Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavey Kanivey...
Kanavey Kanivey...
Kanavey Kanivey...
Ebook407 pages4 hours

Kanavey Kanivey...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

தன் திருமணம் மிகப்பெரும் துரோகத்தால் முடிவுக்கு வந்திருக்க, திருமண பந்தத்தின் மீதே பெரும் வெறுப்பு கொள்ளும் நாயகனும், திருமணம் என்றாலே அதில் இருக்கும் பிரச்சனைகள் தனக்கு வேண்டாம் என திருமணமே வேண்டாம் என இருக்கும் நாயகியும், ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் இணைந்தால் அவர்களது வாழ்க்கை என்னவாகும்?

அவர்களது திருமணம் வெற்றி பெறுமா? இல்லையென்றால் விலகிச் செல்வார்களா? தெரிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்.

Languageதமிழ்
Release dateSep 16, 2023
ISBN6580109210268
Kanavey Kanivey...

Read more from Infaa Alocious

Related authors

Related to Kanavey Kanivey...

Related ebooks

Reviews for Kanavey Kanivey...

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavey Kanivey... - Infaa Alocious

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கனவே கனிவே...

    Kanavey Kanivey...

    Author:

    இன்பா அலோசியஸ்

    Infaa Alocious

    For more books

    https://www.pustaka.co.in/home/author/infaa-alocious-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பகுதி – 1

    பகுதி – 2

    பகுதி – 3

    பகுதி – 4

    பகுதி – 5

    பகுதி – 6

    பகுதி – 7

    பகுதி - 8

    பகுதி – 9

    பகுதி – 10

    பகுதி – 11

    பகுதி – 12

    பகுதி - 13

    பகுதி – 14

    பகுதி – 15

    பகுதி – 16

    பகுதி – 17

    பகுதி - 18

    பகுதி – 19

    பகுதி – 20

    பகுதி – 21

    பகுதி – 22

    பகுதி – 23

    பகுதி – 24

    பகுதி – 25

    பகுதி – 1

    ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் விடியற்காலை வேளை... நேரம் சரியாக 3. 30 என கடிகாரம் காட்ட, ‘கிருபை மருத்துவமனை’யின் இதய நோயாளிகள் இருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவு உச்ச பரபரப்பில் இருந்தது.

    தேவா எந்திரி... அவ்வளவு நேரமும் உள் நோயாளிகளுக்கு கொடுக்கவேண்டிய ஊசி மருந்துகளை கொடுத்துவிட்டு, அப்பொழுதுதான் வந்து இருக்கையில் தலை சாய்த்த தேவாவை உச்ச பதட்டத்தில், குரல் கொடுத்து எழுப்பினாள் ரம்யா.

    ஹாங்... ரம்யா... என்ன...? யாருக்கு என்னவாச்சு? வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தான் தேவா.

    ரம்யா இவ்வளவு பதட்டமாகத் தன்னை அழைக்கிறாள் என்றாலே, ஏதோ ஒரு நோயாளிக்கு முடியவில்லை என அவனுக்குப் புரிந்ததாலேயே அவ்வாறு கேட்டான்.

    அது இதய நோயாளிகளின் அவசர சிகிச்சைப் பிரிவு என்பதால், அந்த இடத்தில் எப்பொழுதுமே அலட்டாகவே இருப்பார்கள். அங்கே இருக்கும் ஒவ்வொரு உயிருக்கும், மருத்துவர் இல்லாத நேரம், அவர்கள்தான் பொறுப்பு என்பதால், இன்னும் அதிக கவனத்தோடு செயல்படுவர்.

    அந்த நாலாம் நம்பர் பெட் பேஷன்ட் தான்... உடம்பு தூக்கிப் போடுது... அவள் கொள்ளை பதட்டத்தில் உரைக்க,

    என்ன...? கேட்டவனுக்கு அவளை விட அதிக பதட்டம் இப்பொழுது.

    டாக்டர் செல்வம் வந்துட்டாரா? கேட்டவன், ஓய்வறையை விட்டு, வார்டுக்குள் ஓடினான்.

    செல்வம் டாக்டர் தான் பாத்துட்டு இருக்காங்க... கூடவே நம்ம கோகிலாவும் இருக்கா சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே அந்த நோயாளியை நெருங்கினார்கள்.

    அந்த இடமே பெரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, செல்வம் கேட்ட மருந்துகளை எல்லாம் கோகிலா எடுத்து கொடுக்க, செல்வமோ அதை வாங்கி ஐவி வழியாக செலுத்திக் கொண்டிருந்தார்.

    அங்கே வந்த தேவா, கோகிலாவிடம் இருந்து மருந்தை வாங்கி, ஸ்ரெஞ்சில் ஏற்ற, எங்கே போயிருந்த தேவா? இந்த பேஷன்ட் உன் பொறுப்பு தானே? கேட்ட அவர் குரலில் அத்தனை சூடு இருந்தது.

    தேவா இப்போதான் டாக்டர் வாஷ் ரூம் போனான்... ரம்யா அவனுக்கு பரிந்துகொண்டு வர, செல்வம் அவளை முறைத்தார்.

    இது கோபப்படுவதற்கான நேரம் இல்லை என்பதால் அதை விடுத்து, இந்த பேஷண்டுக்கு தானே இன்னைக்கு ஆப்பரேஷன்? கேட்ட மருத்துவரின் குரலில் பெரும் கவலை அப்பிக் கிடந்தது.

    ஆமா டாக்டர்... சொன்ன கோகிலாவுக்கும் அதே கவலை குரலில் இருந்தது.

    ஓ காட்... அங்கே படுத்திருக்கும் அந்த பெண்மணி ஒரு பெரும் பணக்காரரின் மனைவி என்பதால், அவருக்கு கொஞ்சம் பயமும் இருந்தது.

    அந்த பெண்மணியின் மருத்துவ அறிக்கையும், அவளது உடல்நிலையும் அவள் கணவனுக்கு நன்கு தெரியும் என்றாலும், மற்ற மருத்துவமனைகள் எல்லாம், அவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய முன்வரவில்லை என்பதும் அவருக்குத் தெரியும்.

    அவர்களது வசதிக்கு, வெளிநாட்டுக்கே அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க முடியும் என்றாலும், அங்கிருந்தே பல நோயாளிகள் இந்தியாவுக்கு வந்து, இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் செல்வதாலேயே இங்கே சேர்த்தார்.

    இவர்களுமே அந்த பெண்மணிக்கு 70 - 30 வாய்ப்புதான் இருக்கிறது எனச் சொல்லியே இருந்தார்கள்.

    நேரம் வேறு குறைவாக இருக்க, இன்று காலையில்தான் ஆப்பரேஷன் என நேரம் குறித்திருக்க, இந்த நேரத்தில் அவரது உடல்நிலை திடுமென மோசமாக, ஆபரேஷன் செய்வதைக் குறித்த கவலை அவருக்கு.

    அந்த கார்டியாலஜி பிரிவில், மொத்தம் ஐந்து மருத்துவர்கள் இருந்தார்கள். இரண்டு மூத்த மருத்துவர்கள். சிவந்தி, பெட்டிஷியா. இவர்களுக்கு அசிஸ்டன்ட் பொறுப்பில், செல்வம், பெருமாள் என இருவர் இருக்க, மற்றவன் ஒருத்தன் இருந்தான்.

    இந்த கிருபை மருத்துவமனையின் இப்போதைய உடமையாளன்... பெட்டிஷியாவின் மகன், கைராசிக்காரன் என பேரெடுத்த டாக்டர் கிங்ஸ்லி சீலி ஹாஜன்ஸ்.

    ஆறு மாதங்களுக்கு முன்பு வரைக்கும், கிங்ஸ்லி அசிஸ்ட் செய்யாத, அவன் மேற்கொள்ளாத அறுவை சிகிச்சைகள் எதுவும் அங்கே நடந்தது இல்லை.

    அந்த கிருபை மருத்துவமனை ‘கார்டியோ’ ஸ்பெஷல் மருத்துவமனை என பேர் வாங்கியது.

    அவனது தாத்தா... அதாவது பெட்டிஷியாவின் அப்பா... தேவகிருபை துவங்கிய மருத்துவமனை இது. சென்னையிலேயே அவர்களுக்கு மூன்று கிளைகள் இருந்தது. அதில் கோயம்பேட்டில் இருக்கும் இந்த மருத்துவமனைதான் பழமையானது.

    பெட்டிஷியாவுக்கு ஒரு அண்ணன்... மருத்துவம் படிக்கையில், சுற்றுலா சென்ற இடத்தில், நீரில் அடித்துச் சென்று இறந்திருக்க, பெட்டிஷியா மட்டுமே அனைத்துக்கும் வாரிசாகிப் போனாள்.

    பெட்டிஷியா காதல் மணம் புரிந்திருக்க, அவளது கணவன் சஞ்சய் ஒரு இந்து. பெட்டிஷியாவின் மீதிருந்த காதலால், தன்னைப் பெற்றவர்களை எல்லாம் விட்டு, (அவருக்கு உடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன், ஒரு தங்கை) இவர்களது வீட்டுக்கே வந்துவிட்டார்.

    இங்கே வந்து மதம் மாறி, ஞாயிறுதோறும் தேவாலயத்துக்குச் செல்வதை எல்லாம் வழக்கமாக வைத்திருந்தார். ஒரு நாள் இரவில் கிங்ஸ்லி, கார்டியாலஜி முடித்த அதே வருடம், இரவு படுக்கையிலேயே இந்த உலகை விட்டுப் போயிருந்தார்.

    சிவந்தி டாக்டர் தானே ஆப்பரேஷன் பண்றாங்க? அவங்களுக்கு உடனே கால் பண்ணுங்க... செல்வம் சொல்ல, ரம்யா வெளியே ஓடினாள்.

    அவர்கள் கொடுத்த மருந்துகளின் உதவியால், அந்த பேஷன்ட் இப்பொழுது சிறு மயக்கத்துக்குச் சென்றிருக்க, அவரது சாட்டை எல்லாம் எடுத்துப் பார்த்தார்.

    அது எல்லாம் ஏற்கனவே அவருக்குத் தெரிந்ததுதான் என்றாலும், மீண்டும் ஒருமுறை ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா?’ எனத் தெரிந்துகொள்ளவே அதைப் பார்த்தார்.

    வெளியே சென்ற ரம்யா, சில நொடிகளில் திரும்பி வர, தேவா, பாத்துக்கோ... சொன்னவர் அங்கிருந்து வெளியே வந்தார்.

    ரம்யாவின் முகத்தில் இருந்த பதட்டம் அவரது புருவம் நெரிய வைக்க, என்ன கால் பண்ணீங்களா? அவளிடம் கேட்டான்.

    கால் பண்ணேன் டாக்டர், சிவந்தி டாக்டர் நைட் பாத்ரூம்ல ஷாக் அடிச்சு விழுந்துட்டாங்களாம். விழுந்ததில் பின்னந்தலையில் அடியாம்... பக்கத்தில் இருக்கற ஹாஸ்பிடல் போய்ட்டு வந்து, இப்போ நல்ல தூக்கத்தில் இருக்கறாங்களாம். அவங்க மகன் சொன்னார்....

    சொன்னார்ன்னா... நீங்க சுகந்தி மேடம் கிட்டே பேசலையா? சற்று கோபமானார்.

    அவர் போனை அவங்ககிட்டே கொடுக்கலை டாக்டர்... அவள் தடுமாற,

    நீங்க கேக்கலையா? ரமேஷ் கத்த,

    ‘கேக்காமல் இருப்பேனா?’ எண்ணியதைச் சொல்லாமல், பார்வையால் அவரிடம் கேட்க, செல்வம் வேகமாக தன் அலைபேசியை எடுத்து சுகந்திக்கு அழைத்தார்.

    நேரம் அப்பொழுது நான்கு மணி ஆகி இருக்க, அழைப்பு சென்ற மறு நிமிடம், சுகந்தியின் மகன் அழைப்பை ஏற்றான்.

    "சாரி டாக்டர், நான் ஏற்கனவே சொன்னதுதான்... ஷாக் அடிச்சு விழுந்ததில் அம்மா மயக்கமாகிட்டாங்க. உடனே பதறிப்போய் ஹாஸ்பிடல் தூக்கிட்டு போய், இது அதிர்ச்சி மயக்கம்தான்னு அவங்க சொன்னாலும், என்னால் சமாதானம் ஆக முடியலை.

    ஒரு ரெண்டு நாள் மட்டும் அவங்களுக்கு லீவ் கொடுங்க. நானே அவங்களோட வந்து, எல்லா செக்கப்பும் பண்ணிட்டு, ஹாஸ்பிட்டல்ல விட்டுட்டு வர்றேன். இன்னைக்கு அவங்க வர்றேன்னு சொன்னாலும் நான் அனுப்ப மாட்டேன் செல்வம் பேசும் முன்பே அவன் படபடத்தான்.

    எனக்குப் புரியுது சதீஷ். இன்னைக்கு அவங்க பண்ண வேண்டிய ஒரு முக்கியமான ஆப்பரேஷன் இருக்கு... அந்த பேஷன்ட் நிலைமை இப்போ கொஞ்சம் மோசமா இருக்கு. இப்போ அவங்க இங்கே வந்தே ஆகணும், ஒரு உயிர் சதீஷ்... அவனுக்கு புரிய வைத்துவிட முயன்றான்.

    "எனக்குப் புரியுது டாக்டர்... அம்மாவுக்கு முடியலைங்கும் போது, அவங்க ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கும்போது பண்ற ஆப்பரேஷன் ரிசல் தப்பா போய்ட்டா, நீங்க அப்படி யோசிங்க. அது மட்டும் இல்லை, அங்கே இன்னும் நிறைய பேர் பெஸ்ட்டா பண்றவங்க இருக்காங்க.

    நீங்க அவங்களை காண்டக்ட் பண்ணுங்க. நான் அம்மா போனை அணைச்சு வைக்கப்போறேன். அவங்களே எழுந்து ஆன் பண்ண பிறகு நீங்க பேசிக்கலாம்... சாரி... சொன்னவன் அலைபேசியை வைத்துவிட, செல்வத்துக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

    டாக்டர் பெட்டிஷியா ஒரு அவசர வேலையாக டெல்லி வரைச் சென்றிருக்க, மூன்றுநாள் கழித்துதான் வருகிறார்.

    தானும் சரி, பாலாஜியும் சரி... தனியாக இப்படியான க்ரிட்டிக்கல் ஆப்பரேஷன்களை நடத்தியது இல்லை என்பதால் கொஞ்சம் தயங்கினார்.

    கூடவே அந்த நோயாளியின் கணவர் வேறு, கிங்ஸ்லிதான் வேண்டும் எனக் கேட்டு, அவன் இல்லவே இல்லை என மறுத்த பிறகு, பெட்டிஷியாவுக்கு சம்மதிக்க, நாட்கள் தாமதமாகும் என்பதால், சுகந்திக்கு ஒத்துக் கொண்டார்.

    அப்படி இருக்கையில், தானோ, பாலாஜியோ கை வைத்து, அவரது மனைவிக்கு ஏதாவது ஒன்று நேர்ந்துவிட்டால், அவர் தங்களையும், மருத்துவமனையையும் ஒரு வழி செய்துவிடுவார் என்பதால் தயங்கினார்.

    இதற்கு மேலே வேறு வழி இன்றி போக, பெட்டிஷியாவிற்கு அழைத்தான். அழைப்பு சென்ற மறு நிமிடமே அலைபேசி எடுக்கப்பட, சொல்லுங்க செல்வம்... ஒரு ஆளுமையான குரல் அவன் செவிகளை நிறைத்தது.

    குட் மார்னிங் மேம்... சொன்னவன், அங்கிருக்கும் நிலைமையை விளக்க, சில நொடிகள் அந்தப் பக்கம் அமைதி நிலவியது.

    ஓ... சுகந்திக்கு பெருசா எதுவும் இல்லையே? உறுதிபடுத்திக்கொள்ள கேட்க,

    நேர்ல போய் பாத்துட்டு வந்து உங்களுக்கு அப்டேட் பண்றேன் மேம் சொன்னவன், ‘இப்பொழுது ஆப்பரேஷனுக்கு என்ன வழி?’ என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தான்.

    மேம்... ஆப்பரேஷன்... செல்வம் தயங்கி இழுக்க,

    கிங்ஸ்லி வருவான்... அவர் சொல்லிவிட்டு அலைபேசியை வைத்துவிட, தன் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் அப்படியே சிலைபோல் நின்றுவிட்டான்.

    கடந்த ஆறு மாதங்களாக இந்த மருத்துவமனையின் பக்கமே எட்டி கூட பார்த்திராதவன், இன்று மட்டும் வருவானா என்ன?

    ****மருத்துவமனையில் இந்த விஷயங்கள் நடந்துகொண்டிருக்க, அந்த அதிகாலை வேளையில் தன் அப்பாவின் கையைப்பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஷீபா.

    அமுதன் அத்தனை சோர்வாக படுத்திருக்க, அவரது சோர்ந்த விழிகளோ மகளது முகத்திலேயே நிலைத்திருந்தது.

    அப்பா, எதுக்குப்பா இப்போ என்னையவே பாத்துட்டு இருக்கீங்க? கொஞ்ச நேரம் கண்ணை மூடித் தூங்குங்க அவரை மென்மையாக கடிந்து கொண்டாள்.

    கண்ணை மூடினா, எங்கே உன்னைத் தனியா விட்டுட்டு போய்டுவேனோன்னு பயமா இருக்கும்மா அவர் சொல்ல, அவரை முறைத்தாள்.

    அப்பா, என்ன பேச்சு இது? அப்படியெல்லாம் உங்களை எங்கேயும் போக விட மாட்டேன்... கண்ணை மூடித் தூங்குங்க செல்ல முறைப்பில் அவள் சொல்ல, அவரது கண்கள் கலங்கிற்று.

    அதைப் பார்த்தவள், இந்த உலகம் பொல்லாததும்மா... அவர் மீண்டும் துவங்க, அவளது முறைப்பு அதிகரித்தது.

    "ப்பா... இந்த உலகம் பொல்லாதது, இல்லாதது, உல்லாதது எல்லாம் எனக்கும் தெரியும். முப்பது வயசாவுது, இது கூடத் தெரியாமலா இருப்பேன்? முதல்ல இப்படி பேசிப் பேசி நீங்க டவுன் ஆகறதை நிறுத்துங்க.

    உங்க பொண்ணு கூட எப்படியெல்லாம் வாழணும், எங்கே எல்லாம் போகணும், நாம பேச வேண்டிய விஷயங்கள் எல்லாம் இன்னும் எவ்வளவு இருக்கு... இப்படி யோசிங்க... தெம்பு தானா வரும்... அவள் சொல்லச் சொல்ல, அவரது தலை மறுப்பாக அசைந்தது.

    இல்லம்மா... அது அப்படி இல்ல... அவர் மறுக்க,

    ஸ்...ஸப்பா... பேசிப் பேசி என்னை டயட் ஆக்காதப்பா. மணி அஞ்சாகப் போகுது... சூடா பால் ஏதாவது எடுத்துட்டு வரவா? குடிச்சுட்டு தூங்குங்க அவள் எழுந்து செல்ல முயல, அவளது கரத்தைப் பற்றிக் கொண்டார்.

    இப்போ நான் என்னப்பா செய்யட்டும்? சற்று சலிப்பாகக் கேட்டாள்.

    கல்யாணம் பண்ணிக்கோம்மா... அவர் சொல்ல,

    என்னது... கல்யாணமா? அப்பா, விளையாடுறியா நீயி? நான் நல்லா இருக்கறது உனக்குப் பிடிக்கலையா? அதெல்லாம் பண்ணிக்க முடியாது வேகமாக மறுத்தாள்.

    இந்த அப்பாவோட கடைசி... அவர் சொல்லும் முன்பு, அவரது வாயை அடைத்தாள்.

    "உங்களுக்குத்தான் வாய் இருக்குன்னு எதையாவது சொல்லி வைக்கறது. கல்யாணம் பண்ணிக்கிட்டு, ரெண்டு குட்டியைப் போட்டு, அதை வளர்த்து, படிக்கவச்சு, கட்டிக்குடுத்து... வயசாகி செத்துப் போறதில் என்னப்பா இருக்கு?

    நான் எவன்னே தெரியாதவனுக்கு அட்ஜஸ்ட் பண்ணணும், ஒன்னு ஒன்னுக்கும் அவன்கிட்டே பெர்மிஷன் கேக்கணும், தொங்கணும்... என்னால முடியாது போப்பா... நான் இப்போவே நல்லா, நிம்மதியா, சந்தோஷமாத்தான் இருக்கேன் அவள் சொல்ல, அவளுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்றே அவருக்குத் தெரியவில்லை.

    நாளுக்கு நாள் தன் நிலைமை மோசமாவது அவருக்கே தெரியவர, மகளை இந்த உலகத்தில் தனியாக விட்டுச் செல்வதுதான் அவருக்கு பயத்தை அளித்துக் கொண்டிருந்தது.

    சந்தோஷமா இருக்கறது வேற, தனியா இருக்கறது வேறம்மா... தன் மனைவி இறந்தபொழுது தனக்காவது பிடிப்பாக மகள் இருந்தாள், அவளுக்கு யார்? என்பதுதான் அவரது கவலையே.

    இந்த அப்பா இல்லாமல் தனியா இருந்துடுவியாம்மா? அவர் கவலையாக கேட்க,

    ப்பா... இப்படியே கேட்டுகிட்டு இரு, உன்னை நானே என் கையால் கொல்லப் போறேன் பாரு... இரு, உனக்கு குடிக்க ஏதாச்சும் கொண்டு வர்றேன் அவள் எழுந்துகொள்ள, அவளை விட்டுவிட்டார்.

    நம்பிக்கையா பேசறதை விட்டு, ஒரே நெகட்டிவ் பேச்சு... உனக்கு இருக்கு அவள் மிரட்டிவிட்டுச் செல்ல, அவருக்கு சிரிப்பு வந்தது.

    அதைப் பார்த்தவள், ஆமா, இப்போ மட்டும் சிரி... வர்றேன்... மிரட்டியவாறு கிச்சனுக்குச் செல்ல, மகளது பேச்சே அவருக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

    கிச்சனுக்குச் சென்றவள், பாலை சூடாக்கி எடுத்து வர, அவள் வரும் வரைக்கும், அமுதனுக்கு அதே யோசனைதான்.

    தகப்பனை கைத்தாங்கலாக எழுப்பி அமர வைத்தவள், அவருக்குப் பாலைப் புகட்ட, கொஞ்சமாகப் பருகினார்.

    எனக்குப் பிறகு உனக்கு யாராச்சும் வேண்டாமா? எப்படி இருப்ப? அவருக்குள் தன் மகள் ஒற்றையில், பிடிப்பின்றி நிற்பாளே என்ற கவலை அரித்துக் கொண்டிருக்க, அவரால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

    ப்பா... நீங்க இன்னும் இதை விடலையா? கடிந்தவள், தனக்காக கொண்டு வந்திருந்த டீயைப் பருகினாள்.

    சொல்லும்மா... கேட்டவர் அவள் முகம் பார்க்க,

    இப்போ என்ன...? உங்களுக்குப் பிறகு, நான் என்ன செய்வேன்னு தெரியணும் அதான... அவள் அத்தனை தீவிரமாகக் கேட்க, அவள் முகம் பார்த்தார்.

    உங்களுக்கு நான் இருந்த மாதிரி, நானும் ஒரு பெண் குழந்தை பெத்துக்கறேன் போதுமா? அவள் சிரிக்காமல் சொல்ல, அவர் அதிர்ந்து விழித்தார்.

    அவர் முகம் போன போக்கில், அவள் வாய்விட்டே சிரிக்க, அவளால் அதை நிறுத்தவே முடியவில்லை.

    ஷீபா... அவர் சின்ன கண்டிப்பில் அவளைப் பார்க்க,

    நீங்க ரொம்ப கவலைப்படறீங்களேன்னு உங்களுக்கு ஒரு ஆப்ஷன் கொடுத்தா, அதுவும் வேண்டாமா? சரி போங்க... இப்போவாவது நிம்மதியா படுத்து தூங்குவீங்களாம்... சொன்னவள், அவருக்கு போர்வையைப் போர்த்தி விட்டாள்.

    அவள் பாலில் கலந்திருந்த தூக்கமாத்திரை அதன் வேலையைச் சரியாகச் செய்ய, கொஞ்சம் கொஞ்சமாக உறக்கத்தில் அமிழ்ந்தார் அமுதன்.

    அவர் உறங்கவே, அவரையே கவலையாகப் பார்த்திருந்தாள். கடந்த இரண்டு வருடங்களாக அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக தோய்வடையத் துவங்கி இருக்க, இப்பொழுது கொஞ்சம் அதிகமாகவே தளர்ந்திருந்தார்.

    அதுவும் இரவு உறக்கம் என்பது தூக்க மாத்திரையின் உதவியால் மட்டுமே சாத்தியம் என்றாகிப் போக, கூடவே இதயம் பலவீனமாகி இருக்க, அதற்கு பெரிதாக வைத்தியம் பார்த்துக்கொள்ள மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கவே அவர் சோர்ந்தார்.

    இரவு இரண்டு மணிக்கு மேலே அவளும் உறங்காமல் தகப்பனோடு இருந்தது களைப்பாக இருக்க, தன் அறைக்குச் சென்று படுத்துவிட்டாள்.

    படுத்தவுடன் அவள் ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்ல, அவளது அலைபேசி விடாமல் இசைத்து அவளைக் கலைத்தது.

    கண்களைத் திறக்காமலேயே அழைப்பது யார் என அவளுக்குத் தெரிய, அலைபேசியை எடுத்தவள், இப்போ எதுக்குடா என் தூக்கத்தைக் கலைக்கற? உறக்கம் கலையாமலேயே அவனிடம் கத்தினாள்.

    ஏய்... நீ இன்னும் க்ளையின்ட் வீட்டுக்குப் போகலையா? எட்டு மணிக்கே அங்கே இருக்கணும்னு நேற்றே சொல்லித்தானே அனுப்பினேன் பிரபஞ்சன் கத்த, அவளது உறக்கம் பறந்து போனது.

    ரஞ்சா, நான்... அவள் விளக்கம் கொடுக்கும் முன்பே,

    உன்னை நம்பி ஒரு வேலையைக் கொடுத்தேன் பாத்தியா... என் புத்தியை... அவன் கடும் கோபத்தில் குமுற,

    அங்கேதான் இருக்கும்... அவள் இடைபுக, குழம்பினான்.

    என்னது இங்கே இருக்கும்?.

    அதான்... நீ தேடறது....

    நான் என்ன தேடினேன்?.

    அதான்... அடிச்சுக்க தேடினியே... வீட்டுக்கு வெளியேதான் கிடக்கும். இல்லன்னா உன் பொண்ணுது அங்கேதான் கிடக்கும் எடுத்து அடிச்சுக்கோ அவள் சொல்ல, அவனது கோபம் கரையைக் கடக்கும் உணர்வு.

    ஷீபா... உன்ன... அவன் பல்லைக் கடிக்க,

    அப்பா நைட் முழுக்க தூங்கவே இல்லைடா. அவர் கூடவே இருந்துட்டு, அஞ்சு மணிக்குத்தான் வந்து படுத்தேன். நீ சொன்னது சுத்தமா ஞாபகத்திலேயே இல்லை. இப்போ என்னாங்கற? அவள் எகிற, அவனோ தன் தலையிலேயே அடித்துக் கொண்டான்.

    ஏய், நான் உனக்கு சம்பளம் கொடுக்கற முதலாளி... உனக்கு அது கொஞ்சமாவது ஞாபகத்தில் இருக்கா?.

    போடா... நான் தென்றல் கிட்டேயே பேசிக்கறேன்... நீ உன் வேலையை நீயே வச்சுக்கோ அவள் ரோஷமாக சொல்ல, அந்தப்பக்கம் தென்றல் சிரிப்பது கேட்டது.

    என்னைக் கொண்டுதான் உனக்கு அவளைத் தெரியும்... அவன் சொல்ல,

    யார் நீ? அவள் பட்டென கேட்க, தென்றலின் சிரிப்பு அதிகரித்தது.

    கொஞ்சமாவது மதி டி... அவன் கெஞ்சும் குரலில் சொல்ல,

    ம’ எல்லாம் முடியாது, ‘மி’ வேண்ணா முடியும்... அவன் அசால்ட்டாக சொல்லிவிட்டு எழுந்து தன் தகப்பனைக் காணச் சென்றாள்.

    என்னங்க... அவங்க அப்பாவுக்கு எப்படி இருக்குன்னு கேளுங்க தென்றல் அவனிடம் கேட்பது இவளுக்கும் கேட்க,

    தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வச்சிருக்கேன்... இதோ இப்போ போய் பாத்தா கொட்ட கொட்ட முழிச்சுட்டு உக்காந்து இருப்பார்... சொன்னவளின் குரல் திடுமென நின்றுவிட, அது மற்றவர்களுக்குப் புரிந்தது.

    ஷீபா... இருக்கறியா? பிரபஞ்சன் குரல் கொடுக்க,

    அப்பா... அப்பா... ஷீபாவின் பதட்டமான குரலும், கூடவே அலைபேசி கீழே விழும் ஓசையும், அது தன் இணைப்பையும் துண்டிக்க, இங்கே இவர்கள் ஏக பரபரப்பானார்கள்.

    பகுதி – 2

    கிங்ஸ்லி சீலி ஹாஜன்ஸ், விடியற்காலை உறக்கத்தில் அமிழ்ந்திருக்க, திடுமென ஒலித்த அலைபேசியின் சத்தத்தில், தன் அருகே இருந்த டேபிள் லேம்பை ஒளிர விட்டவன், நேரம் பார்த்தான்.

    நேரம் நான்கு முப்பதைக் காட்ட, அழைப்பது யாராக இருக்கும் என ஓரளவுக்கு அவனால் கணிக்க முடிந்தது.

    தன் மருத்துவமனை ஆட்களாக இருந்தாள், தன்னை இந்த நேரம், அதுவும் இப்படி ஒரு சூழ்நிலையின் தான் இருக்கையில், தன்னை அழைக்கும் அளவுக்கு யாருக்கும் தைரியம் இருக்காது என அவனுக்குத் தெரியும்.

    அலைபேசியை எடுத்தவன், அதில் ஒளிர்ந்த தாயின் புகைப்படத்தையே சில நொடிகள் பார்த்திருந்தான்.

    அலைபேசி தன் இசைப்பை நிறுத்தப்போன இறுதி நிமிடம், அதை இணைத்து ஸ்பீக்கரில் போட, சீலி... இன்னைக்கு ஒரு இம்ப்பார்ட்டென்ட் ஆப்பரேஷன் இருக்கு. அதைச் செய்ய வேண்டிய சிவந்திக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட்... அவர் சொல்லிக்கொண்டே போக,

    அம்மா... அம்மா... அம்மா... இடையிட்டு குரலுயர்த்தி அவரது பேச்சை நிறுத்தினான்.

    சொல்லுப்பா... அவனது குரல் அவரைத் தேக்க, தன் பேச்சை நிறுத்தினார்.

    நான் இப்போ எங்கேயும் போறதா இல்லை... அவன் அழுத்திச் சொல்ல, அவருக்கு அத்தனை வேதனையாக இருந்தது.

    ஆறு மாதங்களுக்கு முன்னர் வரைக்கும், அவனது ஷெடியுல் எப்படி இருந்தது? அவன் எவ்வளவு பம்பரமாகச் சுழன்றான் என்பது எல்லாம் நினைவுக்கு வந்து அவரை அழுத்த, முயன்று தன்னை மீட்டார்.

    உன்னைப் போறியான்னு நான் கேக்கவே இல்லை....

    பிறகு... எதுக்கு இந்த நேரம் எனக்கு கால் பண்ணி இருக்கீங்க? அவர் வார்த்தைகளை முடிக்கும் முன்பே வெடித்தான்.

    உன்னை ‘போ’ன்னு சொல்றேன்... போய்த்தான் ஆகணும்னு சொல்றேன் அவர் அத்தனை இறுக்கமாக சொல்ல, அந்த குரல் அவனால் மீறவே முடியாத குரல்.

    சட்டெனத் தணிந்தவன், இல்லம்மா, என்னால் முடியாது... சற்று குரலைத் தணித்தான்.

    இந்த ஆறு மாசத்தில், ஏதாவது ஒரு நாள் உன்னை ஹாஸ்பிடல் வா, பொறுப்பை பாருன்னு உன்கிட்டே நான் சொல்லி இருக்கேனா? அவர் கேட்க, அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

    அதான்ம்மா எனக்கும் புரியலை... என்னை இப்படியே விடுங்களேன். என்னால் எதையும், யாரையும் ஃபேஸ் பண்ண முடியும்னு தோணலை, முடியலை அவன் குரல் உச்ச கோபத்தில் வெளிவர, அந்த தாய்க்கு கண்ணீரே வந்துவிட்டது.

    அதை அவனுக்குக் காட்டாமல் மறைத்தவர், "அதுக்காக, இன்னும் எத்தனைக் காலம் இப்படியே இருப்ப? காலம் பூரான்னா உன்னை மாதிரி ஒரு முட்டாள் இந்த உலகத்தில் யாருமே இருக்க மாட்டாங்க.

    "அப்படி இல்லை... உன் வாழ்க்கையை நீ எதிர் கொள்ளணும்னு ஒரு சின்ன ஐடியாவாவது இருந்தா, உடனே கிளம்பி ஹாஸ்பிடல் போ... எல்லாத்தையும் தைரியமா ஃபேஸ் பண்ணு.

    "நான் உனக்குச் சொல்ல வேண்டியது இல்லை... நீ பொறுப்பான பையன், அப்படியேத்தான் இன்னும் இருக்கறன்னு அம்மா நம்பறேன். வீட்டுக்குள்ளேயே இருக்கறதால் யாருக்கும், எந்த பயனும் இல்லை.

    எல்லாரையும் எப்படி ஃபேஸ் பண்ணுவேன்னா? பண்ணித்தான் ஆகணும். நான் இல்ல, நான் போகல? நான் செய்யல? அவர் விடாமல் பேச,

    நீங்களும், நானும் ஒன்னு இல்லம்மா... தாய்க்குப் புரிய வைக்கும் வேகம்.

    ஆமான்னு நான் சொல்லவே இல்லையே... சில விஷயங்களை கடந்துதான் ஆகணும். செய்... கட்டளையிட்டார்.

    வேற டாக்டர்ஸ் இருப்பாங்களே... செல்வம், பெருமாள்... அவங்களும் திறமையானவங்கதான் தாய் டெல்லி சென்றிருப்பது அவனுக்குத் தெரியும் என்பதால் அவன் தாயைச் சொல்லவில்லை.

    நம்மகிட்டே இருக்கற யாருமே குறைஞ்சவங்க கிடையாது சீலி. பேஷண்டோட கண்டிஷன், ரிலேட்டிவோட கோரிக்கை, இப்படி நிறைய இருக்குன்னு உனக்கே தெரியும் அவன் இப்படிக் கேட்டதே, அவன் கொஞ்சம் மாறி இருக்கிறான் என அவருக்குச் சொன்னது.

    நான் ப்ராக்டிஸ் விட்டு ஆறு மாசம் ஆகுதும்மா... சற்று தயங்கியே சொன்னான்.

    உன் திறமை எங்கேயும் போகலை சீலி, அது உனக்குள்ளேதான் இருக்கு. பிரேயர் பண்ணிட்டு போ....

    அந்த ப்ரேயரால பயன் இருக்கும்ன்னா, எனக்கு இப்படியெல்லாம் நடந்திருக்காதும்மா அவன் குரல் இருக்கத்துக்குச் செல்ல,

    மனுஷ தவறுக்கு கடவுளை குறை சொல்றதை முதல்ல நிறுத்து. இப்போ நாம அந்த விவாதத்துக்கு போக வேண்டாம்... உடனே கிளம்பிப் போ... அவர் சொல்ல, அவன் இன்னுமே அமைதியானான்.

    அவாய்ட் பண்ண,முடியாதாம்மா...? அவனிடம் ஒரு இறுதி முயற்சி.

    இத்தனை மாசம் உன்னைத் தொல்லை செய்தேனா? இல்லையே... ஒரு வாய் வார்த்தையாவாவது ஃபோர்ஸ் பண்ணி இருப்பேனா? உன் மனசுக்கும், சூழ்நிலைக்கும் மதிப்பு கொடுத்து, அப்படியேதானே விட்டேன்? அவர் கேட்க, ஆழமாக மூச்செடுத்தான்.

    பேஷன்ட் டீட்டெயில்ஸ் அனுப்ப சொல்லுங்கம்மா அவன் கேட்க, பெட்டிஷியவின் முகத்தில் ஒரு விரிந்த புன்னகையும், நிம்மதியும் ஒருங்கே எழுந்தது.

    ஏற்கனவே மெயில் பண்ணியாச்சுப்பா... கொஞ்சம்... இல்ல, நீயே பாத்துக்கோ சொன்னவர் குரல் நெகிழ்ந்து கிடக்க, அதை அவனாலும் உணர்ந்துகொள்ள முடிந்தது.

    ஹாஸ்பிட்டல்ல இப்போ யார் இருக்காம்மா?.

    செல்வம் இருக்கான்... எனக்கு என் பையன் மறுபடியும் வேணும் சீலி அவர் சொல்ல,

    முயற்சி பண்றேன்ம்மா... சொன்னவன் அலைபேசியை வைக்கப் போக,

    ஆல் தி பெஸ்ட் சீலி... முடிச்சுட்டு எனக்கு கால் பண்ணு சொன்னவர் அலைபேசியை வைத்துவிட, சில நொடிகள் அப்படியே அமர்ந்திருந்தான்.

    அடுத்த நிமிடம், தன் மெயிலை ஓபன் செய்து,

    Enjoying the preview?
    Page 1 of 1