Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ashtalakshmi
Ashtalakshmi
Ashtalakshmi
Ebook92 pages35 minutes

Ashtalakshmi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆதிலட்சுமி, கஜலட்சுமி, தனலட்சுமி, தான்யலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தைர்யலட்சுமி என்று அஷ்ட லட்சுமிகளை அழைக்கிறோம்.

லட்சுமி நிலையாக எங்கும் தங்கி இருக்க மாட்டாள். அவள் நிரந்தரமாகத் தங்கி இருக்க என்ன செய்ய வேண்டும் என்று அவளிடமே கேட்டான் இந்திரன். “சத்தியம், தானம், விரதம், தவம், தருமம், பராக்ரமம் ஆகியவற்றிலே நான் குடி கொண்டிருக்கிறேன். என்னை நான்காகப் பிரித்து வழிபடு. அப்பொழுது நான் உன்னை விட்டு நீங்காமல் இருப்பேன்” என்றாள்.

இதைக் கேட்ட இந்திரன், அனைத்தையும் தாங்கும் பூமியிலும், உயிர் காக்கும் நீரிலும், வேள்விக்குரிய அக்னியிலும், உண்மையே பேசும் மனிதர்களிடமும் லட்சுமி தேவியை நான்கு பாகமாக்கி நிலைபெறச் செய்தான்.

ஆனால், லட்சுமியை நிரந்தரமாக பாகம் பிரித்து வைத்த இந்திரனைவிட்டு, அவள் நீங்க வேண்டிய சமயம் வந்தது. அதுவே ஆதிலட்சுமியின் கதை.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115704247
Ashtalakshmi

Read more from Lakshmi Rajarathnam

Related to Ashtalakshmi

Related ebooks

Reviews for Ashtalakshmi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ashtalakshmi - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    அஷ்டலட்சுமி

    Ashtalakshmi

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஒரு முன்னுரை

    1. ஆதிலட்சுமி

    2. கஜலட்சுமி

    3. தனலட்சுமி

    4. தான்யலட்சுமி

    5. சந்தான லட்சுமி

    6. விஜயலட்சுமி

    7. வித்யாலட்சுமி

    8. தைர்யலட்சுமி

    ஒரு முன்னுரை

    செல்வம் எட்டும் எய்தி - நின்னால் செம்மை ஏறி வாழ்வேன் என்று சொன்ன மகாகவி பாரதியார், என்னை என்றும் நீ வாழ வைப்பாய் என்றும் வேண்டிக் கொண்டார்.

    அந்த எட்டு லட்சுமிகள்தான் அஷ்டலட்சுமிகள். அவர்கள் தரும் ஐஸ்வர்யங்களே அஷ்ட ஐஸ்வர்யங்கள். அவை, அரச பதவி, நன்மக்கள், நல்லுறவு, பொன், மணி, நெல், வாகனம், பணியாட்கள் என்பனவாம்.

    எட்டு என்ற எண்ணுக்கு சிறந்த மதிப்பு உண்டு. திசைகள் எட்டு; மங்கலங்கள் எட்டு; விஷ்ணுவின் மந்திரம் எட்டு; சிவனுக்கு, எண்குணத்தான் என்று பெயருண்டு; போகங்கள் எட்டு. அதைப்போல் லட்சுமிகளிலும் அஷ்ட லட்சுமிகள் உண்டு.

    ஆதிலட்சுமி, கஜலட்சுமி, தனலட்சுமி, தான்யலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தைர்யலட்சுமி என்று அஷ்ட லட்சுமிகளை அழைக்கிறோம்.

    வடமொழியில் ஸ்ரீ என்பதை தமிழில் திரு என்கிறோம். திரு என்றால் சோபை, தர்மம், சம்பத், ஒளி, கீர்த்தி, சித்தி என்று பொருள்படும். இந்தத் திரு என்ற சொல் திருமகளையே சாரும். அவளையே சப்த சதியில் ஆதி தேவியாக அழைக்கிறார்கள். திருவான லட்சுமியே திருமகளாக விளங்குகிறாள்.

    இந்தத் திருமகள் அருள் இருந்தால்தான் பதினாறு பேறுகளும் கிடைக்கும். இதை அபிராமி பட்டர் சொல்கிறார்.

    அகிலமதில் நோயின்மை, கல்வி, தனம், தான்யம், அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலிமை, துணிவு, வாழ்நாள், வெற்றி, ஆகு நல்லூழ், நுகழ்ச்சி - தொகை தரும் பதினாறு பேறுகள் ஆகும்.

    மார்க்கண்டேய மகரிஷி, தனது சப்த சதியில் மகிஷனைக் கொன்றவள் இவளே என்றும், இவளைப் பதினெட்டுக் கைகள் உள்ளவளாகவும் விவரித்திருக்கிறார்.

    திருமகள் இருப்பது தாமரையானாலும், அவள் எப்பொழுதும் விரும்பி இருக்குமிடம் திருமாலின் மார்புதான். புஷ்பத்தைக் காட்டிலும் மென்மையாகவும், சௌலப்யமும், செளகர்யமும் உள்ள இடம் எம்பெருமானின் மார்புதான் எனக் கருதி, அதைவிட்டு அகல மனமில்லாதவளாக இருக்கிறாளாம்.

    இதைத்தான் நம்மாழ்வார், அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்கிறார்.

    பரந்தாமனின் மார்பைவிட்டு அகல விரும்பாத காரணத்தாலேயே அவளுக்கு 'சஞ்சலா', 'சபலா' என்ற பெயர் ஏற்பட்டதாக நாராயண பட்டத்ரி சொல்லுகிறார்.

    நான் எப்படிக் காரணமாவேன் என்று குருவாயூரப்பன், பட்டத்திரியிடம் கேட்கிறார்.

    குருவாயூரப்பா, உன் புன்சிரிப்புதான் கேள்விக்கு பதில். உன்னுடைய புன் சிரிப்பில் மூழ்கி சாதாரண மனிதனான நானே திணறும் பொழுது மகா பதிவிரதையான லட்சுமி தேவி எப்படி உன்னை விட்டு அகல முற்படுவாள்! அதனால்தான், வேண்டுவோர்க்கு தன் கடைக்கண் பார்வையை ஓரளவு செலுத்திவிட்டு, மீள உன் பேரிலேயே அவளின் பார்வை லயித்துவிடுகிறது. அதற்குள்ளாக பிச்சை எடுப்பவன் தனவானாகவும், செல்வந்தன் தரித்திரனாகிவிடுவதும், சாம்ராஜ்யம் எழுவதும், விழுவதும் மிக சுலபமாக நடந்துவிடுகின்றன!

    அந்த லட்சுமியை எப்பொழுதும் நிரந்தரமாக வைத்துக் கொள்ள லட்சுமி நாராயணனாக வணங்க வேண்டும் என்கிறார் பட்டத்திரி. பட்டத்திரி, நாராயணீயத்தில் இரண்டாவது தசகம் 3,4,5 சுலோகங்களில் சொல்வது உண்மை என்பதை இராமாயணத் தில் பார்க்கிறோமே! நாராயணனை (இராமனை) விரும்பிய சூர்ப்பணகை என்னவானாள்? லட்சுமியை (சீதையை) விரும்பிய இராவணனின் கதி என்ன? சீதாராமனாக வணங்கிய அனுமனும், விபீஷ்ண ஆழ்வாரும் சிரஞ்சீவிப் பதம் அடையவில்லையா!

    திரு இருப்பதால் தானே மாலே திருமாலாகிறார்? அதனால்தானே பேயாழ்வார் திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் என்கிறார்.

    திருமங்கையாழ்வார், திருவுக்கும் திருவாகிய செல்வா என்கிறார்.

    பெரியாழ்வாரோ, வடிவாய் நின் வள மார்பினில் வாழ்கின்ற மங்கைக்கும் பல்லாண்டு என்று, தன் மருமகனாக வரப்போகும் பரந்தாமனுக்கு முன்னாலேயே வாயார பல்லாண்டு பாடி விடுகிறார்.

    எந்த தெய்வத்தையும் குறிப்பாகச் சொல்லாத திருவள்ளுவப் பெருந்தகை கூட 'அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து நல் விருந்து ஓம்புவாள் இல்' என்பவள், இத்தாமரையாளே என்கிறார்.

    இந்துக்கள் மட்டுமன்றி பெளத்தர்களும் சமணர்களும் இவளைப் போற்றுகின்றனர். மணிமேகலை, விரை மலர்த் தாமரை ஒரு தனி இருந்த திருவின் செய்யோள் என்று திரு மகளைக் குறிக்கிறது. பௌத்தர்கள் இவளை தேவ குமாரிகா என்றும் ஸ்ரீ என்றும் போற்றுகிறார்கள். ராஜ்ய ஸ்ரீதாயினி தேவதா என்று புத்தமதம் குறிப்பிடுகிறது.

    சமணர்கள், லட்சுமியை மிகவும் பக்தியுடன் கொண்டாடுகிறார்கள். தீபாவளி சமயத்தில் லட்சுமி பூஜை செய்த பின்பே புதுக் கணக்கு துவங்கப்படுகிறது.

    மகாவீரரின் பிறப்பை அறிவிக்கும் வகையில்,

    Enjoying the preview?
    Page 1 of 1