Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - February 2021
Kanaiyazhi - February 2021
Kanaiyazhi - February 2021
Ebook175 pages54 minutes

Kanaiyazhi - February 2021

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

December 2020 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateJan 18, 2021
ISBN6580109506700
Kanaiyazhi - February 2021

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - February 2021

Related ebooks

Reviews for Kanaiyazhi - February 2021

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - February 2021 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி பிப்ரவரி 2021

    மலர்: 55 இதழ்: 11 பிப்ரவரி 2021

    Kanaiyazhi February 2021

    Malar: 55 Idhazh: 11 February 2021

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கணையாழி பிப்ரவரி 2021

    தலையங்கம் -. ம.ரா
    சூறையாடலில் விளைநிலங்கள்!

    கணையாழி ஆசிரியர்

    அம்மா வந்தாள் தி.ஜா-வுக்கு

    நூற்றாண்டு!

    நாமும் கொண்டாடுவோம்!

    குடியரசு நாளில் விவசாயிகள்

    கொடியேற்றி இருக்கிறார்கள்!

    சுதந்திர இந்தியாவில்

    முதல் பிரதமர் நேரு

    தேசியக் கொடியை

    ஏற்றிவைத்த செங்கோட்டையில்-

    ஒவ்வொரு ஆண்டும்

    சுதந்திர தினத்தில்

    பிரதமர் தேசிய கொடியைப்

    பறக்கவிடும் செங்கோட்டையில்

    விவசாயிகள்

    பறக்க விட்டிருக்கிறார்கள்!

    சுதந்திர இந்தியாவில் இதற்கு

    முன் நிகழ்வு இல்லை!

    தாஜ்மகால் கட்டிய ஷாஜகானின்

    தில்லி கோட்டைக்கு

    வரலாற்றுப் பதிவுகள் ஏராளம்!

    யுனெஸ்கோ அறிவித்த

    வரலாற்றுச் சின்னம்!

    ஆக்ராவில் தாஜ்மகால்

    தில்லியில் செங்கோட்டை என்றாலும்

    இரண்டும் அமைந்திருப்பது

    யமுனை நதிக்கரையில்தான்!

    முன்னரே 1783 வாக்கில்

    சீக்கியர்கள் கைப்பற்றிய கோட்டையில்

    கோதுமை விவசாயிகள்

    கொடியேற்றி இருக்கிறார்கள்!

    செங்கோட்டையிலிருந்து

    அரசாண்ட கடைசி முகல் மன்னன்

    அங்கேயே சிறை வைக்கப்பட்டான்

    ஆங்கிலேயர்களால்

    பின்னர் நாடும் கடத்தப்பட்டான்!

    முகலாய அரசர்கள்

    கட்டிய கோட்டையில்

    பட்டொளி வீசிப் பறக்கும்

    தேசியக் கொடிக்குப் பக்கத்தில்

    பறக்கின்றன சங்கங்களின் கோரிக்கைகள்!

    விவசாயிகளின்

    அடையாளம் மாறி இருக்கிறது

    ஏர் கலப்பை

    டிராக்டர் ஆகியிருக்கிறது!

    சக்கரம்!

    மானுட வரலாற்று

    நாகரிக விளைச்சலின்

    கண்டுமுதல்!

    விவசாயிகள் போராட்டத்தில்

    அரசியல் இருக்கிறதாம்!

    எதில் இங்கே அரசியல் இல்லை?

    விவசாயிகளைத்

    தூண்டி விடுகிறார்களாம்!

    தூண்டிவிடுவதற்கு

    அரசு இடம் தரலாமா?

    டிராக்டர் சக்கரங்களை

    விசுவரூபம் எடுக்கத்

    தூண்டி இருக்கின்றன

    அரசுச் சக்கரம்!

    பொறுத்தவர் பூமி ஆள்வார்களாம்!

    மண்ணை நம்பி இருப்பவர்கள்

    ஆள நினைக்கவில்லை

    வாழ நினைக்கிறார்கள்!

    மரபு மீறி கொடியேற்றுவது

    சரியில்லை எனினும்

    தேசியக் கொடியையும்

    டிராக்டர்களில் ஏற்றி

    தங்கள் கோரிக்கைகளுக்காக

    சாலைகளில் உணர்வுகளை

    விதைத்த போதே

    அரசுச் சக்கரம்

    களைகள் வராமல் அவர்களுக்குக்

    கை கொடுத்திருக்க வேண்டாமோ?

    நாடாளுமன்றப் பெரும்பான்மை

    மக்களுக்கு விரோதமானால்

    என்ன நடக்கும் என்பதற்கு

    விவசாயிகள் போராட்டம்

    வித்திட்டு இருக்கிறது!

    இனியேனும் அரசு

    மக்கள் விருப்பத்தில் மண்போடாமல்

    வீண் மதிப்பிற்கு விலை போகாமல்

    கூடிப் பேசி முடிவுக்கு வந்தால்

    கொண்டாடக் காத்திருக்கிறது

    இந்தியா!

    நிலத்தோடும் நீரோடும்

    இயற்கையோடும் வறுமையோடும்

    எப்போதும் விவசாயிகளுக்குப்

    போராட்டம்தான் கொண்டாட்டம்!

    இதோ! தொடங்கி இருக்கிறது

    தேர்தல் கொண்டாட்டம்!

    ஓய்வில் இருந்த கட்சிகள் எல்லாம்

    கூட்டணி பேர வெளிச்சத்தில்

    குத்தாட்டம் போடுகின்றன!

    களத்துக்கு வர இருந்த

    ரஜினிகாந்த்துக்குப் பதில்

    புதிய புதிய கட்சிகள் உதயம்!

    வேடிக்கை பார்க்கவும் காட்டவும்

    ஊடகப் போட்டிகளின் கொண்டாட்டம்!

    கொண்டாட்டத்தில் குதிக்கக்

    காத்திருக்கிறது மக்கள் கூட்டம்!

    ஊழல் குற்றச் சாட்டில் கைதாகி

    இப்போது

    விடுதலையாகி இருக்கிறார்

    சின்னம்மா!

    இறந்தபின் தீர்ப்பு வந்ததால்

    தண்டனையிலிருந்து தப்பிய

    பெரியம்மாவுக்குக்

    கல்லறை மாடம் கட்டிமுடித்து

    குடியிருந்த இடத்தையும் கோயில் ஆக்கிக்

    கொண்டாடி வருகிறார்கள்!

    பிறந்த நாளை அரசு விழாவாகக்

    கொண்டாடப் போகிறார்களாம்!

    சூறையாடலில் விளைநிலங்கள்!

    அன்புடன்

    ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை - தி.ஜானகிராமன்

    கவிதை - கா.ந.கல்யாணசுந்தரம்

    கட்டுரை - மு. இராமசுவாமி

    சிறுகதை - கே.எஸ்.சுதாகர்

    கவிதை - தி.கலையரசி

    கவிதை - கவிஜி

    குறுநாவல் - ஸிந்துஜா

    கட்டுரை - கவிஞர் எஸ். சண்முகம்

    கட்டுரை - குமரி எஸ். நீலகண்டன்

    கவிதை - சா.கா.பாரதி ராஜா

    சிறுகதை - உஷாதீபன்

    கவிதை - சன்மது

    கட்டுரை - இ.அண்ணாமலை

    சிறுகதை - தனஞ்செயன்

    கட்டுரை - வெ.ஹேமந்த் குமார்

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    கட்டுரை - தி.ஜானகிராமன்

    01.jpg

    பாலசரஸ்வதியின் நடனம்

    (ஒரு பாமரனின் நினைவுகள்)

    பரத நாட்டியத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். பாலசரஸ்வதி நாட்டியம் ஒன்று. இன்னொன்று மற்றவர்களின் நாட்டியம். சென்ற டிசம்பர் கடைசி வாரத்தில் மியூசிக் அகாடமியில் பாலசரஸ்வதியின் பரதநாட்டியத்தைப் பார்த்தபோது இப்படித்தான் எனக்குத் தோன்றிற்று. சூழ்நிலையால் எழுந்த பிரமையோ என்று சந்தேகப்பட்டேன். ஆனால் மற்ற நாட்டியங்களையும் இந்த நாட்டியத்தின் நினைவையும் சேர்த்துப் பார்க்கும்போது இது வெறும் பிரமை இல்லை என்று தீர்மானிக்க முடிகிறது. பாலசரஸ்வதி தலைசிறந்த பரதநாட்டியக் கலைஞர் என்பது முடிவாக ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி. பரதநாட்டியத்திலேயே தனிச்சிறப்பும் தூய்மையும் பாரம்பரியமும் நிறைந்த கலை மரபின் பிரதிநிதி என்று போற்றப்படுகிறார் அவர். இந்த முன்கூட்டிய எண்ணங்களால் அவருடைய கலையை மற்றவர்களின் ஆடல்களினின்று வேறுபடுத்திப் பார்க்கத் தோன்றுகிறதோ என்று நினைத்தேன். ஆனால் எட்ட நின்று தெளிவுடன் நினைத்துப் பார்க்கும் அளவிற்கு காலம் கழிந்தும் அந்த எண்ணம் மாறவில்லை. பாலசரஸ்வதியின் நாட்டியம் தனிப்பட்டது தான். மற்றவர்களின் நடனங்களை அதற்கு இணையாகச் சொல்ல இதயம் அறிவு எல்லாம் மறுக்கின்றன.

    ஓர் அனுபவத்தை முக்கியமாகச் சொல்ல வேண்டும். பாலசரஸ்வதி ஆட ஆரம்பித்து முடிக்கிற வரையில் நம்முள் ஏற்படுகின்ற லய உணர்ச்சி அது. அலாரிப்பு தொடங்கிய உடனேயே நம் உள்ளம் ஒரு லயத்தில் ஏற்றி வைக்கப்பட்டு விடுகிறது. தன்னை மறந்த அந்த லயத்தில் நாம் மிதக்கிறோம். சாதாரண நிலையிலிருந்து நம் அறிவும் உணர்வும் எழுதப்பட்டு உயர்த்தப்படுகின்றன. கடைசி வரையில் இந்த லயத்தில் நாம் ஒன்றி நிற்கின்றோம். இடையிடையே வரும் இடைவேளையில் கூட இந்த அனுபவத்திலிருந்து நாம் விண்டு பிரிந்து விடுவதில்லை. அந்த லயத்தின் கார்வையில் நாம் ஊசலாடுகிறோம். இந்தக் கார்வை லயம் முதலிய சொற்கள் செப்பிடு வித்தையல்ல. ஓர் அதிசயமான அனுபவத்தை எழுத்தில் சொல்ல முடியாத தவிப்புத்தான்.

    தன்னை மறக்கச் செய்வது என்று சொல்லும் போது இன்னொரு அனுபவத்தையும் சொல்லித்தானாக வேண்டும். உடலை மறக்கிற அனுபவம் தான் அது. எழுதுவதற்குச் சற்று ரசக் குறைவான விஷயமாகச் சிலருக்குப் படலாம். ஆனால் அனுபவத்தில் ஓர் உண்மையை சொல்வதில் தப்பென்ன? பால சரஸ்வதியின் நாட்டியம் நம்மை உடலை மறக்கத்தான் செய்கிறது. சதையைப்பற்றிய நினைவு உணர்வு யாவும் அங்கு நசிந்து விடுகின்றன. சித்திபெற்ற கலைஞர் ஒருவர் தன் ஆத்மாவை கலானுபூதியை தன் படைப்புத் திறனை அசைவுகளாக பாவங்களாக வெளிப்படுத்தும் ஒரு புனிதக் காமத்தை காணும் உணர்ச்சி ஒன்றுதான் நிற்கிறது. இந்தப் புனித நோன்பிலும் தவத்திலும் நாமும் பங்கு கொள்வது தான் இதில் கவனிக்கப்பட வேண்டிய செய்தி. நாம் சும்மா பார்க்கின்றவர்களாக மட்டும் நின்றுவிடுவதில்லை. நாமும் கலைஞர்களாக மாறுகிறோம். ஆனால் மௌனமாக சலனம் இன்றி இந்தத் தவத்தில் நாம் பங்கு கொள்கிறோம். நம் நாட்டியம் அனுபூதியாக நடக்கிறது. வெளிப்படையானச் சலனமின்றி நிகழ்கிறது. உயர்ந்த கலைஞர்களின் படைப்புத் திறனுக்குத்தான் இந்தச் சக்தி உண்டு.

    02.jpg

    இவ்வாறு உணர்ச்சிகளையும் அவற்றின் தரத்தையும் உணர்த்தக்கூடிய நாட்டியம் உபாசனை தான். கலையை உபாசனை செய்வது கலைஞர் மட்டுமில்லை ரசிகர்களுந்தான். ரசிகர்களை இப்படித் தன்னுடன் இழுத்துச் செல்வது பாலசரஸ்வதி போன்ற தெய்வ கலைஞர்களுக்குத்தான் முடியும். இன்று பரத நாட்டியத்தில் என்னமோ இது பாலசரஸ்வதிக்குத்தான் முடிகிறது.

    இவ்வளவு தூரம் நம்மை நாமே மறக்கும் போது இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். இதை பிரஸ்தாபிக்கத் தேவையே இல்லை. ஆனால் எங்கோ ஓர் ஆங்கிலக் கட்டுரையில் அரங்கத்தில் ஆடும்போது

    Enjoying the preview?
    Page 1 of 1