துக்கலாம்... உக்காரு... கால் ரொம்ப வலிக்குதா? இரு எண்ணெயை எடுத்துட்டு வர்றேன் சொன்னவர் எழுந்து உள்ளே செல்ல, கணவனின் சமாதான முயற்சி புரிய சிரித்துக் கொண்டார்.

இங்கே இவர்களது ஊமை சண்டைக்கு காரணமானவனோ, படுக்கையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். நேரம் ஒன்பது மணி எனச் சொல்லி, அவனது அலைபேசி இசைத்து அவனை எழுப்ப, கண்களை கசக்கியவன், எழுந்து அமர்ந்து, கண்களைத் திறந்தவன், தன் உள்ளங்கையில் பார்வையை பதித்தான்.

இசைத்த அலைபேசியை நிறுத்தியவன், எழுந்து பாத்ரூம் செல்ல... அவனைப் பற்றி... அவன் பிரபஞ்சன்... ரத்தினம், மணிமேகலையின் புதல்வன், மணிமேகலை மெனோபஸ் பீரியடில் இருக்கையில், ரத்தினம் தன் இரு சர்வீசையும் முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.

அடுத்த மாதமே மணிமேகலையின் மாதாந்திர பிரச்சனை முடிவுக்கு வர, ஐந்து மாதம் முடியும் வரைக்குமே அவன் அவரது கருவில் வளர்வது அவருக்குத் தெரியவே இல்லை.

அவரது மகள், நிவேதிதாதான்... அம்மா, உங்க வயிறு பெருசாயிட்டே போகுது, உள்ளே தம்பிப் பாப்பா இருக்கா? என விளையாட்டாக கேட்டு வைக்க, அன்றைக்கே மருத்துவமனைக்கு ஓடியவர்களுக்கு கிடைத்த செய்தியால் சந்தோஷப்பட முடியவில்லை.

குழந்தையை கலைத்துவிடும் நிலையையும் கடந்திருக்க, பெற்றுக்கொள்ளும் உடல்நிலை இருந்தாலும், முதுமையின் ரிஸ்க், சமுதாயத்தின் கண்ணோட்டம் என அனைத்தையும் நினைத்து பயந்தார்.

அப்பொழுதும் நிவேதிதாத்தான் தன் தம்பியோ, தங்கையோ, தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி, தாய்க்கு தைரியம் கொடுக்க, பிரபஞ்சன் இந்த உலகுக்கு வந்தான்.

அவனுக்கு ஒவ்வொரு வருடமும் ஏற, பெற்றவர்களுக்கும் ஒரு வயது கூடியதே... எப்படியோ அவன் பள்ளி, கல்லூரி என முடித்து, இப்பொழுது வேலையிலும் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஓடிப் போயிருந்தது.

இருபத்துநான்கு வயது இளைஞன்... அரும்பு மீசையும், பெற்றவரிடமிருந்து தொற்றிக்கொண்ட யோகா பயிற்சியும் சேர, திண்ணிய உடற்கட்டோடு அறிவு கூர்மையும், கூடவே நாசியின் கூர்மையும் சேர, சற்று துறுதுறு பேர்வழிதான்.

காலைக்கடன்களை முடித்தவன், பல்க்கனிக்கு வர அங்கேயே ஓரத்தில் விரிக்கப்பட்டிருந்த யோகா மேட்டில் அமர்ந்தான். பார்வை தோட்டத்தின் பக்கம் பாய, தந்தை தாயின் காலுக்கு எண்ணெய் போட்டு நீவி விடுவதைப் பார்த்தவன் முகத்தில் ஒரு அழகான புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

அது அவனுக்கு இன்னும் சிறு வசீகரத்தை அளிக்கவே, சில நொடிகள் அதிகமாகவே அவர்களை ரசித்தவன், தன் யோகாவில் கவனமானான். அடுத்த அரைமணி நேரம் அதில் கழிய, குளித்து, உடைமாற்றி அலுவலகத்துக்குத் தயாராகி கீழே இறங்கி வந்தான்.

பொன்னம்மாக்கா... டிபன்... அவன் குரல் கொடுக்கவே, அவர்கள் வீட்டில் வேலைக்கென நிற்கும் பொன்னம்மா டிபனை எடுத்து மேஜைமேல் வைத்தாள்.

அம்மா, அப்பா எல்லாம் சாப்ட்டாங்களா? அவளிடம் கேட்க,

சாப்ட்டாங்க தம்பி... டீ கொண்டு வரட்டுங்களா? அவன் எப்பொழுதும் சூடாகத்தான் டீ குடிப்பான் என்பதால் கேட்டார்.

இல்லக்கா, முடிச்சதும் கொண்டு வாங்க... சொன்னவன் தன் அலைபேசியில் ஏதும் முக்கியமான தகவல் உள்ளதா என அறிய வாட்ஸ்ஆப் போனான்.

அங்கே தன் அக்காவிடமிருந்து இரண்டு வாய்ஸ்மெஸ்சேஜ் வந்திருக்க அதை ஓடவிட்டான்.

மாமா... சாயங்காலம் எனக்கு நீங்க கேக் வாங்கிட்டு வந்தாத்தான் நான் கேக் கட் பண்ணுவேன்... செல்ல மிரட்டலில் நைனிகாவின் குரல் ஒலிக்க, அவள்மீது பாசம் பெருகியது.

‘பட்டு...’ மனதுக்குள் அவளைக் கொஞ்சிக் கொண்டவனுக்கும் அவளைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது.

அடுத்த வாய்ஸ் மெசேஜை ஒலிக்கவிட, ப்ரீ ஆயிட்டு எனக்கு கூப்பிடு தம்பி... அக்காவின் குரல் அத்தனை வாஞ்சையாக ஒலிக்க, தன் அலைபேசியை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டான். தன் அக்கா, அத்தனை பாசமாக இதழ் ஒற்றுவதுபோல் இருக்க, அவளைப் பிரிந்திருக்கும் ஏக்கம் எப்பொழுதும்போல் அப்பொழுதும் வாட்ட, ஒரு பெருமூச்சு எழுந்தது.

‘மிஸ் யூ அக்கா...’ ஏக்கமாக சொல்லிக் கொண்டான். அவனுக்கு நினைவு தெரிந்ததுமுதல், பத்து வயது வரைக்கும் அவனது அக்காதான் அவனுக்கு எல்லாம். தாயிடம் இருந்து எப்போதும் சற்று விலகியே நிற்பான்.

மேகலைக்கு வயது சென்றதால், அவனது சேட்டைகளையும், குறும்புத்தனங்களையும் பொறுமையோடு கையால வரவில்லை. அதை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டது நிவேதிதா தான்.

அவளுக்கு திருமணம் ஆகிப் போன பொழுது, இவனுக்கு ஜுரம் கண்டு ஜன்னியே வந்துவிட்டது. அதைப் பார்த்து அவள் அழ, அவளது கணவன் பிரபஞ்சனை தங்களோடு வைத்துக் கொள்ள விரும்பினான்.

அவர்கள் அப்பொழுது கூட்டு குடும்பத்தில் இருக்க, நிவேதிதா தம்பியிடம் அமர்ந்து பொறுமையாக அனைத்தையும் எடுத்துச் சொல்ல, முயன்று தன்னை மீட்டுக் கொண்டான். அப்படியும் வாரத்தில் பாதி நாள், பள்ளியில் இருந்து தன் அக்காவைக் காண, அவள் வேலை செய்யும் மருத்துவமனைக்கே சென்றுவிடுவான்.

கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் அந்தப் பழக்கம் கொஞ்சம் மாறியது. ஆனாலும் கொஞ்சம்தான்... அதையெல்லாம் எண்ணியவாறு அவன் அப்படியே அமர்ந்திருக்க, அவன் தோளில் ஒரு கரம் விழவே, கண்ணைத் திறக்காமலேயே அது யார் என அவனுக்குப் புரிந்தது.

சாப்ட்டியாப்பா...? என்ன வேலைக்கு கிளம்பிட்டியா? தாய் வாஞ்சையாக கேட்டு, அவன் கன்னம் வருட, அவரது கரத்தை பற்றிக் கொண்டான்.

எல்லாம் ஆச்சும்மா... நீங்க சாப்ட்டீங்களா? மாத்திரை எல்லாம் போட்டாச்சா? கால்வலி ரொம்ப இருக்கா? ஹாஸ்பிட்டல் கூட்டி போகவா? அக்கறையாக கேட்டான்.

இதெல்லாம் வயசானா இருக்கறதுதான், அம்மாவை கூப்ட்டு இருக்கலாமே பிரபாம்மா... அவனது தட்டில் இட்லியை வைத்தவாறே அவனுக்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தார்.

இந்த இட்லியை நான் வச்சு சாப்ட்டுக்க மாட்டேனா? இதுக்கு உங்களை கூப்பிடணுமா? சரி... எங்கேயோ போகணும்னு சொன்னீங்களே... கார் எடுத்துட்டு போக வேண்டாம்... நான் ட்ரைவரை வரச் சொல்றேன் அவன் அக்கறையாக சொல்ல, ரத்தினம் அங்கே வெறும் பார்வையாளர் மட்டும்தான்.

"ரத்தினம் கார் ஓட்டுவார்தான் ஆனால்... வயதான பிறகு அதை ஓட்டுவதில் சிறு சிரமம் இருக்க, அதை மகன் கவனித்து இருக்கிறானே என எண்ணிக் கொண்டார்.

உங்க அக்காக்காரி போன் பண்ணி சொல்றேன்னு சொல்லி இருக்காப்பா. எப்போன்னு சரியா சொல்லலை, சொன்னதும் சொல்றேன். சரி... சாயங்காலம் நம்ம பட்டுவை பாக்க போலாமா? கண்ணுக்குள்ளேயே நிக்கறா... அவர் எதிர்பார்ப்பாக கேட்க, சில நொடிகள் அமைதியானான்.

இன்னைக்கு ஒரு கம்பெனிக்கு ஆடிட்டிங் போக வேண்டி இருக்கும்மா. எப்போ முடியும்ன்னு தெரியலை. என்னால் முடிஞ்சா கண்டிப்பா வர்றேன், இல்லன்னா நீங்க போய்ட்டு வாங்க, ட்ரைவருக்கு சொல்லிடறேன்.

அவனால் உறுதியாகச் சொல்ல முடிந்திருந்தால் நிச்சயம் மறுக்க மாட்டான் என அவருக்குத் தெரியுமே... எனவே அதற்கு மேலே அவனை கட்டாயப்படுத்தவில்லை.

அக்கா... டீ... அவன் குரல் கொடுக்க, சூடாக அவள் கொண்டுவந்து வைக்க, ஆவிபறக்க அதைக் குடித்தவன், கை கழுவிவிட்டு, தன் லேப்ட்டாப் பேகை எடுத்துக் கொண்டான்.

சரிம்மா... நான் போய்ட்டு வர்றேன்... தாயிடம் சொன்னவன், தந்தையிடம் ஒரு சிறு பார்வையை மட்டும் செலுத்திவிட்டு தன் வண்டியில் ஏறிச் செல்ல, மேகலாவின் முகத்தில் பெருத்த கவலை அப்பிக் கொண்டது.

‘இன்னும் எத்தனை வருடம் இருப்போம்? அவனுக்கு உடனே ஒரு நல்லது நடத்தி வைக்க வேண்டும்’ அவரது சிந்தை முழுவதும் இதுவாகவே இருக்க, தன்னை புரிந்துகொள்ள மறுக்கும் கணவனை எண்ணி ஒரு பக்கம் கவலையாக இருந்தது.

யாருக்கும் காத்திருக்காமல் நேரம் கடக்க, மாலையில் ரத்தினமும், மேகலையும் மகளின் வீட்டுக்கு கிளம்பும் நேரம் மகனுக்கு அழைத்தார்கள். அவன் அழைப்பை ஏற்காமல் போகவே, அவன் அனுப்பிய ட்ரைவர் வர, காரில் கிளம்பி விட்டார்கள்.

அவர்கள் காரில் செல்கையில், நைனிகா அவர்களுக்கு கூப்பிட, அலைபேசியை எடுத்த உடனே, மாமா வர்றாங்களா? அவளது கேள்வி இதுவாகத்தான் இருந்தது.

மாமாவுக்கு வேலையாம் பட்டு... மேகலை சம்மாளிக்கையிலேயே அலைபேசியை அவள் வைத்திருந்தாள்.

புள்ள கோவிச்சுகிட்டா... மேகலை சொல்ல,

உன் புள்ளை பண்ற காரியத்துக்கு கோவிக்காம? ஒரு எட்டு வந்துட்டு போனா என்னவாம்? ரத்தினம் சடைத்தார்.

நீங்க உங்க வேலையை விட்டுபோட்டு எத்தனை விசேஷத்துக்கு வந்தீங்களாம்? அவர் எதிர்கேள்வி கேட்க,

ஏன் மேகலை... என் வேலையும் அவன் வேலையும் ஒண்ணா? சற்று அதிர்வாகத்தான் கேட்டார்.

எதுவா இருந்தா என்ன? அவங்க அவங்களுக்கு, அவங்க வேலை உசத்தி மேகலை சொல்ல, அவர் எதற்கு வாயைத் திறக்கப் போகிறாராம்?

அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் அங்கே செல்ல, அவர்களது மருமகன் பிரசாத் வாசலுக்கே வந்து வரவேற்றார்.

வாங்க மாமா, வாங்க அத்தை... அழைத்தவன், தன் மாமியாரின் கரத்தை பற்றி வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

எங்கே எங்க பட்டுவைக் காணோம்? மருமகனிடம் கேட்க,

அவ மாமா வரமாட்டேன்னு சொல்லிட்டாராம், கேக்கும் வேண்டாம், எதுவும் வேண்டாம்னு உக்காந்திருக்கா சின்னக்குரலில் அவரிடம் சொன்னவாறே கூட்டிச் செல்ல, நிவேதிதா வந்துவிட்டாள்.

வாங்கம்மா... முட்டிவலி இப்போ இன்னும் அதிகமாயிடுச்சு போல? கேட்டவள் பார்வையை அவர்களின் முதுகின் பின்னால் அலையவிட,

அவன் வரலை... அவளது பார்வைக்கு ரத்தினம் பதில் கொடுத்தார்.

சரி விடுங்க... உக்காருங்க... அவர்களை அமர வைத்து, வெந்நீரை குடிக்கக் கொடுத்தாள்.

சரி கேக் எங்கே...? அவள் கேட்க,

கேக்கா? அவன் கேக் வாங்கி குடுத்து அனுப்பலையே... மேகலை குழம்பிப் போனார்.

அப்படியா? எனக்கு போன் பண்ணி, நான் குடுத்து அனுப்பறேன்னான். ஒரு வேளை கார்ல இருக்கோ என்னவோ? நீங்க சரியா கவனிச்சு இருக்க மாட்டீங்க. நைனி... கார்ல கேக் இருக்கான்னு பாரு... மகளுக்கு குரல் கொடுத்தாள்.

மாட்டேன்... நீங்களே பாருங்க... கோபமாக கத்தியவள், தகப்பனின் ஒரு பார்வையில் அமைதியாக எழுந்து சென்றாள்.

அவள் வெளியே செல்கையில் கேக் பார்சலோடு பிரபஞ்சன் காருக்கு அருகே நிற்க, பார்த்தவளின் முகம் அப்படியே பூவாக மலர்ந்து போனது.

மாம்சே... என்னவோ வர மாட்டேன்னு சொன்னியாம்? அப்படி ஒரு கூச்சளிட்டவள், நாலுகால் பாய்ச்சலில் வெளியே ஓட, அவளது உற்சாகம், அங்கிருந்த அனைவரையும் தொற்றிக் கொண்டது.

தன் அக்கா மகள் தன்னை நோக்கி ஓடி வரவே, கேக் பார்சலை காரின் மீது வைத்தவன், தன்னை நோக்கி ஓடி வந்து கழுத்தை கட்டிக்கொண்டு தொங்கியவளை அப்படியே தூக்கி சுழற்றினான்.

பகுதி – 2

இருள் பிரியாத அந்த காலை வேளையில், அந்த தகப்பனும் மகளும், காலை நேர நடை பயிற்சியில் ஈடுபட்டிருக்க, அவளது வாயோ தகப்பனிடம் இடைவிடாது பேசிக் கொண்டிருந்தது.

"நேத்து காலேஜ்ல என்ன நடந்துச்சு தெரியுமா? எங்க ப்ரோஃபசர் வரலைன்னு வேற ஒரு மேடம் வந்தாங்க. பசங்க எல்லாம் ஒரே கத்து, ஒரு பையனைப் புடிச்சு எழுப்பி விட்டு, ‘உன் பேர் என்னடா?’ அப்படின்னு அவங்க கேட்டா,

அதுக்கு பின்னாடி பெஞ்ச்ல இருந்து எவனோ ஒருத்தன் சொல்றான், ‘பில்ல்லல்லா...’ அப்படின்னு. எல்லாரும் பக்குன்னு சிரிச்சுட்டோம். இப்படித்தான் டெய்லி ஏதாவது நடக்குதுப்பா... ஸ்கூல் எல்லாம் போர் தெரியுமா? கல்லூரி செல்லத் துவங்கி இரண்டு மாதங்களே ஆகி இருக்க, தென்றலுக்கு கல்லூரி வாழ்க்கை அவ்வளவு பிடித்திருந்தது.

தென்றல்... பதினெட்டு வயது பூர்த்தியான பூமொட்டு... இப்பொழுதே ஐந்தடி இரண்டு அங்குலம் வளர்ந்திருக்க, தகப்பனோ, அவள் இன்னும் வளர்வாள் எனச் சொல்லி இருக்க, எப்படியும் இன்னும் மூன்று அங்குலமாவது வளர்வாள்.

கட்டையான சுருள் கூந்தல்... சுருட்டை என்றால் கிளிப்புக்கோ, பின்னலுக்கோ கூட அடங்க மாட்டேன் என்னும் படியான பஞ்சுமிட்டாய் முடி. அது அவளுக்கு அத்தனை அழகைக் கொடுத்தது.

மீன் விழிகளுக்கு பதிலாக, சற்று மான் விழிகள்... சற்று கூர்மையான நாசி, ஈரம் சொட்டும் இதழ்கள்... ‘மோனா’ கார்ட்டூன் படத்தில் வரும் ‘மோனா’வை ஒத்திருந்தாள்.

அவளுக்கு எது ஒன்றையும் செய்ய தாயை விட தகப்பன் வேண்டும். பள்ளிக்காலத்தில் உடன் செல்வது முதல், பாடம் சொல்லிக் கொடுப்பது வரைக்கும் அவர்தான்... பரமேஸ்வரன்... அவள் வயதுக்கு வந்ததைக் கூட தகப்பனிடம்தான் முதலில் சொன்னாள்.

அவளைக் கல்லூரிக்கு அனுப்பவே பரமேஸ்வரன் அவ்வளவு பயந்தார். மகளை கைக்குள்ளேயே பொத்தி பாதுகாக்கும் ஆசை இருந்தாலும், அது முடியாது என்பதால் அவளை கல்லூரிக்கு அனுப்பினார்.

அங்கே என்ன நடந்தாலும், ஒருவன் தும்மினான் என்றால் கூட தகப்பனிடம் வந்து சொல்லி விடுவாள். அவள் கேட்பது ஏதுவாக இருந்தாலும் உடனே வாங்கிக் கொடுத்து விடுவார்.

மகளுக்கு எவனும் காதல் கடிதம் கொடுத்து விடுவானோ? அதை மகள் எப்படி கையாள்வாள்? என்ற கவலை அவருக்குள் ஒரு ஓரத்தில் பிராண்டிக் கொண்டிருந்ததும் உண்மை.

சுருக்கமாகச் சொன்னால்... ‘தென்றல்’ டேடிஸ் லிட்டில் பிரின்சஸ் தான். வாக்கிங்கில் கூட மகளோடு ஓயாமல் பேசியவாறு, அவள் பேசியதை ரசித்தவாறு அவளோடு சென்றார்.

பதினெட்டு வயது வந்துவிட்டாலும், அவள் அவருக்கு இன்னும் அந்த ஒரு வயது குழந்தை தான். அவளது வளர்ச்சியைப் பார்த்து பூரிக்கும் அந்த மனம், அதைக்கொண்டு பயப்படவும் செய்தார்.

பசங்க எல்லாம் உங்களோட பேசுவாங்களாம்மா?.

"ம்... பேசுவாங்கப்பா... ஆனா நான் ரொம்ப பேசமாட்டேன். என் ப்ரண்ட்ஸ் சொன்னேனே... ‘எலினா’ ‘ஹதிஜா’ இவங்க ரெண்டுபேரும் நல்லா பேசுவாங்க. நான் சும்மா வேடிக்கை மட்டும் பாப்பேன்.

சில பசங்க, என்ன இவங்க பேச மாட்டாங்களா? ஊமையா? அப்படின்னு கூட கேப்பாங்க, ‘அவளை விடுங்க... உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க’ன்னு அவங்க ரெண்டுபேரும் என்னை ப்ரொட்டெக்ட் பண்ணுவாங்க அவள் சொல்ல, அவருக்கு அந்த மாணவர்களைப் பிடித்து அடிக்கும் வெறி.

அவங்க ஏதாவது வம்பு பண்ணா அப்பாகிட்டே சொல்லும்மா, அப்பா காலேஜுக்கு வந்து பேசறேன்... அவர்கள் பேசியவாறே வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்க, கணவனின் பேச்சைக் கேட்ட பார்வதி, நோகாமல் தலையிலேயே அடித்துக் கொண்டார்.

நல்லா அப்பா, நல்ல பொண்ணு... அவளைக் கொஞ்சம் ஃப்ரீயாத்தான் விடுங்களேன் பார்வதி கணவனிடம் சொல்ல, அவரோ மனைவியை முறைத்தார்.

தென்றலோ, ஒரு படி மேலே போய், நோ ம்மா... அப்பாவை எதுவும் சொல்லாதீங்க. டேடி இஸ் மை காட் ஃபாதர், சேவியர்... அவள் தகப்பனின் கரத்தை கோர்த்து, அவர் தோளில் சாய்ந்து கொண்டாள்.

இவர் பரமேஸ்வரன் டி... நீ என்ன சேவியர்ன்னு சொல்லிக்கிட்டு இருக்க? பரமேஸ்வரன் கோச்சுகிட்டு வேலெடுத்து வீசிடப் போறார் தாய் கேலிசெய்ய,

ஹா...ஹா...ஹா... உங்க ஜோக்குக்கு இவ்வளவு சிரிச்சா போதுமா? இல்லன்னா இன்னும் சிரிக்கணுமா?" அவள் கேட்க, தகப்பனும் மகளும் ஹை-பை கொடுத்துக் கொண்டார்கள்.

வேணாம்டி... இது நல்லதுக்கு இல்லை... எல்லாத்துக்கும் உங்க அப்பா முதுகிலேயே ஏறி சவாரி பண்ண முடியாது சற்று கவலையாகவே சொல்ல, அதையெல்லாம் அவள் கண்டுகொள்ளவே இல்லை.

என்னங்க, நீங்களும்தான்... கணவரிடம் சொல்லப் போனவர், ‘இவர்கிட்டே சொல்றது வேஸ்ட்’ என்ற எண்ணம் ஓட, அப்படியே திரும்பிவிட்டார்.

அம்மா, என்னவோ சொல்ல வந்துட்டு சொல்லாமலே போறீங்களே... அவள் தாயிடம் கேட்க,

நான் பூஸ்ட் எடுத்துட்டு வர்றேன்... நீ எப்போ ‘டீ’குடிக்க வளருவன்னு தெரியலை. உன்னைய இன்னும் மடியில போட்டு தாலாட்டினா? ஹம்... முன்னதை சத்தமாகவும், பின்னதை புலம்பலாகவும் சொல்லி, பெருமூச்சை வெளியேற்றினார்.

முன்னர் எல்லாம் தகப்பன், மகள் ஒற்றுமை, பாசத்தைப் பார்த்து பூரித்துப் போயிருந்த இவரது மனம், வருடங்கள் கடக்கையில் பெரும் பயமாக உருமாறி செல்லரித்துக் கொண்டிருந்தது.

‘அவ வாழ்க்கையை இவர் வாழ விடுவாரா?’ சில நேரங்களில், பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளின் கைபிடித்து செல்வதை விட, அந்தந்த வயது வருகையில் அவர்களது கைவிட்டு, கண் பார்வையில் வழிநடத்தி செல்வதுதான் சரியாக இருக்கும்.

அதை விடுத்து, காலம் முழுவதும் உன் கையை இறுகப் பற்றிக்கொண்டு உடன் நடப்பேன் எனச் சொல்வது எப்படி சரியாகும்?

யோசனையோடு யோசனையாக, கை அதன் வேலையை செய்திருக்க, மகளுக்கு பூஸ்ட்டும், கணவனுக்கு டீயும் கலந்து எடுத்து வந்து கொடுத்தார்.

அப்பொழுதும் தகப்பனும், மகளும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருக்க, ‘விடாமல் பேச என்னதான் இருக்குமோ?’ எண்ணியவர்,

என்னங்க... தீபாவோட பொண்ணுக்கு ஜாதகம் பாக்கப் போகணும்னு கூப்ட்டாங்க... சிறு அறிவிப்பாக உரைத்தார்.

ஐ... பூர்ணிமா அக்காவுக்கு கல்யாணமா? அத்தை சொல்லவே இல்ல? அப்பா, அப்பா, நான் இன்னைக்கு அத்தை வீட்டுக்கு போகவா? பிளீஸ்ப்பா தகப்பனிடம் கெஞ்சினாள்.

தீபா அவர்களுக்கு உறவு இல்லை... இங்கே சென்னைக்கு வந்தது முதல் பழக்கம். அதுவும் ஒரே இனம் என்பதால் இன்னும் ஒட்டுதல். பூர்ணிமா இவளை விட ஐந்து வயது பெரியவள். இவளது விளையாட்டுத் தோழி. இவள் உற்சாக குரல் கொடுக்க,

என்ன? பூர்ணிமாவுக்கு கல்யாணமா? அவ குழந்தைடி... பரமேஸ்வரன் அத்தனை பெரிய அதிர்வைக் காட்டினார்.

என்னது... குழந்தையா? அவளுக்கு இருபத்திமூணு வயசு முடியப் போகுது. எல்லாம் கல்யாண வயசுதான்... இன்னும் அஞ்சு வருஷம் போனா, உங்க பொண்ணுக்கே கல்யாண வயசு வந்துடும், அது ஞாபகம் இருக்கா? அவர் கேட்க, அங்கே யார் அதிகம் அதிர்ந்தது என்றே சொல்வதற்கு இல்லை.

ம்மா... பாரு... மகளும், தகப்பனும் மறுப்பாக குரல் கொடுக்க, பார்வதியோ இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தார்.

என்ன பாரு? இல்ல என்ன பாருன்னு கேக்கறேன்? ஏய், எழுந்து குளிக்கப் போடி... காலேஜ் போகலையா? எழுந்து போ... தாயின் முகத்திலும், குரலிலும் ஒருவித இறுக்கம் தெரியவே, மறுக்காமல் எழுந்து சென்றுவிட்டாள்.

அவள் அங்கேயே இருந்து சாதித்தால், உடனே தன் தகப்பனுக்கும், தாய்க்கும் சண்டை வரும் என இத்தனை வருடங்களில் முதல் முறையாக உணர்ந்து தெளிந்ததாலேயே அவ்வாறு செய்தாள்.

"அம்மாடி... தென்றல்... இவ சொன்னான்னு நீ

Enjoying the preview?
Page 1 of 1