Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jeeva Jothi
Jeeva Jothi
Jeeva Jothi
Ebook111 pages38 minutes

Jeeva Jothi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரமேஷ், கோபாலன் இருவரும் நண்பர்கள். கோபாலின் சொல்லுக்கும் செயலுக்கும் அடிமையாகிறான் ரமேஷ். இச்செயலால் அவன் குடும்பத்திற்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி என்ன? அதன் பின் நடந்தது என்ன? என்பதை வாசித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateMar 16, 2024
ISBN6580137109473
Jeeva Jothi

Read more from R. Sumathi

Related to Jeeva Jothi

Related ebooks

Reviews for Jeeva Jothi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jeeva Jothi - R. Sumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஜீவ ஜோதி

    Jeeva Jothi

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    நித்யா

    வெளித் திண்ணையில் அமர்ந்து தன் பாடப் புத்தகத்தைப் பிரித்துப் படித்துக்கொண்டிருந்த நித்யா நிமிர்ந்தாள். அழகான அவளுடைய முகம் கோபாலனைப் பார்த்ததும் சட்டென்று மாறியது.

    சந்தனப்பவுடர் பூசிய முகத்தில் சாணத்தை யாரோ தடவியதைப்போல் அருவெறுப்படைந்தாள்.

    அவளுக்கெதிரே வாட்டசாட்டமாக கோபாலன் நின்றிருந்தான். காதுவரை சிரித்து பற்களைக் காட்டினான். அடர்த்தியான அவனுடைய மீசை அவன் முகத்திற்கு கம்பீரத்தைத் தராமல் ஒருவித ரௌடித்தனத்தை வெளிப்படுத்தியது. அவள் என்ன என்று கேட்பதற்கு முன் அவனே.

    ரமேஷ் இருக்கானா? என்று கேட்டான்.

    ம்... இருக்கு என்றவள் புத்தகத்தை மூடிவிட்டு எழுந்தாள்.

    வரச் சொல்றேன் என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

    அவள் உள்ளே சென்றதும் அவள் உட்கார்ந்திருந்த இடத்தில் அவன் உட்கார்ந்து கொண்டு அவளுடைய பாடப் புத்தகத்தை எடுத்துப் பிரித்தான்.

    உள்ளே வந்த நித்யாவை சமையலறையிலிருந்து வெளியே வந்த காசியம்மா கேட்டாள்.

    யாரு வாசல்ல...?

    கோபாலன் பெயரைக் கேட்டதுமே காசியம்மாவின் முகம் மாறியது.

    வந்துட்டானா கடன்காரன். முன்னாடிதான் இவனை கெடுத்துக் குட்டிச் சுவராக்கினான். இப்பத்தான், இவன் வெளிநாடு போய்ட்டு நாலுகாசு சம்பாதிச்சுட்டு மனுஷனா வந்திருக்கான். வந்துட்டானா குடியைக் கெடுக்க என்றாள்.

    மெதுவா பேசும்மா. திண்ணையில்தான் உட்கார்ந்திருக்கான்.

    காதுல விழட்டுமே. அப்பவாவது ரோஷம் வந்து இவனோட சகவாசம் வச்சுக்காம இருந்தா சரி. இவனுக்கெல்லாம் ரோஷமே வராது. ஊரை அடிச்சு உலையில போடறவனுக்கெல்லாம் சூடு சுரணையே இருக்காது. என்றாள்.

    நித்யா எதுவும் சொல்லாமல் மாடிப்படிகளில் ஏறினாள்.

    காசியம்மா சமையலறைக்குள் நுழைந்தாள்.

    செய்துகொண்டிருந்த சமையல் நிமிடத்தில் மறந்து போனது.

    குழம்பிற்கு உப்புப் போட்டோமா, இல்லையா, என்று குழம்பினாள்.

    வாயில் ஊற்றிப் பார்த்துவிட்டு உப்பு போட்டிருப்பதை உணர்ந்தாள்.

    அடுப்பு திருதிருவென எரிந்தது. அடக்கி வைத்தாள். மனமும் எரிந்து கொண்டிருந்தது. அதை அடக்க முடியவில்லை.

    மூன்று வருடங்கள் கழித்து வந்திருக்கும் கோபாலனை எண்ணி எரிச்சல் பரவியது.

    அவனை வாவென்று அழைக்கக்கூட விரும்பாதவளாக தன் வேலையில் ஈடுபட்டாள்.

    நந்தினி மாடிக்கு வந்தாள்.

    அங்கே,

    தன் அறையில் கட்டிலில் கால்களையும் கைகளையும் பரத்திக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தான் ரமேஷ்.

    அண்ணா... அண்ணா...

    அவனை எழுப்பினாள்.

    கும்பகர்ணனுடன் கூடப் பிறந்தவனைப்போல் உறங்கிக் கொண்டிருந்தான் ரமேஷ்.

    அவள் பலமாக அசைத்து எழுப்பியதும் எழுந்தான். வள்ளென்று விழுந்தான்.

    தூங்கிக்கிட்டிருக்கேன்ல. எதுக்கு என்னை எழுப்பறே? என்றான்.

    கோபாலன் வந்திருக்கார்.

    கோபாலன்... என் ஃபிரண்ட் கோபாலனா? என்றான். அவள் ஆமாம் என்றதும் உறக்கம் எங்கோ ஓட உற்சாகமாக எழுந்தான்.

    எங்கே அவன்?

    அவர் வெளியில உட்கார்ந்திருக்கார்.

    உள்ள வந்து உட்காரச் சொல்ல வேண்டியதுதானே என்று அவசர அவசரமாக கீழே ஓடி வந்தான். வாசலுக்கு வந்து,

    டேய்... கோபாலா சௌக்கியமா? வாடா... என்றான்.

    கோபாலன் எழுந்தான்.

    ரமேஷ் எப்படி இருக்கே. வெளிநாடு போய் பெருத்திட்டியே...

    ஆமா! பெருத்துத்தான் போய்ட்டேன். ஏன் வெளியே உட்கார்ந்திட்டே... உள்ளே வா என நண்பனின் தோள்மேல் கையைப்போட்டு உள்ளே அழைத்து வந்தான்.

    நித்யா... சூடா ரெண்டு காபி கொண்டா நித்யாவை நோக்கிக் கட்டளையிட்டு விட்டு நண்பனுடன் மாடிக்குச் சென்றான்.

    நித்யா அண்ணனையம், அவனையும், முறைத்துவிட்டு சமையலறைக்குள் சென்றாள்.

    ரமேஷ் கோபாலனை அறைக்குள் அழைத்துச்சென்று அமர வைத்தான்.

    டேய்... நேத்துத்தான் நீ ஊருக்கு வந்திருக்கறதே எனக்குத் தெரியும். ஒரு போன் செய்து சொல்லக்கூடாதா? போன் செய்து சொல்லியிருந்தா நான் ஏர்போர்ட்டுக்கு வந்திருப்பேனே என்றான் கோபாலன்.

    உனக்கெதுக்கு சிரமம்னுதான்.

    உனக்கு உதவி செய்யறது எனக்கு சிரமமாடா? டேய்... நீ எங்களையெல்லாம் மறந்திட்டே. வெளிநாடு போனதும் எங்களை நீ மறந்ததுல ஆச்சரியம் ஒண்ணுமில்லை. பணக்காரன் ஆயிட்டா பழசையெல்லாம் மறக்க வேண்டியதுதானே.

    டேய்... டேய்... போதுண்டா. என்னைப் போய் அப்படி நினைச்சுட்டியா? நான் யாரையும் மறக்கலை. நம்ம ஃபிரண்ட்ஸையெல்லாம் ஞாபகம் வச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். சரி... அதைவிடு, எப்படியிருக்கே?

    ம்... நல்லாயிருக்கேன். போன வருஷம் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

    வெரிகுட்!

    ஒரு ஆண் குழந்தை இருக்கான்.

    வெரிகுட் வெரிகுட்!

    அதெல்லாம் இருக்கட்டும். வெளிநாட்டிலேர்ந்து வந்திருக்கே. மூணு வருஷமா பார்க்காத ஃபிரண்ட்ஸையெல்லாம் நீ பார்க்க வேண்டாமா? வெளிநாடு போய்ட்டு வந்ததுக்கு எங்களுக்கெல்லாம் ஒரு பார்ட்டி நீ தரணும்.

    தாராளமா தர்றேன் அவன் சொன்ன அதே நிமிடம் நித்யா காபியுடன் உள்ளே வந்தாள்.

    காபியை வைத்துவிட்டு கீழே சென்றாள்.

    பார்ட்டியை எங்கே வச்சுக்கலாம்? கோபாலன் கேட்க.

    இதென்ன கேள்வி! நான்தானே பார்ட்டி தரப்போறேன். என் வீட்லேயே தர்றேன். அதுவும் புதுசா கட்டின வீடு. இங்கேயே தர்றேன். நம்ம தோஸ்து எல்லாருக்கும் நீயே சொல்லிடு.

    அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன்.

    காபி எடுத்துக்க.

    இருவரும் காபியை எடுத்து அருந்தினர்.

    காபியை குடித்து முடித்ததும் ரமேஷ் பீரோவிலிருந்து ஒரு பையை எடுத்தான்.

    உனக்காக பேண்ட்டும் ஷர்ட்டும் எடுத்து வச்சேன். இந்தா.

    ரமேஷ் நீட்டிய பையை வாங்கி உள்ளிருந்த உடையைப் பிரித்துப் பார்த்தான்.

    சூப்பராயிருக்குடா.

    நீ போட்டுக்கிட்டா அதைவிட சூப்பரா இருக்கும் கோபாலன் சிரித்தான்.

    "சரி... வா வீட்டைச் சுத்திக்காட்டறேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1