Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Valluvar Kaattum Kaala Melanmai
Valluvar Kaattum Kaala Melanmai
Valluvar Kaattum Kaala Melanmai
Ebook103 pages34 minutes

Valluvar Kaattum Kaala Melanmai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்நூல் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் காலத்தின் அருமையை உணர்த்தி, எண்ணம்போல் உயரவும் வாழ்வாங்கு வாழவும் பெரும் துணையாக இருக்கும். திருக்குறள் போல் குறள் வெண்பாவில் சிறந்தது இதற்கு முன்னும் இல்லை; பின்னும் இல்லை. ஒவ்வொரு குறளும் ஒளிவிடும் மணி போன்றதாகும் என்று சொன்னால் மிகையல்ல. வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கு ஏற்ப, அனைத்தையும் நன்கு அறிந்து தக்க காலத்தில் செயல்படுத்துவதே வெற்றிக்கு வழிவகுக்கும். வள்ளுவர் கூறும் கால மேலாண்மைச் சிந்தனைகளைக் கடைபிடித்தால் வெற்றி உறுதி என்பதை உணர்த்த 'வள்ளுவர் காட்டும் கால மேலாண்மை' நூல் படைக்கப்பட்டுள்ளது.

Languageதமிழ்
Release dateApr 22, 2024
ISBN6580176610838
Valluvar Kaattum Kaala Melanmai

Related to Valluvar Kaattum Kaala Melanmai

Related ebooks

Reviews for Valluvar Kaattum Kaala Melanmai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Valluvar Kaattum Kaala Melanmai - Dr. M. Rajaram

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வள்ளுவர் காட்டும் கால மேலாண்மை

    Valluvar Kaattum Kaala Melanmai

    Author:

    முனைவர் மூ. இராசராம்

    Dr M. Rajaram

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-m-rajaram

    பொருளடக்கம்

    என்றும் திருக்குறள்

    அணிந்துரை

    வாழ்த்துச் செய்தி

    வாழ்த்துரை

    கருத்துரை

    என்னுரை

    1. உழைக்கும் நேரமே நல்ல நேரம்

    2. அரைகுறைச் செயல் தவிர்த்தல்

    3. காலம் பொன்னைவிட மேலானது

    4. வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்

    5. நிருவாகத் திறன்

    6. வேலைகளில் முன்னுரிமை

    7. மறதியும் காலதாமதமும் வேண்டாம்

    8. சோம்பல் வேண்டாம்

    9. தொடர்புடைய செயல்கள்

    அர்ப்பணம்

    Capture

    முனைவர் யூஷி

    தலைவர், உலகக் கவிஞர் கூட்டமைப்பு நிறுவனர், தைவான் தமிழ்ச் சங்கம்

    என்றும் திருக்குறள்

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட உலகப்பொதுமறையான திருக்குறளில் ‘கால மேலாண்மை’ பற்றிய கருத்துகள் இடம் பெற்றிருப்பது மிகவும் வியப்பிற்குரியதாக உள்ளது.

    திருக்குறள் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக இருப்பது திருக்குறளின் சிறப்புகளில் ஒன்றாகும்.

    அன்றைய மன்னராட்சியில் திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகள், இன்றைய மக்களாட்சிக்கும் பொருந்தும் வகையில் உள்ளன.

    அணிந்துரை

    வளமான வாழ்விற்குக் குறள் கூறும் காலம் அறிதல்

    என்னதான் வலிமை இருந்தபோதிலும் காலம் அறிந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும். காலம் அறிதல் என்பது செயல் செய்வதற்குரிய காலம் அறிதல் ஆகும். வலிமையை அறிந்து கொள்வது போன்று காலத்தையும் அறிந்தே செயல்பட வேண்டும்.

    பகல்வெல்லும் கூகையைக் காக்கை; இகல்வெல்லும்

    வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (குறள் - 481)

    கூகையைக் காக்கையானது பகல் பொழுதினில் வென்றுவிடும். இதைப் போன்று எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைப் பார்த்திருக்கவேண்டும். கூகைக்கு (கோட்டானுக்கு) பகல் வேளையானால் கண் தெரியாது. இதைத் தெரிந்துதான், கூகையை விடவும் பலம் குறைந்த காக்கையானது பகல் வேளையில் அதைக் கொன்றுவிடும். இதைப்போல எதிரிகளை வெல்வதற்கு ஏற்ற காலத்தைப் பார்த்திருந்து அவர்களை வீழ்த்திட வேண்டும்.

    கூகைக்குப் பகலில் கண் தெரியாதது போன்று காக்கைக்கு இரவில் கண் தெரியாது. எனவே, இதைப் பார்த்திருந்து கூகையானது காகத்தை இரவில் கொன்றுவிடும். ஒவ்வொன்றும் வெற்றி பெறுவதும், தோல்வியடைவதும் அவையவை ஈடுபடும் காலத்தைப் பொறுத்ததுதான் என்று கொள்ளவேண்டும்.

    அருவினை என்ப உளவோ கருவியான்

    காலம் அறிந்து செயின். (குறள் - 483)

    ஒரு செயலைச் செய்து முடிக்க முதலில் வேண்டுவது உரிய கருவிகளாகும்; அதன் பின்னர் நமக்கு வேண்டுவது ஏற்ற காலமாகும். இவை இரண்டும் அமைந்துவிட்டால் செய்ய முடியாத காரியங்கள் எதுவுமே இல்லை.

    உறுதியான மனம் வேண்டும். இந்த ஒன்றை வைத்துக்கொண்டே பெரும் சாதனைகளை நிச்சயமாகப் படைக்கலாம்.

    காலம் கருதி இருப்பர் கலங்காது

    ஞாலம் கருது பவர். (குறள் - 485)

    இந்த உலகத்தை அடைய வேண்டும் என்று எண்ணுபவர்கள் நல்ல உறுதி நிறைந்த நெஞ்சமுடன் காலத்தையும் கருதியிருக்க வேண்டும். காலம் மிகவும் முக்கியமாகும் என்பது சொல்ல வேண்டியதே இல்லை.

    எதிர் எதிராக மோதிக் கொள்ளும் ஆட்டுக் கடாக்கள் இரண்டுமே பின்வாங்கிச் சென்ற வேகத்தில் வந்து ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும்; இடித்துக் கொள்ளும்.

    ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

    தாக்கற்குப் பேரும் தகைத்து. (குறள் - 486)

    மிகவும் மன எழுச்சிமிக்கவர்களாக இருந்தாலும் உடனடியாகச் செயல்படாமல் காத்திருந்தும் பின்வாங்கியும் செல்வது வெற்றியை எப்படியும் அடையவேண்டும் என்ற இலட்சியத்திற்காகத்தான்.

    பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

    உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (குறள் - 487)

    அறிவுடையோர் உணர்ச்சி வயப்பட்டவர்களாகத் தம் எதிரி அழியும் வண்ணம் உடனே கோபப்பட்டுப் பேசிக் காரியத்தைக் கெடுத்துவிடக் கூடாது. காலம் கனிவதுவரைக் காத்திருந்து நெஞ்சுக்குள்ளே எதிரிகளை அழிப்பதில் குறியாக இருக்க வேண்டும் என்பது முக்கியமாகும்.

    நீர் செல்லும் ஓடையில் கொக்கானது கண்களை மூடிக்கொண்டு தவம் செய்வது போன்று ஒற்றைக்காலில் நீண்ட நேரம் நிற்பதை நாம் பார்த்திருப்போம். கண்களை மூடிக்கொண்டிருப்பதால், கொக்கு தூங்கிவிட்டது என்று எண்ணி மீன்கள் அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்கும். ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் அது வாடிய வண்ணம் தான் இருக்கும் என்பதை அந்த மீன்கள் அறிவதில்லை. உரிய மீன் வந்தவுடன் கொக்கானது ஒரே குத்தாகக் குத்தி எடுத்துக்கொண்டு சென்றுவிடும்.

    கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்

    குத்தொக்க சீர்த்த இடத்து. (குறள் - 490)

    ஒரு செயலை நாம் வெற்றியுடன் செய்வதற்கு கொக்கின் இந்த முறையையே பின்பற்றிட வேண்டும்.

    திருக்குறளின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்டு, ஏற்கனவே பல நூல்களைப் படைத்துள்ள முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப. அவர்கள், திருவள்ளுவர் வகுத்துத் தந்துள்ள ‘கால மேலாண்மை’ பற்றியக் கருத்துகளைத் தொகுத்து இந்நூலில் வழங்கியுள்ளார். இவரது திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு (Pearls of Wisdom Thirukkural) அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களால் பாராட்டப் பெற்று, வெள்ளை

    Enjoying the preview?
    Page 1 of 1