Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - October 2023
Kanaiyazhi - October 2023
Kanaiyazhi - October 2023
Ebook175 pages56 minutes

Kanaiyazhi - October 2023

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

October 2023 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateOct 7, 2023
ISBN6580109510358
Kanaiyazhi - October 2023

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - October 2023

Related ebooks

Reviews for Kanaiyazhi - October 2023

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - October 2023 - Kanaiyazhi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கணையாழி அக்டோபர் 2023

    மலர்: 58 இதழ்: 07 அக்டோபர் 2023

    Kanaiyazhi October 2023

    Malar: 58 Idhazh: 07 October 2023

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    E:\Priya\Book Generation\Kanaiyazhi\1-min.jpg
    உச்சிப் பிள்ளையாரும் தாயுமானவரும்

    நேரான மரங்களே முதலில்

    வெட்டப்படுகின்றன என்ற போதும்

    பயன்படுகிறோம் என்ற உணர்வில்

    சூரியனை நோக்கிய பயணப் பாதையை

    மாற்றிக்கொள்வதில்லை

    மரங்கள்!

    நேர்மையானவர்களே

    குறிவைக்கப்படுகிறார்கள் என்று

    சாணக்கியன் சொன்னதைக் கேட்டு

    அதிகார உச்சியில் இருப்பவர்கள்

    அச்சுறுத்துகிற போதும் வளைந்து கொடுக்காமல்

    வரலாறாய் வாழ நினைக்கிறார்கள்

    இப்போதும் சிலர்!

    காவிரிநீர்ப் பிரச்சினை போல

    ஆண்டுக்கொரு முறை பிள்ளையார் சதுர்த்தி!

    மலைக்கோட்டை உச்சியில்

    பிள்ளையார் இருந்தபோதும்

    அங்குள்ள நவக்கிரகங்கள் என்னவோ

    சூரியனையே பார்த்துக்கொண்டிருக்கின்றன!

    இந்தியா விடுதலை பெறத்

    திலகர் கொண்டாடிய தேசியத் திருவிழா!

    சுதந்திரத்தை மீட்க

    இந்தியா போராடும் காலத்திலும்

    பிள்ளையார் சதுர்த்தி!

    இனி பிள்ளையார் சதுர்த்தி போல

    ஒரே நேரத்தில் இந்தியா முழுதும்

    ஒரே தேர்தலாம்!

    ஐந்துநாள் கொண்டாட்டம் முடிந்து

    தாரை தப்பாட்டம் அடித்து முழக்கி

    பட்டாசு வெடித்து ஆட்ட ஊர்வலம் நடத்தி

    நீரில் கரைக்கிறார்கள் பிள்ளையார் சிலைகளை!

    இதோ ஐந்தாண்டு முடியப்போகிறது!

    தொடங்கிவிட்டது தேர்தல் கொண்டாட்டம்!

    கரையப் போவதும் நிலைக்கப் போவதும்

    மக்கள் கையில்!

    தாமே உருவாக்கிக்

    குழந்தைகளோடு வீட்டில் கொண்டாடிய

    பிள்ளையாரைக் காணவில்லை.

    வண்ணங்களில் 70 அடி உயரங்களில்

    தெருவை அடைத்துப்

    பந்தல் போட்டுக் கூட்டம் கூட்டும்

    விளம்பர வெளிச்சச் சூட்டில்

    கார்ப்பரேட் நிறுவனப் பிள்ளையார் சிலைகள்!

    பெண் பாதியாக மாதொரு பாகர்

    பாதி மிருகமாக நரசிங்கப் பெருமாள்!

    முகம் பெண்ணாகக் காமதேனு என்று

    மன வெளிச்சப்பாடுகளில் கடவுள்களின்

    படைப்புகள்!

    ஆனைமுகம் எலி வாகனம் தொப்பை வயிறு

    கொழுக்கட்டை, சுண்டல் என்று

    குழந்தைகள் முதல் முதியவர் வரை

    இரசிக்கும் படைப்பில் பிள்ளையார்!

    பெண்ணாகவும் பார்த்திருக்கிறது செங்கல்பட்டு.

    வாதாபிப் பிள்ளையாருக்குத்

    தமிழகக் கோயில்களில் முதல் மரியாதை!

    திருச்சி மலைக்கோட்டையில்

    உச்சிப் பிள்ளையார்!

    உலகின் தொன்மையான பாறைகளுள் ஒன்று

    மலைக்கோட்டை!

    பல்லவர் காலம் முதல் அண்மைக்காலம் வரை

    போர்க்களக் கோட்டை!

    ஆதிசேடனுக்கும் வாயு பகவானுக்கும் நடந்த

    பலசாலி யுத்தத்தில் தூக்கி எறியப்பட்ட

    மேரு மலையின் சிறு துண்டு என்றும்

    இராமரின் முடிசூட்டு விழாவுக்குச்

    சென்று திரும்பிய விபீடணன் கையில்

    பரிசுப்பொருளாக இருந்த அரங்கநாதரைத்

    தரையில் வைக்கக் கூடாது என்பதால்

    கையிலேயே வைத்திருந்த களைப்பு நீங்க

    ஒரு சிறுவன் கையில் கொடுத்துக்

    காவிரிக்கரையில் விபீடணன் ஓய்வெடுக்க

    வாங்கிய சிறுவன் வைத்துவிட்டு

    ஓடிப்போன இடம் திருவரங்கமாம்!

    ஓடிப்போனவனைத் தேடிப்பிடித்து

    தலையில் குட்டிய இடம் மலைக்கோட்டையாம்!

    குட்டுப்பட்ட வீக்கம் குறையாமல்

    இப்போதும் அங்கு பிள்ளையார் சிலையாம்!

    மேலே இருந்து பார்த்தால்

    படிக்கட்டுகள் தும்பிக்கை போலக்

    கிழக்கிலிருந்து பார்த்தால்

    பிள்ளையார் சிலை போல

    வடக்கிலிருந்து பார்த்தால்

    ஆடும் மயில் போலத்

    தென் கைலாயமாக மலைக்கோட்டையாம்!

    உச்சியில் பிள்ளையார் நடுவில் தாயுமானவர்!

    கரைக்கப்படுவது என்னவோ

    பிள்ளையார் சிலைகள்தாம்.

    தனது மகளின் மகப்பேறு காலத்தில்

    தாய் உடன் இருக்க விடாமல்

    காவிரியில் வெள்ளமாம்.

    பேறுவலி தாங்காமல் காவிரியின் மறுகரையில்

    மகளின் கதறல்!

    தாய் போல உதவிக்கு வந்தவர்

    தாயுமானவர் ஆகியிருக்கிறார்.

    உச்சியில் பிள்ளையார் இருந்தாலும்

    குட்டு வாங்கியவரை

    வேடிக்கை பார்க்கப் போகிறவர்கள்

    வழியில் தாயும் ஆனவரைக்

    கையெடுத்துக் கும்பிடுகிறார்கள்!

    மகளிருக்கு உரிமைத் தொகை!

    அதிகாரம் அடையாளம் இல்லை

    பண்புதான் அடையாளம் என்று

    என்ன நடந்தாலும் எதுவந்தாலும்

    எதிர்கொள்ளும் மனநிலையை

    வளர்த்தெடுக்கும் வாழ்க்கைத் துணைக்கு -

    சுதந்திரத்தை ஊட்டி வளர்க்கும்

    தாய்க்குலத்திற்குத் தேவைப்படுவது

    முதலில் உரிமை பிறகு தொகை.

    மகளிருக்கு உரிமை

    கிடைக்கும் தொகையாலும் உறுதிப்படும் என்பதால்

    அறிவித்திருக்கிறார் தாயுள்ளத்தோடு

    முதலமைச்சர்!

    உச்சிப் பிள்ளையாராக

    ஒன்றிய அரசு இருந்தபோதும்

    தாயுமானவராக இருக்கிறார்

    தமிழக முதல்வர்!

    உள்ளடக்கம்

    சிறுகதை - செய்யாறு தி.தா.நாராயணன்

    கவிதை - க.சி.அம்பிகாவர்ஷினி

    கட்டுரை - கவிதைக்காரன் இளங்கோ

    கவிதை - சூர்யமித்திரன்

    சிறுகதை - கவிஜி

    கவிதை - கிரேஸ் பிரதிபா

    நாடகம் - மு.இராமசுவாமி

    கவிதை - கனகா பாலன்

    சிறுகதை - சந்திரகிருஷ்ணன்

    கவிதை - சாய் வைஷ்ணவி

    கட்டுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்

    கவிதை - பாரியன்பன் நாகராஜன்

    சிறுகதை - ஊத்தங்கால் ப.கோவிந்தராசு

    சிறுகதை - வாசுதேவன் அருணாசலம்

    கவிதை - காரைக்குடி சாதிக்

    கடைசிப் பக்கம் – இ.பா

    சிறுகதை - செய்யாறு தி.தா.நாராயணன்

    E:\Priya\Book Generation\October Kanaiyazhi\1-min.JPG

    ஆசை அறுமின்கள்

    அந்த குக்கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் தரைக் காட்டில் நடக்க வேண்டும், அப்போதுதான் மலையின் அடிவாரத்தை சேரமுடியும் என்று சொல்லியிருந்தார்கள், காலை ஏழுமணிக்கு நடக்க ஆரம்பித்தோம். தரைக் காட்டை கடப்பதற்குள் எங்க கதை கந்தலாகப் போய்விட்டது. கொஞ்ச நேரம் உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்தோம். உட்காரவே கூடாது. போய்க்கிட்டே இருக்கணும். அப்பத்தான் போய் சேரமுடியும். என்றார் நாங்கள் கூட்டிவந்த கைடு கோட்டி என்கிற கோட்டீஸ்வரன். மலை உச்சியில் சிறியதாக கோயில் தெரிகிறது. ஈஸ்வரனும் பிரமராம்பிகை அம்மனும் உறைந்திருப்பதாக படித்திருக்கிறோம். இதை சித்தர் மலை என்கிறார்கள்.

    ஒரே தெருவைச் சேர்ந்த பால்யத்திலிருந்து ஒன்றாய் பள்ளியில் படித்த, நாங்கள் மொத்தம் ஐந்து பேர். நான் தியாகு என்கிற தியாகராஜன், இதோ உயரமாயிருப்பவன் ஷண்முகம், சற்று பூசிய உடல்வாகுவுடன் கண்ணன், சற்று தாங்கித் தாங்கி நடப்பவன் சுப்பு என்கிற சுப்பிரமணியன். நாங்களெல்லாரும் சாஃப்ட்வேர் துறையில் இருக்க, எங்களிலிருந்து வித்தியாச படுபவனாக தோலு ஜெயபால். எங்களில் எட்டாவதோடு படிப்பை நிறுத்திக்கொண்டவன். எந்நேரமும் சளசளவென்று அர்த்தமில்லாமல் பேசிக் கொண்டேயிருப்பான் என்பதால் ஊர் குடுத்த பட்டம் தோலுவாயன் ஜெயபால். அதுவே பின்னாளில் மருவி தோலு ஜெயபால் என்றானது. அதுவும் போய் தோலு என்ற அடைமொழி சொல் மட்டுமே அவன் பெயராகிப் போனது. அடிதடி, வலுச்சண்டை முதல் அத்தனை தப்பு வேலைகளும் அத்துபடி. சின்ன வயசிலிருந்தே திருடுவான். அப்பப்ப ஜெயிலுக்கு போய்வந்த அனுபவமும் உண்டு. ஆனால் நண்பர்களிடம் நேர்மையானவன், உண்மையாகவும் இருப்பான். அதுவே எங்களுக்கு அவன் நட்பை தொடர ஏதுவாகியது. நிறைய ஆன்மீகத் தேடல்கள் உள்ளவன். தினசரி கோயில்களுக்குச் செல்பவன்... எஸ்! எல்லா முரண்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு மனிதன் இவன். இவனை சாதாரணமானவனா மதிப்பிடாதீங்க சார். இவன்தான் இன்றைக்கு மலைமேல போனப்புறம் எல்லோரையும் துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடவைக்கப் போகிறவன்.

    சித்தர்கள் அரூபமாக இந்த மலைக்கு வருவதாகவும், வந்து சாமியை பூசித்து விட்டு செல்வதாகவும், சிலபேருக்கு காட்சியளித்ததாகவும் கேள்விப்பட்டு, புத்தகங்களில் படித்துவிட்டு, எப்படியாவது இந்த மலையை ஏறிப் பார்த்துவிடுவது என்று ஒரு குழுவாய் கிளம்பி வந்திருக்கின்றோம். உள்ளூர எப்படியாவது அந்தச் சித்தர்களை பார்த்துவிடுவது என்ற நம்பிக்கையில் வரவில்லை. எல்லா மதங்களிலும் இது போன்ற மிகையான கற்பனைகள் நிறைய புனையப் பட்டிருக்கின்றன என்பது எங்களின் அசைக்கமுடியாத கருத்து. இருப்பினும் மலை ஏறுவது ஒரு த்ரில், சாகஸம்... சாதித்தோம் என்ற திருப்தி. ஆனால் எங்களில் கண்ணன் கேள்வி கேட்காமல் எல்லாவற்றையும் அப்படியே நம்பும் ஆஷாடபூதி, தோலு ஜெயபாலனும் அப்படியே... மலையேற ஆரம்பிக்கும் போது காலை எட்டு மணி. இந்த மலை என்பது மூன்று மலையின் உள்ளடக்கம். மலையேற்றம் எங்களுக்கு முதல் அனுபவம். அதனால் முதல் மலையிலேயே எங்களுக்கு நுரை தள்ளி விட்டது. முடியவில்லை. கண்ணன் வழியிலேயே காலை நீட்டிப் படுத்துவிட்டான். கோட்டி அவன் கிட்டே போய் அவசரப் படுத்தினான்.

    "அண்ணா! மூணு மணிக்குள்ள மலையேறிடணும். அதுக்கு மேல இங்கெல்லாம் கரடிகளும், மான்கள்,

    Enjoying the preview?
    Page 1 of 1