Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Punnagai Pothumadi
Punnagai Pothumadi
Punnagai Pothumadi
Ebook140 pages49 minutes

Punnagai Pothumadi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புன்னகை, சோழன் இருவருக்கும் கல்யாணம் ஆகிறது. சோழன் ஒரு அம்மா பிள்ளையாக இருக்கின்றான். இதனால் இவர்களது தாம்பத்ய வாழ்வில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அம்மா பாசம் தடையாக இவர்களுக்கு இல்லை, தெய்வகுத்தம் நடந்துவிட்டது என்று சோழனின் அப்பாவை, சோழனின் அம்மா வீட்டை விட்டு விரட்டுகிறாள். சோழனின் அப்பா அப்படி என்ன செய்தார்? முடிவில் உண்மையான தாம்பத்யத்தை புரிந்து கொண்டார்களா? இல்லையா? என்பதை பார்ப்போம்!

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580137110927
Punnagai Pothumadi

Read more from R. Sumathi

Related to Punnagai Pothumadi

Related ebooks

Reviews for Punnagai Pothumadi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Punnagai Pothumadi - R. Sumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    புன்னகை போதுமடி

    Punnagai Pothumadi

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    புன்னகை புன்னகைத்தாள் திரையில்!

    நவீன யுக்தி கொண்டு மெருகேற்றப்படாத இயற்கையான புகைப்படம். கிராமத்தில் படித்தவளென்றாலும் முகத்தில் சுத்தமான ஒரு கிராமியத்தன்மை இருந்தது. நிறம் ஒரு காரணமாக இருக்கலாம். மாநிறம் மாசில்லாத அழகை வெளிப்படுத்தும் தன்மையுடன் இருந்தது. ஒரு சமயம் கன்ன மேட்டில் திருஷ்டி வைத்ததைப் போலிருந்த கருப்பு மச்சமாகக் கூட இருக்கலாம். அல்லது நெளி நெளியாய் அலையோடிய அளகமாக இருக்கலாம்.

    இப்பொழுதெல்லாம் பெண்கள் கொஞ்சம் கூட முடியை அதன் இயற்கை அழகுடன் நெளிய விடாமல் நேர் செய்து சாட்டையாக பரவ விடும்போது இவளுடைய இயற்கை அலைகேசம் கிராமியக் கலையைத் தந்திருக்கலாம்.

    நேரில் பார்த்தபோது எப்படியிருந்தாளோ அப்படியே இருந்தாள். சிரிப்பில் கூட கிராமிய மணம் வீசுவதைப் போல் ஒரு கள்ளமற்றத் தன்மை.

    புன்னகை! பெயர் கூட எத்தனை வித்தியாசமாக நினைக்கும் போதே, உச்சரிக்கும் போதே உவகை கொள்ள வைக்கிறது. இனி அனுதினமும் அழைத்தால் எத்தனை ஆனந்தமாக இருக்கும்.

    புன்னகையின் வாழ்க்கை வெறும் புன்னகைப் போலில்லாமல் ஆழ்ந்த ஆனந்தத்தின் வெளிப்பாடாய் அவளுடைய முகத்தில் சிரிப்பை நிலையாக்க வேண்டும். அத்தகைய வாழ்க்கையை நான் அவளுக்கு இந்த வீட்டில் ஏற்ப்படுத்தித் தரவேண்டும். ஏதோதோ எண்ணங்களுடன்,

    தன்னை மறந்து புன்னகையின் அழகில் லயித்துக் கொண்டிருந்த சோழன்... கதவைத் தள்ளிக் கொண்டு யாரோ வரும் ஓசைக் கேட்டதும் சட்டென்று லேப்டாப் திரையில் இருந்த புன்னகையின் புகைப்படத்ததை மாற்றினான்.

    அம்மாதான் உள்ளே வந்தாள். கையில் அவனுக்காக காபி கோப்பை மணம் வீசிக் கொண்டு அவளுக்கு முன்னால் உள்ளே வந்தது.

    இந்தாப்பா காபி என அவனுடைய கையில் கொடுத்தவள் அவனருகேயிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

    அவன் இரண்டு வாய் ரசித்து ருசித்துப் பருகியதும் சோழா ஏதாவது முக்கியமான வேலை செய்துக்கிட்டிருக்கியா? உன்கிட்ட ஒரு விசயம் பேசனும் என்றாள்.

    முக்கியமான வேலை எது இருந்தாலும் நீதாம்மா எனக்கு முக்கியம். சொல்லும்மா என்றான்.

    இதைக் கேட்ட துளசி சட்டென்று சிரித்துவிட்டாள்.

    என்னம்மா சிரிக்கிறே?

    இன்னும் ஒரு வாரம் கழிச்சு நீ இதே மாதிரி சொல்றியான்னு பார்ப்போம்

    ஒரு வாரத்துல நீ என் அம்மா இல்லாமப் போயிடுவியா? அவனும் சிரித்தான்.

    என்னைக்கும் நான் உன் அம்மாதான்டா. ஆனா...உனக்கு பொண்டாட்டி வரப் போறாளே. நீ இனி அவ முந்தானையை பிடிச்சக்கிட்டுத்தானே சுத்தப் போறே. என் ஞாபகமெல்லாம் வருமா என்ன?

    விளையாட்டாகப் பேசினாலும் அது விளையாட்டில்லை என்பதை முகமே காட்டிக் கொடுத்தது. உள்ளுக்குள் ஓடிய எண்ணங்களின் வெளிப்பாடுதான் வார்த்தைகள் என்று தெரிந்தது. விளையாட்டு ‘வேடிக்கைப் பேச்சுக்களெல்லாம் உண்மையிலேயே வேடிக்கைப் பேச்சுக்கள் அல்ல. அவை உண்மையை உள்ளடக்கிய மேல்பூச்சுக்கள் மட்டுமே.’

    அம்மா...என்னை அந்த மாதிரி நினைச்சுக்காதே. எனக்கு நீதான் முக்கியம். நீ வேணா இப்பவே அந்த பொண்ணு வேண்டாம்னு சொல்லு கல்யாணத்தை நிறுத்திடலாம்

    ஐய்ய்யோ...அபசகுணமா ஏன் இப்படி பேசறே? உனக்கு ஒரு பொண்ணைப் பார்த்து முடிக்கறதுக்குள்ள எனக்கு உயிர் போய் உயிர் வந்துடுச்சு. எப்படியோ இந்த பொண்ணு அமைஞ்சது. இதையும் நீ எதையாவது பேசி கெடுத்து விட்டுடாதே அப்பறம் என்னால உனக்கு பொண்ணுத் தேடி அலைய முடியாது.

    துளசியிடமிருந்து வெளிப்பட்ட படபடப்பும் பயமும் பொய்யோ வேடிக்கையோ அல்ல. அத்தனையும் உண்மை.

    சோழனுக்கு பெண் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது.

    பார்த்த பெண்களெல்லாம் அவனிடம் தனியாக பேச வேண்டும் என்றனர். பேசினர். என்ன பேசினர் ஏது பேசினர் என்பது கடவுளறிய துளசிக்குத் தெரியாது.

    ஆனால் பெண் வீட்டார் மாப்பிள்ளை வேண்டாம் என்றுக் கூறிவிட்டனர்.

    சோழன் அழகன், பெண்ணின் கண்களை வசீகரிக்கும் வசீகரன்தான். மெத்த படிப்பு. கத்தை கத்தையாக சம்பளம். பிறகு ஏன் பிடிக்கவில்லை?

    எப்படியோ காதில் வந்து விழுந்த விசயம் இதுதான்.

    "பையன் அம்மா கோண்டா இருப்பான் போலிருக்கு. பொண்ணுக்கிட்ட பேசும் போதெல்லாம் அம்மா புராணமே பாடியிருக்கான். அதான்...பொண்ணுங்க பயப்படுது. கல்யாணத்துக்கு முன்னாடியும் அம்மா முந்தானையை புடிச்சுக்கிட்டு சுத்துவானோன்னு...’

    துளசி இதைக் கேட்டு துணுக்குற்றுத்தான் போனாள்.

    கட்டிக்கப் போகும் பெண்ணிடம் அவளைப்பற்றி பேசாமல் என்னைப் பற்றி எதுக்குப் பேசுகிறான்?

    புன்னகையை பெண் பார்க்கப் போகும் போது அவனை கண்டித்து அழைத்துப் போனாள்.

    அம்மா புராணம் பாடபயந்து போனதால்தான் புன்னகை சம்மதம் தெரிவித்தாள்.

    இதோ அடுத்த வாரம் கல்யாணம்.

    சொல்லும்மா ஏதோ முக்கியமான விசயம்னு சொன்னியே அம்மாவின் சிந்தனைகள் எங்கெங்கோ போவதைக் கண்டு தடுத்து இழுத்துவந்து நிகழ்காலத்தில் நிறுத்தினான்.

    திருப்பதிக்கு போக டிக்கெட் இருக்கான்னு பாரு என்றாள்.

    திருப்பதிக்கா? என்னமா திடீர்னு? ஏதாவது வேண்டுதலா?

    ஆமா பல நாள் வேண்டுதல். இப்பத்தான் என் வேண்டுதல் பலிச்சிருக்கு. அதான் ஏழுமலையானைப் பார்த்து நன்றிக் கடனை செலுத்திட்டு வரலாம்னு நினைக்கிறேன்

    என்ன வேண்டுதல்ம்மா?

    எல்லாம் உன் கல்யாணத்தைப் பத்தின வேண்டுதல்தான். ஒரு பொண்ணுமே சரியா அமையமாட்டேங்குதே. என் புள்ளைக்கு பொருத்தமான பொண்ணு அமைஞ்சுட்டா உன் சந்நிதிக்கு வர்றேன்னு வேண்டிக்கிட்டேன். இப்ப உன் கல்யாணம் அமைஞ்சுட்டு. அதான்...

    சரிம்மா அதுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே போகனும்னு என்ன அவசரம்? கல்யாணம் முடிஞ்சு ஆற அமர போகலாமே

    இல்லப்பா...முதல்லயே போயி கல்யணாத்தை எந்த தங்கு தடையும் இல்லாம நடத்தி வையின்னு வேண்டிக்கனும். அதுக்குத்தான் நானும் அப்பாவும் போறோம்

    அப்ப நானு?

    உனக்கு நிறைய வேலை இருக்குன்னு சொல்லுவியே

    நான் சொன்னேனா? நீயா சொல்லிக்கிட்டா எப்படி? நீங்க ரெண்டு பேரும் போயிட்டா நான் எப்படி வீட்ல தனியா இருக்கறது? எனக்கு பயமாயிருக்காதா?

    என்னடா இப்படி பேசறே? காஞ்சனா படத்துல வர்ற லாகவா லாரன்ஸ மாதிரி

    அம்மா அந்த மாதிரி நான் ஒண்ணும் பேய்க்கு பயந்தவனில்லை. என்னால உன்னை விட்டுட்டு ஒரு நாள் கூட இருக்க முடியாதுன்னு உனக்குத் தெரியுமில்ல?

    ஆமாடா...இப்பத்தான் உனக்கு ரெண்டு வயசாகுது? அம்மாவை பிரிஞ்சு இருக்க முடியாது.

    எத்தனை வயசானா என்னம்மா? உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாது.

    இந்த மாதிரி நீ பேசினதாலதான் பார்த்த அத்தனைப் பொண்ணுங்களும் தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்னு ஓடினாங்க. என்னமோ இந்த புன்னகை உன்னை கல்யாணம் பண்ண சம்மதிச்சிருக்கா. நீ இந்த மாதிரி அம்மா சென்டிமேன்ட்டை முதல்ல நிறுத்து

    சரி நிறுத்தறேன். நீ என்னையும் கூட்டிக்கிட்டுப் போகனும்

    துளசி கலகலவென சிரித்தாள்.

    என்னடா இது சின்ன பிள்ளைங்க சொல்ற மாதிரி சொல்றே?

    பின்னே எப்படி சொல்றதாம்? நீ என்னைக் கழட்டி விட்டுட்டு அப்பாக் கூட ஜாலியா சுத்தலாம்னு ப்ளான் பண்றே?

    "ஆமாடா. இப்பத்தான் எனக்கும் உங்கப்பாவுக்கும் கல்யாணம்

    Enjoying the preview?
    Page 1 of 1