Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Putham Puthiya Maalai
Putham Puthiya Maalai
Putham Puthiya Maalai
Ebook80 pages31 minutes

Putham Puthiya Maalai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலை மட்டுமே புதியதாக இருக்க வேண்டுமா என்ன?இதோ இந்த மாலையும் புதியது தான். எண்ணங்களில் புதியது சிந்தனைகளில் புதியது ஏனெனில் இந்த மாலை புத்ததக மாலை. சிறுகதைகளின் மாலை சிந்தனைகளில் சிறந்த மாலை. அணிந்து பாருங்கள் எண்ணங்களில் எழில் சேரும் புதிய மாலை... சிறுகதை மாலை...

Languageதமிழ்
Release dateNov 14, 2023
ISBN6580100810327
Putham Puthiya Maalai

Read more from Vimala Ramani

Related to Putham Puthiya Maalai

Related ebooks

Reviews for Putham Puthiya Maalai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Putham Puthiya Maalai - Vimala Ramani

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    புத்தம் புதிய மாலை

    (சிறுகதைகள்)

    Putham Puthiya Maalai

    (Sirukadhaigal)

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    பொருளடக்கம்

    முன்னுரை

    மௌன மொழிகள்

    மாரீச மான்கள்

    கைதி எண் 204

    நினைக்கத் தெரிந்த மனமே

    தாலாட்டுப் பாடாத தாய்

    தலைக் கட்டு

    கை வண்டி

    கர்ப்பக்கிரஹம்

    கண்ணெடுத்தாகிலும் காணீரோ?

    குரு வந்தனை

    குறை ஒன்றும் இல்லை

    இது தான் இறுதிச் சுற்று

    முன்னுரை

    காலை மட்டுமே புதியதாக இருக்க வேண்டுமா என்ன?

    இதோ இந்த மாலையும் புதியது தான்.

    எண்ணங்களில் புதியது

    சிந்தனைகளில் புதியது

    ஏனெனில் இந்த மாலை புத்தக மாலை.

    சிறுகதைகளின் மாலை சிந்தனைகளில் சிறந்த மாலை.

    அணிந்து பாருங்கள் எண்ணங்களில் எழில் சேரும்

    புதிய மாலை... சிறுகதை மாலை

    மௌன மொழிகள்

    காலைப்பொழுது இனிமையானது அழகழகான காட்சிகள்.

    மலரிடம் குசலம் விசாரிக்கும் வண்டுகள். தலைவணங்கி கதிரவனை வரவேற்கும் கமலங்கள். ஊசி போல் விழும் மழைத்துளிகளின் மிச்சங்கள். பூமியின் சிரிப்பு... ஸ்பரிச சுகம் தரும் தென்றலின் வருடல்... மழையின் மிச்ச அறிவிப்பாக தோன்றும் மின்னலின் நெளிந்து நெளிந்து தெரியும் வெளிச்சங்கள்...

    பஞ்சபூதங்களும் மனிதனிடம் பேசும் மொழி மௌன மொழியா?

    எல்லாமே அழகுதான். மலர்மதி ஜன்னல் கதவை திறந்து இயற்கை ரசிக்க ஆரம்பித்தாள்.

    அப்போது தான் கண்ணில் பட்டது எதிர் வீட்டில் ஜன்னல் கதவுகள் திறந்து கிடந்தன. பூட்டி இருந்த வீட்டுக்கு யாரோ குடி வந்து விட்டார்கள் போல தோன்றுகிறது அந்த ஜன்னல் வழியாக பார்த்தபோது ஒரு வாலிபன் ஒரு கண்ணாடி முன் தலை சீவிக் கொண்டிருந்தான். கண்ணாடியை மாட்டுவதும் கழற்றுவதும் காலண்டரை மாட்டுவதுமாக அவன் திணறிக் கொண்ட்டிருந்தான். யார் இவன்?

    எதேச்சையாக சட்டென்று அவனும் இவளை பார்த்தவன் ஒரு கணம் அசட்டு சிரிப்பு சிரித்தான். இவளும் அதைத் தொடர்ந்தாள். இந்த நாடகம் ரெண்டு நாள் அரங்கேறியது.

    பழக்க தோஷத்தில் அவள் இவனைப் பார்த்து சிரிக்க திடுக்கிட்டு போனவன் எப்படியோ பதில் சிரிப்பை உதிர்க்க பிறகு அவன் மெல்ல மெல்ல கை ஜாடையில் உன் பெயர் என்ன என்று கேட்டான்.

    இவள் அருகில் இருந்த பிளவர் வாசியிலிருந்து ஒரு ரோஜா பூவை எடுத்துக் காட்டினாள். உன் பெயர் ரோஜாவா என்றான் சைகையில்.

    பலமாக மறுத்தவள் கையை குவித்து மலர் போல செய்கை காட்டி வானத்து நிலவை காட்டினாள். முழு நிலவு அடையாளம் காட்டினாள்.

    மலர் மதியா? என்றான். இவள் ஆமாம் என்று கைதட்டினாள்.

    பதிலுக்கு செய்கையில் உன் பெயர் என்ன என்று கேட்டாள்.

    அவன் அனந்த சயன போஸ் காட்டினான். அப்போது அவன் சிரித்தது அழகாகவே இருந்தது. ரங்க நாதனா? என்றாள். நீ ஒரு புத்திசாலி என்று செய்கை காட்டி அதிலே பாதி என்று குறிப்பால் உணர்த்தினான். நாதனா? ரங்கனா? இவள் சிரித்தபடி அடையாளம் கேட்க அவனும் பதிலுக்கு சிரித்தான். ரங்கநாதனாகத் தான் இருக்கும் நாதன் என்று யார் பெயர் வைத்துக் கொள்வார்கள்?

    பாடத் தெரியுமா? என்று ஒரு முறை ஜாடையில் கேட்டான். இவள் பாரதியின் குயில் பாட்டு புத்தகத்தை காட்டினாள். தன் குரல் இனிமையானது என்று ஜாடையிலே சொன்னாள். அவன் தம்ஸ்சப் செய்கை காட்டினான். உனக்கு பாட தெரியுமா? என்று எதிர் கேள்வி கேட்டபோது பாரதியின் கண்ணம்மா என் காதலி என்ற புத்தக வரிகளைக் காட்டினான். அவள் வெட்கினாள் மனசுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன எங்கோ குருவிகள் சிறகடித்தன.

    எந்தன் வாயிலே அமுதூறுதே என்ற வரிகளை ஜாடை காட்டி அபிநயித்தான். இவள் சிரித்தபடி கீழே ஓடிவிட்டாள். அப்பா அழைத்தார்.

    என்ன வேலை செய்கிறாய் என்றாள் ஒரு நாள்.

    ஒரு புத்தகத்தை காட்டினான். எழுத்தாளரா என்றால் இல்லை என்று மீசை முறுக்கி பாரதியை அடையாளம் காட்டினான்.

    ஓ கவிஞனா என்ற போது ஆமோதித்தான்...

    காதலித்தால் கவிதை வருமா என்று ஜாடை கட்டிய போது கழுதை வராமல் இருந்தால் சரி என்று எதிர்சாடை காட்டினான்.

    ஊரிலிருந்து தன் தாய் வரப்போவதாகச் சொன்னான். நமஸ்காரம் செய்தாள். சிரித்தான்.

    அன்று இவன் வீடு தேடி அவன் தாய் வந்தாள். இவளை பாசத்துடன் பார்த்தபடி இங்கே பாலு தயிறு எல்லாம் வீட்டுல கொண்டு வந்து கொடுப்பாங்களா? புது இடமா? ஒண்ணுமே புரியல என்றாள்.

    அதற்குள் அங்கு வந்த இவள் தந்தை சொன்னார்.

    "நான் ஏற்பாடு பண்றேன்

    Enjoying the preview?
    Page 1 of 1