Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - May 2018
Kanaiyazhi - May 2018
Kanaiyazhi - May 2018
Ebook208 pages1 hour

Kanaiyazhi - May 2018

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

May month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580109502955
Kanaiyazhi - May 2018

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - May 2018

Related ebooks

Reviews for Kanaiyazhi - May 2018

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - May 2018 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி, மே 2018

    மலர்: 53 இதழ்: 02 மே 2018

    Kanaiyazhi May 2018

    Malar: 53 Idhazh: 02 May 2018

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கணையாழி, மே 2018

    தலையங்கம் - ம.ரா.

    கமண்டலத்தைச் சாய்க்காதோ கருப்பு?

    உலக அளவில் பேசப்படும்

    திரை ஒளி இயக்குனர் செழியனை

    இந்தியாவும் பாராட்டி இருக்கிறது

    பெருமைப்படுவோம்!

    பாலியல் அதிகாரச் சுரண்டலில்

    தென் மாவட்டக் கல்வி நிறுவனங்கள்

    மேல்தட்டு மக்களின் கீழ்மட்ட உணர்வுகள்!

    வெட்கப்படுவோம்!

    வக்கிரங்களைக் கடந்து

    மதவெறியிலும் பாலியல் வன்முறை

    அருவருப்பு அடைவோம்!

    உச்ச நீதிமன்றக் காவிரித் தீர்ப்புக்குப்

    பதவுரை பொழிப்புரை கேட்கும்

    தேர்தல் தந்திரங்களில்

    அவமானப்படுவோம்!

    காவிரி!

    தமிழர்களுக்கு நிலத்தையும் பொழுதையும்

    கலை இலக்கியப் பண்பாட்டையும்

    வளம் பெறச் செய்த வாழ்க்கைத்துணை.

    ஒகேனக்கல்லில் விழும் வேகத்தில்

    கல்லில் மோதி புகை நீராகி

    காணாமல் போனதாம் காவிரி!

    குண்டத்தில் விழுந்த காவிரியை

    உயிரைக் கொடுத்துத்

    திருப்பி விட்டானாம் சோழமன்னன்!

    மன்னன் கவேரன் பாவம் போக்க

    மகளாகப் பிறந்தவள் காவிரியாம்.

    பொன் துகளையும் சுமந்து வந்ததால்

    பொன்னி ஆனாளாம்!

    மேற்கில் உதயம் கிழக்கில் மறைவு

    ஊற்றாய்த் தோன்றி (சதுரக்) குளத்தில் நீந்தி

    தலைக்காவிரியாய் வெளிப்படுகிறாள்!

    மலையில் குதித்தும் காட்டில் ஓடியும்

    வயலில் நடந்தும் மணலில் விளையாடும்

    தண் தமிழ்ப் பாவைக்குப்

    பூம்புகார்க் கடல் புகுந்த வீடு!

    வழியில் பேச்சுத் துணைக்கு

    வாய் கொடுக்கும் சிற்றாறுகள்.

    பெண் என்பதாலோ என்னவோ

    காவிரிக்கும் கடைசிவரை சோதனைகள்.

    தடுத்து நிறுத்தும்

    கண்ணம்பாடி அணை!

    இரண்டாகப் பிரிக்கும்

    கௌத ஆசிரமம்

    மீண்டும் ஒன்றாகும் காவிரியைச்

    சிவசமுத்திரம் பிரிக்கும்.

    தாங்க முடியாத காவிரி

    தற்கொலை போல

    மலையிலிருந்து குதிக்கும்

    இரண்டு அருவிகளாக!

    இரு மாநில எல்லைப் பகுதியில்

    ஆடுதாண்டும் காவிரியாக

    ஒடுங்கிப் பயந்து ஒளிந்து மறைந்து

    ஓடிக் கடக்கும்!

    மேட்டூரில் திசை மாற்றம்.

    அமராவதி, கரூரில் ஆறுதல் சொல்லும்!

    அகண்ட காவிரியின் ஆனந்தக் கூத்தை

    முக்கொம்பு கொள்ளிடத்தில் தள்ளும்!

    ஆனாலும்

    வழியில் சேர்த்து வைக்கும் உள்ளாறு!

    இடையில் அரங்கனும்

    ஆனைக் கோயிலும்!

    அங்கங்கே மேலணைகள் கீழணைகள்

    தடுப்பணைகள் தடைமடைகள் தாண்டிக்

    கடலில் வாழ்க்கை கலக்கும்!

    காவிரி

    உதிக்கிற இடத்தில் நீர்தான்!

    ஓடியும் குதித்தும்

    வருகிற இடங்களில்

    ஆறுதான்!

    திருச்சிக்குக் கிழக்கே

    திரும்பி நடக்கும் போது,

    காவிரி

    தமிழர்களின் வாழ்க்கை!

    இருமருங்கும் பசுமை வளர்த்து

    வரவேற்கும் வயல்வெளியில்

    கரையோர மக்களுடன் கைகுலுக்கும்!

    தடைகளைக் கடந்துவரும்

    தள்ளாட்டம் தெரியாது.

    உழவர்களின் முகம் பார்த்த

    உற்சாகம் கரை புரளும்!

    தமிழைப் போலவே

    காவிரிக் கதையிலும் அகத்தியர்!

    தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம்

    சமஸ்கிருதம் மலாய் மொழியிலும்

    அகத்தியர் இருக்கிறார்!

    பரமசிவன் திருமணத்தில்

    வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.

    வடக்கு வாழவேண்டும்

    அகத்தியரை அனுப்புகிறார்கள்!

    இருக்குவேதத்திலும் அகத்தியர்!

    வசிட்டரின் சகோதரர்!

    தினை மாவு, நஞ்சு அம்பு

    தயாரிப்பதில் வல்லவர் !

    வனவாசத்தில் இராமருக்கு

    வாழ்த்துச் சொன்னதோடு

    ஆயுதம் வழங்கியவர்!

    தலைச்சங்கப் புலவர்!

    காவிரிப் பூம்பட்டிணத்தில்

    இந்திர விழா நடத்தியவர்!

    புதுச்சேரி உழவர்கரை ஆசிரம

    வேதபுரிப் பல்கலைக் கழகத்தில்

    தமிழ்க் கல்வி தந்தவர்!

    ஆணவ மலையை அடக்க உதவிய

    காவிரியைக் கமண்டலத்தில்

    அடக்கிவைத்தவர்.

    நாரதர் அறிவுரைப்படி,

    கமண்டல நீரைக் காகம் கவிழ்த்ததால்

    காவிரி வந்ததாம்!

    புராணங்களிலும் கூடக்

    காவிரி முடக்கப்பட்டிருக்கிறது!

    காவிரி வேண்டிப் பிரதமருக்குக்

    கருப்புக் கொடி!

    அன்று

    அகத்தியர் கமண்டலத்தைச் சாய்த்து

    அடைக்கப்பட்டுக் கிடந்த காவிரியைக்

    கருப்புக் காகம் விடுவித்ததாமே!

    இப்போதும்

    இந்தியக் கமண்டலத்தில் காவிரி!

    கமண்டலத்தைச் சாய்க்காதோ

    கருப்பு!

    அன்புடன் ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை - மு. இராமசுவாமி

    கவிதை – தமிழ் உதயா

    சிறுகதை - சாந்தி சித்ரா

    கட்டுரை - சா. கந்தசாமி

    கவிதை – மாயன்

    கட்டுரை - திருநின்றவூர் தி. சந்தானகிருஷ்ணன்

    கட்டுரை – ஆத்மார்த்தி

    கவிதை பா. ஜெய்கணேஷ்

    கட்டுரை - சீனிவாசன் நடராஜன்

    சிறுகதை - சிவகுமார் முத்தய்யா

    நினைக்கபடும் – மரன்

    கட்டுரை - .அனோஜன் பாலகிருஷ்ணன்

    கட்டுரை - எழில்முத்து

    வாழ்த்துகிறது கணையாழி!

    சிறுகதை - ஜி. மீனாட்சி

    ஏன் எழுதினேன்? - சுனில் கிருஷ்ணன்

    கட்டுரை - கவிதைக்காரன் இளங்கோ

    எதிர்வினை - பொன்மணி

    கவிதை - தினேஷ் ராஜேஸ்வரி

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    கட்டுரை - மு. இராமசுவாமி

    விட்டுவிட்ட வரிகளில் கவிஞன் இருக்கிறான்...

    விட்டுவிட்ட சம்பவங்களில் குற்றவாளி இருக்கிறான்...

    மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனம் முறைகேடானது என்ற மதுரை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கானது, மதுரையிலிருந்து என்ன காரணத்தாலோ அவசரமாகச் சென்னைக்கு நகர்த்திச் செல்லப்பட்டு, வாதி-பிரதிவாதி விவாதங்கள் அனைத்தும் முடிந்த பிறகும், தீர்ப்பிற்காகக் கடந்த அக்டோபர் 2017இலிருந்து, கடந்த ஆறு மாதங்களாக வானம் பார்த்த பூமியாய், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம், விடிவை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறது. விசாரணை முடிந்தபின்பு, மூன்று மாதங்களுக்குமேல் தீர்ப்பிற்காக எந்த வழக்கும் காத்திருக்கக்கூடாது என்று சொன்னவர்தான் அவர்! அவருக்கே இப்படியொரு நிலை! காலத்தே முறைப்படி அறிவித்தால் தான் அது தீர்ப்பு! இல்லையெனில் அது ஏய்ப்பிற்கு வழியமைத்துக் கொடுத்துவிடக் கூடும். 08-05-2007இல், ஹைதராபாத்தின் மெக்கா மசூதியில் வீசப்பட்ட குண்டுவெடிப்பில், 9 பேர் கொல்லப்பட்டு, 58 பேர் காயம்பட்டிருந்தும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த–குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்த–அசீமானந்த் உட்பட ஐவரையும் தேசியப் புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் (NIA), சற்றேறக்குறைய 11 ஆண்டுகளுக்குப்பின், 16-04- 2018 இல் விடுவித்துத் தீர்ப்பு சொன்னதும், தீர்ப்பு வாசித்து முடித்த சில மணி நேரங்களில், தீர்ப்பளித்த நீதிபதி ரவீந்தர் ரெட்டி, தன் பதவி விலகலை உடனே உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதனுக்கு அனுப்பி வைத்ததும், அது ஏற்கப்படாததும், சில ஐயங்களை - யூகங்களைக் கிளப்பி விட்டிருப்பதும் நாம் அறிந்தவைதாம்! ஆக, ‘தாமதப்படுத்தும் நீதி மறுக்கப்படும் நீதியாகும்’! அதைப்போலவே, SAVE MKU அமைப்பின் அமைப்பாளர் பேராசிரியர் முனைவர் அ.சீனிவாசன், 16-05- 2014 காலையில், வழக்கம்போல் நடைப்பயிற்சிக்குப் போகையில், அன்று- நாடாளுமன்றத் தேர்தலின் ‘தலையெழுத்து’ அறிவிக்கப்பட இருந்த நிலையில்–அடியாட்களை வைத்துப் பேராசிரியர் அ.சீநிவாசனின் கைகளை முறித்து, அவரின் ‘தலையெழுத்’தை மாற்றிய வழக்கில், மூன்றாவது குற்றவாளியாகக் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ள பெயரும், இப்போதைய துணை வேந்தர் செல்லத்துரையினுடையதுதான்! இதுபோக, குற்றப் பின்புலமுடைய வழக்கிலிருந்து இன்னமும் விடுபடாத மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஆட்சியில், அவரால் நியமிக்கப்பட்டிருக்கிற தேர்வாணையரும், துணைத் தேர்வாணையருமே குற்றப் பின்புலவழக்கில் சிக்கிக் கிடப்பவர்கள்தாம்!’ என்ன பொருத்தம் இந்தப் பொருத்தம்’! இவை எவற்றிலும், காலங்கள் கடந்தும் இன்னும் தீர்ப்பு வராத நிலையிலேயே, இப்பொழுது இன்னொரு புது வழக்கும் மதுரை காமராசர் பல்கலைக் கழக அலுவலகத்தை வளைய வந்தபடி, அதன் வாசற்கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது.

    அது, மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், ‘தயவுக்குத் தண்டமாய்க் கேட்கிற பாலியல் அனுசரணை’க்காக, அருப்புக்கோட்டைக் கல்லூரிக் கணிதப் பேராசிரியை முனைவர் நிர்மலாதேவி, தனக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கும் இருக்கும் நெருக்கத்தை, அவர்கள் தந்திருக்கிற புத்தொளிச் சத்தை, அதன்மூலம் அடைய இருக்கும் ஆதாயத்தை, மாணவியரிடம் ஆசை வார்த்தைகளாய்க் கூறி, ‘அதற்கு’ மாணவியரை மனச்சலவை செய்கின்ற ‘வைரல்’ செப்புமொழிகளாய் அவரின் செல்பேசி உரையாடல் அமைந்திருக்கிறது! வியாபாரமாகிப்போன இன்றையக் கல்விச்சூழல் இது மாதிரியான கேவலங்களைத்தான் அரங்கேற்றும். எல்லாமே ‘பணம்’ என்றாகிவிட்ட இந்தக் கல்விமுறையில், எல்லாத் துறைகளையும் போல், ‘பெண்ணென்றால் பாலியல் பேரம்’ என்பதையும், கைப்புண்ணைக் கண்ணாடி கொண்டு தேடிப் பார்ப்பது போலானதுதான்! குறைந்தபட்சமாகக் கடந்த ஓராண்டில் மட்டுமாவது, பல்கலைக்கழகங்கள் சார்ந்த அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் போடப்பட்ட அனைத்துப் பணி நியமனங்களையும் பதவி உயர்வுகளையும் ஆய்விற்கும் விசாரணைக்கும் உட்படுத்தினால், பாதாளம்வரைப் பாய்ந்திருக்கிற பல பகீரதப் பூதங்கள் வெளிவரும் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும். இதற்கு ஒத்துழைக்க, இவர்கள் யாரும் முன்வரமாட்டார்கள். அந்தளவு அறக்கொலை செய்தவர்களாய்த்தான் இவர்கள் இருப்பார்கள். இவர்களால் உச்சம் முதல் உள்ளூர்வரை மச்சம் அடைந்தோர் யார் யார் என்பது அப்பொழுதுதான் தெரியவரும்! எல்லாம் ஊழல் மயம்! காவிரியையே புறந்தள்ளி, இப்பொழுது, ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் இந்தப் பிரச்சினையால், ‘பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும்’ பெண்களை உயர்கல்விக்கு அனுப்ப விரும்புகிற சாதாரண பெற்றோர்களும், நேர்மையையும் தூய்மையையும் கல்வியில் விரும்புகிற தமிழர்களும்தாம் எதுவும் செய்வதறியாது தவித்துக் கிடக்கின்றனர்!

    இதன் முன்கதை, இப்படி இருக்கிறது:- ‘மதுரை காமராசர் பல்கலைக்கழக உயரதிகாரிகளுடன் கடந்த பத்து ஆண்டுகள் கொண்டிருந்த பல்வேறுவகைத் தொடர்புகளின் நீட்சியாகப் பேராசிரியர் முனைவர் நிர்மலாதேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு நடப்பாண்டு 2018 இல், மூன்று முறை வந்ததாகக் கூறப்படுகிறது. சனவரி மாதக் கடைசியில் தொலைநிலைக் கல்விப் பிரிவுத் தேர்வுத் தாள்களைத் திருத்த வந்துள்ளார் [உரையாடலின் ஒரு பகுதியில் இப்படிக் குறிப்பிடுகிறார்:- ‘இங்கெ பேப்பர் வேல்யூவேஷனுக்கு முன்னாடி…ல இருந்தே, எனக்கு இங்கெ ரெண்டு மூனு இம்பார்ட்டண்ட்டான பெர்சன்ஸ் தெரியும். அவுங்க எனக்கு ரிக்யுர்மெண்ட்ஸ் வச்சிருந்தாங்க...... பொலிட்டிகல் இன்புளுவன்ஸோடதான் வி.சி.யே வர்றாங்க….டிஎன்பிஎஸ்ஸி பேப்பர் வேல்யூவேஷனுக்குக்கூட என்னையக் கூப்டாங்க ஒரு தரம்… நீங்க அப்ளை பண்ணுங்க…நா ஒங்களுக்கு ஆடர் கொடுக்க வைக்கிறேன் அப்படீன்னு

    Enjoying the preview?
    Page 1 of 1