Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Urimaikku Kural Koduppom!
Urimaikku Kural Koduppom!
Urimaikku Kural Koduppom!
Ebook503 pages3 hours

Urimaikku Kural Koduppom!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்நூலில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான கட்டுரைகள் புகழ்பெற்ற நாளேடுகளிலும், வார ஏடுகளிலும் வெளிவந்தவை. இத்தொகுப்பு பயனும், தேவையும், அவசியமும் கருதி நூலாக மக்கள் முன்னே வைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டினை வளப்படுத்த உதவும் திட்டங்கள் எவையெவை என்பதையும் அதன் செயற்பாட்டால் தமிழர்க்கு கிடைக்கும் பலன்கள் எவை என்பதையும் இந்நூலின் உள்ளடக்கம் கட்டுரை தோறும் உரிமைக் குரல் எழுப்புகிறது.

இந்நூலின் ஆசிரியர் எழுப்பும் உரிமைக்குரல் உண்மைக் குரலாகும். மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கால் ஆழ்ந்த தூக்கத்தினால் நிறை வேற்றப்படாமல் இருக்கும் முக்கிய திட்டங்களினால் தமிழகத்தின் பாதிப்புகளை நூலெங்கும் எடுத்துச் சொல்லி ஆசிரியர் போர்முரசமாக அதிருகிறார்.

இத்திட்டங்கள் ஒரு காலகட்டத்தில் நிறைவேற்றப் படும்போது உரிமைக்குரலை போர்க்குரலாக எழுப்பிய இந்நூலின் ஆசிரியரை தமிழகம் என்றும் மறக்காது நினைவு கொள்ளும்.

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580142906760
Urimaikku Kural Koduppom!

Read more from K.S. Radhakrishnan

Related to Urimaikku Kural Koduppom!

Related ebooks

Reviews for Urimaikku Kural Koduppom!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Urimaikku Kural Koduppom! - K.S. Radhakrishnan

    https://www.pustaka.co.in

    உரிமைக்குக் குரல் கொடுப்போம்!

    Urimaikku Kural Koduppom!

    Author:

    கே.எஸ். ராதாகிருஷ்ணன்

    K.S. Radhakrishnan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ks-radhakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு

    2. மதச் சார்பின்மையும் - மத்திய அரசும்!

    3. புதுயுகம் காண புதிய அரசியல் சாசனம்!

    4. விவசாயிகள் வியர்வையை விதைத்து வேதனையை அறுவடை செய்கிறார்கள்!

    5. விவசாயிகளின் பிரச்சனைகள்

    6. தூக்கு தண்டனை தூக்கிலிடப்பட வேண்டும்!

    7. சட்டத்தின் காவலர்களும் சந்தேக மரணங்களும்

    8. மனித உரிமைகள்: மறுப்பதும் கிடைப்பதும்

    9. தவிக்க வைக்கும் டங்கல்

    10. 356-வது பிரிவு பற்றி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

    11. சேது கால்வாய்த் திட்டம்

    12. நீதித் துறையில் சிலப் பிரச்சனைகள்

    13. தேர்தல் சீர்திருத்தம் தேவை

    14. தமிழக – கேரள மேற்கு நதிநீர்ப் பிரச்சனைகள்

    15. மங்கலதேவி கண்ணகிக் கோட்டம்

    16. நெய்வேலி அனல்மின் நிலையத்தை தனியாரிடம் தாரைவார்ப்பதேன்?

    17. சீரழிந்து வரும் சிங்காரச் சென்னை

    18. வெள்ளை அறிக்கை வெளியிடுக!

    19. காவிரிப் பிரச்சனை: தமிழகம் செய்ய வேண்டியது என்ன?

    20. திருப்தி இல்லையெனில் திரும்ப அழைப்போம்!

    21. ஆளுநர் - முதல்வர் உறவுகள்

    22. சட்டமன்ற மேலவை: கற்றோரைச் சிறப்பிப்போம்!

    23. போலிகளை ஒழிப்போம்; பொதுவாழ்வை - தூய்மைப்படுத்துவோம்!

    24. சமூகமும் - பெண்ணியமும்

    25. சுற்றுப்புறச் சூழலைக் காப்போம்; சுகமாக வாழ்வோம்!

    26. நுகர்வோர் நலம்: ஏமாற்றாதே! ஏமாறாதே!!

    27. உழைக்கும் குழந்தைகள்

    28. திரைப்படங்களும் தணிக்கைக் குழுவும் - சில குறிப்புகள்

    29. நாம் எங்கே செல்கின்றோம்? I

    30. நாம் எங்கே செல்கின்றோம்? II

    31. தமிழக மீனவர்களைக் காக்க, கச்சத் தீவை மீட்போம்!

    32. மத்திய மாநில உறவுகளும் பிரச்சனைகளும்

    33. தடா சட்டம் அகற்றப்பட வேண்டும்!

    34. பயிரிடும் முறையில் மறுசிந்தனை தேவை

    35. A DEPRIVED STATE

    36. THRICE TO HANG - NEVER TO DIE THE HISTORIC CASE OF GURUSWAMI

    மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் திருமிகு வை.கோ. அவர்களின் அணிந்துரை

    வாளாக வடித்துள்ள இந்நூலால் உரிமைக்குக் களம் அமைப்போம்!!

    அருமைச் சகோதரர், வழக்கறிஞர் திரு. கே.எஸ். இராதாகிருஷ்ணன், மறுமலர்ச்சி - திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமின்றி, மலரவிருக்கும் புதுமைத் தமிழகத்திற்கும் வாய்த்த அறிவுப் புதையலாகத் திகழ்பவர். கழகச் செய்தித் தொடர்பாளராக அவர் ஆற்றிவரும் அரும்பணிகள், மாற்றாரையும் அவர்மீது மதிப்புக்கொள்ளச் செய்வன.

    தேனீயின் தேடல் கொண்டத் துருதுருப்பான விழிகள், மலர்ந்த முகம், சுறுசுறுப்பான விரைந்த நடை, எவரையும் பண்பால் ஈர்த்திடும் பாங்கு, இயக்க முன்னோடிகளிடமும் - இரத்த நாளங்களாம் தொண்டர்களிடமும் வற்றாத பாசம், இலட்சியத்திற்காக அர்ப்பணித்துக்கொண்டுப் போராடும் உறுதி, எள்ளளவும் குறை சொல்லமுடியாத இயல்பு, எவரும் வெல்லமுடியாத வினைத்திட்பம், நுண்மாண் நுழைபுலம் மிக்க அறிவு நுட்பம், இவற்றின் வடிவமாக திகழ்பவர் சகோதரர் இராதாகிருஷ்ணன். வருங்காலத் தமிழாம் ஏற்றம் பெற்றிடப் பெறவேண்டிய மாற்றங்களுக்காக, அல்லும் பகலும் அயராது உழைப்பை அள்ளி வழங்கிவிட்டு, அடக்கத்தோடு தன்னைப் பின்னிறுத்திக்கொள்ளும் நிகரற்ற பண்பாளர்.

    மதுரையில், கடந்த 1986 மே திங்களில் நடைபெற்ற தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பின் (TESO) மாநாட்டில், அவர்தம் செயலாற்றலைக் கண்டு மலைப்புகொண்ட தலைவர்கள், இவர் நம்மியக்கத்திற்குக் கிடைக்கவில்லையே என்று கொண்ட ஏக்கத்தை நான் நன்கறிவேன். என் வாழ்க்கையில் நான் பெற்ற பெரும் பேறு, இப்படிப்பட்ட சீரிய இளைஞர்களின் பாசறையாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அமைந்ததாகும். எப்போதும் உழைத்துக்கொண்டிருப்பதில் உற்சாகம் காணும் இவர், எப்போது படிப்பார் - எப்போது எழுதுவார் என்று. நான் பல முறை வியப்புடன் எண்ணப் பார்ப்பதுண்டு.

    உரிமைக்குக் குரல் கொடுப்போம்! என்ற அவரது இந்நூல், அடுக்கடுக்கான ஆதாரங்களோடும், மிடுக்கான விவாதங்களோடும், தமிழர் உரிமை காக்கும் படைக்கலனாக வெளிவருகிறது. தமிழன் எப்படி எல்லாம் தில்லி ஏகாதிபத்தியத்தால் வஞ்சிக்கப்படுகிறான் என்பதை, இதய வேதனையோடு எடுத்துரைத்து, எதிர்காலத்திலாவது மறுக்கப்பட்ட உரிமைகளை அடைந்திட வேண்டுமென்ற ஆதங்கத்தையும், ஆவேசத்தையும் ஊட்டுகின்ற கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், அன்புச் சகோதரர் இராதாகிருஷ்ணன் ஆற்றலின் ஊற்று என்பதை அடையாளம் காட்டுகிறது. கணக்கற்ற எடுத்துக்காட்டுகள், ஏராளமான புள்ளிவிவரங்கள், நறுக்குத் தெறித்தாற்போன்ற சொற்களால் அவர் எழுப்பியுள்ள வினாக்கள், இளைஞர்கள் நெஞ்சில் இலட்சிய வேட்கையைக் கிளப்பும் என்பது உறுதி.

    "வியர்வையை விதைத்து – வேதனையை

    அறுவடை செய்கிறார்கள் விவசாயிகள்"

    என்ற வரிகள், கரிசல் மண்ணின் கவித்துவமும், இவரில் கலந்துள்ளதைக் காட்டுகின்றன. மதம் பின்னுக்குத் தள்ளப்பட்டு மனிதநேயம் முன் நிறுத்தப்பட வேண்டும் - என்பதற்கு, அவர் எடுத்து வைக்கும் வாதங்களில் கொள்கைத் தெளிவும், வழக்காடும் ஆற்றலும், அழகுற வெளிப்படுகின்றன.

    தலைவர்கள் சிறையிலிருந்து கொண்டு, தேர்தலில் நின்று, வென்று, நாடாளுமன்ற உறுப்பினராகத் தகுதி பெறும்போது, அச்சிறையிலுள்ளோருக்கு வாக்களிக்க வாய்ப்பு மறுக்கப்படுவதை - வகையுறச் சுட்டிக்காட்டி வாதாடுகிறார். 91 வரையிலும், 40 ஆண்டுகளில் 81 முறை, மாநில அரசுகள் மத்திய அரசால் கலைக்கப்பட்டுள்ள ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக - வாள் தூக்குகிறார் தம் வாதங்களால்!

    மனிதத் தன்மையற்ற குற்றத்தை மனிதத் தன்மையற்ற தண்டனையின் மூலம் சந்திக்கக்கூடாது போன்ற வாதங்களால், தூக்குத் தண்டனையைத் தூக்கிலிட வாதாடுகின்றபோது, மனித நேய உணர்வு பொங்குகிறது. எதேச்சதிகார நாடுகளைவிட, ஜனநாயக இந்தியாவில் மனித உரிமை மீறல்களும், சிறைக் கொடுமைகளும் நிறைந்துள்ளதை ஆசியன் வாட்ச் போன்ற அருமையான அமைப்புகளின் மேற்கோள்களோடு படம் பிடித்துள்ளார். தடா போன்ற ஆள்விழுங்கிச் சட்டங்களின் தகாதத்தன்மையை அழகுற எடுத்துரைத்து வாதிடுகிறார்.

    மனித நேயம், மாநில உரிமைகள், காவல்துறையினரின் அத்து மீறல்கள், உழைக்கும் குழந்தைகளின் அவலநிலை, அரசியல் சட்டத்தின் அநீதிகள், காவிரிச் சிக்கல், தேர்தல் சீர்த்திருத்தங்கள், தமிழகத்திற்கு வரவேண்டிய திட்டங்கள், அரசினரின் லஞ்ச ஊழல்கள் பற்றியெல்லாம் அவர் எழுப்பியுள்ள உரத்த சிந்தனைகள், அறிவு ஜீவிகளுக்கு மட்டுமின்றி, அனைத்துத் தரப்பினர்க்கும் எளிதில் சிக்கல்களின் ஆழ அகலத்தைப் புலப்படுத்தித் தீர்வுக்கு வழி காட்டுவன.

    அரசியல், சமூகவியல், பொருளியல் சிக்கல்களைப் போலவே, கண்ணகிக் கோட்டத்தைக் காத்திடக் குரல் எழுப்பும்போது,

    "செங்கோட்டு உயர்வரைச்

    சேணுயர் சிலம்பில்

    பிணிமுக நெருங்கற் பிடர்தலைநிரம்பிய அணியகம்"

    பற்றிச் சிலப்பதிகாரத்தில் இருந்தும், பிரம்மாண்ட புராணத்திலிருந்தும், செய்திகளைக் கூறி, கண்ணகியாம் பத்தினித் தெய்வம் கல்வெட்டுக்களில் பூரணி என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும், ஈழத்தில் பூர்ணிமா (முழுநிலா) நாளில், பத்தினித் தெய்வ விழா நடைபெறுவதையும், கன்னட நாட்டில் சந்திரா என்றே கண்ணகி போற்றப்படுவதையும் குறிப்பிடுவதைக் காணும்போது, தேனீயாக அவர் இலக்கியப் பாக்காடாம் பூக்காட்டிலும் தேன் மாந்திருப்பது தெரியவருகிறது.

    ஒரு பிரச்சினையைப் பற்றி எடுத்துரைக்கும்போது, முடிந்த மட்டும் அதை எல்லாக் கோணங்களிலும் அலசி ஆராய்வதுடன், அது தொடர்பாக இதுவரை பலருக்கும் தெரியாத அரிய பல செய்திகளையும் எடுத்துரைத்துத், தம் தரப்பு வாதத்திற்கு வலுவூட்டி நிலைநாட்டும் ஆற்றல், எண்ணி எண்ணிப் பாராட்டத்தக்கதாகும்.

    போலிகளை ஒழிப்போம், பொதுவாழ்வைத் தூய்மைப் படுத்துவோம் என்ற தலைப்பில், இன்றைக்குப் பொதுவாழ்வு என்பதே குறுக்குவழியில் பணம் சம்பாதிப்பதற்குத்தான் என்ற நிலை ஏற்பட்டுவிட்டதைச் சுட்டிக்காட்டி, வீண் விளம்பரப் போலி அரசியலைச் சாடுகின்றபோது - எழுத்தில கனல் தெறிக்கிறது.

    தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பெருந்தலைவர் காமராசரும், ஓமந்தூர் ராமசாமியும், தமிழ்நாட்டில் எளிமையோடு வாழ்ந்து, நாடெங்கும் ஓய்வின்றி வலம்வந்து பணியாற்றிய உன்னதத்தைப் பின்பற்றி உழைக்க இளைஞர்களை அழைக்கின்றார். ஊழல் ஊதாரித்தனங்களில் ஊறித் திளைத்தவாறு உலா வரும் உன்மத்தர்களாலும் பாழ்பட்ட தமிழகத்தை மீட்கவும், அரசியலில் நேர்மையும், பொதுவாழ்வில் தூய்மையும் நிலைபெறவும், தேவையான நெறிமுறைகளை எடுத்துரைக்கிறார்.

    சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால், மீனவர் வாழ்க்கை, போராட்டம் மிகுந்ததாக ஆகிவிட்டதைப் படிக்கின்றபோது, மீனவர் சகோதரர்களின் மீது ஆணவம்கொண்ட சிங்களப் படைகளால் நடத்தப்படும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைத் தடுக்க முடியாத வேதனையில், இதயம் துடிக்கின்றது.

    தெளிவான, சிறந்த ஆங்கில நடையில், அவர் எழுத்தாற்றலின் வெளிப்பாடாக விளங்கும் ஓர் அரிய கட்டுரையும் - இந்நூலில் இடம் பெற்றுள்ளது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு மும்முறை அதன் வாயில்வரை சென்று மீண்டவரும், வீரபாண்டிய கட்டபொம்மனின் குடும்பத்தில் வந்தவருமான திரு. குருசாமியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிட மேற்கொண்ட முயற்சிகளும் நீதித்துறையில் ஓர் சாதனையாக அதில் பெற்ற வெற்றியும், அழகுறத் தீட்டப்பட்டுள்ளன.

    பல்வேறு இதழ்களில், அவ்வப்போது சூடான அரசியல், சமூகவியல், வரலாறு, பொருளியல் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி, எழுத்தோவியங்களாக வெளிவந்த இக்கட்டுரைகள், கடந்த பல ஆண்டுகளின் அனைத்து உயிர்ப் பிரச்சினைகளைப் பற்றியும், தெளிவான சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளமை போற்றத்தக்கது. இன்றைக்கும் தீர்க்க முடியாத அப்பிரச்சினைகள் குறித்து, எதிர்காலத்தில் நாம் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளின்போது தொடுக்கவிருக்கும் கணைகளாகப் பயன்படத்தக்க அற்புதமான வாதங்களை வழங்கியுள்ளார். தம் எழுத்தாற்றலால், திரு. இராதாகிருஷ்ணன், கால எல்லைகளைக் கடந்து தம் கருத்தை ஆட்சி செய்யும் வல்லமை பெற்றுள்ளார் என்பதை அறிவிக்கும் நூல்தான், உரிமைக்குக் குரல் கொடுப்போம்!

    வடபுலத்தால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் வேளையில், இலட்சியப் போருக்கு வாளாகவும் வேலாகவும் வெளிவந்துள்ள இந்நூலால், நாம், உரிமைக்குக் களம் அமைப்போம்! அக்களத்திற்கு வேல் வடித்துக் கொடுக்கும் சகோதரர் இராதாகிருஷ்ணனின் முயற்சிகள் வெல்லட்டும்!

    திருநெல்வேலி

    24.11.1994

    அன்புடன்

    - வை.கோபால்சாமி, எம்.பி.

    ஏ. நல்லசிவன் எம்.பி.,

    மாநிலச் செயலாளர்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

    தமிழ்நாடு

    சென்னை – 600017

    6.12.1994

    ஆரோக்கியமான விவாதம்

    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் திரு. கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள், பல்வேறு இதழ்களில் எழுதிய எளிமையான, அதே நேரத்தில் கருத்தாழமிக்க கட்டுரைகள் அடங்கிய உரிமைக்குக் குரல் கொடுப்போம்! என்ற நூல் வெளியிடப்படுவது குறித்து நான் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன்.

    "எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்ப தறிவு."

    - என்றான் வள்ளுவப் பெருந்தகை! அப்படிப்பட்ட மெய்ப்பொருள் காண்பதற்குத் தூண்டக் கூடிய ஏராளமான விபரங்களை - நீரோட்டம் போன்ற நடையில் அளித்துள்ளார் நண்பர் இராதாகிருஷ்ணன் என்பது இந்நூலுக்குக் கிடைத்த வெற்றி!

    தமிழகத் தொழில் வளர்ச்சி, மதச்சார்பின்மை, பெண்கள் சமத்துவம், டங்கல் திட்டம், அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவு நீக்கப்பட வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில், தனது கருத்தை ஆழமாக எடுத்து வைத்துள்ளார் - திரு. கே.எஸ். இராதாகிருஷ்ணன்.

    இவருடைய அனைத்துக் கருத்துக்களிலும் ஒருவர் ஒத்துப் போகாமல்கூட - இருக்கலாம். எனினும், பல்வேறு அவசியமான தலைப்புகளில் சிந்தனையைத் தூண்டக்கூடிய விவாதத்தை இந்நூல் முன் வைக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

    ஆரோக்கியமான விவாதம் என்பதே அருகி வருவதும், தனிநபர் துதி அல்லது நிந்தாஸ்துதிதான் அரசியல் மற்றும் எழுத்துகள் என்று ஆகிவரும் சூழலில், ஒரு நல்லதொரு விவாதத்தை நடத்தியுள்ள நூலாசிரியரையும், அதனை அழகாகவும், கவர்ச்சிகரமாகவும் அச்சிட்டு வெளியிட்டுள்ள நக்கீரன் பதிப்பகத்தையும் அன்போடு வாழ்த்துகிறேன்.

    அன்புடன்

    ஏ. நல்லசிவன்

    நா. மகாலிங்கம் பி.எஸ்.சி., எப்.ஐ.இ.,

    தலைவர்

    சக்தி நிறுவனங்கள்

    சென்னை – 600032

    17.11.1994

    உரிமையும் கடமையும்!

    வழக்கறிஞர் திரு. கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் நல்ல ஆர்வத் துடிப்புடன் உருவாக்கியுள்ள உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்னும் கட்டுரைத் தொகுப்பைப் படிக்கும் வாய்ப்புப் பெற்றேன். தமிழ்நாடு பெற்றுள்ள இயற்கை வளங்களை புள்ளி விவரங்களுடன் திறம்படச் சுட்டிக்காட்டியுள்ளார். நமது வளங்களைத் தக்கவாறு பயன்படுத்தினால், தமிழ்நாட்டை மேலும் எவ்வாறு வளமூட்ட முடியும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். உரிமைக்குக் குரல் கொடுக்கும் அதே நேரத்தில், நமது கடமைகளையும் கோடிட்டுக் காட்ட வேண்டும்.

    1. தமிழ் நாட்டு அரசின் நிர்வாகச் செலவுகளைக் குறைத்து, வளர்ச்சிப் பணிகளுக்கான முதலீடுகளை உயர்த்த வேண்டும். ரூ.13800 கோடி வருமானமுள்ள மகாராஷ்டிராவில் அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கை நான்கு லட்சம்தான். ஆனால், ரூ.8600 கோடி வருமானமுள்ள தமிழ்நாட்டில், அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கை பன்னிரண்டு இலட்சத்தைத் தாண்டிவிட்டது. எனவேதான் நமது வருவாயின் பெரும்பகுதி நிர்வாகச் செலவுகளுக்காகச் செலவாகிவிடுகிறது.

    2. மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரங்களுக்காகப் போராடும் மாநில அரசுகள், பஞ்சாயத்து ஒன்றியங்கள், பஞ்சாயத்துக்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்குத் தன்னாட்சி உரிமைகளையே வழங்க மறுக்கின்றன. எனவேதான், நிர்வாகப் பொறுப்புக்கு அங்கத்தினர்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்த்து, ‘தனி அலுவலர்’களைக் கொண்டு நிர்வகித்து வருகிறார்கள். நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் மாவட்டக் கழகங்களுக்கு (District Boards) இருந்த அதிகாரங்கள் கூட இன்று பறிக்கப்பட்டுவிட்டன. இந்த நிலை மாறி, மத்திய அரசு மட்டுமல்லாமல், மாநில அரசுகளும் தமது அதிகாரங்களை - மக்கள் அமைப்புகளுக்கு வழங்க வேண்டும். அப்பொழுதுதான், மக்களுடைய உரிமைகள் மதிக்கப்படும். நாட்டில் உண்மையான குடியாட்சி மலரும்.

    3. மத்திய அரசும் - மாநில அரசும், உறவு முறையில் தாயும் சேயும் போல. சட்டத்தினால் சாதிக்க முடியாத பல காரியங்களை, அன்பால் - பாசப் பிணைப்பால், சுமுகமான நல்லிணக்கத்தால் சாதித்திருக்க முடியும். திரு காமராஜர் தமிழக முதல்வராக இருந்தபொழுது சுமுகமான நல்லிணக்கத்தால் மத்திய முதலீட்டில் கணிசமான பகுதியைத் தமிழகத்துக்குப் பெற்றுத் தந்தார். அவருக்குப் பின்னர் வந்த முதல்வர்கள் பெரும்பாலும் மத்திய அரசையும், மத்திய அமைச்சர்களையும் நேசக் கரம்கொண்டு, நல்லிணக்கத்துடன் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டார்களோ எனத் தோன்றுகிறது. மத்திய அமைச்சர்கள் அனைவரும் முதலமைச்சருக்கு ஒப்பானவர்கள். அவர்களைப் பாச முறையில் - நல்லிணக்கத்தோடு அணுகினால் மட்டுமே, மாநிலத்தில் பல வளர்ச்சித் திட்டங்களை விரைவில் செயலாக்க முடியும். உறவு முறையில் நல்லிணக்கம் பாதிக்கப்படும்பொழுது, பல வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதில் தயக்கமும் - தாமதமும் ஏற்படுகிறது. இது நாட்டுக்குப் பேரிழப்பாகும்.

    4. அண்டை மாநில அரசுகளுடன் வேற்றுமைகளை மறந்து, பரஸ்பர நல்லிணக்கத்தோடும் - பாசப்பிணைப்போடும் அணுகினால், நீர்ப்பாசனத் திட்டங்கள், போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து, மின் உற்பத்தி போன்ற பல வளர்ச்சித் திட்டங்களை விரைவில் செயலாக்க முடியும். நல்லிணக்கம் மேலோங்காத காரணத்தினால், நதி நீர்வளம், பாசன மேம்பாடு, மின் உற்பத்தி போன்ற பல ஆதார வளங்கள், உரிய முறையில் பயன்படுத்தப்படாமல் வீணாவதைக் காண்கிறோம். இவையனைத்தும், நாம் உரிமைக்குரல் மூலம் சாதிப்பதைவிட, பாசக்கரம் கொண்டு அணுகிச் செயலாக்க முனைவது விரைவில் நற்பயன் தரும். எனவே, பாசக்கரம்கொண்டு நல்லிணக்கத்தோடு செயல்பட்டால் மட்டுமே, பசிப்பிணியால் வாடுகிற கோடிக்கணக்கான மக்களுக்காக உரிமைக்குரல் கொடுத்தவர்களாவோம். நாட்டுக்கு மட்டுமல்ல, வீட்டிற்கும் இது பொருந்தும். அண்டை நாடுகளுடன் உறவு நிலையும் இதுபோன்றதே.

    5. பஞ்சாப் மாநிலத்தில் ஆங்காங்கே குளிர்சாதனக் கிடங்குகள் (Cold Storage) பலவற்றை ஏற்படுத்தி, பழங்களைப் பாதுகாப்பாக வைத்து ஆண்டு முழுவதும் விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் விவசாயிகள் நல்லபயன் பெறுகிறார்கள். தமிழகத்தில், இலவச மின்சாரத்திற்குப் பதிலாகப் பழங்களுக்கும், காய்கறிகளுக்கும் குளிர்சாதனக் கிடங்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தால், விவசாய விளைபொருள்களுக்கு ஆண்டு முழுவதும் சீரான விலை கிடைக்க வழி ஏற்படும். இதன் மூலம் ஆண்டுதோறும் - சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல் விவசாயிகள் கூடுதல் பயன்பெறுவர்.

    6. தூக்குத் தண்டனையைக் கைவிட்டுவிட்ட நாடுகளில், கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நமது நாட்டில், தனிப்பட்டவர்களின் உயிர், விலை பேசப்படுகிறது. இந்த நிலையில், மரண தண்டனை இன்னும் கடுமையாகவும் - விரைவாகவும் செயல்படுத்தப்பட வேண்டும். தண்டனைக் காலம் குறைக்கப்படுவதும், குற்றவாளிகள் விடுப்பில் விடுவிக்கப்படுவதும், தவிர்க்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் குற்றங்கள் குறையும். எனவே இது குறித்து ஆசிரியர் மேலும் ஆராய வேண்டும்.

    7. நீதித்துறையில், வழக்கறிஞர்கள் வாய்தா வாங்கும் மனோபாவத்தைத் தவிர்த்தால் தேக்கங்கள் குறையும். அமெரிக்க நாட்டில் உள்ளதைப் போல, வழக்கறிஞர்கள் நீதிபதிகளுக்கு உதவியாளர்களாகப் பணிபுரிந்தால், தேக்கத்தைக் குறைக்க முடியும்.

    8. ஒரே சமயத்தில், பாராளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள் ஆகிய அனைத்து மக்கள் மன்றங்களுக்கும் தேர்வு நடைபெற வேண்டும். இதன் மூலம், மக்களுடைய உரிமைகள் பறிக்கப்படுவதையும், முடக்கப்படுவதையும் தவிர்ப்பதோடு, தேர்தல் செலவுகளையும் குறைக்க முடியும். தேர்தலில் போட்டியிடுபவர்களுக்குச் செலவு வரம்பு உள்ளதைப் போல, அரசியல் கட்சிகளுக்கும் சட்டப்படி செலவு வரம்பு வேண்டும்.

    9. இந்தியாவில், 20,000 மெக்காவாட் மின்சார பற்றாக்குறை உள்ளது. இதனால் தொழில் முதலீடுகளும், வளர்ச்சியும் தடைபடுகிறது. நெய்வேலி போன்ற பல பெரிய திட்டங்களைத் தனியார் துறைக்கு வழங்கி, மின் உற்பத்தியை முடுக்கிவிட வேண்டும். இதன்மூலம் உற்பத்தித்திறன் கூடவும், உற்பத்திச் செலவு குறையவும் வாய்ப்புள்ளது.

    10. சென்னை நகரத்தில், மக்கள் தொகை ஐந்து லட்சத்திலிருந்து ஐம்பது லட்சமாக உயர்ந்துள்ளது. மாநில அரசு திட்டமிட்டுச் செயல்பட்டால், ‘சிங்கப்பூர்’ போன்று சென்னையைச் சிறந்த நிலைக்கு உயர்த்த முடியும். அண்டை நாடுகளுக்கு ஒரு நல்ல சந்தையாகத் (International Market) திகழ வாய்ப்புள்ளது. இதுபற்றி மாநில அரசு சிந்திக்க வேண்டும்.

    11. நமது கல்வி முறையில் தக்க மாற்றங்கள் வேண்டும். பத்து வயதிற்குக் குறைந்த வயதுள்ளவர்களை வேலையில் அமர்த்துவதைத் தடைசெய்ய வேண்டும். 10 வயது முடிந்த குழந்தைகளுக்கு ஒரு நேரம் கல்வியும், ஒரு நேரம் தொழிலும் என்ற அடிப்படையில் கல்வியுடன் கூடிய தொழில் வேண்டும். இது கட்டாயக் கல்வியாக இருக்க வேண்டும். இதனை மாநில அரசு மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்த வேண்டும்.

    12. திரைப்படங்களில் பெண்கள் கவர்ச்சிக் கருவியாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இன்று தொலைக்காட்சி அமைப்புக்கள், உலகப் பொருள்களுக்கும் - பன்னாட்டு நிறுவனங்களுக்கும், சந்தையை உருவாக்கப் பயன்படுகிறது. இந்த நிலை நீடித்தால் நமது சிறு தொழில்களும், குடிசைத் தொழில்களும், அவற்றை நம்பியுள்ள கோடிக்கணக்கான குடும்பங்களும் சிதைந்துவிடும். இந்த நிலை தவிர்க்கப்பட்டு, நமது தொலைக்காட்சி நமது சிறு தொழில்களும், குடிசைத் தொழில்களிலும் உற்பத்தியாகும் பொருள்களுக்குச் சந்தையை உருவாக்கப் பாடுபட வேண்டும்.

    13. நமது நாடு பொருளாதாரத்தால் வலிவு இழந்த நிலையில் உள்ளது. 1960-ஆம் ஆண்டு, ஓர் அமெரிக்க டாலர் ரூ. 3.75 ஆக இருந்தது. 1966-இல் ஒரு டாலர், ரூ.26.00 ஆக மாறியது. படிப்படியாக, நமது இந்திய நாணயத்தின் மதிப்புக் குறைந்து, இன்று ஒரு டாலர் ரூ. 31.50 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இது, நமது நாட்டிற்குத் தலைக்குனிவுதான். இந்த நிலை, சீர் செய்யப்படாவிட்டால், நமது வருங்கால சந்ததியினரின் உரிமைகளை நாம் அடகு வைத்தவர்கள் ஆவோம். பற்றாக்குறைத் திட்டங்களைத் தவிர்த்து, நடைமுறைச் செலவுகளைக் குறைத்து நமது வருவாய்க்கு ஏற்ற வளர்ச்சித் திட்டங்களை வகுப்பதும், காலத் தாமதமின்றிச் செயல்படுத்துவதும், நமது தொழில் கலாச்சாரத்தை நமது பொருளாதாரத்தை, நமது நாட்டை வளர்க்கும். நமது வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தினால், தமிழ்நாடு இஸ்ரேலைப்போல், தென் கொரியாவைப்போல், தைவானைப்போல், சிங்கப்பூரைப் போல வளர வாய்ப்புள்ளது.

    14. உரிமைக்குக் குரல் கொடுப்போம்! என்னும் கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர், தமது பெரும்பகுதியில் மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மாநில அரசுகள், பஞ்சாயத்துக்கள், - மாநகராட்சிகள், நகராட்சிகள், கூட்டுறவு அமைப்புகள் போன்ற மக்கள் மன்றங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளக் குரல் கொடுக்கத் தவறிவிட்டன, எனவே, மாநில அரசிடமிருந்து மக்கள் மன்றங்களுக்கும் வறுமையில் வாடும் மக்களுக்கும் – திக்கற்றவர்களுக்கும் உரிமைக் குரல் கொடுக்க, இந்நூல் ஆசிரியர் எழுச்சிமிகு இளைஞர் இராதாகிருஷ்ணன் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என விழைகிறேன்.

    அன்புடன்

    - நா.மகாலிங்கம்

    ஆர். சிவகுமார்

    நடிகர் - ஓவியர்

    சென்னை – 600017

    15.10.1994

    நாடும் - நாமும், நலம் பெற்றிட வேண்டும்!

    ‘உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ - படித்தவுடன் பல்வேறு சிந்தனைகளைக் கிளறி விடுகின்றது. எண்ணற்றக் கேள்விகளை நம்முள் எழுப்புகிறது.

    வெள்ளையனிடமிருந்து நாம் விடுதலைப்பெற்று நாற்பத்து ஏழு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

    இம்மண்ணின் கடைக்கோடி மாந்தர் பலர், உண்ண உணவு, உடுக்க உடை, ஒதுங்க உறையுள் இன்றி, இன்னுமும் அல்லல் படும் அவலம் நீடிக்கின்றது.

    தீட்டப்படும் திட்டங்கள், சென்றடைய வேண்டியவர்களுக்குச் செல்லவிடாமல், இடையில் ஒரு கூட்டம் அட்டைபோல் அதை உறிஞ்சிவிடுகின்றது.

    நம் உரிமை என்ன என்று உணராமல், குரல் கொடுக்கத் தெம்பில்லாமல் ஒரு சாரார் இருக்க, எஞ்சியுள்ள ஒரு சாராரின் குரலைக் காதில் போட்டுக்கொள்ளாமல், நமது மத்திய அரசு, புதிய பொருளாதாரக் கொள்கையின் தாராளமயமாக்கல், ‘காட்’ ஒப்பந்தம் மூலமாக, அயல்நாட்டு நிறுவனங்கள் இங்கு காலூன்ற பச்சைக்கொடி காட்டி, பட்டுக் கம்பளம் விரித்துள்ளது.

    அடுத்து பத்து ஆண்டுகளுக்குப் பின், ‘நமது மண்ணில் விளைந்த உணவுப் பண்டம், நம்மூர்ப் பருத்தி ஆடை, நம் மண்ணில் கிடைத்த இரும்பால் செய்யப்பட்ட கார்கள், நமது மலைகளில் விளைந்த மூலிகை மருந்துகள்’ என்று பெருமைப்படுவது போய், நமது பண்பாடு, கலாச்சாரம் எல்லாமே மறைந்து, உலகு தழுவிய ஒரு கலப்படக் கலாச்சாரச் சேற்றில் நாமும் அமுங்கிப்போய் விடுவோமோ என்ற அச்சம் எழுகின்றது.

    அந்நியர் ஆட்சியிலிருந்து போராடி விடுதலை பெற்ற நாம், மீண்டும் அவர்கள், பொருளாதார அடிமைகளாக நம்மை ஆக்கிட, வாயில் கதவைத் திறந்து விடுகிறோமோ, என்ற சந்தேகம் எழுகின்றது.

    ஒவ்வொருவரும் நமது உரிமையை உணர்ந்து உரத்துக் குரல்கொடுக்க வேண்டிய கட்டத்திலிருக்கிறோம்.

    ஒரு தனி மனிதனின் அரசியல், சமூக, பொருளாதார, சுதந்திர உரிமைகள் என்னவென்பதையும், அவற்றை எவ்வாறு காத்திடல் வேண்டுமென்பதையும் தெளிவாக விளக்கி, ஐ.நா.சபை பொதுக்குழு 1948 - டிசம்பர் 10-ந் தேதி ஒரு தீர்மானமே நிறைவேற்றியுள்ளது.

    அதுபோன்று இந்நூலாசிரியர், சாதி, மத, இன மொழி பேதமின்றி அனைவருக்கும் பொதுவான மனித உரிமைகள் பலவற்றைத் தெளிவாக இதில் விளக்குகிறார்.

    தேக்கமுற்றுக் கிடக்கும் திட்டங்கள், நிறைவேற்றத் தவறிய பணிகள், நாட்டில் நடக்கும் அநீதிகள் என ஆசிரியர் உணர்ந்து சொல்லி, மக்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து போராடினால் நாடும், நாமும் நலம் பெறமுடியும் என்று கூறுகிறார்.

    சேலம் இரும்பாலையை விரிவுபடுத்தி 65,000 டன்னுக்கு எவர்சில்வர் தயாரிப்பைக் கூட்டினால், உலகநாடுகளின் எவர்சில்வர் தேவையைப் பூர்த்தி செய்யும் பணியில், பெரும் இலாபம் ஈட்டமுடியும்.

    மன்னார் வளைகுடாவை, பாக் ஜலசந்தியுடன் இணைக்கும் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால், 48 மணி நேர கால விரயமும், 350 மைல் தூரக் கப்பல் பயணமும் குறையும். ஆண்டிற்கு, அரசுக்கு 290 இலட்ச ரூபாய் வருவாய் கிடைக்கும்.

    கேரளத்திலிருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்து, அரபிக் கடலில் கலந்து வீணாகும் 1100 டி.எம்.சி. நதி நீரில், 82 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தால், 8.2 இலட்சம் ஏக்கர், தமிழகத்தில் பாசனம் செய்ய முடியும்.

    தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள மரக்காணத்திலிருந்து, ஆந்திர - கிருஷ்ணா மாவட்டம் பெத்தகஞ்சம் வரை செல்லும் 420 கி.மீட்டர் தூர பக்கிங்காம் கால்வாயின், நீர்வழிப் போக்குவரத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தால், கால்வாய் வழியே சரக்குகள், பயணிகள் போக்குவரத்தைத் தொடர்ந்து, சாலைப்போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைக்கலாம்.

    இதுபோன்று கிடப்பில் போடப்பட்ட மத்திய அரசின் பயன் தரும் திட்டங்களை, நம் கவனத்துக்குக் கொண்டு வருகிறார்.

    1956-ல், நேருவால் துவக்கிவைக்கப்பட்டு, இன்று 600 கோடி மூலதனத்தில் செயல்பட்டுவரும் நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன், முதன் முதலாக நம்நாட்டில் நிலக்கரியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்த நிறுவனம்.

    இந்த நிறுவனத்தின் ‘ஜீரோ’ யூனிட்டை, 1992-ல் மத்திய அரசு, சரத்தக் என்ற அமெரிக்கருக்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது.

    இதுவரை நஷ்டத்தையே கண்டிராத இந்த யூனிட்டை, மத்திய அரசு விற்க வேண்டிய அவசியம் என்ன?

    இந்த ஒப்பந்தத்தினால், 2000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு இல்லாது போகும்.

    நெய்வேலி நிறுவனம் இதுநாள் வரை, தான் உற்பத்தி செய்த மின்சாரத்தை தமிழக அரசுக்கு 66.5 பைசாவுக்குத்தான் விற்று வந்திருக்கிறது.

    தனியார் மின் உற்பத்தி செய்யும் பட்சத்தில், தமிழக அரசு யூனிட்டுக்கு 2ரூ. 75 காசு தர நேரிடும். அதற்கு மேலும் தரவேண்டி வரலாம் என, எச்சரிக்கை செய்கிறார் நூலாசிரியர்.

    டங்கல் அறிக்கையை - ஏற்று ‘காட்’ - ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால், காப்புவரி, போக்குவரத்து, தகவல் தொடர்பு, வங்கி நிர்வாகம், விமானப் போக்குவரத்து முதலான துறைகளில் - இந்தியாவின் கட்டுப்பாடு குறையும்.

    இந்தியாவின் சுயசார்பு, தன்னிறைவுக் கொள்கைகள் பின்னடையும், தொழில்வளம் பெருகிய நாடுகளின் சந்தையாக இந்தியா மாறும் என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.

    இந்திய மண்ணின் பெருமைக்கும், இலக்கியங்களுக்கும், இஸ்லாம், கிருத்துவ மதத்தினர், சிறந்த பணியாற்றியுள்ளனர்.

    இன்று நாகூர் தர்கா, வேளாங்கன்னி மாதா கோயில்களுக்கு இந்துக்கள் செல்கின்றனர். மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு முஸ்லீம்கள் செல்கின்றனர்.

    மதம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மனிதநேயம் முன்நிறுத்தப்படுவதன் - ஆரோக்கியமான அடையாளங்கள் இவை.

    இந்தச் சூழலில், அரசியலில் மதம் கலப்பதை அனுமதித்தோமானால், பல குழப்பங்களுக்கு ஆட்பட்டு இந்தியா சிதறுண்டு போய்விடும். இத்தனைக் காலம் கட்டிக்காத்து வந்த மதச்சார்பின்மை கொள்கையும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெருமையும், மண்ணோடு மண்ணாகிவிடும் என எச்சரிக்கிறார்.

    விவசாயிகளின் அவல வாழ்வுக்கு வறட்சி, விலைபொருள்களுக்கு ஏற்ற விலை நிர்ணயமின்மை, கடன் சுமை முக்கிய காரணங்களாகும்.

    உற்பத்தி செய்யும் பொருளின் விலை, விவசாயியின் குடும்பத்தைக் காக்கக்கூடிய வகையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

    ஒரு மனிதத் தன்மையற்ற குற்றத்தை, இன்னொரு மனிதத் தன்மையற்ற தண்டனை மூலம் சந்திக்கக் கூடாது என்ற உயர்ந்த கொள்கையைக் கடைப்பிடித்துத் தூக்கு தண்டனையை நிரந்தரமாக ஒழித்திட வேண்டும்.

    காவல் கைதிகள் சந்தேகமான வகையில் மரணம் அடைவதைத் தடுக்கும் வகையிலும், சட்டத்தை மீறிச் செயல்படும் அதிகாரிகளைத் தண்டிக்க வழி செய்யும்படியுமான ஒரு மசோதாவைத் தயாரித்து நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும்.

    வழக்குகள் மீதான தீர்ப்புகள் விரைவில் கிடைத்திட, மக்கள் மன்றங்களுக்கும் - தீர்ப்பாயங்களுக்கும் வழக்கைக் கொண்டு செல்லலாம்.

    சாட்சியங்கள் இல்லையென்ற அடிப்படையில் வழக்கை வத்தி போடாமல், குறிப்பிட்ட தேதிகளில் சாட்சிகளை வரவழைத்து அழகாக முடிக்கக் கடுமையான நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    ஒரு வேட்பாளர் மரணமுற்றாலும், அந்தத் தொகுதியில் தேர்தல் நடைபெற வகை செய்தல் வேண்டும்.

    கள்ள ஓட்டைத் தவிர்க்க வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் - அடையாள அட்டை வழங்க வேண்டும்.

    தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், அமைச்சர்கள் தங்கள் பதவிகளை - ராஜினாமா செய்து, நிர்வாகப் பொறுப்பை ஆளுநரிடம் விட்டு, பின் தேர்தலில் இறங்க வேண்டும்.

    விகிதாச்சார பிரதிநித்துவ அடிப்படையில், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

    மற்றும் திரைப்படங்களின் தணிக்கை முறைகள், உழைக்கும் காந்தைகள், நுகர்வோர் நலம், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, மேலவையின் முக்கியத்துவம், காவிரி நதிநீர்ப் பங்கீடு, சிங்காரச் கொளையாக அழகுப்படுத்த ஆலோசனை... இப்படி பல ஆழமான அங்கங்களுடன் கட்டுரைகள் உள்ளன.

    இந்தத் தொகுப்பிலே வெளியாகியுள்ளவை, பல்வேறு நாளேடுகளிலும், வார இதழ்களிலும் வெளிவந்தவைதானென்ற போதிலும், ஒட்டுமொத்தமாக நூல் வடிவில் படிக்கும்போது, நமக்குள் ஒரு துக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது...

    என் இனிய சகோதரர் இராதாகிருஷ்ணன் அவர்கள், துணிச்சல் மிக்க, சுறுசுறுப்பான வழக்குரைஞர்.

    வாழ்வின் பெரும்பகுதியை, தொழிலுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய விஷயங்களைப் படித்திட, சிந்திக்க, எழுதிடச் செலவழிப்பவர்.

    இந்த நாடும், மக்களும் முன்னேற என்ன செய்யவேண்டும் என்ற கேள்விகளைத்

    Enjoying the preview?
    Page 1 of 1