Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaviya Nayagigal
Kaviya Nayagigal
Kaviya Nayagigal
Ebook184 pages1 hour

Kaviya Nayagigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதிகாசங்கள் ராமாயணம், மகாபாரதம் இரண்டுமே உலக மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய எண்ணற்ற நன்னெறிகளை எடுத்துரைக்கின்றது. அப்பெரும் காவியங்களில் ஒரு சில கதாபாத்திரங்கள் நேர்மறையாக சித்தரிக்கப்பட்டு அறிவுரை கூறும் வண்ணம் அமைந்திருக்கிறது. வேறு சில பாத்திரங்கள் எதிர்மறையாக அமைக்கப்பட்டிருப்பினும் அவர்கள் மூலமும் மக்களுக்கு ஒரு நல்ல நீதி எடுத்துரைக்கப்பட்டிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. கடவுளேயானாலும் , மானிடராய் பிறந்துவிட்டால் நல்லது, தீயது, பாவம், புண்ணியம், இரக்க குணம், அரக்க குணம், பிறப்பு, இறப்பு, என்ற கட்டங்களுக்குள் வந்து நின்று செல்லத்தான் வேண்டும் என்ற நியதியை இவ்விரு காவியங்களும் உலகோர் உணர்ந்திடும் வண்ணம் அழகாக எடுத்துக் காட்டுகிறது. இறைவனின் எந்தப் படைப்பும் காரண காரியமில்லாமல் படைக்கப்படுவதில்லை! அவன் செயலை அவனே அறிவான்!

Languageதமிழ்
Release dateFeb 3, 2024
ISBN6580168010607
Kaviya Nayagigal

Read more from Uma Aparna

Related to Kaviya Nayagigal

Related ebooks

Reviews for Kaviya Nayagigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaviya Nayagigal - Uma Aparna

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காவிய நாயகிகள்

    Kaviya Nayagigal

    Author:

    உமா அபர்ணா

    Uma Aparna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/uma-aparna

    பொருளடக்கம்

    இராமாயணம்

    அணிந்துரை

    வாழ்த்துரை

    1. சத்யலோகம்@கைகேயி.காம்

    2. ஒரு மறைக்கப்பட்ட மாணிக்கம்

    3. மந்தரை

    4. ஊர்மிளா

    5. சூர்ப்பனகை

    6. சபரியின் ராம பக்தி

    7. சுயவாசமிழந்த நறுமலர் (மண்டோதரி)

    8. திரிசடை

    மஹாபாரதம்

    அணிந்துரை

    வாழ்த்துரை

    1. சத்யவதியின் வாழ்க்கை பயணம்

    2. அம்பா

    3. காந்தாரி

    4. குந்தி மகாராணி

    5. மாத்திரி

    6. தேவயானி எனும் நான்...

    7. மஹாபாரதத்தில் பானுமதி

    8. ஹிடும்பி

    ஆசிரியர் குறிப்பு

    வனஜா முத்துக்கிருஷ்ணன்

    உஷா கண்ணன்

    ருக்மணி வெங்கட்ராமன்

    உமா ஸ்வாமிநாதன்

    ராஜேஸ்வரி ஐயர்

    ஜெயந்தி பத்ரி

    பத்மா ராகவன்

    உமா அபர்ணா

    இராமாயணம்

    அணிந்துரை

    ஆங்கிலத்திலே பேக்கிடெர்ம் (pachyderm) என்ற வார்த்தை தடித்த சருமத்தை உடைய விலங்குகளைப் பொதுவாக குறிக்கும். எந்த வார்த்தை சொன்னாலும் கோபப்படாமல், சிரித்துக்கொண்டே அதை ஏற்று, எதிர்மறையாக வார்த்தைகளையோ கையையோ வீசாமல் இருப்பவர்களை நாம் தடித்த தோல் உடையவர்கள் என்கிறோம். ஒரு புத்தக பிரசுர வெளியீட்டு நிறுவனம் இந்த பெயரை ஏன் அனுமதித்தார்கள் என்று யோசித்தபோதுதான் ஒரு காரணம் தோன்றியது. புத்தகங்கள் ஒருவரோ, பலரோ, அவர்கள் எண்ணங்களை எழுத்து வடிவத்தில் பிறருக்கு சேர்ப்பவை. அருமையான, கற்பனை வளம், கருத்தாழம், ஆராய்ச்சி முடிவுகள் ஆகியவற்றை எளிய நடையில் எல்லோருக்கும் ரத்ன சுருக்கமாக சேர்ப்பவை புத்தகங்கள். அப்படிப்பட்ட எண்ணச் சிதறல்களை ஒன்றுசேர்த்து அளிக்கும் புத்தகங்கள் வெகு காலம், பலரிடம் கைமாறி பரவ வேண்டும் என்றால், அவை கனமான அட்டைகளை கொண்டு இருக்கவேண்டும். அவற்றை அச்சிடும் காகிதங்களும் தொட்டால் கிழியும், உடையும் வகையில் இருக்கக்கூடாது. அதில் கையாளும் மையும் கனமானதாக மறையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பெயரை தேர்வு செய்திருக்கலாம்.

    ஒன்று நிச்சயம், ஒரு எட்டு பெண்கள், அசகாய சூரிகள் ஒன்று சேர்ந்து ஆளுக்கொரு கதாப்பாத்திரத்தை இராமாயணத்திலிருந்து எடுத்துக்கொண்டு அந்த இதிகாசப் பாத்திரத்தின் குணாதிசயத்தை கற்பனை வண்ணம் தீட்டி பாத்திரத்தின் தன்மை, குணம், அழகு, சிறிதும் குன்றாமல், மாறாமல் கோணாமல், குறையாமல் வால்மீகி எப்படி சித்தரித்திருக்கிறாரோ, அளித்திருக்கிறாரோ, அந்த ரூபத்திலேயே தனது எழுத்து சாகசத்தை சேர்த்து, தனித்திறமையை வெளிப்படுத்தி வடித்திருக்கிறார்கள். அந்தந்த பாத்திரத்தைப் பற்றி படிக்கும்போது, அவர்களே சொல்வது போலோ, மூன்றாம் நபர் கோணத்தில் பார்ப்பது போலோ, இருவர் சம்பாஷணையின் பேசும் பொருளாக வருவது போலவோ அமைத்திருப்பது வாசகர்களுக்கு ஒரு விருந்து.

    காவிய நாயகிகள் (இராமாயணம்) என்று இந்த எட்டு எழுத்துத் திறனில் வல்லவர்களின் பாத்திரங்களை புத்தகமாக்குபவர்கள் அனைவருமே போற்றத்தக்கவர்கள். வாசகர்களால் மிகவும் ஆர்வத்தோடு இந்த நூல் வரவேற்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

    அற்புத எழுத்தாளர்கள் என்கிறீர்களே, யார் அந்த எட்டு பேர்? அவர்கள் சொல்லும், சித்தரிக்கும் காவிய நாயகியாகிய எட்டு கதாப்பாத்திரங்கள் யார் யார் என்ற ஆர்வம் ஆவல் அதிகரித்து விட்டதல்லவா? ஆகவே அதிகம் நேரம் தாழ்த்தாமல், இதோ அறிமுகப்படுத்துகிறேன்.

    காவிய நாயகிகள் (இராமாயணத்தில்) முதலில் அறிமுகமாகுபவர் தசரதன். இளைய மனைவி கைகேயி. நம்பியார், வீரப்பா போன்ற நிஜ வாழ்வில் நல்ல மனிதர்கள்கூட நடிப்புத்திறனால் கெட்டவனாக, தீங்கு செய்பவனாக சினிமாவில் நம்மை நம்பவைக்கும் அளவுக்கு பாத்திரத்தோடு ஒன்றும் திறமை படைத்தவர்கள். கைகேயி மிகவும் நல்லவள், ராமனை பெற்ற தாயினும் மிக்க ஆசை, பாசம் அன்போடு வளர்த்தவள். அவளுக்கு தசரதன் அளித்த வரத்தைக் கேட்டு, ராமனை 14 வருஷம் காட்டுக்கு அனுப்புகிறாள். சத்யலோகம்@கைகேயி.காம் என்ற வலைதளத்தில் கைகேயி, தான் உண்மையில் நல்லவள் என்பதை தானே விளக்கும் நிலையில் தள்ளப்பட்டதால், நமது எழுத்தாளர் திருமதி. வனஜா முத்துக்கிருஷ்ணனுடன் தொடர்புகொண்டு சத்யலோகத்திலிருந்து மெயில் அனுப்புகிறாள். கைகேயி தசரதனுக்கு கையையே தேரின் அச்சாணியாக்கி சம்பரனுடன் போரில் வெற்றி பெற்றது, தசரதன் மகிழ்ந்து வரம் கொடுத்தது, தசரதன் ரிஷிக்குமாரன் ஸ்ரவணனை சப்தவேதி மந்த்ர அம்பினால் கொன்று ரிஷியின் சாபத்தை பெற்றது. அதனால் ராமன் மரணமடைவான், வெகு தூரம் சென்று பிரிந்திருந்தால் அவன் உயிர் தப்பும் என்று ஜோசியர்கள் சொல்லியதால், பின்விளைவுகளைப்பற்றி கவலை கொள்ளாமல் ராமன் உயிரைக் காப்பாற்ற தனது கணவனையே இழந்து, மகனால் வெறுக்கப்பட்டு, எல்லோரிடமும் திட்டு நிறைய வாங்கிக்கொண்டு, ஒரு பெரிய தியாகம் செய்தவள். வனவாசம் முடிந்து ராமன் மீண்டும் பட்டாபிஷேகம் நடப்பதைப் பார்த்து முதலில் மகிழ்பவளாக, கைகேயி உண்மையிலேயே சிறந்த ‘காவிய நாயகி’யாக காட்டப்படுகிறாள். வனஜா முத்துக்கிருஷ்ணனின் எழுத்தோட்டம் பிரமிக்க வைக்கிறது.

    திருமதி. ராஜேஸ்வரி ஐயர் ஒரு புதுமாதிரியான தசரதன் மனைவி சுமித்ரையை, அதுதான், லட்சுமணனின் அம்மாவை, பூனாவில் ஒரு தமிழ் கலாச்சார மன்றத்தின் நாடக மேடையில் அரங்கேற்றி, நமக்கு காட்சிகளைத் தருகிறார். சுமித்ரா எனும் காவிய நாயகி பேச்சைக் காட்டிலும், செயலில் சாதனை படைத்தவள் என்று தெரிகிறது. தனது ரெண்டாவது மகன் சத்ருக்னன் மனைவி ஸ்ருதகீர்த்தியின் சந்தேகங்களை தீர்த்து, ராமன் வனவாசம் முடிந்து வரும்போது அயோத்தியை அலங்கரிக்கும் பொறுப்பை மனமுவந்து அவளைச் செய்ய வைப்பது நல்ல உத்தி. Sumithra is a good psychologist.

    மந்தரை எனும் கூனியை ஒரு எதிர்மறை பாத்திரமாக negative character, வில்லியாக நமக்கு ராமாயணத்தில் நாம் அறிகிறோம். ஆனால் அவளால்தான் ராம அவதார கார்யம் நடந்து, ராவண வதம் முடிகிறது. அவள் கண்ணுக்கு தெரியாத ஆக்சிஜன் மாதிரி ராமாயணத்துக்கு உயிரூட்டும் பாத்திரம். சரஸ்வதியின் வாக் படுத்வம் மந்தரையின் சொற்களில் வெளிப்பட்டு, அதனால் கைகேயி கயிற்றில் சுற்றப்பட்ட பம்பரம்போல் சுழன்று வேகமாக இராமாயண காட்சிகள் ஓடுகிறது. ராவண வதம் என்ற நன்மை, மந்தரையின் சூழ்ச்சி எனப்படும் தீமையோடு கலந்து நல்ல முடிவைத் தருகிறது. கசப்பு மாத்திரைதான் நோயை விலக்கி தேகத்தை குணப்படுத்துகிறது. மிக அற்புதமாக இந்த காவிய நாயகி ‘மந்தரை’யின் கதையை வடித்த திருமதி. ஜெயந்தி பத்ரி முத்தாய்ப்பு வைத்ததுபோல் என்ன சொல்கிறார்?

    நன்மையும், தீமையும் கலந்திருப்பதே உலக வாழ்க்கை. கீதை சொல்வதுபோல் சுகம், துக்கம், பகல், இரவு, உஷ்ணம், குளிர்ச்சி போல வாழ்க்கைக்கு இன்றியமையாதவை என்ற பெருமையோடு நிறைவு செய்திருப்பது அருமை.

    திருமதி. ருக்மணி வெங்கட்ராமன் சிறந்த சிந்தனையாளர் என்று மூன்று நான்கு வாக்கியங்களில் எனக்கு நிரூபித்து விட்டார்.

    ICU-வில் இருக்கும் கணவனைப் பார்க்க மனைவி சர்வாலங்கார பூஷிதையாக போகிறாளே ஏன்?

    என் கணவருக்கு நான் அலங்காரம் செய்துகொண்டால் ரொம்ப பிடிக்கும். அவருக்கு பிடித்தமான காரியத்தை செய்துகொண்டு அவரை சந்தோஷமடைய செய்தால், அவர் சீக்கிரம் உடல் நலம் அடைவார்.

    இன்னொரு காட்சி:

    எல்லோரும் துக்கத்தில் ஆழ்ந்து தவிக்கும்போது, உனக்கு என்ன ஆடை அலங்காரம், நகை ஆபரணம் எல்லாம்? ராமன் காட்டுக்கு செல்வதில் நாடே துயரமடைந்திருக்கிறது உனக்கு தெரியாதா, நானும் கூடவே செல்கிறேன் - இது லக்ஷ்மணன்.

    ராமரை உங்க அப்பா அம்மா காட்டுக்கு போகச் சொன்னதால் போகிறார். உங்களை யாரும் போகச்சொல்லவில்லையே. நீங்கள் ஏன் போகவேண்டும். நாம் சந்தோஷமாக அயோத்தியில் வாழ்வோமே - ஊர்மிளா.

    பாவி, துரோகி, உன் முகத்தில் விழிக்காமல் 14 வருஷமாவது நான் சந்தோஷமாக இருக்கிறேன். நீ சாப்பிட்டுவிட்டு நன்றாக தூங்கு.

    ஓகே. அப்படியென்றால் உங்கள் தூக்கத்தையும் எனக்கு கொடுங்கள், சேர்த்து தூங்குகிறேன்.

    இதோ என் தூக்கத்தையும் உனக்கு கொடுக்கிறேன்.

    அப்புறம் லக்ஷ்மணன் போனபிறகு அழும் ஊர்மிளா இந்த கதையின் அற்புத காவிய நாயகி.

    அவள் சொல்லும் அபூர்வ ரஹஸ்யம்:

    "நான் இப்படி நடித்ததால் என் ஆசைக் கணவன் லக்ஷ்மணன் என் மேல் கோபம் கொண்டு, 14 வருஷம் என் பிரிவால் வருந்தாமல் தூக்கத்தை எனக்குக் கொடுத்ததால், அண்ணா ராமருக்கும் அக்கா சீதைக்கும் இரவும் பகலும் பணிவிடை செய்து அவர்களைப் பாதுகாத்தான். அவன் பிரிவை நினைத்து அழாமல் எனக்கு அவன் கொடுத்த தூக்கம் உதவியது.

    என் கடமையை செய்த சந்தோஷம், எனக்கு கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை" என்கிறாள் ஊர்மிளா. அவளுக்கு கெட்ட பெயரும் இல்லை, நல்ல பெயரும் காணோம். ராமாயணத்தில் திரை மறைவில் இருக்கும் காவிய நாயகி ஊர்மிளா. சபாஷ், ருக்மணி வெங்கட்ராமன்.

    ராமாயணத்தில் இன்னொரு நெகடிவ் (CHARACTER) குண பாத்திரம் சூர்ப்பனகை. அவள் கெட்டவள், தீய எண்ணம் கொண்டவள் என்று நூற்றுக்கு தொண்ணுத்தொன்பதே முக்கால் ஆசாமிகள் சொன்னாலும், நான் உமா ஸ்வாமிநாதன் பக்கம் சேர்ந்து, "இல்லவே இல்லை அவள் ரொம்ப நல்லவள். கெட்டிக்காரி. ஒரு நிராதரவான பெண் எப்படி சர்வ சக்தி பொருந்திய ராக்ஷஸன் ராவணேஸ்வரனை பழிவாங்க முடியும்? மதியூகத்தாலும், தந்திரத்தாலும் தான் வெற்றிகிட்ட முடியும் என்று சாதித்தவள் சூர்ப்பனகை. அவள் அழகி. தான் விரும்பி மணந்த கல்கேய தானவ குல ராஜா வித்யுத்ஜிவாவுடன் சந்தோஷமாக இருந்தபோது, வித்யுத்ஜிவாவை எதிர்த்து அவனைக் கொன்ற அண்ணா ராவணேஸ்வரன் மேல் அவளுக்கு கோபம் வந்தாலும், அவனை அவளால் என்ன செய்யமுடியும்? எப்படி பழிவாங்குவது? அண்ணன் ராவணன் பெண்ணாசை பிடித்தவன் என்ற சிறு விஷயத்தை மலைபோல் துணையாக்கிக்கொண்டு, ராமன் மனைவி சீதாவின் அழகை எடுத்துச் சொல்லி, அவள் ராவணன் மனைவி ஆவதுதான் பொருத்தம் என்று ராவணனை உசுப்பிவிட்டு, மதிமயங்கச் செய்து, அவன் சீதையை கடத்தி

    Enjoying the preview?
    Page 1 of 1