Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Senthamizh Sevvisai Valarththa Semmalgal
Senthamizh Sevvisai Valarththa Semmalgal
Senthamizh Sevvisai Valarththa Semmalgal
Ebook168 pages1 hour

Senthamizh Sevvisai Valarththa Semmalgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

After finishing my B.Sc in Physics (Loyola, Chennai) and B.Tech from M.I.T Chennai and working for a almost 5 years in Chennai with leading Software companies (HCL, IDM), I moved to SFO bay area, California in 86 and have been in IT industry for over 30+ years. Parallely I have been teaching Carnatic Music for over 20 years and performing to a limited extent in the Bay area. Am extremely passionate about Tamil poetry, writing research articles on varied topics. Recently finished a research commentary on Thirukkural with word by word meaning, and analyses of verses fitting the context, often questioning the universality and its standing in current day context. Being deeply religious, recently working translating a celebrated work of "Mooka kai" - "Mooka panchausathi" a five canto with hundred verses in each in to Tamil poetry form of Kattalai Kalithurai.

The work on Thamizisai valartha Semmalgal was written as a series of 12 articles on various vaagyeyakaaras who have contributed towards the classical music development in Tamil country.

Languageதமிழ்
Release dateDec 8, 2017
Senthamizh Sevvisai Valarththa Semmalgal

Related to Senthamizh Sevvisai Valarththa Semmalgal

Related ebooks

Reviews for Senthamizh Sevvisai Valarththa Semmalgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Senthamizh Sevvisai Valarththa Semmalgal - Ashok Subramaniam

    http://www.pustaka.co.in

    செந்தமிழ் செவ்விசை வளர்த்த செம்மல்கள்

    Senthamizh Sevvisai Valarththa Semmalgal

    Author:

    அசோக் சுப்ரமணியனிம்

    Ashok Subramaniam

    For more books
    http://www.pustaka.co.in/home/author/ashok-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அம்புஜம் கிருஷ்ணா

    இராம நாடகக் கவி - சீர்காழி அருணாசலக் கவிராயர்.

    ப்ரம்மஸ்ரீ நீலகண்ட சிவன்

    ஆனைத்தாண்டவபுரம் கோபாலகிருஷ்ண பாரதியார்

    காயகசிகாமணி முனைவர் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்

    செஞ்சொற் கவிகுஞ்சரபாரதி

    கவிகுஞ்சரதாசர் கோடீச்வர ஐயர்

    திராவிட செவ்விசை முன்னோடி - சீர்காழி முத்துத்தாண்டவர்

    செந்தமிழ் இசைப்புலவர், பல்துறை வித்தகர் பெரியசாமி தூரன்

    சிவபுண்ய கானமணி சிவன்

    தில்லை விடங்கன் மாரிமுத்தா பிள்ளை

    ஊத்துக்காடு வேங்கடகவி

    சர்வ சமய சமரச கீர்த்தனையாசிரியர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை

    அம்புஜம் கிருஷ்ணா

    கூடல் நகராம் மதுரை, முத்தமிழில் மூத்து முதிர்ந்த நகர்! எத்தனையோ இசை வித்தகர்களை, குறிப்பாக இந்தியாவின் இசைப் பெருமையாம் எம்.எஸ்.சுப்புலட்சுமியை ஈன்றளித்த பெருமைக்குரிய நகர்! சொக்கநாதர் என்று இறைவனைக் கொண்டாடுவதை விட எங்கள் மீனாக்ஷி அன்னை இறையாட்சி நிறைந்த இன்னகர் என்பதிலேயே மதுரை நகர் வசிப்போர் என்றும் பெருமை கொள்ளும் நகர்! இந்தியத் தொழில் முனைவோர்களில், தென்னிந்தியாவில் முன்னோடியாகக் கருதப்படும் டி.வி.எஸ் என்னும் மாபெரும் நிறுவனம் அமைந்த மாநகர்! இவற்றோடு இன்னுமொரு பெருமையும் சேர்ந்து கொண்டது இந்நகருக்கு! செவ்வியல் இசைப்பாடலாசிரியர்களில் மிகவும் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் சாதனையாளர்களில் மூத்தவராம், இக்கட்டுரையின் நாயகி, திருமதி. அம்புஜம் கிருஷ்ணா அவர்களை இசையுலகுக்கு இன்கொடையாக் அளித்தும் இப்பொன்னகர்தான்.

    இருபதாம் நூற்றாண்டின் செவ்வியல் இசைத் துறைக்கு, அழகு தமிழில் மட்டுமல்லாது, பிற தென்னிந்திய மொழிகளிலும், ஏன், வடமொழிகளாம், சமஸ்க்ருதம் மற்றும் இந்தியிலும் கூட, இசைப்பாடல்கள் புனைந்தளித்த பன்மொழி இசைப்புலவர், சாதனையாளர் இந்த இசையரசி. திருவனந்தபுரத்தில் பிறந்து, மதுரையிலேயே வளர்ந்து, வாழ்வாங்கு வாழ்ந்து முடிந்தவர். டி.வி.எஸ் நிறுவனர் சுந்தரமய்யங்காரின் மருமகளாகும் பேறு பெற்றும், வசதிகளும், செல்வமும் அளிக்கும் இன்பங்களில் மூழ்கிவிடாது, இசைக் கலைக்கே தன்னை அற்பணித்துக்கொண்ட எழிலரசி இவர்.

    வாழ்க்கைச் சுருக்கம்

    மதுரையிலே புகழ்மிக்க, முன்னணி வழக்கறிஞராக தொழில் செய்துவந்த கே.வி.அரங்க ஐயங்கார், செல்லம்மாள் தம்பதியரின் செல்வமகளாக 1917 வருடம் பிறந்தார் இத்தொடரின், இம்மாதத்திய இயலிசை நாயகி அம்புஜம் கிருஷ்ணா! இசையிலே நாட்டமிகுந்த இவருடைய பெற்றோர், இளமையிலேயே இவருடைய இசை ஆர்வத்தை உணர்ந்து, அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், காரைக்குடி கணேசன், மற்றும் கணேச பாகவதர் போன்ற சிறந்த இசை வாணர்கள், வல்லுனர்களிடம், முறையாக செவ்விசையியலை மரபு மாறா வழியில் பயிற்றுவித்தனர். சிறிய வயதிலேயே தமது தாயாரை இழந்து, பாட்டியின் அரவணைப்பிலே வளர்ந்த இவர், தமது பதினேழு வயதிலேயே தந்தையையும் இழந்தார்; இளவயதிலேயே நெருங்கிய உறவினரான டி.வி.எஸ் நிறுவனர் சுந்தரம்-இலட்சுமி இவர்களின் மகன் கிருஷ்ணாவை மணம் புரிந்தார். திருமணத்திற்குப் பின்பு புதுதில்லி சென்று, லேடி.இர்வின் கல்லூரியில், மனையியல் பட்டப்படிப்பை முடித்தார். இல்லறத்தை நல்லறமாக நடத்திக்கொண்டே, இயலிசைப் புலவராகவும் பாடல்களைப் புனைந்துகொண்டுமிருந்தார் இந்த மாதரசி.

    மென்மையான கலையுள்ளம் கொண்ட இவருக்கு மற்ற கலைகளாம், சித்திரம், தையல் மற்றும் தோட்டக்கலைகளிலும் ஈடுபாடும், தேர்ச்சியும் இருந்ததும் வியப்பல்ல! அமைதியான, இசையோடு ஒன்றிய எளிய வாழ்க்கையும், இனிய குணமும் படைத்து இசைபட வாழ்ந்து 1989ம் வருடம் தாம் அன்றாடம் வணங்கிய கண்ணனின் பாத அம்புஜத்தை அடைந்தார் அம்புஜம் கிருஷ்ணா!

    இயலிசையாளராக மலர்ச்சி

    1951ம் ஆண்டு திருவையாற்றிலுள்ள இசையுலகே கொண்டாடி மகிழும் தியாகய்யரின் சமாதிக்கு வருகைதந்த இவர், அவ்விசை யோகியின் சந்நிதியிலேயே, இசைப் பாடல் படைக்க உந்தப்பட்டு, பானம் செய்ய வாரீர் என்ற பாடலை முதன்முதலாக இயற்றிப்பாடியதாகக் குறிப்புகள் கூறுகின்றன. இது அமைந்த இராகம், மற்று பாடல் போன்ற விவரங்கள் காணக் கிடைக்கவில்லை; இவர் வாழ்க்கைச் சரிதத்தை எழுதியுள்ள சிலர், இவர் "உன்னையல்லால்" என்று மதுரை மீனாட்சியம்மன் மீதே, முதற்பாடலை இயற்றியதாகவும் கூறுகின்றனர். முதற்பாட்டு எதுவாக இருந்தால் என்ன? இவையே, இவருடைய பின்னாளையப் படைப்புகளுக்குப் பாதை அமைத்துத் தந்த உண்மை பெரிதல்லவா?

    முதலில் தயக்கத்தோடு தன் கணவருக்குத் தான் எழுதிய பாடல்களை காட்டிய இவரது பாடல்களில் இருந்த எளிமை, இயல்பான நடை, தமிழ்ச் சுவை, பக்திப்பாங்கு இவற்றை உணர்ந்த இவருடைய கணவர், சங்கீத கலாநிதி முசிறி சுப்ரமணிய ஐயரிடம் அவற்றைக் காட்டவும், அவர் மிகவும் மகிழ்ந்து, அவை செவ்வியல் இசைக் கூறுகளை உள்ளடக்கிப் பாடும்விதமாக இருப்பதை உணர்ந்து, தாமே அவற்றுக்கு இசையமைக்கவும் செய்தாராம் .

    இவருடைய பாடல்கள் கீதமாலா என்னும் பெயருடன் 4 தொகுப்புகளில் புத்தகங்களாக வெளி வந்துள்ளன. இவரே இசைக்கலைஞராக இருந்தும், இயல்பாகவே இவரிடம் இருந்த தன்னடக்கத்தின்காரணமாகவும், செய்வன திருந்தச் செய் என்ற முனைப்பினாலும், இசைத்துறையில் வல்லுனர்களாக இருந்த முன்னணிக் கலைஞர்களைக் கொண்டே தம்முடைய பாடல்களுக்கு, இசையாக்கமும், சுர-தாளக் குறிப்புகளையும் இவர் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மூவரில் ஒருவராகக் கொண்டாடப்படும் சீகாழி அருணாசலக்கவிராயர், ஏறக்குறைய அம்புஜம் கிருஷ்ணாவின் சமகாலத்தவரான பெரியசாமி தூரன் போன்றோரின் அடியொற்றியே இவ்வாறு செய்ததாகக் கொள்ளலாம்.

    கீதமாலா தொகுதி இரண்டு, முசிறி சுப்ரமணிய ஐயர் மற்றும் செம்மங்குடி சீனிவாச ஐயர் இவர்களின் இசையமைப்பு, இராக-தாள-சுரக் குறிப்புகளுடன் வெளிவந்தது. மூன்றாம் தொகுதி தமிழிசை வித்தகர் எஸ்.இராமநாதன், மற்றும் வித்வான், மதுரை டி.என்.சேஷகோபாலன் இவர்களுடைய இசையிலும், நான்காம் தொகுதி வித்வான். கே.ஆர்.கேதாரநாதன் இசையமைப்பிலும் வெளிவந்தன. கேதாரநாதன் அவர்கள், அம்மையாரின் இராதமாதவம், கிருஷ்ண லீலா மாதுர்யம் என்னும் இரண்டு இசை நாடகங்களுக்கும் இசையமைத்துள்ளார். தவிரவும் இவருடைய பல பாடல்களுக்கும் வி.வி.சடகோபன், சாத்தூர் சுப்ரமணியம், அம்புஜம் கிருஷ்ணாவின் நெருங்கிய தோழியாம் அனந்தலட்சுமி சடகோபன், ஆர்.வேதவல்லி, சாருமதி இராமசந்திரன் போன்றோர் இசையமைத்துள்ளனர்.

    சத்குரு சங்கீத வித்யாலயம்

    புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் நிரம்ப இருப்பினும், மதுரை நகரில் பெருமளவு இசைக்கலைஞர்களை பயிற்றுவிக்கும் அமைப்பு இல்லாத குறையைப் போக்க, வித்வான் இராமநாதபுரம் சி.எஸ் சங்கரசிவம் (முத்தய்யாபாகவதரின் சீடர், வித்வான் மதுரை. டி.என் சேஷகோபாலனின் ஆசிரியர்) அவர்களைத் தலைமையாகக் கொண்டு, சத்குரு சங்கீத வித்யாலயா என்னும் நிறுவனத்தை மாலை நேர இசைகற்பிக்கும் நிறுவனமாகத் தொடங்கி, இன்றது ஆல்போல் தழைத்து, முதுகலை, முனைவர் பட்டங்களை வழங்கும் முதுபெரும் இசைக் கழகமாகக், கல்லூரியாக வளர்ந்துள்ளது. தவிரவும் தன்னை இசைத் துறையில் ஊக்குவித்த தன்னுடைய மாமியாரின் பெயரிலேயே இலக்குமி சுந்தரம் கலையரங்கம் ஒன்றையும் மதுரை இசை/நாட்டிய விரும்பிகளுக்காக கட்டியுள்ளார் இந்த அம்மையார்.

    இவர் இயற்றிய இசைவடிவங்கள்

    பன்மொழிப் புலமை கொண்ட இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மணிப்ரவாளம், சமஸ்க்ருதம், இந்தி முதலிய மொழிகளில், தான வர்ணம், பதவர்ணம், கீர்த்தனைகள், பதங்கள் என்று பலவகைப்பட்ட உருப்படிகளை செய்துள்ளார். பெரும்பாலான பாடல்களின் தன்னுடைய முத்திரை என்பதை வலிந்து திணிக்காத இவர், சில பாடல்களின் பெயர் அம்புஜ என்று சுயநாம முத்திரை வருமாறும் செய்துள்ளார். சுமார் அறு நூறு பாடல்களுக்கு மேல் இவர் எழுதியிருந்தாலும், 200 பாடல்கள் அளவிலேயே சுரக்குறிப்புகளுடன் உள்ளன. அவற்றிலும் சுமார் 20 அல்லது முப்பது கீர்த்தனங்களே புழக்கத்தில் உள்ளன. என்ன செய்வது? வலிந்தாவது பிற மொழிப்பாடல்களைப் பாடுகிறார்களே தவிர, கடைவிரித்தாலும் கொள்வாரில்லை என்னும் அதே பழைய பல்லவிதான்!

    இறைவுணர்வில் சேர்க்கும் இசைப்பாடல்கள்

    இவருடைய பாடல்கள், இசை முன்னோடிகளின் அடியொற்றி, புராண, இதிகாசச் செய்திகளையும், நிகழ்வுகளையும், அவையுணர்த்தும் அரிய கருத்துக்களையும், அடியார்களின் தீவிர பக்தி, நெகிழ்ச்சி, ஏக்கம், பரவசம், அர்ப்பணிப்பு போன்ற பல உணர்வுகளை உள்ளடக்கியும், எளிய, இனிய, யாவரும் புரிந்து இன்புறக்கூடிய வகையிலே, இயல்பாக விழுந்த சொல்லணிகள் கூட்டியவை. நம்மாழ்வார் திருவாய் மொழியில்,

    "ஆடியாடி அகங்கரைந்து - இசை

    பாடிபாடி கண்ணீர் மல்கி - எங்கும்

    நாடி நாடி நரசிங்கா! என்று

    வாடி வாடும் இவ்வாணுதலே" - என்று கூறுவதுபோல, இறைவனை அடையும் எளிய வழியாக இசைவழிப்பாட்டைக் கைக்கொண்டு, தானும், உலகோரும் உய்யக் கவிபடைத்தவர் அம்புஜம் கிருஷ்ணா. பக்திச் சுவையிலும், பண்ணமைந்த சொற்களிலும் கோதை நாச்சியாரையும், பக்த மீராவையும் நம்மை நினைவுறுத்துகிற பாடல்கள் இவருடையவை.

    இவருடைய கீதா மாலா மூன்றாம் தொகுப்புக்கு முன்னுரை வரைந்த தமிழ்த்தாத்தாவின் முதற் சீடரும், கந்தவேள் தந்த தமிழ் சீலருமான

    Enjoying the preview?
    Page 1 of 1