Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadhal! Kadhalariya Aaval!
Kadhal! Kadhalariya Aaval!
Kadhal! Kadhalariya Aaval!
Ebook142 pages52 minutes

Kadhal! Kadhalariya Aaval!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பேரரழகி என்பவளின் சிறு வயதில் தன்னுடைய டியூசன் மிஸ்ஷுக் கு ஏற்பட்ட காதல் தோல்வியை கண்டு மனதில் ஏதோ ஒன்று ஆழமாக பதிந்து விட்டது. காதல் செய்யாமலே காதல் தோல்வியுற்றதுபோல் மனதில் ஓரு சங்கடமான நிலை. இவளுடைய இந்த வாழ்க்கையில் அந்த டியூசன் மிஸ் மீண்டும் வந்து மாற்றத்தை ஏற்படுத்துவாளா? இவள் மனதில் ஏற்படடிரும் குழப்பமான நிலை மாறுமா? காதல்! காதலறிய ஆவல் என்று இருக்கும் பேரரழகிக்கு காதல் ஏற்படுமா? வாசியுங்கள்...

Languageதமிழ்
Release dateMay 4, 2024
ISBN6580137110928
Kadhal! Kadhalariya Aaval!

Read more from R. Sumathi

Related to Kadhal! Kadhalariya Aaval!

Related ebooks

Reviews for Kadhal! Kadhalariya Aaval!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadhal! Kadhalariya Aaval! - R. Sumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதல்! காதலறிய ஆவல்!

    Kadhal! Kadhalariya Aaval!

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    பஞ்சவர்ணம் மர அலமாரியில் துணிகளுக்கடியில் இருந்த பேரழகியின் ஜாதகத்தை அகழ்வாராழ்ச்சி செய்து எப்படியோ தேடி எடுத்து தூசு தட்டினாள்.

    சனியனை... ரெண்டு மாசத்துல எவனையாவது பிடிச்சு கட்டிவச்சு வூட்டைவுட்டுத் தொரத்தனும் வாய்விட்டு சொல்லிக் கொண்டு அலமாரியின் கதவை அடித்து சாத்தினாள்.

    கல்லூரியில் கடைசி வருஷம் படித்துக் கொண்டிருக்கும் பேரழகியை மேற்படிப்பெல்லாம் படிக்க வைத்து வேலைக்கு அனுப்பி அழகுப் பார்க்க வேண்டும் என்று ஆயிரம் கனவுகள் கண்டிருந்தவளுக்கு இப்படி தடாலடியாக கல்யாண எண்ணத்தை ஏற்படுத்தியவள் கருமாரிதான்.

    கருமாரி காதில் ஓதிவிட்டதுதான் கதிகலங்க வைத்திருந்தது பஞ்சவர்ணத்தை.

    ‘நாமதான் படிக்காமப் போயிட்டமே. ஆத்தா பெத்துப் போட்ட அத்தனையையும் வளர்த்தெடுக்க ஆளா என்னை ஆக்கிப்புட்டளேன்னு விதியை நொந்துக்கிட்டு வீட்டோட கிடந்தமே... நாம பெத்த புள்ளையாவது நல்லா படிக்கட்டுமேன்னு காசை காசுன்னு பாக்காம, கஷ்டத்தைக் காட்டாம காடு கழனின்னு போயி பாடுபட்டுட்டு வந்து படிக்க வச்சா திமரெடுத்துப் போயி நிக்குது. நம்ம புள்ளைப் படிச்சு உத்தியோகத்துக்குப் போனாலாவது மரியாதை தர்றவன் மாப்பிள்ளையா வருவான்னு நினைச்சா மானத்தை வாங்கிப்புட்டுள்ள போயிடும் போலிருக்கு. பொட்டப் புள்ளையைப் படிக்க வைக்கனும்னு

    நினைச்சா... பொழப்பை நாறடிச்சா... என்னா பண்றது? இதுக்கெல்லாம் நல்லது நினைக்கக் கூடாது. கூனோ குருடோ, நெட்டையோ குட்டையோ ஆம்பளைன்னு ஒருத்தனை புடிச்சு கட்டி வச்சுப்புடனும். ஆழ்ந்து ஊழ்ந்துப் பார்த்து கட்டி வைக்க அடக்க ஒடக்கமா இருக்கனும். அடங்காமத் திரிஞ்சா... இப்படித்தான் ஆத்துலயோ கொளத்துலபோ புடிச்சுத் தள்ளினா போதும்னுல இருக்கும்" ஆவேசமாக ஆளில்லாத வீட்டுக்குள் அங்காலய்த்தவாறே வந்து கூடத்தில் கால் நீட்டிப் போட்டு அமர்ந்து ஜாதகத்தைப் பிரித்தாள்.

    கருமாரியையே கூட்டிக்கிட்டுப் போயி வைத்தீஸ்வரன் கோவில்ல சோசியம் பார்த்துட்டு வந்திடனும். கழுதைக்கு இப்ப கல்யாண கிரகம் இருக்கான்னு? ஆத்தா... புத்தடி மாரியாத்தா நீதான் கல்யாண கிரகத்தை உண்டாக்கித் தரணும் புலம்புகிறாளா பிராத்தனை செய்கிறாளா என தெரியவில்லை. வாய் எதையெதையோ உளறிக் கொண்டிருந்தது.

    அவளை இப்படி புலம்ப வைத்தவள் கருமாரிதான்.

    ஒரே தெருவில் இருந்தாலும் முன்பெல்லாம் அத்தனை சிநேகம் கிடையாது.

    பழக்கமெல்லாம் அதிகமானது இந்த நூறுநாள் வேலைத் திட்டத்தால்தான்.

    நூறு நாள் வேலைக்கு அவள்தான் வந்து வரியாக்கா? எனக் கூப்பிட்டாள்.

    ஐய்யே... என்னால வெட்டவோ அள்ளவோ முடியாது தாயி. என இவள் பயந்தபோது...

    அடப்போக்கா... அங்க எவ வேலை செய்யறா? சும்மா வேலை செய்யற மாதிரி காட்டிக்க வேண்டியதுதான். ஆளு பாக்கறபோது புல்லைப் புடுங்கறதும் அந்தாண்டைப் போனதும் ஆக்கி எடுத்துட்டுப் போனதை ஆற அமர தின்னுப்புட்டு கதைப் பேசிப்புட்டும்தான் நாங்க வர்றோம். நீயும் வாக்கா... என அழைத்துப் போனாள்.

    அவள் சொன்னது உண்மைதான். அங்கே ஒருத்தியும் கருத்தும் கண்ணுமாக வேலை செய்யவில்லை. வெட்டி அரட்டையும், வேகாத கதைகளும்தான். பெரும்பகுதி நேரம் பெரிய புளிய மரத்தடியில்தான் கிடந்தனர்... ஆண்கள் சீட்டு விளையாடுவதும் பெண்கள் கதைபேசுவதுமாய். சில்லென்ற காற்றில் சிரிக்க சிரிக்க பேசி களித்துவிட்டு வீடு வந்து சேர்வதுதான் வேலையாகிப் போனது. கண்துடைப்பாக செய்த வேலைக்கு காசுப் பார்த்தனர். அப்படி கதைப் பேசும் நேரத்தில்தான் கருமாரி அவளை மட்டும் ரகசியக் குரலில் அழைத்தாள்.

    யக்கா... வா நாம அங்க போய் உட்கார்ந்து சாப்பிடலாம்

    எல்லாரும் இங்க இருக்காக. நாம மட்டும் தனியா போனா என்னமோ ஸ்பெஷலா கொண்டுவந்திருக்காளுக. அதான் தூக்கு சட்டியை தூக்கிக்கிட்டு நைசா நழுவிட்டாளுவோன்னு இந்த சிறுக்கிக பொறுமுவாளுக. இங்கயே குந்து. இருக்கறதை எல்லாருமா சாப்பிடுவோம் பஞ்சவர்ணம் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவதில் தவற விரும்பவில்லை.

    ஆமா... இவளுங்க பெரிய சூரிங்க. இவளுங்களுக்குப்போயி பயந்துக்கிட்டு. நா உங்கிட்ட ஒரு விசயம் தனியா பேசனும். அதான் அப்படி போயி குந்தலாம்னு சொன்னேன். இங்க வச்சிப் பேசினா... அம்பட்டுத்தான். விசயத்தை வீதிக்கு கொண்டுவந்து விருந்து வச்சி காதுக் குத்தி கெடா வெட்டிடுவாளுக.

    பஞ்சவர்ணத்திற்கும் உள்ளுக்குள் கிளுகிளுப்பானது.

    அந்த பாறையில் இருவரும் அமர்ந்து தூக்கு சட்டியைத் திறந்தனர்.

    கருவாட்டுக் குழம்பும், மீன் குழம்பும் வாசனையை காற்றில் நிரப்பியது.

    கருமாரி சொன்ன விசயம்தான் நாறியது.

    2

    ஏன்டி... அந்த துபாய்க்காரன் பொண்டாட்டி பஸ் டிரைவரோட ஓடி கீடி புட்டாளா?" என்று கிசுகிசுத்தவாறே ஒரு வாய் சோற்றை உள்ளே தள்ளினாள் பஞ்சவர்ணம். யாருமற்ற இடமாக இருந்தாலும் ஏதோ அங்கே கொத்தித் திரிந்த குருவிகளும், கூவித் திரிந்த குயில்களும் இவர்கள் பேசும் செய்தியை எடுத்து சென்று எல்லோருக்கும் சொல்லிவிடும் என்பதைப் போல் கிசுகிசுத்தாள்.

    ஆமா... .வீட்டுக் குப்பை உள்ளறையில கிடக்க எவளோ ஒருத்தி தெருக் குப்பையை பெருக்க தேடினாளாம் வெளக்கமாத்தை. கருமாரி இரண்டு தோள்பட்டைப் பக்கமும் முகத்தை இடவலமாகத் திருப்பி நொடித்தாள்.

    என்னடி... விசயத்தை சொல்லாம பழமொழி சொல்றே? உரிமையாக அவளுடைய தூக்கு சட்டியில் இருந்த கருவாட்டுத் துண்டு ஒன்றை எடுத்து சுவைத்த பஞ்சவர்ணம் நொடியில் பேச வந்தக் கதையை மறந்து கருவாட்டு ருசியில் சொக்கி ‘ச்ச... ப்... என்னா ருசிடி? என்னா கருவாடு? கானாங்க கத்தையா?"என்றாள்.

    மக்கும்... வேளை வந்துச்சாம் பேதியில போவ... விருந்தை நினைச்சு எவனோ விரிச்சு வச்சானாம் தலைவாழ இலைய மறுபடியும் கருமாரி பழமொழி சொல்ல கடுப்பானாள் பஞ்சவர்ணம்.

    என்னாடி... பொடி வச்சே பேசறே?

    முகம் சுருக்கி எரிச்சலாகி உறிஞ்சிய கருவாட்டை பாதியிலேயே தூக்கி எறிந்தாள் பஞ்சவர்ணம்.

    காத்திருந்ததைப் போல் கவ்விக் கொண்டோடின குருவிகள்.

    ஆமா... பொடிதான். ஊருக்குள்ள பயலுவ போடற பொடியிலதானே சிறுக்கிங்க சிக்கி சின்னா பின்னமாவுறாளுக.

    அப்ப... துபாய்க்காரன் பொண்டாட்டி கதையில்லை. புதுக்கதைன்னு சொல்லு என்று சுவாரசியமானாள் பஞ்சவர்ணம்.

    ஆமா... புதுசா... ஊருக்குள்ள எதுனா நடக்குதா? யாரு யாருக்குப் பொடிப் போட்டது? இடைவெளியைக் குறைத்து இடுப்பும் இடுப்பும் உரச ஒட்டிக் கொண்டு கேட்டாள்.

    அட... இவ ஒருத்தி. காலையில தாலிக் கட்டி காணதக் கண்டவன் ஒரசற மாதிரியில்ல ஒரசறே? கீழே வுழந்துடுவேன் போலிருக்கு படித்துறையின் கல்லில் பலமாக அழுந்தி உட்கார்ந்தாள் கருமாரி.

    அட விசயத்தை சொல்லுடின்னா...

    ம்... செக்கு கடைக்காரன் சின்னய்யன் இருக்கானே...

    அவனா... ஆமாடி ஆமாடி அவன் கூட அந்த மளிகைக் கடைக்காரி அதான் அந்த செட்டியார் பொண்டாட்டி அவ வூட்டுப் பக்கமா எண்ணெய் கொடுக்கற சாக்குல அடிக்கடி போய் வர்றதா பேசிக்கிறாங்க. என்னாடி ஆச்சு, செக்குக்காரன் பொண்டாட்டி வெளக்கமாத்தை எடுத்துட்டாளா?

    அவ வெளக்கமாத்தை எடுக்கலை. நீதான் வெளக்கமாத்தை எடுக்கனும்?

    அலட்சியமாக கருமாரி சொல்ல தூக்கி வாரிப் போட அதிர்ந்தாள் பஞ்சவர்ணம்.

    வாயில் வைத்த சோற்றை விழுங்க முடியாமல் அப்படியே வாயைப் பிளந்தபடியே செத்தவளைப் போல் தோற்றமளித்தாள்.

    என்னா... வாயைப் பொளந்துட்டே? உன் வூட்டுக் கதைதான். உனக்குத்தான் தெரியலை. ஊர்சனத்துக்குத் தெரிஞ்சு ஒரமுறைக்குப் பாக்கு வைக்கக்காட்டியும் நீ வெளக்கமாத்தை கையில எடுத்துடு

    பஞ்சவர்ணம் மடியில் இருந்த தூக்கு சட்டியைக் கீழே வைத்தாள்.

    மானம் போன பின்பு கவரிமானுக்கு சோறு இறங்காது என்பதைப் போலிருந்தது அவளுடைய செய்கை.

    மிரட்சி மீனாய் துள்ளும் கண்ணில்

    Enjoying the preview?
    Page 1 of 1