Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Lakshmi Rajarathnathin Kurunovelgal
Lakshmi Rajarathnathin Kurunovelgal
Lakshmi Rajarathnathin Kurunovelgal
Ebook578 pages3 hours

Lakshmi Rajarathnathin Kurunovelgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.

இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.

காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.

இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.

1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.

2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.

Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580115705043
Lakshmi Rajarathnathin Kurunovelgal

Read more from Lakshmi Rajarathnam

Related to Lakshmi Rajarathnathin Kurunovelgal

Related ebooks

Reviews for Lakshmi Rajarathnathin Kurunovelgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Lakshmi Rajarathnathin Kurunovelgal - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    லட்சுமி ராஜரத்னத்தின் குறுநாவல்கள்

    Lakshmi Rajarathnathin Kurunovelgal

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கலியுக சீதை

    2. வேத விதைகள்

    3. கூவமுடியாத குயில்கள்

    4. பூமிக்கு வந்த நிலவு!

    5. அன்புள்ள கொலைகாரன்

    6. என் அம்மாவின் பெண்

    7. குறுகலான சாலையில் பரபரப்பான விபத்துக்கள்

    8. உறவு சொன்னவள்

    9. அக்னி ஸ்நானம்

    10. கன்னிமரம்

    11. கன்னி மயிலென கண்டேன்

    12. மணங்கள் மனத்தில் நிச்சயிக்கப்படுகின்றன

    13. விதியின் விழிப்பு

    14. குயில் கூடு

    15. பூவாய் மாறும் மெல்ல மெல்ல...

    1. கலியுக சீதை

    அலுவலகப் படி ஏறிய பொழுதே நெஞ்சில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது மஞ்சுளாவிற்து. அட்டென்டென்ஸ் மேலதிகாரியின் அறைக்குப் போயிருக்குமோ? பதினைந்து நிமிடங்கள் லேட். கிளம்பும் சமயம் தபால்காரன் விட்டெறிந்த தபலால் வந்த வினை. அப்பா அவளையும், அவள் கணவன் விசுவையும் தலை தீபாவளிக்கு வரச் சொல்லி அழைத்திருந்தார்.

    யாரிடமிருந்து கடிதம்? புடவைத் தலைப்பை சரி செய்தபடி வந்தாள் சிங்காரத்தம்மாள்.

    எங்கப்பா தலை தீபாவளிக்கு வரச் சொல்லி கடிதம் எழுதி இருக்காரு அத்தை பணிவுடன் மாமியாரிடம் நீட்டினாள் மஞ்சு.

    வெடுக்கென்று பற்றிய மாமியார் கண்ணாடி போட்ட கண்களால் கடிதத்தை மேய்ந்தாள்.

    இப்படி மொட்டையா எளுதிட்டாப் போதுமா? கல்யாணத்தப்ப போடறதா சொன்ன நெக்லஸ் என்ன ஆச்சு? அதைப்பத்தியே மனுஷன் மூச்சு காட்டலையே. தலை தீபாவளி. உன் புருஷனுக்கு வைர மோதிரம் போடணும். உங்கப்பா மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கார் இந்த தீபாவளிக்கு அதெல்லாம் வந்துரணும். புரியுதா?

    தலையை ஆட்டுவதைத் தவிர வேறு வழியே இல்லே மஞ்சுளாவிற்கு.

    பெண்ணிற்கு என்றைக்கு இதிலிருந்து விடுதலை கிடைக்கப் போகிறது? குளிர் காலத்தில் சுடு நீரையும், வெய்யில் காலத்தில் குளிர்ந்த நீரையும் நாடுவது போல் அல்லவா வாழ்க்கையும் சதா தேடிக் கொண்டிருக்கிறது. கணவன் வாங்கித் தரும் ஒரு முழப்பூவிலும் கூட இந்த வித்யாசம் தெரிகிறது.

    ஒரு முழும் பூ ஒரு ரூபாயா? எந்தக் குடும்பத்திற்கு இது கட்டுபடியாகும். என்று கணவன் கூறும்போது எல்லாமே அடிபட்டுப் போகிறது.

    நான் சம்பாதிக்கிறேன். எனக்கு தலை பின்னலில் வழிய வழியப் பூ வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூக்குரல் இடமுடியாதபடி மனம், வாய் இரண்டுப் ஊமையாகப் போகிறது.

    எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்கின்ற சித்தாந்தம் காணாமல் போய்விடுகிறது. நீ இதெற்கெல்லாம் தகுதி இல்லை என்று ஒதுக்கி விடுகிறதா இந்த சமுதாயம்.

    இப்படி எல்லாம் கேட்டுவிட்டு வீட்டில் இருக்கவா முடியும்?

    செருப்பை மாட்டிக் கொண்டவளிடம் மாமியார் ஞாபகப்படுத்தினாள்.

    மஞ்சு, எங்களுக்கா கேட்கிறோம் நீயும் உம் புருஷனும் வச்சுகிட்டு அனுபவிக்கத்தான் ஆபிஸ்லேயிருந்து உங்கப்பாவுக்கு எழுதிப்போடு. ம். அப்புறம் சாந்திக்கும் இது தலை தீபாவளி சீர் செய்யணும். ஆபிஸ்லே லோன் போட்டு பணத்தை வாங்கிட்டு வா.

    துக்கம் தொண்டையை அடைக்க தெருவில் இறங்கி நடந்தாள். சாந்தி இவள் நாத்தனர். இவளுக்குக் கல்யாணம் ஆவதற்கு ஒரு மாதம் முன்பு தான் கல்யாணம் ஆகி இருந்தது. சாந்தியின் மாமியார், மாமனர் மிகவும் நல்லவர்கள். செய்தது போதும் என்று தான் கூறினார்கள். ஆனால் சிங்காரத்தம்பாளுக்குத்தான் மனசாவதில்லை.

    சம்பந்தியம்மா அப்படித்தான் சொல்லுவாங்க. அதுக்காக நான் வுட்டுட முடியுமா? என்று வாரம் தவறாமல் பலகாரங்களையும், பழங்களையும் வாங்கிக் கொண்டு சாந்தி வீட்டுக்கு ஓடுவார்.

    மஞ்சுவின் வீட்டினரும் செய்து கொண்டு வர வேண்டும் என்று எதிர் பார்ப்பாள் சிங்காரத்தம்மாள்.

    கல்யாணம்னு உங்கம்மா கோபிச்சுகிட்டு வந்தாங்களே. மகளை கட்டிக் கொடுத்திருக்கிறோமே. ஒரு ஐம்பது லட்டு, ரெண்டு கிலோ மிக்சர்னு கொண்டு வர வேணாம்? சாந்தியைப் பார்க்க எத்தனை வாங்கிட்டுப் போறேன். அந்த மாதிரியா வாரா வாரம் கொண்டு வரச் சொல்றேன் என்று புலம்புவாள்.

    மொத்தத்தில் மாமியாரும், மாமனாரும் மஞ்சுவின் வீட்டு வரவிலேயே குறியாக இருந்தார்கள். அந்த அடிப்படையிலேதான் தீபாவளிக்கு நிறையவே எதிர்பார்த்தார்கள்.

    மஞ்சு வரப்போகும் தீபாவனி குதூகலத்தை கற்பனையில் ஓடவிட்டாள்.

    என்ன இன்னிக்கு மூஞ்சி வாடி இருக்கே... காலையிலேயே அர்ச்சனையா? என்று சக ஊழியை பூரணி கேட்டுக் கொண்டே போனாள்.

    இடைவேளையில் இவள் மனத்தில் இருப்பதை தோண்டி எடுத்து விடுவாள் பூரணி. கொட்டியதும் பெரிய நிம்மதி ஏற்பட்டு விடும். இவளுக்குப் பூரணி ஒரு சுமைதாங்கி. இப்படி ஒரு தோழமை இல்லாவிட்டால் இவள் நடுங்கிப் போய் சிதறி விட்டிருப்பாளோ?

    கோப்பை எடுத்துப் பிரிக்கும் பொழுது சிவா வந்தான் மானேஜர் அறையிலிருந்து.

    குட்மார்னிங் மஞ்சு

    குட்மார்னிங் சிவா

    மேஜை விளிம்பைப் பற்றியபடி நின்ற சிவா இவளுக்கு இன்னொரு பூரணிதான். ஆறுதல் அளிக்கும் தோழமையை இவள் துடுப்பாக பற்றிக் கொண்டதுண்டு. இவர்கள் எல்லாம் எந்த ஜென்மத்தின் பந்தங்கள் என்று இரவின் உறக்கமின்மையின் பொழுது கரைந்து போவாள்.

    மஞ்சு, முகத்திலே ஏன் உற்சாகம் இல்லை?

    ஒன்றுமில்ல சிவா. ஐம் ஆல்ரைட்.

    மஞ்சுவுக்கு மனசை மறைக்கும் கலை இப்பொழுது வந்திருக்குன்னு தோணுது என்று சிவா சிரித்தான்.

    ஓ... இவனுடைய பேச்சில், சிரிப்பில், சிணுங்கலில் ஒரு நந்தவனத்தில் நிற்கும் பிரமையல்லவா தோன்றுகிறது?

    என்னிக்கு நான் அப்படி மறைச்சுப் பேசி இருக்கேன்னு சொல்லுங்க சிவா?

    இப்ப பேசறது என்னங்கறேன்?

    மறைக்கல்லே சிவா. என் சுமையை ஏன் உங்க மனசுலேயும், பூரணி மனசுலேயும் ஏத்தணுமானு நினைச்சேன். அவ்வளவுதான் என்ற மஞ்சு குரலில் தழுதழுத்தாள்.

    புதுசா என்ன பிரச்னை மஞ்சு?

    பழைய பிரச்னைதான். கல்யாணத்துக்கு பாக்கி வச்ச நெக்லஸ் தலை தீபாவளியோட வைர மோதிரத்தையும் துணைக்கு அழைச்சுண்டு இருக்கு சிவா.

    சிவா முகவாயைத் தடவிக் கொண்டான்.

    எங்கப்பாவாலே நிச்சயமா முடியாது சிவா.

    பெருமூச்சு இழுத்து விட்ட சிவா கையில் உள்ள கோப்புக்களின் அவசரம் நினைவுக்கு வர லஞ்ச் அவர்ல பேசறேன் மஞ்சு என்து கூறிவிட்டுத் தன் மேஜைக்குப் போனான்.

    குக்கரின் ஓசையை அடக்கி விட்டுக் கத்தரிக்காயை நறுக்க உட்கார்ந்தாள் மஞ்சு. இரண்டு தினங்களாக சிவா அலுவலகம் வரவில்லை. உடம்பு சரியில்லை என்று சொல்லிக் கொண்டார்கள் என்று பூரணி தகவல் சேகரித்துச் சொன்னாள். சிவாவைப் போய் பார்த்து விட்டு வரலாமா என்று எண்ணிக் கொண்டாள்.

    அலுவலக லோன் போட்டுக் கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு மாமியார் தன் மகளுக்குத் தேவையானவற்றை வாங்கிப் போய் விட்டாள். கணவன் அலுவலகத்தில் பார்ட்டி என்று லேட்டாக வருவதாகப் போன் பண்ணி இருந்தான். தலை தீபாவளிக்கு என் அப்பா என்ன பண்ணப் போகிறாரோ என்ற பயம் நெஞ்சில் சதிராடியது.

    பணத்துக்கு என்ன செய்கிறாரோ என்று நினைத்த பொழுது கண்ணீர் வந்தது. தன் கல்யாணத்தின் பொழுது மாமியார் செய்த அட்டகாசங்கள் பைசாசங்களாக இப்பொழுது பயப்படுத்தின. கணவன் விசு அம்மா பிள்ளை. கொஞ்சுவதற்கு மனைவியையும், சொன்ன பேச்சைக் கேட்பதற்கு அம்மாவையும் என்று தன் வாழ்க்கையைப் பங்கு போட்டுக் கொண்டிருந்தான். எல்லாம் எனக்கு அம்மாதான் என்ற சொல்லளவை அடிக்கடி பயன்படுத்தி வைப்பான்.

    மனைவியின் கெடுபிடி குணம் பிடிக்காமல்தான் தன் மாமனார் விவசாயம் பார்க்கும் சாக்கில் கிராமத்தில் போய் இருக்கிறாரோ என்று தனக்குள் கேட்டுக் கொள்வாள் மஞ்சு. கணவனிடமோ மாமியாரிடமோ இதைக் கேட்டு விட்டு அவள் அந்த வீட்டில் இருக்கவா முடியும்

    கத்தரிக்காய் எண்ணெயில் துவண்டது. புரட்டிக் கொடுத்தாள் மஞ்சு.

    வாசல் கதவு தட்டப்படும் ஓசை கேட்கவே காஸை அணைத்து விட்டுக் கதவைத் திறந்தாள்.

    உள்ளே வரலாமா? சிவா தான் நிலைப்படியை அடைத்தாற் போல் நின்றான்.

    கதவைத் தட்டியவருக்கு உள்ளே வர உத்திரவு தேவையா?

    தனக்கே உரிய சிரிப்புடன் அவன் உள்ளே வந்து உட்கார்த்தான். இரண்டு நிமிடங்களில் காப்பியைக் கொண்டு வைத்தாள் மஞ்சு.

    ரெண்டு நாளா ஆபிஸ் வரல்லே. உடம்பு சரியில்லையா சிவா? நான் நாளைக்கு வந்து பார்க்கலாம்னு இருந்தேன்.

    நானே வந்துட்டேன் இல்லே? வீட்ல யாரும் இல்லை?

    விவரத்தைச் சொன்னாள் மஞ்சு வர நாழியாகும் சிவா.

    ஒரு கவரை டீபாய் மீது போட்ட சிவா அதுவும் நல்லதுதான். இதுல உன் நெக்லஸ்க்கும் வைர மோதிரத்துக்கும் தேவையான பணம் இருக்கு. உங்கப்பா அனுப்பிய மாதிரி கொடுத்தாலும் சரி. இல்லே ஊருக்குப் போய் வாங்கிக் கொண்டு வந்த மாதிரி வந்தாலும் சரி. விவரமா உங்கப்பாவுக்கு பணம் கெடைச்சதை தெரிவிச்சுடு. இல்லேனா ஒண்ணு கெடக்க இன்னொன்னு ஆகிவிடும்.

    கண்களில் நீர் துளிர்த்தது மஞ்சுவுக்கு. இவ்வளவு பணம் ஏது சிவா?

    சீட்டு ஒண்ணு முடிஞ்சுது. எப்.டி.யில தூங்கற பணம் தானே? உனக்காவது உதவட்டுமேனு கொடுத்தேன்.

    இதை எப்படித் திருப்பித் தருவேன். எங்கப்பாவாலே முடியாதே சிவா

    உதவ வேண்டும் என்ற அவனுடைய மனம் அந்தக் கணத்தில் தெய்வமாக விசுவரூபக் காட்சி அளித்தது.

    எப்ப முடியுதோ அப்ப தந்தாப் போதும் மஞ்சு. இல்லேனா இன்னொரு வழி இருக்குது. உனக்குத்தான் கம்ப்யூட்டர் தெரியும் ஒரு இடத்தில் ரெண்டு மணி நேரம் பார்ட் டைம் ஓர்க் வாங்கித் தரேன்.

    அப்படி நேரம் கழித்து வீட்டுக்கு வரவா முடியும்? பார்க்கலாம்.

    யோசிக்காம எடுத்து வை பணத்தை என்று சிவா வற்புறுத்தவே பணத்தை பத்திரப்படுத்தி விட்டு வந்தாள் மஞ்சு.

    சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று சிவாவை மஞ்சு வற்புறுத்தினாள். சிவா கிளம்பிய பொழுது விசு வந்து விட்டான்.

    ஓர் ஆண் பெண்ணிடம் எத்தனை நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம். அது ஆணுக்கே பொருந்தக் கூடிய சட்டம். அவன் மனைவி வேறு ஒரு ஆணிடம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது என்பது அவனுடைய சட்டத்தின் முக்கியக் குறிப்பு. அதன்படி தான் விசு தன் மனைவியை எரிப்பது போலப் பார்த்தான்.

    இவர் என் கூட ஒர்க் பண்றார், பெயர் சிவா. மிஸ்டர் சிவா... இவர் என் ஹஸ்பெண்ட் என்று பரபரப்பாக அறிமுகம் செய்து வைத்தாள் மஞ்சு.

    கடுகடுப்புடனேயே வணக்கம் சொன்னான் விசு.

    ஆபிஸ் விஷயமா பேச வந்தார். இருந்து சாப்பாட்டு விட்டுப் போங்கன்னா மாட்டேன்னு சிவா கிளம்பறார்ங்க நீங்க சொல்லிங்களேன் என்றாள் மஞ்சு.

    அவதான் சொல்றா இல்ல. நீங்க சாப்பிட்டு விட்டு போகலாம் இல்லையா? என்றான் விசு வெடுக்கென்று.

    இல்லை மிஸ்டர் விசு. ரெண்டு நாளா ஆபீஸ்க்குப் போகல்லே. நாளைக்கும் போக முடியாது போல இருக்குது. அவசர வேலை ஒண்ணு பெண்டிங்ல இருந்துச்சு. அதை மஞ்சுவை செய்யச் சொல்லி கேட்டுக்கவே வந்தேன். இன்னொரு சமயம் சாப்பிட வரேன் என்று கிளம்பி விட்டான் சிவா.

    பணத்தைப் பற்றி அப்பாவிடம் எப்படிச் சொல்லலாம் என்று யோசித்தவளிடம் விசு சீறினான்.

    அவன் சாப்பிடல்லேனு வருத்தப் படறியா? வந்தவனுக்கு போனவனுக்குனு சாப்பாடு போட இது என்ன சத்திரமா?

    ஞானிகளும், யோகிகளும் மௌனமாக இருப்பது சிறந்தது என்று போதித்திருக்கிறார்கள். இறைவனிடம் மனத்தை ஒருமைப்படுத்தவே சொன்ன மந்திரம் இது. இந்த மந்திரத்தைப் பெண்கள் சர்வ சாதாரணமாகக் கடைப் பிடிப்பதினால்தான் புகுந்த வீட்டில் காலம் தள்ள முடிகிறது என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்களா?

    விசுவும் மஞ்சுவின் மௌனத்தைப் புரிந்து கொள்ளவில்லை. மஞ்சுவையே புரிந்து கொள்ளாத பொழுது.

    மஞ்சு. இது சாதாரண நட்புத் தானே என்று கேட்டு விட்டுப் போனான் குளியலறைக்கு

    இதன் பொருள்... இதன் பொருள்... பழகிய ஆண்களிடமெல்லாம் பெண்கள் காதல் கொண்டால் பாசம், நட்பு அன்பு என்ற சொற்களுக்கு அகராதியில் இடம் இருக்குமா! இந்தச் சொற்கள் இடம் கேட்டுத் தெருத் தெருவாக அலைவது போல் எண்ணித்தான் குமுறினாள் மஞ்சு.

    சற்று நேரத்திற்கெல்லாம் மகள் வீட்டுக்குப் போன மகிழ்வுடன் வீடு வந்த சிங்காரத்தம்மாவிடம் புலம்பினான் விசு.

    என்னம்மா. நீ வீட்ல இல்லேனா இவ கூட வேலை பார்கற தடியன்களுக்கெல்லாம் இங்கே விருந்து வச்சுடுவா போல இருக்கே? என்று காட்டிக் கொடுத்த கணவனை ஒன்றும் சொல்ல முடியாமல் கண்ணீர் விட்டாள் மஞ்சு.

    மறுநாள் அதிகாலையில் பெட்டியும், படுக்கையுமாக வந்து இறங்கினான் பிரசாத் - மஞ்சுவின் சின்ன மைத்துனன். சிங்காரத்தம்மாவுக்குத் தலை உடம்பில் நிற்கவில்லை. அதுவும் டெல்லியில் உள்ளவனுக்குச் சென்னைக்கே மாற்றலாகிவிட்டது என்பது தெரிந்தும் இன்னும் இரண்டு குதிகளைத் தாராளமாகவே குதித்தாள்.

    ஹல்லோ அண்ணி என்று புன்னகை பூத்த மைத்துனனைப் பார்த்து சிரித்து வைத்தாள் மஞ்சு.

    அதிக லீவ் இல்லை என்று அண்ணன் விசுவின் கல்யாணத்துக்கு வந்து விட்டு மறுநாளே கிளம்பிப் போய் விட்டான் பிரசாத். அதனால் இவனின் குணங்கள் தெரியாத நிலையில் எதையும் பேசி விட மஞ்சு தயாராக இல்லே.

    என்ன முழிச்சுகிட்டு நிக்கறே... புள்ளைக்கு காப்பி கொண்டு வந்து கொடுப்பியா? ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுனு இவளுக்கு அப்பப்ப நான் சொல்லித் தரணும் என்று மாமியார் சிடுசிடுக்கவே சமையலறைக்குள் போய் விட்டாள் மஞ்சு.

    காப்பியுடன் வெளியே வந்தவளைப் பார்த்த பிரசாத் என்ன அண்ணி, ஹனிமூனுக்கு டெல்லி வருவீங்கன்னு நினைச்சேன் என்றான்.

    குனிந்து காப்பியை வைத்த மஞ்சு அப்படி ஒண்ணு நடக்கவே இல்லை என்று முணுமுணுத்தது அவன் காதுகளில் விழுந்தது.

    அம்மா அவன் பெட்டியை ஒழித்துக் கொண்டிருந்தாள். அண்ணியின் முணுமுணுப்பை காதில் வாங்கிக் கொண்ட பிரசாத் குளிக்கப் போனான்.

    அன்று அலுவலகத்திலிருந்து வந்த மஞ்சுவுக்கு - தான் பணம் அனுப்பி, அதைப் பெற்றுக் கொண்டு அப்பா தலை தீபாவளிக்கு சிறப்பாக எல்லாம் செய்து வைத்து விட்டார் என்ற செய்தி கிடைத்திருந்தது. அந்த உற்சாகத்துடன் வீட்டினுள் நுழைந்தாள்.

    மஞ்சு, இங்கே வா சிங்காரத்தம்மாதாள் அழைத்தாள்.

    என்ன அத்தை?

    நீ செய்யறது எனக்குப் பிடிக்கல்லே.

    பயந்து போனாள் மஞ்சு. என்ன பிடிக்கல்லே. அவள் தன் அப்பாவுக்குப் பணம் அனுப்பிய விவரம் மாமியாருக்குத் தெரிந்து விட்டதா?

    என்ன அத்தை பிடிக்கல்லே?

    மத்யானம் நீயும் பிரசாத்தும் ஹோட்டல்ல டிபன் சாப்பிட்டிங்களாம். உண்டா இல்லயா? ஆமாம் அத்தை.

    என்ன ஆமாம் அத்தை!

    அந்தப் பக்கமா வந்தாராம். சட்டுனு என் ஆபீஸ் அங்கே இருக்கிற ஞாபகம் வந்துச்சாம். அதான் வந்தாரு. அவருக்கு பசி. அதான் நீங்களும் வாங்க அண்ணினு கூப்பிட்டார் அதான் போனேன், உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது?

    ஏன் தெரிஞ்சுதுன்னு வருத்தப் படறியா?

    என்ன அத்தை நீங்க. அவர் என் மைத்துனர்.

    கல்யாணம் ஆகாதவன்து தெரிஞ்சுகிட்டா நல்லது. அவனை நீ சுத்திகிட்டு இருக்காதே. அவன் கல்யாணம் ஆக வேண்டியவன். வீட்டிலேயே முணுமுணுப்பா பேசறதும், கண்ணைக் காட்டிச் சிரிக்கறதும் எனக்குத் தெரியாதுன்னு நினைக்காதே. நீ என் சின்ன மவன் பெண்டாட்டி இல்ல. ஞாபகம் வச்சுக்க

    அத்தை என்று கத்தினாள் மஞ்சு.

    கத்தாதேடி என் அருமை மருமவளே... நான் இல்லேனு தைரியமா வீட்டுக்குள்ளாறவே எவனையோ கூப்பிட்டு வச்சு விருந்து வச்சவள் ஆச்சே நீ எங்கேயோ எப்படியோ நடந்துக்க... நான் கண்ணால பார்க்கல்ல. என் அடி மடியிலேயே கை வைக்காதேடிம்மா... உனக்குப் புண்ணியமாப் போகட்டும்.

    மாமியார் பேச்சிலேயே கொடுத்த அடி தாளாத மஞ்சு ஓடிப் போய் தன்னறைக்குள் புகுந்து கொண்டாள். சாப்பிடக் கூட கீழே இறங்கிப் போகவில்லை. இரவு கணவன் விசு வந்தான்.

    ஏய், சாப்பிடக் கூட வெத்திலை பாக்கு வச்சு அழைக்கணுமோ? கீழே அம்மா காத்துகிட்டு இருக்காங்க. நீ என்னடான்னா மகாராணி கணக்கா மேலே வந்து படுத்துகிட்டியோ... கீழே போடி என்று இரைந்தான்.

    அழுது இடுங்கிய கண்கள் சிவக்கக் கணவனைப் பார்த்தாள் மஞ்சு. ஏம்மா அழறேனு ஒரு வார்த்தை ஆறுதலாக் கேட்க தோணலையா இந்த அன்பான கணவருக்கு! என்ற ஏக்கம் நெஞ்சை அடைத்தது.

    கல்யாணம் நிச்சயம் ஆனதும் இவள் கண்ட கனவுகள் எத்தனை? கற்பனை உரையாடல்கள் எத்தனை... எத்தனை அவள் தன் அத்தை மகள் மாலினியின் கல்யாணத்தை அருகிலிருந்து பார்த்திருந்தாள். மணமேடையிலேயே மாலினியின் கணவன் காட்டிய பரிவு.

    கண்ணுல மை வழியுது... துடைச்சுக்க என்று கை குட்டையை நீட்டிய கரிசனம்.

    களைச்சுப் போயிட்டியே... பால் கொண்டு வரச் சொல்லட்டுமா? என்று கேட்ட விதரணை...

    நண்பன் ஒருவன் தன் வீட்டிற்கு அழைக்க, இரப்பா, இனிமே நான் மட்டும் பதில் சொல்ல முடியுமா? பக்கத்துல இருக்கா இல்ல? அவளைக் கேட்கணுமே... இல்லேனா ராத்திரி ஐயா அம்பேல்தான் என்று ஜோக் அடித்து சிரிக்க வைத்த சாமர்த்தியம்.

    இது பப்ளிக்கா நடந்தது என்றால் தன் அந்தரங்கம் அனைத்தையும் மாலினி இவளிடம் கொட்டிய பொழுது மஞ்சுவும் மாலினியின் கணவனைப் போன்ற ஒருத்தனை கற்பனை செய்தது ஆச்சரியமே இல்லை. இதில் சின்னதாக ஒரு பங்கு கூட இல்லாமற் போய் இவள் ஏமாந்ததுதான் அதிகம்.

    தலைவலினு தைலம் தடவ வேண்டாம். நீ சாப்பிட்டியா மஞ்சுனு ஒரு சின்ன கரிசனம் கூடவா இல்லை?

    ஏய் எழுந்து சாப்பிட போ... விரட்டினான் விசு.

    எனக்குச் சாப்பாடு வேணாம்.

    ஏன் வேணாம்?

    உங்கம்மா என்னைக் கண்டபடி ஏசராங்க. நான் ஏதோ உங்க தம்பிக்கு வலை வீசற மாதிரி பேசறாங்க. ஏங்க உங்க தம்பி எனக்கும் கூடப் பிறந்த மாதிரிதாங்க.

    நான் நம்பற மாதிரி பேசறே... ஆனா நான் ஒண்ணை புரிஞ்சுகிட்டேன் உனக்கு ஆம்பிள்ளைனா பேசறதுல தனி ருசி தான்.

    என்னங்க இது! நீங்களே என்ன இப்படிச் சொல்றீங்க?

    நடந்ததைப் சொல்றேன், மனைவியைப் பற்றிச் சொல்ல கணவனுக்கு உரிமை உண்டு இல்லையா?

    அதைத் தப்பா பிரயோகம் பண்ணாதீங்க.

    போடி... நீலி என்ற விசு கட்டிலில் படுத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான்.

    விளக்கை அணைத்து விட்டுப் படுத்த மஞ்சுவுக்கு உறக்கம் வர்ரவில்லை.

    நடுப்பகலில் பிரசாத் தன்னைத் தேடி வருவான் என்று மஞ்சு எதிர்பார்க்கவில்லை. கடந்த சில வாரங்களில் பிரசாத் ஒரு தனிப்பட்ட மனிதன் என்பதைப் புரிந்து கொண்டிருந்தாள். விசுவைப் போல் அம்மா கோண்டு இல்லை. வளர்ந்து விட்ட வாலிபத்தின் அனுபவச் சுவைகள் எனக்கு மட்டும் உரியவை என்ற தனித் தன்மை பேச்சிலும் சொல்லிலும் சுயமாக எடுக்கும் முடிவின் பிடிவாதம் பிரசாத் என்ற தனிமனிதனின் துல்லியமான அளவுகோல் காட்டும் அறிவுத் தனம் அவளை வியக்க வைத்திருக்கிறது.

    மொத்தத்தில் பிரசாத் என்ற மனிதனின் வரவு அவளுக்கு மகிழ்வைத் தந்தது.

    இவன் தனக்கு ஒரு நல்ல நண்பன் என்ற உணர்வைத் தந்தது.

    இவனுடைய தோழமை எனக்கு ஒரு சுயபலத்தை தரும் என்று உணர வைத்தது.

    அண்ணி என்று வந்து நின்றவனைக் கண்டு திடுக்கிட்டாலும் மகிழ்ச்சி கலந்த ஊறலுடன் வரவேற்றாள்.

    கம்பீரமாகப் பார்த்து அலுவலகத்தை நோட்டமிட்டவன் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். வெளியே வரீங்களா? என்று அழைத்தான்.

    அரை நாள் லீவு போட்டவள் சிவாவுக்கு பிரசாத்தை அறிமுகம் செய்து வைத்தாள். பிறகு பிரசாத்துடன் கிளம்பி வெளியே வந்தாள்.

    கைப் பைல டிபன் இருக்கு பிரசாத்.

    தூக்கிக் கொட்டுங்க என் கூட சாப்பிட வரீங்க.

    சாப்பாட்டை வேலக்காரிக்குக் கொடுத்திடறேன் பிரசாத்.

    ஏன் பிச்சைக்காரன் நம்ம வீட்டுச் சாப்பாட்டை சாப்பிட மாட்டானா? என்று கேட்டவன் உரிமையுடன் கைப் பையைப் பிடுங்கி சாப்பாட்டை எடுத்து மரத்தடிப் பிச்சைக்காரனுக்கு போட்டான்.

    பைவ் ஸ்டார் ஹோட்டலில் எதிரெதிரே அம்ர்ந்து சாப்பிட்ட பொழுது இது கனவுதான் என்று தோன்றிற்று. விசு ஒரு நாளாவது தன்னிடம் இப்படி பரிவுடன் நடந்து கொண்டு இருக்கிறானா? சீ... இப்படி எல்லாம் நினைக்கக் கூடாது என்று தன்னை உலுக்கிக் கொண்டாள் மஞ்சு.

    அண்ணி ஒரு முக்கிய விஷயம்.

    என்ன பிரசாத்

    நாளைக்கு எனக்குக் கல்யாணம்

    வாட்... ஆர் யூ ஜோக்கிங் ஐஸ்க்ரீம் ஸ்பூன் கீழே விழுந்தது.

    நிஜம்மாத்தான் சாதி வித்யாசத்தினாலே அம்மா பெர்மிஷன் தர மாட்டாங்க அதனால நான் சொல்லாம கல்யாணம் பண்ணிகிட்டு வரப் போறேன்.

    சிறிது சமாளித்துக் கொண்ட மஞ்சு நான் உங்க குடும்பத்தைச் சேர்ந்தவள் இல்லையா? எங்கிட்ட மட்டும் சொல்றீங்க? என்று குறும்புடன் பார்த்தாள்.

    நீங்க என் அண்ணிதான். அடுத்த படி என் தாயார் ஸ்தானம் அதனால் தானே முதல்ல உங்ககிட்ட சொல்றேன். எல்லாவற்றையும் விட அண்ணி, உங்களை என் ஃப்ரண்ட்டா நினைக்கிறேன்.

    சிலிர்த்துப் போனாள் மஞ்சு. ஒரே ஒரு மனிதனுக்கோ மனுஷிக்கோ எத்தனை உறவுகள். தாய், மனைவி, சகோதரி, தோழி என்று எத்தனை விதமான சுமைகள்...

    இவனுடன் உயர்வான உறவைத் தான் மாமியார்காரி கொச்சைபடுத்தி விட்டாள் அதை நினைத்து நினைத்து அழுதவள் எப்பொழுது தூங்கினாளோ தெரியவில்லை.

    மறுநாள் மஞ்சு அலுவலகம் போகவில்லை. இரவு பூராவும் தூங்காததினாலே ஏற்பட்ட களைப்பு என்பது ஒரு காரணம் எந்த நேரத்திலும் பிரசாத் புது மனைவியுடன் வந்து நிற்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இன்னொரு காரணம் அதனால் நிதானமாகக் காப்பியைக் குடித்தவளைக் குத்திக் காட்டினாள் மாமியார்.

    நேத்து ராத்திரி சாப்பிடல்லையே... காலை இங்கே காப்பி குடிக்கக் கூடாது ரோசம் இருந்தவளா இருந்தா என்றாள்.

    மேலே பேசிவிட்டு இங்கு இருக்க முடியாது என்பதை மஞ்சு அறியாதவளா என்ன. அதனால் வாயை மூடிக் கொண்டு வேலையைக் கவனித்தாள்.

    ஏன் இன்னிக்கு வேலைக்குப் போகல்லையா? கிளம்பாம டல் அடிக்கறே? என்று கணவன் விசு புருவத்தை உயர்த்திய பொழுதும் அவள் பதில் பேசவில்லை.

    ஆனால் பத்து மணிக்கு மேல் தன் புது மனைவியுடன் பிரசாத் படி ஏறிய பொழுது அங்கே இடி இடித்தது. மின்னல் வெட்டியது. புயல் வீசி பூகம்பமாக மாறி நடுங்க வைத்தது.

    டேய்... ஏறாதே படி என்ன காரியம் பண்ணிட்டே... என்று சிங்காரத்தம்மா ஆர்ப்பாட்டம் பண்ணினாள்.

    அசையாமல் கம்பீரமாக நின்ற பிரசாத்தைக் கண்ணாலேயே பாராட்டினாள் மஞ்சு.

    அம்மா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாதே. உங்கிட்ட சொன்னா இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு எனக்குத் தெரியும். என் கல்யாணத்தைத் தீர்மானிக்க எனக்கு உரிமை உண்டு. என் மனைவி மீனா நம்ம சாதி இல்லையே தவிர பெரிய பணக்காரி. இது எங்கப்பா கட்டின வீடு. எனக்கும் உரிமை உண்டு.

    சிங்காரத்தம்மா வெறித்துப் பார்த்தாள். சொன்ன பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டு முந்தானையைப் பிடித்துக் கொண்டு அலையும் விசு இல்லை இவன் என்று புரிந்து கொண்ட அதிர்ச்சி வீட்டை மகன் தனக்குப் பங்கு போட்டுக் கொள்கிறானே என்ற வேதனை.

    என்னடா சொன்னே? என்று பாய்ந்து வந்த மாமியாரைத் தடுத்தாள் புது மருமகள் மீனா.

    அத்தை எங்களுக்குக் காப்பி கொடுங்க முதல்ல என்றாள்

    மருமகளின் அதிகாரம் அவள் வெகுண்டு எழ வைத்தது. காப்பி... நான் உனக்கு போட்டுக் கைல கொணாந்து தரணும் இல்ல? இப்பவே பக்கத்து வீட்டுக்குப் போய் போன் பண்ணி என் பெரிய மகனை வரச் சொல்லி... என்று புடவைத் தலைப்பை வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பிய மாமியாரைத் தடுத்தாள் மஞ்சு.

    அத்தை இப்படி வாங்க பிரசாத் யாரு? உங்க சின்னப் பிள்ளை, அவரு கல்யாணம் செய்துகிட்டு வந்திருக்கார். நீர் அடிச்சு நீர் விலகுமா? இதைப் போய் அக்கம் பக்கம் எல்லாம் டமாரம் அடிச்சுகிட்டு... இப்ப என்ன செய்யணும் உங்க மகனே உடனே வரச் சொல்கணும். அவ்வளவுதானே? இதோ நான் போய் போன் பண்ணி வரச் சொல்றேன் என்று போன வேகத்தில் வந்து விசு உடனே வந்து விடுவான் என்ற சேதியையும் சொன்னாள்.

    அடுத்த ஒரு மணி நேரத்தில் விசு வந்து விட்டான். அவனால் என்ன செய்ய முடியும்?

    பிரசாத், என்னடா இப்படி செய்துட்டே? என்று புலம்பத்தான் முடிந்தது.

    என்னடா செய்துட்டேன்? என் கல்யாணத்தை நான் செய்துகிட்டேன் என்று பிரசாத் பளிச்சென்று பதில் சொன்னான்

    மதியம் என்னவோ பண்ணுவது போல் இருந்தது. காலையிலிருந்தே தலை சுற்றுவதைப் போல் இருந்ததை உணர்ந்தாள். அலுவலகம் வந்திருக்கக் கூடாதோ? நேரம் ஆக ஆக தாங்க முடியவில்லை.

    சிவா, ப்ளீஸ், ஒரு டாக்ஸி வச்சு என்னை வீட்ல கொண்டு போய் விட்டுடுங்களேன். தலையை நிமிர்த்தவே முடியல்லே என்று புலம்பினாள்.

    அலுவலகம் பரபரத்தது. ஆமாம் சிவா, நீங்க கொண்டு போய் மேடத்தை வீட்ல விட்டுட்டு வந்துடுங்க என்று கூறினார்கள்.

    டாக்ஸியில் அவளை ஏற்றிக் கொண்டு சிவா புறப்பட்டான். போகும் வழியில் சிவா அவளைக் கேட்டான் ஏன் மஞ்சு, இது எத்தனை மாசம்.

    ஐம்பது நாளைக்கு மேலே ஆகுது

    அதான்... மசக்கைதான் உனக்கு ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாப் போகும்.

    லீவே இல்லை சிவா. தீபாவளிக்கு வேற ஊருக்குப் போகணும் என்றாள்.

    அந்த நேரத்தில் அவள் ஒரு ஆடவனுடன் வந்து இறங்குவாள் என்று கணவனும் மாமியாரும் எதிர்பார்க்கவே இல்லை.

    என்னடி என்ன? என்று மருமகளை உறுத்து விழித்தாள்.

    நிற்கவே முடியாத மஞ்சு டாக்ஸியிலிருந்து இறங்கவே தடுமாறினாள். சிவா தான் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்து வந்தான். சிங்காரத்தம்மாவுக்கு காலையில் மருமகள் கேட்டு விட்டுப் போன கோபம், இப்பொழுது சிவாவுடன் வந்த கோலம் எரியும் தீயில் எண்ணெயை வார்த்த மாதிரி ஆயிற்று.

    சிவா தான் பதில் சொன்னான். ஒண்ணுமில்லேம்மா. மசக்கை... தல சுத்துதுன்னு சொன்னாங்க... ரெண்டு லேடி க்ளார்க் லீவ்... ரெண்டு பேர் மீட்டிங் அட்டெண்ட் பண்ணப் போயிட்டாங்க.

    அதனால நீங்க கொண்டு வந்து வீட்டில் ஆ... வெரிகுட்... போய்ட்டு வாங்க. ரொம்ப நன்றி என்று விசு கரங்களைக் குவித்து விடை கொடுத்து அனுப்பினான்.

    விசு கதவைத் தாளிட்டுக் கொண்டு மனைவியின் பக்கம் திரும்பினான். சோபாவில் சாய்ந்து கொண்டு தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்த மருமகளையே வைத்த கண் வாங்காமால் சிங்காரத்தம்மாள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அம்மா கேட்டீங்களா விஷயத்தை இவ புருஷனான எனக்கு இவளுக்கு மசக்கைனு தெரியல்லே துணைக்கு வந்தவனுக்குத் தெரிஞ்சிருக்கும்மா. உங்களுக்காவது தெரியுமாம்மா? என்று கேட்டான் விசு தன் தாயாரிடம்.

    எனக்கா! எனக்கு ஒண்ணுமே தெரியாதுப்பா. இவ குழந்தைக்கே அவன் தான் அப்பனோ என்னமோ? நான் அடிக்கடி சாந்தியைப் பார்க்கப் போயிடறேன். நீ ஆபீஸ் ஆபீஸ்னு ஓடறே... நாம இல்லாத நேரத்தில் என்ன நடக்குதோ என்னமோ... நான் ஏன் சொல்லணும் என்று கன்னத்தில் போட்டுக் கொண்டாள் மாமியார்க்காரி.

    சுரீரென்று யாரோ கன்னத்தில் குத்தினாற்போல துடித்துப் போனாள் மஞ்சு.

    மாடிப் படிச் சுவரைப் பிடித்த படியே கண்ணீர் வழியப் பார்த்தாள் மஞ்சு. என்ன சொல்றீங்க?

    நீ போக வேண்டிய வழி இதுதான். இனிமேல் நமக்குள் எதுவும் கிடையாது. கெட் அவுட் என்று வாசற்புறத்தைச் சுட்டிக் காட்டினான் விசு.

    ஐயோ... நான் என்னங்க தப்பு பண்ணினேன்? என்று தலை தலையாக அடித்துக் கொண்டவளை லட்சியம் செய்யாத விசு அவள் சாமான்களை எடுத்துப் பொறுக்கி நடுக் கூடத்தில் வீசினான்.

    பிறந்த வீட்டிற்கு வந்து ஒரு மாதம் போல ஆகி விட்டது. மஞ்சு பிறந்த வீட்டிற்குத் துரத்தப்பட்டாள் என்று புரிந்து கொண்டதும் அண்ணா குதித்தான்.

    மஞ்சு, நீ கவலைப்படாதே. நான் உன் புருஷனை கோர்ட்டுக்கு இழுத்துச் சந்தி சிரிக்க வச்சுடறேன் பாரு என்று கூடத்தில் தாவித் தாவி ஓடினான்.

    அப்பா தான் அவனை அடக்கினார். பேசாம இருடா. உனக்கு என்ன தெரியும். தீபாவளிக்கு மாப்பிள்ளையை வரச் சொல்லி எழுதறேன். வந்தா எல்லாம் சரியாப் போயிடும் என்றார்.

    அம்மா என்ன தடுத்தும் நிற்காமல் கிளம்பி விட்டாள் மஞ்சு. பூரணியும், சிவாவும் அவள் கடிதம் கண்டு ஓர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டலில் தங்க இடம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கிளம்பும் பொழுது அம்மாதான் கண்ணீர் விட்டாள்.

    அழாதேம்மா. தீக் குளிச்சு ஏற்றுக் கொண்ட சீதையை யாரோ சொன்னார்கள் என்று ராமன் சந்தேகம் தீராமலேயே காட்டுக்கு அனுப்பவில்லையா! அப்பக் கூட சீதை மிதிலைக்கு வரவில்லையே... நாங்க எல்லாம் தீக்குளிக்காத சீதைகள்... எங்கள் கணவர்கள் காட்டுக்கு அனுப்பாமல் பிறந்த வீட்டுக்கு அனுப்பும் ராமன்கள். என்று கூறிய பொழுது அம்மா அடக்கினாள் மஞ்சுவை.

    உன் மாமியார் இந்த மட்டும் உன்னை இங்கே அனுப்பி வச்சாளேனு மகிழ்ச்சி அடையறேன் மஞ்சு. ஒவ்வொரு இடங்களில் கெரசினை ஊத்தி எரிச்சுடறாங்க என்று கண்ணீர் விட்டாள் அம்மா.

    மஞ்சு இதற்கு மேல் பேசக் கூடாது என்று வாயை மூடிக் கொண்டாள்.

    வேலைக்குச் செல்லும் பெண்களின் விடுதியில் மஞ்சு சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டது. வயிற்றுச் சுமைக்கும் ஆறு மாதம். அம்மாவும் அப்பாவும் வந்து தங்களுடன் இருக்கும்படி கெஞ்சி விட்டுப் போனார்கள். மறுத்து விட்டாள் மஞ்சு.

    என் குழந்தைக்கு ஒரு நல்ல அப்பா கிடைக்கவில்லைனு வருத்தப்படறேன் பூரணி என்று பூரணியிடம் அழுதாள் மஞ்சு.

    காலம் நல்ல முடிவைத் தரும் மஞ்சு அழாதே என்று பூரணி அறுதல் சொன்னாள்.

    அந்த நல்ல காலம் இத்தனை விரைவில் வரும் என்று மஞ்சு கனவு கூடக் காணவில்லை லேடி டாக்டர் அவளை நிறைய பழங்கள் சாப்பிட வேண்டும் என்று கட்டளை இட்டிருந்தாள். அதனால் பழக்கடைக்கு முன் நின்று பழங்களை பெறுக்கி எடுத்துக் கொண்டிருந்தாள்

    ஏம்மா பெரிய சாத்துக்குடியா ரெண்டு டஜன் கொடு.

    பழக்கமான குரல்... திரும்பினாள் மஞ்சு.

    அத்தை

    சிங்காரத்தம்மாள் அதிர்ந்து மஞ்வைப் பார்த்தாள். ம...ஞ்...சு... அடிவயிற்றிலிருந்து குரல் பீரிட புடவைத் தலைப்பால் முகத்தை துடைத்துக் கொண்டாள்.

    என்ன அத்தை. இப்படிக் களைச்சுப் போய்... இளைச்சு கூட போன மாதிரி எனக்குத் தோணுது என்று மெல்லிய பதற்றத்துடன் மஞ்சு விசாரித்தாள்.

    மஞ்சு எதையும் கேட்காதேம்மா உன் புருஷனுக்குப் போனவாரம் ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு.

    இப்ப எப்படி இருக்கு? என்று பதறினாள் மஞ்சு.

    இப்ப பரவாயில்லை. இன்னும் எழுந்து நடமாட முடியவில்லை. கடவுள் தான் கண் திறந்தார். மஞ்சு ரெண்டு நாள் கண்ணே திறக்காம நான் ஒத்தையில நின்னு தவிச்ச தவிப்பு அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

    மாமியார் வாங்க வேண்டிய பழத்தையும் சேர்த்து வாங்கிக் கொண்ட மஞ்சு பணத்தைக் கொடுத்தாள்.

    ஏன் அத்தை, பிரசாத் எங்கே போனார்... மீனா எங்கே போச்சு என்று மஞ்சு மாமியாருடன் நடந்தாள்.

    மஞ்சு, உன்னை ஓட ஓட விரட்டின பாவம்... என்னைச் சும்மா விடல்லே. என்ன உங்க மக மாதிரி நினையுங்க. உங்க மகளைச் சொல்லுவீங்களானு கேட்டப்ப நான் என்ன சொன்னேன் என் மக வேலைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. நான் குத்துக்கல் மாதிரி இருக்கேன்னு சொல்லி என் பணத்தை எல்லாம் கொண்டு போய் செய்தேன்

    பிரிச்சு பேசாதீங்க அத்தை என் பணம் உங்க பணம் இல்லையா?

    அப்படி நான் நினைச்சா உன்னை விரட்டி இருப்பேனா? நீ போனபுறம் மீனா என்னை ஆட்டி வச்சுட்டா. பிரசாத் ஏற்கனவே சொல்றவங்க பேச்சைக் கேட்டுட்டு ஆடறவன். என்னால சாந்திக்கு எதுவும் செய்ய முடியல்லே. அவ முகத்தைத் தூக்கிகிட்டா. உன் புருஷனும் மீனாவும் பிரசாத்தும் அந்யோன்யமா இருக்கறப் பார்த்துட்டு ஏங்கினான். எங்கிட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுந்தான். அதனால எனக்கு போக்கிடம் இல்லேடி மஞ்சு என்று மனம் விட்டு அழுத மாமியாரைத் தேற்றினாள் மஞ்சு. தன் அருமையை இவர்கள் உணர்ந்து விட்டார்களா?

    அத்தை, அத்தை அழுவாதீங்க.

    அண்ணன் அடிபட்டுக் கெடக்கான். ஒப்புக்கு வந்து பார்த்துட்டு பிரசாத்தும், மீனாவும் டூர் போயிட்டாங்க மஞ்சு. நீ கல்யாணம் ஆகி வந்த புதுசுலே எனக்கு ஜுரம் வந்துச்சே... என்னை எப்படி பார்த்துக்கிட்டே விசும்பினாள் சிங்காரத்தம்மா.

    இப்பவும் நான் வந்துட்டேன். அழுவாதீங்க, வாங்க போகலாம் என்று மாமியாருடன் மஞ்சு நடந்தாள். மனத்தில் நிம்மதி பிறந்தது.

    - இங்கே சீதைகள் தீக்குளிக்க வேண்டியதில்லை மாறாக ஓரகத்தி ஒரு கெட்டிக்காரியாக வந்தால் போதும் என்று மஞ்சு நினைத்திருப்பாளோ?

    தீபாவளி வெகு அமர்க்களமாக நடந்தது. மஞ்சுவுக்கு தலை தீபாவளியை விட அதிக மகிழ்ச்சி அளித்தது!

    2. வேத விதைகள்

    அண்ணா சிரித்து விடுகிறார்.

    மாலு உங்க இன்ஸ்ட்யூட்லதான் சேர்ந்திருக்காளோ?

    ஆமாம்

    அண்ணாவின் இதழ்களில் ஒரு பொருள் பொதிந்த புன்னகை ஓடியதை அப்பொழுது திரிபுரமும், சூரிய நாராயண ஐய்யரும் புரிந்து கொள்ளவில்லை. மழை நிற்காத முன்னிருட்டு வேளையில் குடையைப் பிடித்துக் கொண்டு மாலுவைக் கொண்டு வந்துவிட வந்த ராஜாராமனைக் காண்கிறாள் திரிபுரம். திருமாலும் மகாலட்சுமியுமோ? என்ற பிரமை ஏற்படுகிறது.

    திருமணம் ஒன்றை முடித்து

    Enjoying the preview?
    Page 1 of 1