Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kavin Kalaigal
Kavin Kalaigal
Kavin Kalaigal
Ebook171 pages57 minutes

Kavin Kalaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மூத்த குடிமக்களான, அஷ்டலக்ஷ்மி குழுவை சேர்ந்த பத்மா ராகவன், வனஜா முத்துக்கிருஷ்ணன், ராஜேஸ்வரி ஐயர், உஷா கண்ணன், ருக்மணி வெங்கட்ராமன், ஜெயந்தி பத்ரி, உமா ஸ்வாமிநாதன் இவர்களுடன் பேக்கிடெர்ம் டேல்ஸ் இயக்குனர் உமா அபர்ணா அவர்களும் இணைந்து, பல சிறுகதைகளை எழுதி வருகின்றனர்.

ஒவ்வொருவரும் அவர்களுக்கென்று ஒரு தனி பாணி அமைத்துக்கொண்டு பல வேறு கருத்துக்களையும், அனுபவங்களையும் திறம்பட எழுதுவதில் வல்லவர்கள்.

இதுவரை 6 கதை தொகுப்புகளில் எழுதியவர்களின், ஏழாவது படைப்பு “கவின் கலைகள்”. இயல், இசை, நாடக கலைக்குள் அடங்கிய பல்வேறு கலைகளின் கலைநயமிக்க தொகுப்பு இது.

Languageதமிழ்
Release dateFeb 10, 2024
ISBN6580168010672
Kavin Kalaigal

Read more from Uma Aparna

Related to Kavin Kalaigal

Related ebooks

Reviews for Kavin Kalaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kavin Kalaigal - Uma Aparna

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கவின் கலைகள்

    Kavin Kalaigal

    Author:

    உமா அபர்ணா

    Uma Aparna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/uma-aparna

    பொருளடக்கம்

    முகவுரை

    1. கர்நாடக சங்கீதம் தெய்வீகம்!

    2. வில்லுபாட்டு

    3. நாடகக் கலையின் பாகவத மேளா

    4. கரகாட்டம்

    5. கோலம்

    6. குன்பி - நாட்டுப்புற நடனம்

    7. யக்ஷகானம்

    8. பாட்டும் நடனமும்

    9. பறையாட்டம்

    10. பொம்மலாட்டம்

    11. சிலையும், சிற்பக்கலையும்

    12. ஓவியம்

    13. சாக்கியார் கூத்து

    14. கும்மி

    ஆசிரியர் குறிப்புகள்

    முகவுரை

    மூத்த குடிமக்களான, அஷ்டலக்ஷ்மி குழுவை சேர்ந்த பத்மா ராகவன், வனஜா முத்துக்கிருஷ்ணன், ராஜேஸ்வரி ஐயர், உஷா கண்ணன், ருக்மணி வெங்கட்ராமன், ஜெயந்தி பத்ரி, உமா ஸ்வாமிநாதன் இவர்களுடன் பேக்கிடெர்ம் டேல்ஸ் இயக்குனர் உமா அபர்ணா அவர்களும் இணைந்து, பல சிறுகதைகளை எழுதி வருகின்றனர்.

    ஒவ்வொருவரும் அவர்களுக்கென்று ஒரு தனி பாணி அமைத்துக்கொண்டு பல வேறு கருத்துக்களையும், அனுபவங்களையும் திறம்பட எழுதுவதில் வல்லவர்கள்.

    இதுவரை 6 கதை தொகுப்புகளில் எழுதியவர்களின், ஏழாவது படைப்பு கவின் கலைகள். இயல், இசை, நாடக கலைக்குள் அடங்கிய பல்வேறு கலைகளின் கலைநயமிக்க தொகுப்பு இது.

    1. கர்நாடக சங்கீதம் தெய்வீகம்!

    கதாசிரியரின் தாயார் வஸந்தா ஸ்ரீநிவாஸன்

    சென்னை எக்மோரில் இருந்து அன்று மாலை கிளம்பிய சேது எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டியில் ஜெயராமன், அவர் மனைவி கல்யாணியுடன் மானாமதுரையில் நடக்கவிருக்கும் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை விழாவில் கலந்துகொண்டு பாடுவதற்காகப் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் வீட்டில் சமையலுக்கும், அவருக்கு உதவிடவும் வரும் சங்கரன், தன்னுடைய 10 வயது மகள் மீனாட்சியுடன் அவர்களோடு சென்று கொண்டிருந்தார்.

    ரெயில் ஸ்டேஷனை விட்டுக் கிளம்பி வேகம் எடுக்கத் துவங்கியது. ஜெயராமன் மெதுவாகப் பேச்சைத் துவங்கினார். என்ன சங்கரன், குழந்தை மீனாட்சியை அழைச்சிண்டு வந்திருக்கேளே! அவளுக்கு இசை, திருவிழா இதெல்லாம் பிடிக்குமா?

    இவளுக்குப் பாட்டுப்பாட, பாட்டைக் கேட்க ரொம்ப ஆர்வம் இருக்கு! அவள் தானும் என்னுடன் வரேன்னு விருப்பத்தோடு சொன்னதாலதான் அழைச்சிண்டு வந்தேன்.

    ஜெயராமன், மீனாட்சியைப் பார்க்க... அவள் அவசரமாக, எனக்குப் பாட்டுன்னா மிகவும் பிடிக்கும். எங்க ஸ்கூலில் நிறையமுறை பாடி பரிசெல்லாம் வாங்கியிருக்கேன் என்று படபடவென்று கூறினாள்.

    இது எனக்குத் தெரியாமப் போயிடுத்தே! நீ பாட்டு சொல்லிக்கிறயா? புன்சிரிப்புடன் கேட்டார்.

    இல்ல; ஸ்கூல்ல எங்களுக்குப் பாட்டுச் சொல்லித்தரவென்று ஒரு வகுப்பு உண்டு. ஆனால் அந்த வகுப்பைப் பாதி நேரம் மற்ற பாடங்கள் முடிக்கணும்னு எடுத்துண்டுடுவா. ஸ்கூலில் நடக்கும் பாட்டுப்போட்டி, விழாக்களன்று பாடுவது இவற்றுக்கெல்லாம் நான் போய் முதலில் என் பெயரைக் கொடுத்துட்டுப் பாடப் போயிடுவேன்!

    ஜெயராமன் வீட்டில் சில மாதங்களுக்கு முன்புதான் சங்கரன் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அவருக்கும் கர்நாடக இசையில் மிகவும் விருப்பம் உண்டு என்பதால் அவர்களுக்குள் நல்லதொரு நட்பான பிணைப்பு இருந்தது.

    மால் மருகா ஷண்முகா முருகா... குகா... என்ற வசந்தா ராகப் பாடலைத் தணிந்த குரலில் பாடினார் ஜெயராமன்.

    அவர் பாடுவதையே உற்றுக் கேட்டுக்கொண்டிருந்த மீனாட்சி, ஹா... இது ‘மின்சாரக் கண்ணா’ என்ற சினிமாப் பாட்டு ராகம்தானே? எனக்குத் தெரியுமே! என்று உற்சாகமாகக் கூறினாள்.

    ஏய், அசடு... அப்படியெல்லாம் பெரியவாகிட்ட பேசக்கூடாது; பேசாம இரு! என்றவளை அடக்கினார் சங்கரன்.

    விடுங்கோ! குழந்தை அவளுக்குத் தெரிந்ததைச் சொல்றா. அவள் சொல்வதில் தப்பொன்றும் இல்லையே! நல்ல விஷயங்களை அவளுக்கு நாமதானே சொல்லித் தரணும் என்று கூறிய ஜெயராமன், மீனாட்சி... நான் பாடினது கர்நாடக சங்கீதம்மா! அதிலுள்ள நிறைய ராகங்களில் வசந்தா ராகம் என்றொரு ராகம் இருக்கு. அந்த ராகத்தில் அமைந்ததுதான் நீ சொன்ன சினிமா பாட்டு. உனக்கு இது மாதிரி பாட்டுக்குப் பாட்டு கண்டுபிடிக்கத் தெரியுமா? எங்கே... நான் பாடுகிற பாட்டு ராகத்தில் அமைந்த சினிமா பாட்டைக் கண்டுபிடி பார்க்கலாம் என்றதும், மகிழ்வுடன் தலையாட்டினாள்.

    சபரிமலை சாஸ்தா பெயரில் அமைந்த, அதிகாலை நேரம் பூபாள ராகம் திருநாம சங்கீர்த்தனம் என்ற பாடலை அவர் பாடியவுடனேயே, ஸ்ரீ ரெங்க ரெங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி என்ற அதே ராகத்தில் அமைந்த சினிமா பாடலைப் பாடிக் காட்டினாள் மீனாட்சி.

    அவளுடைய குரல் வளமும், அவளுக்கு இசை மேலிருந்த ஆர்வமும் ஜெயராமனை மிகவும் கவர்ந்தது. அதேசமயம் அவர் பேசுவதைக் கேட்கும் ஆவலிலிருந்த அவளுக்குக் கர்நாடக இசையின் சிறப்பை எடுத்துரைக்க விரும்பினார். மீனாட்சி மட்டுமின்றி அவருடன் அங்கு பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் சிலரும் அவர் பேசுவதைக் கேட்க விழைந்தனர்.

    "கர்நாடக சங்கீதம் மிகவும் தொன்மையானதும், தெய்வீகமானதும் ஆகும்! தியாகராஜ சுவாமிகள், சாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் ஆவார்கள். அவர்களுடைய பாடல்கள் கர்நாடக இசையின் உயிர் என்று கருதப்படுகிறது. ஏழு ஸ்வரங்கள், ராகம், தாளம், ஸ்ருதி அனைத்தும் கலந்ததே சங்கீதம்!

    கர்நாடக இசையின் ஆதாரம் ஏழு ஸ்வரங்களும் அதனதன் இடத்தின் த்வனி விலகாமல் கையாளப்படுவதே ஆகும். கர்நாடக இசையில் 72 மேளகர்த்தா ராகங்கள் இருக்கு. ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு சாயல், அழகு உண்டு. அவற்றிலுள்ள ஸ்வரங்களை அதிகப்படுத்தியோ, குறைத்தோ ஏராளமான ராகங்கள் பெறப்பட்டு கர்நாடக இசை வல்லுநர்களால் பாடப்படுகிறது. ஜனகராகம் தாயென்றும், அதிலிருந்து பிறக்கும் ஜன்யராகம் சேயென்றும் அழைக்கப்படும். உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் 15-வது மேளகர்த்தா ராகம் மாயாமாளவகௌளை ராகத்திலிருந்து பிறந்த ஜன்ய ராகங்களில் ஒன்று சாவேரி ராகமாகும்.

    செவிக்கு இனிமை தருவதாக அமையும் த்வனியே சங்கீதத்தில் நாதம் என்பதாகும். ஒரு பாடலைத் தொடங்கும்போது, அடிப்படையாக எழுப்பும் ஒலியே ஸ்ருதி என்பதாகும். நல்லதொரு இசைக்குப் பிரதானமாக விளங்குவது ஸ்ருதி என்பதால், ஸ்ருதி பிசகிப் பாடும் பாடல் பாடலின் அழகையே கெடுத்துவிடும். தாளம் என்பது பாட்டை ஒரே சீராக வழிநடத்த மிகவும் இன்றியமையாதது. பாடும்போது தாளங்கள் கால அளவுக்கு அடிப்படையாக உள்ளது. சரியான தாளமும், ஸ்ருதி சேர்த்த பாடலும் இசையின் தரத்தை மிகவும் உயர்த்திடும். அதனாலதான் ‘ஸ்ருதி மாதா’, ‘லயம் பிதா’ என்றழைக்கப்படுகிறது!

    கர்நாடக இசையை இசைக்க வாய்ப்பாட்டு ஒரு வழி என்பதுபோல், இசைக்கருவிகள் மூலம் இசைப்பதும் மற்றொரு வழியாகும். நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை, வயலின் என்று எத்தனையோ இசைக்கருவிகள் மூலம் கர்நாடகப் பாடல்கள் நன்றாக இசைக்கப்படுகிறது. அதே சமயம் கடம், மிருதங்கம், கஞ்சிரா, மோர் சிங் போன்ற கருவிகளின் த்வனி கால அளவுடன் கூடிய தாளத்தினை அழகுற எடுத்துரைக்கிறது. இசைக் கச்சேரிகளில் வாய்ப்பாட்டு பாடும்போது, அதனுடன் மிருதங்கம், வயலின், கடம் போன்ற பக்கவாத்தியங்களை முதன்மைப்படுத்தி அதன் த்வனியைக் காலபிரமாணத்துடன் இசைத்து, அவற்றின் தனித்தன்மையை எடுத்துக்காட்டுவதே ‘தனி ஆவர்த்தனம்’ என்று கூறப்படுகிறது.

    கர்நாடக இசைக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். அதனை இசைக்கப் பல கலைஞர்கள் உண்டென்பதைப் போல், அதனை ரசிக்கவும் பல ரசிகர்கள் உண்டு. சென்னையில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் நடத்தப்படும் ‘மார்கழி மகோற்சவ’த்தின்போது, சங்கீத சபாக்களில் கர்நாடக இசைக் கலைஞர்களால் கர்நாடக இசை இசைக்கப்பட்டு ரசிகர்களின் செவிகளையும், மனதையும் நிறைத்துக் கொண்டிருக்கிறது.

    கர்நாடக இசை ராகங்களில் காலை, உச்சிவேளை, மாலை, இரவு என்று ஒரு நாளின் வேளைகளை மனதில்கொண்டு பாடக்கூடிய ராகங்கள் உள்ளது. அதேபோல் மனதில் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் ராகங்கள், மருத்துவம் கூறும் ராகங்கள், தெய்வ வழிபாட்டிற்கு தெய்வங்களுக்காக பிரத்தியேகமாகப் பாடப்படும் ராகங்கள் என்று கர்நாடக இசையினுள் எத்தனை புதையல்கள் இருக்கிறது தெரியுமா? அப்பாடல்களை பாடுவது பாடுபவர்களுக்கும், பாட்டினைக் கேட்பவர்களுக்கும் வரம் என்றுதான் சொல்ல வேண்டும்."

    பேச்சை முடித்துக்கொண்டவர், இரவு 8:00 மணி ஆச்சே! சாப்பிடலாமா? என்றார்.

    நால்வரும் இரவு உணவைச் சாப்பிட்டு முடித்தபின், மீனாட்சி இப்போ படுத்துக்கோம்மா! விடிகாலம்பறவே ரெயில் மானாமதுரைக்குப் போயிடும்! சீக்கிரம் எழுந்திருக்கணும் என்ற ஜெயராமனிடம், ஸார், எனக்கு தூக்கமே வரல! நீங்க கர்நாடக இசை பற்றி சொல்வதைக் கேட்க ரொம்ப ஆசையா இருக்கு. இப்போ நாம் எல்லோரும் போகப்போகும் ஊர் மானாமதுரைக்கும், கர்நாடக இசைக்கும் உள்ள தொடர்பு பற்றி சொல்றீங்களா? என்றவள், ஆசிரியர் சொல்வதைக் கவனத்துடன் கேட்கவிருக்கும் மாணவியாய் அவரைப் பார்த்தாள்.

    ஜெயராமனுக்கும் உறக்கம் வரவில்லை என்பதால் அவளிடம், "இப்போ சதாசிவ

    Enjoying the preview?
    Page 1 of 1