Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thookkukku Thookku
Thookkukku Thookku
Thookkukku Thookku
Ebook190 pages1 hour

Thookkukku Thookku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மரண தண்டனைக்கு எதிராக தேசிய அளவில் பெரும் விவாதங்கள் நடந்து வரும் ஒரு காலகட்டத்தில் அந்த விவாதத்தின் சகாப்தத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த நூல்.

தமிழகத்தில் மரண தண்டனை இயக்கத்தின் வரலாற்றை ஆழமான வரலாற்றுப் பின்புலத்துடன் முன்வைக்கிறது. இந்த நூல்

Languageதமிழ்
Release dateSep 20, 2021
ISBN6580142906763
Thookkukku Thookku

Read more from K.S. Radhakrishnan

Related to Thookkukku Thookku

Related ebooks

Reviews for Thookkukku Thookku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thookkukku Thookku - K.S. Radhakrishnan

    https://www.pustaka.co.in

    தூக்குக்கு தூக்கு!

    Thookkukku Thookku!

    Author:

    கே.எஸ். இராதாகிருஷ்ணன்

    K.S. Radhakrishnan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ks-radhakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வேண்டாம் மரணதண்டனை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    இணைப்பு 1

    இணைப்பு 2

    இணைப்பு 3

    இணைப்பு 4

    இணைப்பு 5

    இணைப்பு 6

    இணைப்பு 7

    இணைப்பு 8

    இணைப்பு 9

    இணைப்பு 10

    இணைப்பு 11

    கே.எஸ். இராதாகிருஷ்ணன்

    கே.எஸ். இராதாகிருஷ்ணன் கரிசல் மண்ணான கோவில்பட்டி அருகிலுள்ள குருஞ்சாக்குளம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர். அரசியலில் தன் தடத்தைப் பதித்து வருகிறார். மனித உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நதிகள் இணைப்பு தேசியமயமாக்கல், விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்காகப் பல்வேறு பொதுநல வழக்குகளை உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் போன்றவற்றில் தொடுத்துள்ளார். Amenesty international இயக்கத்திலும் இணைந்து பணியாற்றி வருகிறார். பல்வேறு அரசியல் போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார். தொழிலாளர் அமைச்சகத்தின் குழந்தை தொழிலாளர் ஆலோசனைக் குழு போன்ற பல்வேறு மத்திய அரசு அமைச்சகங்களின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றியவர். திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக மத்திய அரசால் பலமுறை நியமிக்கப்பட்டுள்ளார். கொச்சித் துறைமுகக் கழகத்தின் நடுவராகப் பணியாற்றினார். ஐ.நா. மன்றத்தில் நியூயார்க்கில் கிடைத்த பெரிய பொறுப்பை உதறி அரசியல் பணியில் ஈடுபட்டள்ளார்.

    இந்திய சட்ட மையத்தின் உறுப்பினராகவும் இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவில் இணைச் செயலாளராகவும் பொறுப்பேற்றுப் பணியாற்றுகிறார். ‘உரிமைக்குக் குரல் கொடுப்போம்’, ‘மனித உரிமைச் சட்டங்களும் சில குறிப்புகளும்’. ‘நிமிர வைக்கும் நெல்லை’, ‘சேதுக்கால்வாய் ஒரு பார்வை’, ‘கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி’, ‘தமிழ்நாடு 50’, ‘123 இந்தியாவே ஓடாதே நில்’, ‘கச்சத்தீவு’, ‘தி.மு.க. - சமூக நீதி’, ‘DMK - Social Justice’, ‘கலைஞரும் முல்லைப் பெரியாறும்’, ‘தமிழக மேலவை’ போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசின் சார்புள்ள தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் போன்ற அமைப்புகளுக்கு அரசு வழக்கறிஞராக இருந்துள்ளார். கி.ரா.வின் ‘கதை சொல்லி’யின் இணையாசிரியர், ‘பொதிகை- பொருநை-கரிசல் கட்டளை’ அமைப்பின் நிறுவனர்.

    முன்னுரை

    திராவிட இயக்க அரசியல் என்பது பல ஆழமான அரசியல் சிந்தனையாளர்கள், அறிஞர்கள், அரசியல் போராளிகளால் வளர்த்தெடுக்கப்பட்டது என்பது நமது சமகால வரலாறு. காலகாலமாக தமிழர்களின் சிந்தனைகளை மூடிய முட்புதர்களை களைந்து நவீன சிந்தனைகளை பயிரிடும் களமாக தமிழ் நிலத்தை பண்படுத்திய தந்தை பெரியார் வழியில் வந்த அரசியல் சிந்தனையாளர்களில் ஒருவர்தான் நண்பர் கே.எஸ். இராதாகிருஷ்ணன். தனது முப்பதொன்பது அரசியல் பயணத்தில் ஒரு வழக்கறிஞராக ஒரு அரசியல் தொண்டனாக போராட்டத்தில் அவர் ஆற்றி இருக்கும் பங்களிப்புகள் அளப்பரியது. நதிநீர் தேசியமயமாக்கல் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வெற்றியும் கண்டவர்.

    தமிழக நதிநீர் பிரச்சினைகள் தொடர்பாக கே.எஸ்.ஆர், தொடர்ச்சியான பல போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறார். காவிரி, முல்லைப் பெரியாறு, தென்குமரியில் உள்ள நெய்யாறு, வடக்கே உள்ள பாலாறு, பழவேற்காடு பிரச்சினை என நதிநீர் உரிமைகளைக் குறித்து முழுமையாக அறிந்தவர் மட்டுமல்லாமல் அதற்காக இடையறாது போராடி வந்திருக்கிறார். 1983லிருந்து சென்னை உயர்நீதிமன்றம், டெல்லியில் உச்சநீதிமன்றம் வரை நதிகள் தேசியமயமாக்கப்படவேண்டும். கங்கை, காவிரி இணைப்பில்லாமல் வைகை, தாமிரபரணி தென்குமரியிலுள்ள நெய்யாறைத் தொடவேண்டும் என்றும் கேரளாவில் அரபிக்கடலுக்கு வீணாகச் செல்லும் தண்ணீரைத் தமிழகத்திற்கு திருப்பவேண்டும் என்றும் தொடர்ந்து டெல்லிக்கும் சென்னைக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஓடிக்கொண்டுள்ளார். கச்சத்தீவு, சேதுகால்வாய் திட்டம், சேலம் இரும்பாலை பிரச்சினை, கொளச்சல், கடலூர், வாலிநோக்கம் என்ற பல துறைமுகங்கள் தமிழகத்தில் வரவேண்டும் என அனைத்து தமிழகப் பிரச்சினைகள் குறித்த பார்வைகொண்டவர். இவருடைய நெருங்கிய சகாக்கள் ஆறு ஏழு பேர் தற்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள். இவரும் வழக்கறிஞராக தொடர்ந்து இருந்திருந்தால் அந்த அளவுக்கு இவர் உயர்ந்திருப்பார். ஐ.நா. மன்றப் பொறுப்பையும் உதறித் தள்ளியவர். இவர் நேசித்த பொது வாழ்வு இவரைக் கைவிட்டது.

    பதவிகளோ, பரிசுகளோ, பணமோ கே.எஸ்.ஆரின் பயணத்தில் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. எத்தனை புறக்கணிப்புகள் தனக்கு நேர்ந்த பொழுதும் அதற்காக தனது எண்ணங்களையும் போராட்டங்களையும் அவர் விட்டுக்கொடுத்ததில்லை. தான் ஏணியாக இருந்த பலர் உயர்ந்த இடத்திற்கு சென்று உட்கார்ந்து திரும்பி பாராமல் இருந்த சமயத்திலும் புன்னகையுடன் தனது பணிகளை தொடர அவர் தயங்கியதும் இல்லை.

    கே.எஸ்.ஆரின் பொதுநலத் தொண்டின் பரிமாணங்கள் பற்பல. மனித உரிமை ஆர்வலர், மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர், விவசாயிகளுடைய பிரச்சினைகளுக்காக உச்சநீதிமன்றத்தில், உயர்நீதிமன்றத்தில் வாதாடியவர். கண்ணகி கோவில், கர்நாடகத் தமிழர்மீது தாக்குதல், சிறையிலுள்ள கைதிகள் வாக்குரிமை எனப் பல பொதுநல வழக்குகளைத் தொடர்ந்தவர்.

    கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், சமூக நீதி போராளிகள் நமது சட்டமன்றத்தையும், பாராளுமன்றத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும்போதுதான் ஜனநாயகம் அதன் உண்மையான அர்த்தத்தை பெறுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கே.எஸ்.ஆர் போன்றவர்கள் அரசியல் சதுரங்கத்தில் அந்த இலக்கை இன்னும் எட்ட முடியாமல் இருப்பது நமது அரசியல் அமைப்பின் பலவீனத்தையே காட்டுகிறது.

    இந்த புத்தகம் மரண தண்டனை என்ற நமது காலத்தின் கொடுங்கனவிற்கு எதிராக ஆழமான சாட்சியம் கூறுகிறது. இந்தியாவில் மரண தண்டனை எதிர்ப்பு போராட்டத்தின் வரலாற்றை துல்லியமாக எடுத்துரைக்கிறது. நாகரீகம் சமூகத்தின் விழுமியங்களை கேலிக் கூத்தாக்கும் மரண தண்டனைக்கு எதிராக நம் மனசாட்சியை தட்டி எழுப்புகிறது. கே.எஸ்.ஆரின் சமூக நீதிப் போராட்டத்தில் இந்த நூல் இன்னொறு அழுத்தமான தடம் என்பதில் சந்தேகமில்லை.

    அன்புடன்

    மனுஷ்ய புத்திரன்

    நன்றி

    தி.க.சி. திருநெல்வேலி

    கவிஞர் மனுஷ்ய புத்திரன்

    ரவி நாயர் - புதுடில்லி.

    மணா

    ப்ரியன்

    வழக்கறிஞர் ப. அமர்நாத்

    கழனியூரன்

    கவிஞர் மதுமிதா- இராஜபாளையம்

    அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தலைமையகம், புதுடில்லி.

    என்னைப் பலவகையில் வார்ப்பித்த பொதுவுடமைவாதியும், பிரபல மூத்த வழக்கறிஞருமான எங்களின் நெல்லை மண்ணைச் சார்ந்த மறைந்த என்.டி. வானமாமலை அவர்களின் நினைவுக்கு.

    ‘But What am I?

    An infant crying in the night:

    An infant crying for the light

    And with no language but a cry’

    - Tennyson

    நான் யார்?

    இருட்டில் அழும் குழந்தையா

    எனது அழகை வெளிச்சத்திற்காகவா

    அதற்கு மொழி இல்லை

    ஆனால் அழுகைதான்.’

    - டென்னிஸன்

    நியாயங்கள் தவறாகவும்

    தவறுகள் நியாயங்களாகத்

    தோற்றம் தருகின்றன.

    - ஷேக்ஸ்பியர் (மேக்பெத்)

    உங்களுக்கு

    உங்களுக்கு

    எதை அழித்தாக வேண்டும்?

    உயிரையா? உடலையா?

    உங்களுக்கு

    எதை மறைத்தாக வேண்டும்?

    வீரத்தையா? வீழ்ச்சியையா?

    உங்களுக்கு

    எதைத் திருத்தியாக வேண்டும்?

    தவறையா? வரலாற்றையா?

    உங்களுக்கு

    எதை நிர்மாணித்தாக வேண்டும்?

    அச்சுறுத்தலையா? அடக்குமுறையையா?

    ஒரே நீதி ஒரே உண்மை

    ஒரே சட்டம்

    சாத்தியமா உங்கள் அதிகாரத்தில்

    விதவிதமான தராசுகளைத் தூக்கித்திரியும்

    உங்களில் எவருக்கும் அருகதையில்லை

    மரணக்கயிற்றை மாட்ட

    அ. வெண்ணிலா

    வேண்டாம் மரணதண்டனை

    கண்ணுக்குக் கண்

    கைக்குக் கை

    காலுக்குக் கால் என்பதுபோல்

    பழிக்குப் பழி என

    உயிருக்கு உயிர் வாங்கும்

    பழைய நெறி வேண்டாமே

    வாழும் தற்காலத்திலிருந்து

    கற்காலம் திரும்ப வேண்டாமே

    மனிதரில் விலங்கனையோருக்கு

    தண்டனை பயம் அவசியமே

    திருந்தி வாழ வாய்ப்புள்ள மனிதருக்கு

    மரண தண்டனை வேண்டாமே

    மதுமிதா

    அத்தியாயம் 1

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது கருணை மனுக்களைக் குடியரசுத் தலைவர் நிராகரித்த பின் சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை வழங்கிய நிலையில், மாறிவரும் இந்தச் சூழலில் தூக்குத் தண்டனை தேவைதானா என்ற விவாதம் சூடுபிடித்திருக்கிறது.

    உலக நாடுகள் எங்கும் தூக்குத் தண்டனை வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதங்கள் நீண்டகாலமாகவே நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் 21ஆம் நூற்றாண்டிலாவது இதற்குத் தீர்வு கிடைக்குமா என்ற ஏக்கம் மனித உரிமை ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.

    குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் அப்துல் கலாம் மரண தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்ய மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அப்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.சி. லகோதியும் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜும் மரண தண்டனை தொடரவேண்டும் என்ற கருத்தைத் தனித்தனியாகத் தெரிவித்தனர். உச்சநீதிமன்றம், மரண தண்டனை வழக்கில் அமைச்சரவையின் ஆலோசனையைக் குடியரசுத் தலைவர் ஏற்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்தியச் சிறைகளில் 50 மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர். 20 கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரிடம் பரிசீலனையில் உள்ளன.

    1957இல் முதன்முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசு கேரள அரசாகும். இந்த அரசில் ஈ.எம்.எஸ். முதல்வராகவும் நீதிபதி கிருஷ்ணய்யர் உள்துறை அமைச்சராகவும் இருந்தனர். அந்தக் காலகட்டத்தில் ஒரு சதிவழக்கில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த சி.ஏ. பாலனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சி.ஏ. பாலன் கேரள ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்தார். ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரால் பாலனின் மனு நிராகரிக்கப்பட்ட போதும், கிருஷ்ணய்யர் போராடி பாலனைத் தண்டனையிலிருந்து காப்பாற்றினார். இதேபோன்று நீதிபதி கிருஷ்ணய்யர் உச்சநீதிமன்றத்தில் பணியில் இருந்தபோதும் எடிகா அன்னம்மா என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையிலிருந்தும் விடுவித்தார்.

    எடிகா அன்னம்மா வழக்கில் இரண்டு இளம்பெண்கள் ஒரு இளைஞனை விரும்பினாலும் அவர்களில் ஒருத்தி தன்னைக் காட்டிலும் மற்றவளிடம் அவன் நெருக்கமாக இருக்கிறான் என நினைத்துக் கோபப்பட்டு அதற்குப் போட்டியாக இருந்தவளையும், அவள் குழந்தையையும் கொன்றுவிட்டாள். அந்தப் பெண்ணுக்கு வயதோ 22. நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியது. உயர்நீதிமன்றம் அதை உறுதி செய்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது நீதிபதி கிருஷ்ணய்யரிடம் நீதிபதி சர்க்காரியா உடனிருந்து விசாரித்தார். அந்தத் தீர்ப்பில் கிருஷ்ணய்யர் உத்தமர் காந்தியை மேற்கோளாகக் காட்டி, ‘கடவுள் தந்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது’ என எடிகா அன்னம்மா வழக்கில் தீர்ப்பை எழுதினார்.

    வால்மீகி ஒரு கொள்ளைக்காரராக இருந்தார். ஏழ்மை

    Enjoying the preview?
    Page 1 of 1