About this ebook
கதை நாயகன் கபிலன். அவனுக்கு கிடைத்த தாமரை மலர் தொட்டில் பாண்டிம்மா. அவனைத் தாலாட்டிய அந்த தொட்டிலை இந்த சமுதாயம் ஏற்க மறுக்கிறது. உண்மையான அன்பு குறைகளை எப்பொழுதும் நிறைவாகவே எண்ணி ஏற்றுக் கொள்ளும் என்பதற்கு எடுத்துக்காட்டு பொன்னி. ஆனால் அவளையும் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பயமுறுத்தும் போது, பாவம் அவளும் தடுமாறவே செய்கிறாள். தடுமாற்றம் அவளை தடம்புரள செய்ததா? இல்லை தன்னிலையை உணர செய்ததா? வாசியுங்கள் நாவலை. விமர்சனங்களை எதிர்நோக்கும்.
- ஆர். சுமதி
Read more from R. Sumathi
Ondru Serntha Ullam Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsIvalallava Ilavarasi! Rating: 0 out of 5 stars0 ratingsThoorathu Roja Rating: 0 out of 5 stars0 ratingsVedhamadi Nee Enakku... Rating: 0 out of 5 stars0 ratingsInaiyana Ilamaaney Rating: 5 out of 5 stars5/5Sirukathai Thoguppu - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsThaazhampoove Kannurangu! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thozhugai Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsPonnezhil Poothathu Pudhu Vaanil... Rating: 0 out of 5 stars0 ratingsIlaiya Manathu Inaiyum Pothu... Rating: 0 out of 5 stars0 ratingsAlli Vacha Malligaiye! Rating: 0 out of 5 stars0 ratingsNandha En Nila Rating: 0 out of 5 stars0 ratingsKannethirey Oru Kanavulagam! Rating: 0 out of 5 stars0 ratingsMeeravin Kannan Meeravidamey! Rating: 0 out of 5 stars0 ratingsEnakkoru Kaadhali Irukkindral Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solli Vidai Peruvathu... Rating: 0 out of 5 stars0 ratingsAngum Ingum Paathai Undu! Rating: 0 out of 5 stars0 ratingsKovil Purakkal! Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vantha Deivam Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 0 out of 5 stars0 ratingsThean Sindhum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAnge Sendru Anbai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsNenjiniley Ninaivu Mugam Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Panthal Rating: 0 out of 5 stars0 ratingsAngeyum Kadhal Undu Rating: 0 out of 5 stars0 ratingsNijamai Sila Nimidangal! Rating: 0 out of 5 stars0 ratingsTheruvil Vizhuntha Maalaigal Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Varuvaan Nayagan! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thaamarai Thottil!
Related ebooks
Kaaranamilla Kaariyangal Rating: 0 out of 5 stars0 ratingsAzhagin Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsKattru Marakkumo Kaadhal? Rating: 0 out of 5 stars0 ratingsPani Nilavai Pathiyanidu Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kiliye Rating: 0 out of 5 stars0 ratingsPani Padarntha Paathaigal Rating: 5 out of 5 stars5/5Kanal Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsYaarukku Mappillai Yaaro... Rating: 4 out of 5 stars4/5Nalaayini - 94 Rating: 0 out of 5 stars0 ratingsUnathu Vizhiyil Enathu Payanam Rating: 0 out of 5 stars0 ratingsOru Thappu Thaalam Oru Sariyaana Raagam Rating: 5 out of 5 stars5/5Thavaminri Kidaitha Varame Rating: 5 out of 5 stars5/5Minnal Devathaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnthanuyir Kaadhaliye..! Rating: 4 out of 5 stars4/5Lakshmi Rajarathnathin Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsMayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5Maya Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsThodamaley Sudum Thanal Rating: 4 out of 5 stars4/5Minsara Motcham Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Oru Yuddham! Rating: 3 out of 5 stars3/5Kaadhal Konda Nenjam Rating: 5 out of 5 stars5/5Manathukkuthan Karpu Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Ingey Poo Megam Engey? Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Aasai Kodi Sumanthu… Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsKarkala Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsஇமையாக நானிருப்பேன்… Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Banthalitten! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Thaamarai Thottil!
0 ratings0 reviews
Book preview
Thaamarai Thottil! - R. Sumathi
http://www.pustaka.co.in
தாமரை தொட்டில்!
Thaamarai Thottil!
Author:
ஆர். சுமதி
R. Sumathi
For more books
http://www.pustaka.co.in/home/author/r-sumathi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 1
அலுவலகம் முடியும் நேரம். அவரவர் கணினியை அணைத்துவிட்டு கைப்பையைத் தேடி எடுத்துக் கொண்டு சிறகில்லாமல் பறக்கும் அதிசயத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். கணினிகளுக்கு உறையிட்டு ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த பியூன் கண்ணப்பனுக்குள் பதற்றம். கபிலன் போய்விட்டானோ இருக்கிறானோ தெரியவில்லையே. மாசக்கடைசியில் கைக்கொடுக்கும் தெய்வம் கபிலன்தான். இரக்ககுணம் படைத்த இளைஞன். இந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்து ஒரு வருடம் தான் ஆகிறது. அதற்குள் எல்லோரிடமும் நெருக்கமாகிவிட்டான்.
அதற்கு காரணம் மற்றவர்களின் மன நிலையை அறிந்து பழகுவது தான். முகம் பார்த்தே மனதை படிக்கத் தெரிந்தவன். படித்தபின் தூக்கி - போடும் கதைப்புத்தகத்தைப் போல் அலட்சியப்படுத்த மாட்டான். அவரவர் பிரச்சனைகளிலும் அக்கறை காட்டுவான். நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவி செய்வான்.
ஒரு சிலர் வார்த்தைகளால் ஒத்தடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடுவர். இன்னும் சிலர் இப்படியாம் அப்படியாம் என அடுத்தவர்களிடம் பேசி அனுதாபப்பட்டுவிட்டு அகன்றுவிடுவார். ஆனால் கபிலன் உடுக்கை இழந்தவன் கைபோல் இடுக்கன் களைய துரிதமாக செயல்படுவான்.
பண உதவியென்றால் பலரும் பதுங்கிக் கொள்ளும் நிலையில் பாசமுடன் உதவி செய்வான் கபிலன்.
இந்த மாதம் வந்த எதிர்பாராத செலவு மனைவி மஞ்சள் காமாலை என படுத்தது. அவசரத்திற்கு உதவுபவன் அவன் தான். காலையில் அவனெதிரே கையை பிசைந்தபடி கண்கலங்கிய கண்ணப்பனின் கையை அன்போடு பற்றி அக்கறையாக வினவினான். கண்ணப்பன் பிரச்சனையை சொன்னதும் கவலை வேண்டாம். நான் உணவு இடைவேளையின்போது ஏ.டி.எம்.மிலிருந்து பணம் எடுத்து வைக்கிறேன். போகும்போது வாங்கிட்டுப் போங்கள்
என்று சொன்னான்.
அதனால் கபிலன் போய்விட்டானோ என்று பதற்றமாகயிருந்தது. 'ஞாபகம் இருந்திருந்தால் கொடுத்திருப்பானே. மறந்துவிட்டானோ' என நினைத்தவாறே வந்த கண்ணப்பன் பொன்னி தன்னுடைய கேபினில் இருப்பதைக் கண்டதும் மனப்பதற்றம் குறைந்தது.
இவள் இருக்கிறாள் என்றால் கபிலனும் இருக்கிறான் என்று அர்த்தம். கபிலன் சீக்கிரமாக கிளம்பிவிட்டால் இவள் எந்த வேலையிருந்தாலும் அப்படி அப்படியே போட்டுவிட்டு கிளம்பிவிடுவாள். கபிலன் ஏதாவது வேலையாக தாமதம் செய்தால் ஒரு வேலையும் இல்லாவிட்டாலும் கணினியின் முன் அமர்ந்து தானும் பிஸி என்பதைப்போல் காட்டிக் கொண்டிருப்பாள்.
இந்த நாடகத்தை அந்த அலுவலகத்தில் யாரும் பார்க்காவிட்டாலும் கண்ணப்பன் அனைத்தையும் அறிவான்.
‘பாவம்! இந்த பொண்ணு அவனை காதலிக்குது போலிருக்கு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனையே பார்ப்பதும், பேசுவதும் அவன் பின்னால் போவதுமாகயிருக்கிறது. இந்த கபிலனுக்கு இதெல்லாம் தெரியுமா? இல்லை தெரியாதது போல் நடிக்கிறானா? ரகசியமானது காதல். மிகமிக ரகசியமானது காதல். என வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறானா?
எப்படியானால் என்ன? இருப்பது இல்லை என்றாகாது. இல்லாதது இருப்பதாக தோன்றாது. உண்மையாகயிருந்தால் வெளிச்சத்திற்கு வந்துவிடப் போகிறது.'
பொன்னியின் கேபினை கடக்கும்போது குரல் கொடுத்தான்.
என்ன மேடம் கிளம்பலையா?
நிமிர்ந்து சிரித்தவள் கொஞ்சம் வேலையிருக்கு கண்ணப்பன்
என்றாள்.
'இருக்கும் இருக்கும்! கபிலனை கவனிப்பது தானே உன் முழு வேலையே. கடவுள் உன் காதலை ஆசிர்வதிக்கட்டும்' என்று உள்ளுக்குள் சிரித்தபடியே கடந்தான்.
கபிலனுடைய கேபினுக்கு வந்தபோது கபிலன் கிளம்பிக் கொண்டிருந்தான்.
கண்ணப்பனைப் பார்த்ததும் வாங்க கண்ணப்பன்! உங்களைத் தான் எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன். எங்கே மறந்திட்டீங்களோன்னு நினைச்சேன்
என்றான்.
கஷ்டத்தை எப்படி சார் மறக்க முடியும்? ஒவ்வொரு நிமிஷமும் மனதை போட்டு குடைஞ்சுக்கிட்டிருக்கிறது பணம் தானே சார்
நீங்க கேட்டதுமே லஞ்ச் டயத்துல போய் எடுத்துட்டு வந்துட்டேன். இந்தாங்க....
சட்டைப் பையிலிருந்து இரண்டாயிரம் பணத்தை எடுத்துக் கொடுத்தான். வாங்கும்போது கண்ணப்பனின் விரல்கள் நடுங்கியது. விரல் நடுக்கம் எப்பொழுதும் இதய நடுக்கத்தை விளக்கும் ஒன்று.
'கடன் பட்டார் நெஞ்சம் கலங்கினார் போன்று' என கம்பர் அனுபவித்துதான் பாடியிருக்கிறான்.
ரொம்ப நன்றி தம்பி. அடுத்த மாசமே திருப்பி தந்து விடுகிறேன்
ஒண்ணும் அவசரமில்லை. எனக்கு பணத்தேவை ஒண்ணும் இல்லை
தம்பி உங்க நல்ல மனசுக்கு நல்ல பொண்ணு கிடைச்சு புள்ளைக் குட்டிகளோட நல்லாயிருப்பீங்க தம்பி
மனதில் பொன்னியை நினைத்தவாறே கண்ணப்பன் சொல்ல வாய்விட்டு சிரித்தான் கபிலன்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இதே வார்த்தையைத்தான் அம்சவேணியம்மாவும் சொன்னாங்க. உங்களோட வாழ்த்தெல்லாம் பலிக்க மாட்டேங்குதே. பொண்ணு கிடைக்க மாட்டேங்குதே
ஊர்ல பொண்ணு பார்த்துக்கிட்டிருக்காங்களா தம்பி
ஆமா! ஒண்ணும் அமையமாட்டேங்குது
கவலைப்படாதீங்க தம்பி. சில சமயம் பொண்ணு பக்கத்திலேயே இருக்கும் நமக்கு தெரியாது. நாமதான் ஊர் ஊரா தேடுவோம். ‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறான் ஞானத்தங்கமே'ன்னு பாடினது கடவுளுக்கு மட்டும் இல்லை மனைவிக்கும் பொருந்தும் என். விஷயத்துல கூட அப்படித்தான்
அப்படியா? இன்ட்ரஸ்ட்டிங்! உங்க எக்ஸ்பீரியன்ஸை சொல்லுங்களேன்
"அதையேன் கேட்கறீங்க தம்பி. என் பொண்டாட்டி என் வீட்டுக்கு பக்கத்து வீடு. சின்ன வயசிலேர்ந்து இந்த மூஞ்சியை காதலிச்சிருக்கா போலிருக்கு. எனக்குத் தெரியலை. அவளை ஏறிட்டுப்பார்க்கக்கூட எனக்கு தகுதி இல்லை. அப்படி ஒரு அழகி. கடவுள் பணம் காசை அள்ளித் தரலைன்னாலும் அழகை வஞ்சமில்லாம வாரி வழங்கியிருந்தான்.
எனக்கு பொண்ணு பார்த்தாங்களா அப்ப எங்கெங்கோ போனோம். நிச்சயதார்த்தம் கூட நடக்க ஏற்பாடாயிட்டு. திடீர்னு இந்த பாவி மக தூக்கு மாட்டிக்கப் போயிட்டா. தெருவே அல்லோகலப்பட்டுப் போச்சு. எதுக்குடி சாவப் போன எதுக்குடி சாவப் போனன்னு அடிச்சா... கொஞ்சம் கொஞ்சமா உண்மையை சொல்றா. நான் அப்படியே ஆடிப்போயிட்டேன்.
நமக்காக ஒருத்தி சாகற அளவுக்கு போயிருக்காளேன்னு நெனச்சு நெனச்சு மாய்ஞ்சுப் போயிட்டேன். பக்கத்திலேயே ஒருத்தியை வச்சுக்கிட்டு பாவி நான் ஊர் ஊரா பொண்ணு தேடி அலைஞ்சேனேன்னு வெட்கப்பட்டேன். அதனாலதான் அவளுக்கு ஒண்ணுன்னா என்னால தாங்கிக்க முடியாது."
கண்ணப்பனுக்கு
