Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sanga Poongavil Koytha Malargal
Sanga Poongavil Koytha Malargal
Sanga Poongavil Koytha Malargal
Ebook171 pages56 minutes

Sanga Poongavil Koytha Malargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சங்க இலக்கியங்கள் என்று கூறப்படும் தொகை நூல்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு, தமிழின் தொன்மையானதும் மேன்மையானதுமான படைப்புகள். அவை ஓர் ஒப்புயர்வற்ற கருத்துக்களஞ்சியம். அக்காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்பப் பல்வேறு கருத்துகள் இடம்பெற் றிருந்தாலும், காலங்கடந்து நிலைத்த பேருண்மைகள் பல இவற்றில் பொதிந்துள்ளன “சங்கப் பூங்காவில் கொய்த மலர்கள்” என்ற இந்த நூலின் நோக்கம், சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட விழுமிய கருத்துகளின் தற்காலப் பயன்பாட்டுப் பொருத்தம் (relevance) பற்றியதாகும். இன்று நம்மிடையே உலவும் புத்துலகக் கருத்தியல்கள் பலவும் இன்றைய சமுதாயத்தின் தேவைக்கேற்ப உருவாக்கப் பட்டிருந்தாலும்,அவற்றின் சாயல்கள் சில தமிழிலக்கியங்களில் படிந்திருப்பதை உணரலாம்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580144807713
Sanga Poongavil Koytha Malargal

Read more from Dr. V. Kulandaiswamy

Related to Sanga Poongavil Koytha Malargal

Related ebooks

Reviews for Sanga Poongavil Koytha Malargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sanga Poongavil Koytha Malargal - Dr. V. Kulandaiswamy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சங்கப்பூங்காவில் கொய்த மலர்கள்

    Sanga Poongavil Koytha Malargal

    Author:

    முனைவர். வே. குழந்தைசாமி

    Dr. V. Kulandaiswamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-v-kulandaiswamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    மதிப்புரை

    முன்னுரை

    1. சங்க இலக்கியங்கள் கூறும் அறக்கோட்பாடுகள்

    2. சங்க இலக்கியங்கள் காட்டும் அறவழி ஆட்சி

    3. சங்க இலக்கியங்களில் வாழ்வியல் கூறுகள்

    4. சங்க இலக்கியங்கள் கூறும் நட்புநலம்

    5. சங்க இலக்கியங்களில் சமுதாய நலம் வேட்டல்

    6. சங்கப்பாடல்களில் கடமையுணர்வுக் கருத்துகள்

    7. சங்க இலக்கியங்கள் கூறும் மனித மாண்புகள்

    8. குறுந்தொகைப் பாடல்களில் உவமை நயம்

    9. சங்ககாலத் தமிழகத்தில் வணிக வளம்

    10. சங்ககாலத் தமிழ்ச் சமுதாயத்தில் கல்விச்சிறப்பு

    11. சங்ககாலச் சமுதாயத்தில் இல்வாழ்க்கை இயல்புகள்

    12. சங்க இலக்கியங்களில் வட்டார வழக்குச் சொற்கள்

    அணிந்துரை

    வியப்பாக இருக்கிறது, நினைத்துப் பார்த்தால்!

    கல்லூரி உயர்கல்வி முடித்தாயிற்று; பணியேற்று, விரிவுரையாளராகத் தொடங்கி, பேராசியராய், முதல்வராய், பல்கலைக்கழப் பதிவாளராய், மேலாண்மைக் கல்லூரியின் தாளாளராய் ஓர் அரைநூற்றாண்டுக்காலம் அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தியாயிற்று!.

    கிராம வளர்ச்சி, கூட்டுறவு, வணிகவியல் என்று பெற்ற முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் அலமாரியின் புத்தக அடுக்குகளுக்கிடையே பத்திரப்படுத்தப் பட்டுவிட்டன!

    இத்தனை காலமும் தொட்டனைத்தூறும் மணற்கேணியாகவோ, கொங்கு மண்டலத்தின் ஆழக்கிணறுகளின் அடிவெட்டில் சலசலக்கும் நீர் ஊற்றாகவோ இவருக்குள் கசிந்துகொண்டுதான் இருந்திருக்கிறது தமிழ்மீதான ஆர்வம்!

    இல்லையென்றால் பேராசிரியர், முனைவர் குழந்தைசாமி அவர்களால் பழைமையான சங்கப்பூங்காவில் நுழைந்து இந்த நூலுக்கான இத்தனை மலர்களைக் கொய்து வந்திருக்க முடியுமா?

    முன்பு அவர் ஏற்றுக்கொண்டதும் பணியாற்றியதும் ஆன தளம் வேறு! அஃதோர் அறிவுத்தளம்! இஃதோர் உணர்வுத்தளம்!

    உளவியலின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்டு, மனிதன் என்பவன் உணர்வுக்கடலின் மீது மிதந்துகொண்டிருக்கும் அறிவுத்துரும்பு என்பார். நாம் இப்படிச் சொல்லலாம்: இவர்தம் அறிவுச் சுளைக்குள் உணர்வு என்னும் இனிய சாறு நிறைந்துள்ளது என்று.

    பெற்ற கல்வியும், ஆங்கில அறிவும், பணிநிலையில் பெற்ற பட்டறிவும் இவர் அடைந்திருக்கும் பேறுகள்! அவற்றைத் தமிழுணர்வுப் பயிருக்கு அடியுரமாகவும் மேலுரமாகவும் பயன்படுத்த விரும்புகிறார்.

    முதற்கட்டமாகப் பேராசிரியர் சில முன்முயற்சிகளை மேற்கொள்கிறார். அவை யாவை?

    முதற்கண் 2018 அக்டோபரில் கூடலூர் கிழாரின் முதுமொழிக்காஞ்சியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார். ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் என்று தொடங்கும் அப்பழைய நூல் அனைத்துலக மக்களை நோக்கி அறம் கூறுவது. தமிழரின் தனியுடைமையாக இருந்த அந்நூல் இவ்வாங்கில மொழிபெயர்ப்பால் உலகின் பொதுவுடைமை ஆகின்றது. திறமான அதன் புலமையை வெளிநாட்டாரும் வணங்கட்டுமே என்பது பேராசிரியரின் விருப்பம்போலும்!

    அடுத்து, 2019 பிப்ரவரியில் எண்ணூற்றுக்கு மேற்பட்ட அரிய சொற்களைத் திரட்டி அருஞ்சொற்குவை வெளியிடுகிறார். பழைய இலக்கியங்களில் கொட்டிக்கிடக்கும் அருஞ்சொற்களை இக்காலத் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்பப் புதிய பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் பேராசிரியரின் நோக்கம் பாராட்டத்தக்கது.

    மேலும் அருள்மிகு சாய்பாபாவின்பால் கொண்ட பத்திமையால் அந்தாதியும் கண்ணியுமாக இரண்டு கவிதை நூல்களைப் படைத்துள்ளார்.

    தாம் பிறந்து வளர்ந்த ஊர்ப்புறத்தின் முல்லைத்திணை வளத்தை ஓர் அழகான நெடுங்கவிதையாக ஆக்கியுள்ளார். பழைய நேரிசை ஆசிரியப்பா இவருக்கு நன்றாகவே வருகிறது.

    காலை மிதி, கையைமிதி, ஓடோடு சங்கிலி என்று இக் ‘குழந்தை’ சாமியைத் தமிழ்த்தாய் பின்தொடர்ந்து தூண்டிக் கொண்டிருக்கிறாள் போலும்!

    இத்தகைய முன்முயற்சியும் பயிற்சியுமான தளத்தில் கால்பதித்துத் தொடரும் பேராசிரியர், இப்பொழுது, பழைய சங்கத்தமிழில் காணும் புத்துலகக் கோட்பாடுகளுக்கான தரவுகளைத் திரட்டி அழகிய கட்டுரைகளாக உருவாக்கி சங்கப் பூங்காவில் கொய்த மலர்கள் எனும் நூலாக வெளிக்கொணர்ந்துள்ளார்.

    பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும், திருக்குறளும், சிலப்பதிகாரமுமாய் விரிந்து கிடக்கிறது இலக்கியப் பரப்பு. தொலைதூரத்து மலைச் சாரல்களிலும் அடர்ந்து செழித்த அடவிகளிலும் பூத்துக் குலுங்கும் ஆயிரமாயிரம் பூக்களைத்தேடிப் பறந்து பறந்து, முரன்று முரன்று ஓர் அருஞ்சிறைத் தும்பியாகத் தேன் திரட்டியுள்ளார்! அத்தனையும் தமிழ்த்தேன்!

    அந்தக்காலத் தமிழ்க் கோட்பாடுகள் இந்தக்காலப் புதுமைக்கும் போக்கிற்கும் ஒத்துவருமா? என்னும் வினாக்குறியோடு வருபவர்களை ஆம்! ஆமாம்!! ஒத்துவரும் என்று வீறுடன் எதிர்கொள்கிறார்.

    இருபத்தோராம் நூற்றாண்டு இது! மேல்நோக்கிச் சுடர்ந்த விளக்குகள் இன்று கீழ்நோக்கி ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. சமூகவியலில், மனிதர்களின் ஒழுக்கநெறியில், வாழ்க்கைமுறையில், நுகர்வில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சாதனங்களிலும் ஊடகங்களிலும் புதுமை புதுமை என்று உலகம் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று எதிர்கொள்ளப்படும் சிக்கல்களுக்கு, அன்றெழுந்த இலக்கியங்களில்  – அறுபது எழுபது தலைமுறைகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூல்களில், தீர்வுகளும் வழிகாட்டல்களும் உள்ளனவா என்னும் திசையில் இளைஞர்களின் பார்வை – ஏன், அறிஞர்களின் பார்வையும் திரும்பவேண்டும். அவர்களுக்கு, முன்னோரின் கோட்பாடுகள் வழிகாட்ட வல்லவை என்பதைக் கண்டுசொல்லும் முயற்சியாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்நூலின் பேசுபொருளாகப் பேராசிரியர் எடுத்துக்கொண்டவை யாவை?

    சங்க இலக்கியங்கள் கூறும் அறக்கோட்பாடுகள், அறவழி ஆட்சி, வாழ்வியல் கூறுகள், நட்புநலம், சமுதாயநலம் வேட்டல், கடமைகள், மனிதமாண்புகள், கல்விச்சிறப்பு ஆகியவற்றைத் தக்க மேற்கோளாலும் விளக்கங்களாலும் இந்நூல் காட்சிப்படுத்துகிறது.

    இத்தலைப்புகள் பன்னிரண்டையும் மேலும் சற்றே விரித்தெழுதினால், ஒவ்வொன்றும் ஒரு புத்தகமாகிவிடும். படிக்கும் வாசகரின் புரிதலை நம்பி சுருக்கிச்சொல்லி விளக்கவே ஆசிரியர் விரும்புகிறார்.

    அரிதின் முயன்று தேடி எடுத்த பாடல் வரிகளில் இந்நூலின் பக்கங்கள் நிரம்பி வழிகின்றன – காடு முழுவதும் கதிர் குலுங்குவது போல்!

    வரப்போரம் நடந்து ஒரு சுற்றுச் சுற்றி வருவோமா?

    அறக்கோட்பாடுகள்: தமிழரின் வீறார்ந்த சொல் அறம். வண்மை, உண்மை, தண்மை, ஒண்மை – காட்டும் சொல். வாழ்வின் விழுமியம் இதுவே! வள்ளுவர் ‘அறன் வலியுறுத்துவார்’. ‘அறம் செய விரும்பு’ என்று தம் தமிழைத் தொடங்குவார் ஒளவையார். அகம் புறம் என்று விரியும் தமிழ்ப்பரப்பின் ஊடும் பாவுமாய் விளங்குவது அறம். அறம் போற்றும் நல்லவர்களாக மக்கள் இருந்தால் காடும் மேடும் குண்டும் குழியுமாய்க் கிடக்கும் பகுதியும் நல்ல நாடாக ஆகிவிடும். ஆகவே, மனிதர் அறவழியைப் பின்பற்றுக – அழகுற நிறைவு செய்கிறார்!

    அறவழி ஆட்சி: கீழ் நிலையிலிருந்து அறம் கட்டமைக்கப்பட வேண்டும் – ஆனால் நிலை அவ்வாறு இல்லையே! உச்சத்தில் தொடங்கி அருவிபோல் அறநெறி கீழ்நோக்கிப் பாயட்டும் எங்கிறார். மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்.

    நட்புநலம்: மதிப்பு வாய்ந்தது நட்பு. வள்ளுவரும் சங்கப் புலவர்களும் சொன்னதற்குமேல் நட்பைக் குறித்துப் பேசுவதற்கு உலகில் ஒருவரும் இல்லை. பாரிக்கும் கபிலருக்கும், அவ்வையாருக்கும் அதியமானுக்கும் வாய்த்த நட்புகள் மாண்புடையன. எனினும், பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் நேரில் பாராமலே கொண்ட நட்பு உலக வரலாற்றில் வேறெங்கும் காணாதது. மற்றும், பாரி இறந்தபின் அவன் பெண்மக்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு இருங்கோவேள் என்பானிடம் போய் நின்று: இவர்கள் பாரியின் மக்கள்; நான் தந்தையின் தோழன்; ஆகவே இவர்கள் என் மக்கள்; ஓர் அந்தணனாக, புலவனாக உன்முன் வேண்டுகிறேன்; இவரை மணந்துகொள் என்று வாடி நின்றாரே கபிலர்! அவர் நிலை ஆழ்ந்த வருத்தத்துக்குரியது.

    சமுதாய நலம்: இதை விழுமியம் சார்ந்த கருத்தாக்கமாக சங்க இலக்கியம் பார்க்கிறது. வெற்றியோ தோல்வியோ, நோக்கம் விழுமியதாக இருக்கவேண்டும். கானமுயல் எய்த அம்பினைவிட, யானை பிழைத்தவேலை ஏந்திவருதல் விழுமியது; எலிபோல் இராதே, புலிபோல் செம்மாந்திரு! பொதுநலத்துக்குப் பாடுபடு. இங்கு ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ எனும் பாடலை விளக்கி ஆசிரியர் நிறைவுசெய்யும் பாங்கு இனியது. அரசின் நலம்புரி கொள்கையையும் வாழ்த்துகிறார்.

    கடமை உணர்வு: தற்காலத்தில் கடமையும் உரிமையும் இணைகோடுகளாகக் கருதப்படுகின்றன. பழந்தமிழ் கடமையையே வற்புறுத்தும். தாய்க்கும் தந்தைக்கும் கொல்லனுக்கும் மன்னனுக்குமான கடமைகளை ஒற்றை வரிகளில் குறித்த பொன்முடியார் ‘காளை’யின் கடமையை அழுத்தமாக இரண்டு வரிகளில் வற்புறுத்தியுள்ளமை நோக்கத்தக்கது. நாடுகாக்கும் போரில் தந்தையையும் கணவனையும் தொடர்ந்து பறிகொடுத்த மறக்குலப்பெண் ஒருத்தி மூன்றாம் நாள் தன் ஒரே மகனையும் போர்க்களம் நோக்கி அனுப்புகிறாள். உலக வரலாற்றில் இதுபோல் காணமுடியுமா?

    மனித மாண்புகள்: இப்பகுதிக்குக் கலித்தொகை வரிகளை மிகுதியும் எடுத்தாளும் பேராசிரியர் நற்றிணையிலிருந்து ஒரு பாடலை ஆள்கிறார். அன்னையால் வளர்க்கப்பட்ட புன்னை மரத்தைத் தங்கை என்று கருதும் பெண் பற்றிய சித்திரத்தை இப்பகுதியில் காட்டுகிறார். நிறைவாக; ஆற்றுதல், போற்றுதல், பண்பு, அன்பு, அறிவு, செறிவு, நிறை, முறை, பொறை ஆகிய மனித மாண்புகளை வரையறை

    Enjoying the preview?
    Page 1 of 1