Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pudhuneri Venpakkal
Pudhuneri Venpakkal
Pudhuneri Venpakkal
Ebook118 pages33 minutes

Pudhuneri Venpakkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வெண்பா என்பது தமிழ்க் கவிதையின் உன்னதமான வடிவம். அதன் யாப்புமுறைகள் சற்றுக் கடினமாக இருப்பினும் படிப்போரை ஈர்த்து, எளிதாக மனத்தில் பதியும் தன்மையுடையன. தற்காலச் சமுதாயத்துக்கேற்ற நற்கருத்துகளைச் சீர்மிகு வெண்பாக்களாய்ப் புனைந்தால் அக்கருத்துகள் பொன்தட்டில் வழங்கப்படும் உணவுப் பண்டங்கள்போல் சுவையும் உவப்பும் கூடியனவாக இருக்கும்.

Languageதமிழ்
Release dateJan 6, 2024
ISBN6580144810599
Pudhuneri Venpakkal

Read more from Dr. V. Kulandaiswamy

Related to Pudhuneri Venpakkal

Related ebooks

Reviews for Pudhuneri Venpakkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pudhuneri Venpakkal - Dr. V. Kulandaiswamy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    புதுநெறி வெண்பாக்கள்

    Pudhuneri Venpakkal

    Author:

    முனைவர். வே. குழந்தைசாமி

    Dr. V. Kulandaiswamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-v-kulandaiswamy

    பொருளடக்கம்

    கடவுள் வாழ்த்து

    அணிந்துரை

    இறைமை இயல்பு

    மனிதநேயம்

    சாதிசமயப்பூசல்

    தன்னலம்

    மனநலம்

    ஒப்புரவுச் சமுதாயம்

    வாழ்வியல் நெறிகள்

    கடமையாற்றலே வழிபாடு

    சமுதாயக் கேடுகள்

    அறநெறியே அடிப்படை

    சிக்கனம், சேமிப்பு

    உழைப்பின் மேன்மை

    இயற்கைச் சூழல் மாசு

    கல்வியும் விழுமியமும்

    நலவாழ்வு

    போரும் பகையும்

    புத்துலகப்போக்கு

    உழவுத்தொழில்

    மாறிவரும் மரபுகள்

    புத்தாக்கம்

    பாலினச் சமத்துவம்

    ஆங்கில மோகம்

    மக்களாட்சி

    மாபெரும் மக்கள் தலைவர்கள்

    கடவுள் வாழ்த்து

    ஒன்றே குலமென்றும் ஓரிறைவன் தானென்றும்

    நன்றே நவின்றார் திருமூலர் – குன்றிலிட்ட

    நந்தா விளக்கனைய நற்சுடரே, நாயகனே!

    அந்தமும் ஆதியும் நீ!

    அணிந்துரை

    புலவர் பொன்முடி சுப்பையன்

    தலைவர், தமிழ்நாடு இலக்கியப்பேரவை

    கோவை

    நேற்றுப்போல் இருக்கிறது. நினைத்துப் பார்த்தால்! வெண்பாவும் விளக்கமுமாக வாழ்வியல் கூறும் சொலவுகள் நூறு வெளியீட்டுவிழா நடந்தது நேற்றா? முந்தா நேற்றா? அதில்,

    சின்னஞ் சிறார்கள் சண்டையில்போய் மூத்தோர்கள்

    என்னத்துக் காக இடைப்புகதல்? – தன்னொத்த

    குட்டிநாய்ச் சண்டைக்குள் பட்டிநாய் போய்ப்புகுந்து

    முட்டினால் மூழும் பகை.

    இதைக்கேட்டுச் சிரிப்பும் கையொலியுமாக அரங்கமே அதிர்ந்ததே, அது போன கிழமையா? அதற்கு முந்தைய திங்களா?

    அந்த நினைவுகளின் அலை ஓய்வதற்குள் மீண்டும் ஒரு நூலைக் கொண்டு வருகிறார் நம் பேராசிரியர். முந்தையதில் நூறு! இதில் நூற்றைம்பது. அத்தனையும் வெண்பாக்கள் – புதுநெறி வெண்பாக்கள்!

    ஆம் அலைகள் ஓய்வதில்லை!

    தன் குழந்தையை முன்னால் ஓடவிட்டு, காலை மிதி, கையை மிதி, ஓடோடு சங்கிலி என்று பின்னால் இருந்து ஒரு தாய் உற்சாகப் படுத்துவது போல, தமிழ்த்தாய் உள்ளிருந்து ஊக்கமூட்டிப் பேராசிரியரை ஓடவைக்கிறாள் போலும்.

    சற்று அயர்ந்தாலும் அடிசருக்கக் கூடியதும், இறுக்கமான கட்டுக்கோப்புக் கொண்டதுமே வெண்பா. இயற்சீரும் வெண்சீருமான வெண்டளையாகவும், ஈற்றடி முச்சீரும் ஏனைய அடிகள் நாற்சீருமாய் அமைந்தும், நாள் மலர் காசு பிறப்பு எனும் வாய்ப்பாடுகளில் ஒன்றைக்கொண்டு முடியும் வண்ணமும், எதுகை மோனை இணைந்தும் அமைவதே வெண்பா.

    அதனால்தான் ‘புலவர்க்கு வெண்பா புலி’ என்றார்களோ? காளமேகத்திற்கும், புகழேந்திக்கும், ஔவையார்க்கும் வேண்டுமானால் மடைதிறந்த வெள்ளமாய் வெண்பா எளிதாக வரலாம்! நம்போன்றவர்களுக்கு...? ‘நமக்கேன் வம்பு’! இந்த வெண்பா வேண்டாம்!` என்று பெரும்புலவர்கள்கூட ஒதுங்கிக் கொண்டார்களோ?

    திருவள்ளுவர் அதற்கு விதிவிலக்கு. மனிதர்களின் மடிமை (சோம்பேறித்தனம்) அவர்க்குத் தெரியும். நீளமாக எழுதினால் படிக்கமாட்டார்கள் என்று மிகவும் சிறிதாக – இரண்டே அடிகளில் அமையக்கூடிய, மூச்சு ஒன்றில் படித்துமுடித்துவிடக்கூடிய குறள் வெண்பாவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு திருக்குறள் பாடிவிட்டார்! இரண்டே வரிகள் என்றாலும் வெண்பாவின் எல்லாக் கட்டுப்பாடுகளையும் பின்பற்றியவர் அவர்.

    ஏகாந்தமான காட்டில் தனிவழியே போகும் புலவர் ஒருவர் எதிர்பாராமல் ஒரு புலியை எதிர்கொள்கிறார்! அவரிடம் இருக்கும் ஒரே ஆயுதம் எழுத்தாணி மட்டுமே! தப்பித்து ஓட முடியாது! வேறு வழியில்லை! எதிர்கொண்டு போராடியே ஆகவேண்டும். புலி வெல்லுமா? புலவர் வெல்வாரா? தெரியவில்லை!

    இங்கே நம் பேராசிரியரின் கதையும் அதுதான். போராடியதில் சில சிறாய்ப்புகளும் காயங்களும் ஏற்பட்டாலும் இவர் வென்றுவிடுகிறார் ; புலியை அடக்கிவிடுகிறார்!. இப்பொழுது அந்த முரட்டுப்புலி ஒரு பூனைக்குட்டியைப்போல் இவர் மடியில் விளையாடிக்

    கொண்டிருக்கிறது! ஆம்! உண்மை! புதுநெறி வெண்பாக்களே சாட்சி.

    உயர்கல்விப்புலத்தில் பேராசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் பல்கலைக்கழகப் பதிவாளராகவும் சுமார் நாற்பது ஆண்டுகள் பெரும்பாலும் ஆங்கில வழியில் பணிபுரிந்தவர் இப்போது, புதிய ஆர்வத்தோடு தமிழின் பக்கம் திரும்பியுள்ளார். இஃது எப்படி நிகழ்ந்தது?

    அன்னை தந்தையிடமிருந்தும், பழகிய உறவுகளிடமிருந்தும், பள்ளி கல்லூரிகளிலிருந்தும் இளம் பருவத்தில் இவருக்குள் தேங்கியிருந்த பசுந்தமிழ் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் காலத்திற்காகக் காத்திருந்து, பணி ஓய்வில் அந்தக்காலம் வாய்க்கிறது. ஆழக் கிணற்றின் அடிவெட்டுப் பாறைக்குள் இருந்து சலசலத்துப் புறப்படும் நீர் ஊற்றுப்போல வெளிப்பட்டு அப்பசுந்தமிழ் வாய்க்கால் வழியோடி இப்பொழுது நெல்லுக்குப் பாய்கிறது.

    பழைய கீழ்க்கணக்கைப் புரட்டிப்பார்த்தபோது பேராசிரியர்க்குக் கூடல் கிழாரின் முதுமொழிக்காஞ்சி கிடைக்கிறது ; ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார். தமிழரின் தனியுடைமையாயிருந்த அந்நூல் இம்மொழிபெயர்ப்பால் உலகப் பொதுவுடைமை ஆகிறது. அடுத்துப் பழைய இலக்கியங்களில் இருந்து 1000 அரிய சொற்களைக் கண்டெடுத்து ஆங்கிலச் சமன்பாட்டோடு அருஞ்சொற்குவை தொகுத்து வழங்குகிறார். சங்க இலக்கியத்துக்குள் பயணம் செய்து சங்கப்பூங்காவில் கொய்த மலர்கள் எனும் அழகிய உரைநடை நூலை வெளியிடுகிறார். தாம் நயந்து கற்ற தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அருந்தொகையின் அதிர்வலைகள் (Random Resonance) வெளியிடுகிறார்.

    அகவற்பாவில், மனிதர் நடந்துவந்த பண்பாட்டுப் பயணத்தை வரலாற்றுப் பதிவாக மானிடர் பதித்த காலடிச் சுவடுகள் படைக்கிறார். பின்னர் அதே அகவற்பாக்களில் 2700 அடிகள் கொண்ட தமிழ்நிலம் தரணிக்குத் திலகம் இயற்றுகிறார்.

    இனி வெண்பாவுக்குள் நுழைந்து, முன்றுரை அரையனார் இயற்றிய ‘பழமொழி நானூறு’ போல இன்று வழங்கும் சொலவடைகளை மையப்படுத்தி நேரிசை வெண்பாவில் வாழ்வியல் கூறும் சொலவுகள் நூறு வெளியிட்டு, விழா நடத்துகிறார்.

    இன்று முற்றிலும்

    Enjoying the preview?
    Page 1 of 1