Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Savithiri
Savithiri
Savithiri
Ebook389 pages1 hour

Savithiri

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தாயின் மார்பகம் முட்டி பால் அருந்தும் கன்றின் இனம் புரியா மகிழ்ச்சி எனக்குள். காதலியின் இதழ் பட்டு வெட்கம் கொண்டு நாணிப் போகும் ஆடவனின் கன்ன அசைவு போல ஓர் இன்பத் துள்ளல் எனக்குள்...

நிலவினைக் கையில் பிடித்து, ஆசை தீர முத்தமிடும் ஆதவன் போல, இங்கே என் தமிழ் காதலியைக் கையில் பிடித்து முத்தமிடுகிறேன். சாவித்திரி என்கின்ற மெல்லிய தென்றலுக்காக…

மகிழ்ச்சியும் துள்ளலும் எனக்குள் பிறப்புதானே மரபு… அது இங்கே... குள்ள முனிவன் அகத்தியனின் குறுந்தொடையில் இலக்கியமாய் கனிந்த தமிழ், கண்ண முகத்தழகன் அய்யன் சிவாஜியின் குரலில் கரு பெற்றதே... அந்தக் கரு தாங்கி என் பயணம் இங்கே...

சாவித்திரி... இந்த பூங்காற்றைப் புழுதியாக்கிட, சூழ்ச்சிகள் சூழ்நிலையாய் மாறி நின்ற கதையை, பிரபல தயாரிப்பாளர், மறைந்த ஏ.எல்.சிறீனிவாசனின் மருமகள் திருமதி. ஜெயந்தி கண்ணப்பன் என்னிடம் பகிர்ந்து கொண்டபோது, என் பேனா என்னையும் அறியாது துடிக்க ஆரம்பித்தது! வேடனின் அம்பு துளைத்து துடிக்கும் குருவியைப் போல...

ஆராயத் தொடங்கினேன்… சாவித்திரி என்ற அந்த அழகுப் பைங்கிளியின் விரிந்த சிறகுகள் எங்கே முறிக்கப்பட்டது என்று. நிலாவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் போல அல்ல என் தேடல்! பல நூறு மைல்கள் கடந்து போய், உணர்வுகளைத் தேடும் காட்டுப் பறவையைப் போல.

அணிகலன்களை அள்ளலாம் என்று பறந்த எனக்குக் கிட்டியவை எல்லாம் அழுகையின் படிவங்களே. பொய்யான திரை அழகில் மெய்யான வாழ்வைத் தொலைத்த சாவித்திரியின் சறுக்கல், விதி தீட்டிய வித்தியாச விருந்தோம்பல். நான் பதியவிடும் நிகழ்வுகள் அனைத்தும் உண்மையின் உணர்ச்சிக் களம்.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580128104549
Savithiri

Read more from M.G.S. Inba

Related to Savithiri

Related ebooks

Reviews for Savithiri

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Savithiri - M.G.S. Inba

    http://www.pustaka.co.in

    சாவித்திரி

    கலைகளில் ஓவியம்

    Savithiri

    Kalaigalil Oviyam

    Author:

    மு.ஞா.செ. இன்பா

    M.G. S. Inba

    For more books

    http://pustaka.co.in/home/author/mgs-inba

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிகலனுக்கு

    முன்

    1. தண்ணிலவு நீர் இறைக்க...

    2. வாராயோ தோழி வாராயோ....

    3. காதல் நிலவே கண்மணி இராதா...

    4. காலங்களில் அவள் வசந்தம்...

    5. அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா...

    6. சொல்லச் சொல்ல இனிக்குதடா...

    7. மயங்குகிறாள் ஒரு மாது...

    8. பிருந்தாவனமும் நந்தக்குமாரனும்...

    9. அதிலே எப்போதும் ஆனந்தக் கண்ணீர்தான் வரணும்...

    10. பாலிலும் வெண்மை... பனியிலும் மென்மை...

    11. இதய வானில் ஒளியை வீசும் இன்ப நிலாவே!

    12. காற்று வெளியிடைக் கண்ணம்மா...

    13. சின்னஞ்சிறு கண் மலரே...

    14. சொல்லவா... கதை சொல்லவா...

    15. கண் படுமே பிறர் கண் படுமே...

    16. மை ஏந்தும் விழியாட...

    17. கையைத்தான் கொண்டு மெல்லத்தான்...

    18. வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய...

    19. வந்து வந்து கொஞ்சுவது ஏன் வெண்ணிலாவே...

    20. ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே....

    21. கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே...?

    22. காக்கா காக்கா மை கொண்டுவா...

    23. அத்தை மகனே போய் வர வா...

    24. பசுமை நிறைந்த நினைவுகளே...

    25. இளமைக் கொலுவிருக்கும் இளமைச் சுகமிருக்கும்...

    26. மலர்களைப் போல சாவித்திரி உறங்குகிறாள்...!

    27. உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே...

    28. பறந்து செல்கிறேன்... நான் பிரிந்து செல்கிறேன்...

    29. பெண் இயற்கையின் சீதனப் பரிசல்லவா...

    முகத்துக்கு அகம் தந்த ஆவணங்கள்

    அணிகலனுக்கு

    தாயின் மார்பகம் முட்டி பால் அருந்தும் கன்றின் இனம் புரியா மகிழ்ச்சி எனக்குள். காதலியின் இதழ் பட்டு வெட்கம் கொண்டு நாணிப் போகும் ஆடவனின் கன்ன அசைவு போல ஓர் இன்பத் துள்ளல் எனக்குள்...

    நிலவினைக் கையில் பிடித்து, ஆசை தீர முத்தமிடும் ஆதவன் போல, இங்கே என் தமிழ் காதலியைக் கையில் பிடித்து முத்தமிடுகிறேன். சாவித்திரி என்கின்ற மெல்லிய தென்றலுக்காக…

    மகிழ்ச்சியும் துள்ளலும் எனக்குள் பிறப்புதானே மரபு… அது இங்கே...

    குள்ள முனிவன் அகத்தியனின் குறுந்தொடையில் இலக்கியமாய் கனிந்த தமிழ், கண்ண முகத்தழகன் அய்யன் சிவாஜியின் குரலில் கரு பெற்றதே... அந்தக் கரு தாங்கி என் பயணம் இங்கே...

    சாவித்திரி... இந்த பூங்காற்றைப் புழுதியாக்கிட, சூழ்ச்சிகள் சூழ்நிலையாய் மாறி நின்ற கதையை, பிரபல தயாரிப்பாளர், மறைந்த ஏ.எல்.சிறீனிவாசனின் மருமகள் திருமதி. ஜெயந்தி கண்ணப்பன் என்னிடம் பகிர்ந்து கொண்டபோது, என் பேனா என்னையும் அறியாது துடிக்க ஆரம்பித்தது! வேடனின் அம்பு துளைத்து துடிக்கும் குருவியைப் போல...

    ஆராயத் தொடங்கினேன்… சாவித்திரி என்ற அந்த அழகுப் பைங்கிளியின் விரிந்த சிறகுகள் எங்கே முறிக்கப்பட்டது என்று.

    நிலாவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் போல அல்ல என் தேடல்! பல நூறு மைல்கள் கடந்து போய், உணர்வுகளைத் தேடும் காட்டுப் பறவையைப் போல.

    அணிகலன்களை அள்ளலாம் என்று பறந்த எனக்குக் கிட்டியவை எல்லாம் அழுகையின் படிவங்களே. பொய்யான திரை அழகில் மெய்யான வாழ்வைத் தொலைத்த சாவித்திரியின் சறுக்கல், விதி தீட்டிய வித்தியாச விருந்தோம்பல்.

    நான் பதியவிடும் நிகழ்வுகள் அனைத்தும் உண்மையின் உணர்ச்சிக் களம்.

    முன்

    எருசலேம் வீதியில் புரட்சியை, பொதுவுடமையை எழுதிய இயேசுவின் கால்களுக்குப் பரிமளத் தைலம் வைத்து தூய தொழுகையிட்டு வணங்கிய மரியாளைப் போல அல்ல…

    நான் ஏற்றும் தூய தொழுகை கறைபட்ட ஒரு அழகின் உண்மை அழகை மறுபடியும் பிறப்பிக்கும் என்கின்ற தொழுகையது.

    இதில் நான் வெல்வேன் என்பது ஆணித்தரமான பதில்! திருமதி. ஜெயந்தி கண்ணப்பன் கோலமிட, தோழமை பதிப்பகம் சார்பாக நண்பர் பூபதி வடிவமைக்க, நண்பர் இளமாறன் தேனமுதாம் நம் தமிழ் வழிந்தோடும் பாதையமைக்க... தோல்வி என்னை எப்படிச் சந்திக்கும்?

    நான் வெல்லப் போகும் வெற்றி, சாவித்திரியின் இன்னொரு பிறவியாகவும் கூறப்படலாம். தமிழ் திரையுலகில் பொன்களம் அமைத்த சாவித்திரியின் அறியாத, அதிர்ச்சியான, தெரியாத, தெளிவான பக்கங்கள் ஓர் புயலைப் பிறப்பிக்கும்.

    உண்மைகள் உறக்கம் கண்டால், பொய்கள் துணிச்சல் பெற்று ஆட்டமிடத் தொடங்கிவிடும்! இங்கே, நெடிய துயில்கொண்ட உண்மை ஒன்றை துயில் எழுப்பி, பொய்க்கு நிரந்தர வேலி அமைக்க முயல்கிறேன்!

    வேலி கட்டிய பின்தான் தெரிந்தது… உண்மையது பொய் தந்த வலி தாளாமல் தொடர் வேதனையில் தூங்கியிருக்கிறதென்று.

    வலிகளைத் தேடி, இது ஓர் நெடிய பயணம். சுகத்திற்காக அல்ல. உணரப்பட்ட வலி ஓர் அபயக்குரல் என்பதற்காக.

    வாருங்கள் பயணிப்போம். பயணத்தினூடே கடலை மெல்லும் சுவை அல்ல! கண்ணீர் தரும் வலிகளைக் கொண்டு.

    தோழமையுடன்,

    மு.ஞா.செ. இன்பா.

    1. தண்ணிலவு நீர் இறைக்க...

    லேடி வெலிங்டன் மருத்துவமனை...

    காலை நேரப் பணி முடிந்து விட, மாலை நேரப் பணிக்காக செவிலியர் வந்து கொண்டிருந்தனர்...

    அந்த அறையின் பாதி திறந்திருந்த கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தார் செவிலி ஒருத்தி.

    லேடி வெலிங்டன் மருத்துவமனையில் ஒரு வழக்கம் கைகொள்ளப் பட்டுக் கொண்டிருந்தது. அது நமக்கு மூடநம்பிக்கை போலக் கூடத் தோன்றலாம்.

    பணிக்கு வருகின்ற எந்த செவிலியரும் முதலில் தங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்ற நோயாளிகளின் அறையில் போய் செபிக்க வேண்டும் என்பதே...

    அறைக்குள் நுழைந்த அந்த செவிலிப் பெண்ணும் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த மேரியன்னை படத்துக்குமுன் வந்து நின்று, கண்மூடி கிறித்தவ மறைநூலான

    விவிலியத்தின் வசனம் ஒன்றைச் சொல்லியபடி செபிக்க ஆரம்பித்தாள்.

    திகையாதே; கலங்காதே; நான் உன்னோடு கூட இருக்கிறேன் என்ற விவிலிய வசனத்தை உச்சரித்தபடி

    மேரியன்னை படம் முன்பு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு, அந்த அறையின் சன்னல் கதவைத் திறந்தாள் அவள்...

    வெளியே நீலவானத்தில் எப்போதும் மின்னிக் கொண்டிருக்கும் விண்மீன்கள் ஏனோ ஒட்டுமொத்தமாகக் காணாமல் போயிருந்தன.

    தமிழ் திரையுலகின் உன்னத நட்சத்திரம் ஒன்று உணர்வற்று, துயில் கொண்டிருக்கும் போது; நாம் மட்டும் விழித்திருந்து மின்னுவது அறமற்ற செயல் என அவைகள் முடிவு செய்திருந்தன போலும்!.

    சன்னல் வழியாக அந்த உன்னத நட்சத்திரத்தை உற்று நோக்கிய நிலா அந்தப் பூ மகளின் உணர்ச்சியற்ற முகம் கண்டு அழுகையை அடக்க முடியாமல் மேக கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டது.

    சுமார் 13-திங்கள் நினைவாற்றலை இழந்து, கோமா எனும் மயக்க நிலையில் கிடந்த அந்த நட்சத்திரம் எப்போதாவது உணர்வு பெற்று விழி உயர்த்தும்! அப்போது அதைத்தழுவி ஆறுதல் படுத்தலாம் என்று தென்றல் காவல் காத்துக் கொண்டிருந்தது.

    போர்க்களத்தில் எல்லாம் இழந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கர்ணனை, அவன் இட்ட கொடை காத்தது போல, இந்த நட்சத்திரம் வழங்கிய கொடை வாசலில் படுத்துக் கிடந்தது, எப்படியாவது தன் செய்நன்றியைக் காட்டிவிட வேண்டும் என்று.

    சன்னல் திறந்த செவிலிப் பெண், பின்னால் திரும்பிக் கட்டிலில் கிடந்த அந்த உருவத்தை உற்று நோக்கினாள்!

    மயக்க நிலையில் கிடந்த அந்த உருவம், விழி திறந்து மெதுவாகத் தன் கரத்தை அசைத்தது... தாதிப் பெண்ணுக்கு நம்ப முடியவில்லை.

    ஓடோடி கட்டிலின் அருகில் வந்து, அசைந்த அந்தக் கரத்தைத் தொட்டாள். விழி திறந்து இருந்த அந்த உருவத்தின் கன்னத்தில் நீர்த்துளிகள் தாரை தாரையாக...

    காலையில் தன்னைப் பார்க்க வந்த தனது மகளும், பேரனும் அங்கு இருக்கிறார்களா? என்ற தேடலின் அடையாளமாகவோ அந்தக் கண்ணீர்?

    ஆம்! அன்று காலை...

    ஐந்து வயதுக் குழந்தையோடு தனது தாயைக் காண வந்து இருந்தார் சாமுண்டீசுவரி.

    சுமார் 13 திங்களாக படுக்கையில் நோயுற்றுக் கிடக்கும் தனது தாய் முன்பு போல எழும்பி நடமாடி விடுவாள்! தானும் தன் குழந்தையும் அந்த அன்புத்தாயின் மடியில் தலைவைத்து உலகக் கதைகளைக் கேட்கலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு.

    விதி... என்ன விளையாட்டுகளை விடையாக்கிக் கொண்டு உள்ளது என்பது யாரும் அறியா சித்தாந்தம் அல்லவா! அது சாமுண்டீசுவரிக்குத் தெரியவில்லை.

    தன் கரம் பட்டவுடன் தன் தாயிடம் எழும்பும் சின்ன அசைவுதான் இப்போது எல்லாம் அவளுக்கு வேதம். இன்றும் அப்படித்தான்.

    தனது மகனின் பிஞ்சுக் கரத்தைக் கொண்டு தன் தாயின் அசைவற்ற கன்னத்தைத் தடவினாள். தானாடா விட்டாலும் தசை ஆடும் என்பார்களே... பேரனின் கரம் பட்டதும் சிலிர்த்தது அந்தத் தாயின் உடல்.

    உணர்வற்றுக் கிடந்த அந்தக் கரம் மெதுவாக உயிர்பெற்று வாஞ்சையோடு பேரனைத் தேடிச் சென்றது. சொல்லச் சொல்ல இனிக்குதடா... என தன் மகனுக்குத் தாலாட்டுப் பாடிய தன் செவ்விதழ், தன் பேரனுக்கு முத்தம் கூட கொடுக்க முடியாமல் போய் விட்டதே என்ற இயலாமை

    விழிகளில் நீராக மாறித் தலையணையை நனைத்தது.

    கண்ணீரோடு தன் பேரனுக்குக் கையாலே முத்தமிட்டாள். முத்தமிட்ட கை பழைய இடத்திற்கு வருவதற்குள் மீண்டும் நினைவற்றுப் போய்விட்டாள்.

    அதன்பின் தற்போதுதான் கொஞ்சம் நினைவு வந்து பேரனைத் தேடுகிறது அந்தத் தாயின் விழிகள்!

    ஓடத்தில் பயணிப்பவர்கள் ஓட்டை விழாது என்ற நம்பிக்கையில் பயணிக்கும் போது சூறாவளி வந்து படகை சுக்கு நூறாய் உடைத்தது போல...

    வாழ்க்கை என்ற ஓடத்தில் ஏற்பட்ட சூறாவளி தாக்குதலில் சுக்குநூறாய் உடைந்த சாவித்திரியின் கடைசி நாட்களின் காட்சிப் பதிவுகள்தான் இவைகளெல்லாம்.

    ஆனந்தம் விளையாடிய தன் வீட்டு அன்பினங்கள் இசையை மனதில் தேடித் தோற்றுக்கொண்டிருந்த சாவித்திரியின் கடந்த காலங்கள் காயங்களின் பக்கங்கள் அல்ல… வெற்றியின் ஓங்கிய பேரிரைச்சல். ஆயினும், சில பக்கங்கள் சுற்றி நின்றவர்களால் கறுப்பாகத் திட்டமிட்டுக் காட்டப்பட்டது.

    கட்டிலில் உணர்வற்றுக் கிடந்த அந்த மகாதேவியின் கால் கொலுசு எழுப்பிய ஒசையில் சொல்ல முற்பட்ட விடயங்கள் ஏராளம்.

    ஒருவன் வீழ்ந்து விட்டால், சுற்றி நின்று ஏளனம் பாடும் மாந்தர் மத்தியில் சாவித்திரியின் வெற்றிக் கொலுசு தோற்றுப் போனதும், அது சொல்லிய கதை கேட்பார் அற்றுப் போனதும் விதி எழுதிய சறுக்கல்களே...

    மேரியன்னை படத்தின் முன் ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்தியின் ஒளி பிம்பம் சாவித்திரியின் கன்னத்தில் ஒட்டி இருந்த நீர்த்துளிகளில் பிரதிபலிக்க, ஓர் வரலாறு மெதுவாகத் திரை எழும்பி, தனது முகத்தைக் காட்டத் தொடங்கியது.

    சாவித்திரியின் ஆழ்மனதில் சாமுண்டீசுவரியின் நினைவுகள்... கெட்டி மேள ஓசை சாவித்திரியின் மனதில் எங்கோ ஒலிக்க, அவர் கரம் சாவித்திரியையும் அறியாது ஏதோ எதிர்பார்ப்பில் கட்டிலை இறுகப் பிடித்தது.

    2. வாராயோ தோழி வாராயோ....

    மாலை நேரக் கதிரவன் தன் முகத்தைப் பொன்னில் உருக்கி, சாவித்திரியின் வீடு நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தது, மாமன் சீர் போல...

    குளிர்ந்த தென்றல் மரங்களின் தலைகளை வருடி, இலைகளில் தாங்கி இருந்த பனித்துளிகளை பன்னீராக்கி தெளித்துக் கொண்டிருந்தது.

    சாவித்திரியின் இல்லம்... அரண்மனை போன்று அரங்கமைத்து அட்டகாசமாகக் காட்சியளித்தது.

    பரபரப்பில்லாமல் காணப்படும் அபிபுல்லா சாலை, இன்று சாவித்திரி இல்லத்தின் பரபரப்பில் தன்னையும் இணைத்துக் கொண்டிருந்தது.

    வீட்டினுள், ஜெமினியின் மனைவிமார்கள் பாப்ஜியும், சாவித்திரியும் வந்தவர்களை வரவேற்று, உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.

    அங்கே ஒரேயொரு அறை மட்டும் சற்று வேறுபாட்டுடன் காணப்பட்டது.

    கதவு திடீர் எனத் திறக்கப்படுவதும், சிலர் சில பொருட்களை எடுத்துக் கொண்டு போவதும், சிலர் வெளியே வருவதுமாய் இருந்த அந்த அறையில் இருந்து ஒரு இளம்பெண் தேவதை போல வெளியே வந்தாள்.

    என்ன ஒரு அழகு… அந்த 16 வயது மங்கைக்கு! மிஸ்ஸியம்மா படம் வெளியான காலகட்டங்களில் சாவித்திரி இருந்ததைப் போன்ற தோற்றம்.

    துரியோதனன் தனது நண்பன் கர்ணனுக்காக சுபாங்கினியை பெண் பார்க்கப் போன பொழுது, தேவலோகப் பெண் சுபாங்கினி எப்படி இருந்தாளோ... அந்த ஒரு அழகு அவளிடம்.

    வெளியே திரையுலகத்தின் முதன்மைப் பெரியவர்கள் அந்தப் பெண்ணை வாழ்த்தப் போகும் மகிழ்வுக்காகக் காத்திருந்தார்கள்.

    சிவாஜியும் அவர் மனைவி கமலம்மாவும், அஞ்சலிதேவியும் வந்து விட்டார்கள் என ஒருவர் சொல்லிவிட்டுப் போக..

    சாவித்திரியும், பாப்ஜியும் மணப்பெண்ணின் அருகில் வந்து அவளை அழைத்துக் கொண்டு, சிவாஜியிடம் கூட்டிச் சென்றார்கள்.

    தனது மகள் சாந்தி, தேன்மொழியை இந்தக் கோலத்தில் கண்டபோது அடைந்த மகிழ்ச்சி சிவாஜிக்கு! அந்தப் பெண்ணின் மணக்கோலம் கண்டு அப்படி ஒரு மகிழ்வு உற்றார் அவர். தன் அருகில் வந்த அந்தப் பெண்ணின் நெற்றியில் முத்தமிட்டு ஆசீர்வதித்தார் சிவாஜி!

    சாவித்திரியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்! பாப்ஜியும் தன் கண்ணீரை அடக்க முடியாமல் முந்தானையால் கண்களை ஒற்றிக்கொண்டார்.

    சிவாஜி முத்தமிட்டு ஆசீர்வதித்த பெண், சாவித்திரி யின் 16-வயது நிரம்பிய மகள் சாமுண்டீசுவரி. அவரின் முழுப்பெயர் விஜய சாமுண்டீசுவரி என்பதாகும்.

    இந்த நீண்ட பெயருக்கு ஒரு காரணம் உண்டு. சாவித்திரி எச்சூழலிலும் செய் நன்றி மறவாத குணம் கொண்டவர். தனக்கு யாராவது சிறிய உதவி செய்தால் அவர்கள் மலைத்துப் போகின்ற அளவில் பெரிய உதவிகளை அவர்களுக்குச் செய்து அசத்திவிடுவார்!

    திரையில் தனக்கு வாழ்வு தந்த விஜயா புரொடக்சன்ஸ் அதிபருக்கு நன்றி சொல்லும் விதமாக விஜயா என்ற பெயரையும், ஜெமினியின் விருப்பக் கடவுளான சாமுண்டீசுவரியையும் இணைத்து தனது மகளுக்கு விஜய சாமுண்டீசுவரி என்ற பெயரைச் சூட்டியிருந்தார்.

    இன்று அந்த சாமுண்டீஸ்வரிக்கு திருமண நலுங்கு விழா. நாளை திருமணம்.

    சாவித்திரிக்கு மழை என்றால் கொள்ளைப் பிரியம். மழை பொழிவதைக் கண்டு விட்டால், சாவித்திரியை கையில் பிடிக்க முடியாது. அவர் ஒரு குழந்தையாக மாறிவிடுவார்.

    மழையில் நனைந்து கொண்டு, சின்னக் குழந்தையாய் ஆட்டம் போடும் சாவித்திரிக்கு பக்கதாளமாய் நின்ற சாமுண்டீசுவரியை இன்று மணக்கோலத்தில் காண்பது வியப்புதானே...

    தனது உறவுக்காரப் பையனான கோவிந்தராவைத்தான் தனது மகளுக்கு மாப்பிள்ளை ஆக்கியிருந்தார் சாவித்திரி

    திட்டமிடுதலில் சாவித்திரியின் ஆற்றல் வியப்புக்குரியது. தனது காலத்திற்குப் பின் தனது மகளைப் பாதுகாக்க ஒரு சராசரி மனித நேயமுள்ள மனிதன் போதும் என அவர் கோவிந்தராஜுலுவை முடிவுசெய்த போது, சில எதிர்ப்புகள் பதிவானது.

    ஆனால், சாவித்திரியின் முடிவுக்குப் பக்கபலமாய் இருந்து இத்திருமணத்தை நடத்தியது ஜெமினியின் முதல் மனைவி பாப்ஜி.

    மனிதகுலம் சில நேரங்களில் சிலரின் அன்னையரை அன்னை தெரசாவாகப் பிறப்பித்து விடும். பாப்ஜி அந்த இரகத்தைச் சேர்ந்தவர்.

    தனது கணவனின் இன்னொரு மனைவியின் மகளையும் தன் மகளாகப் பாவித்த தாய்மை. காலம் கடந்தும் பேசப்படும் செய்தி.

    கோவிந்தராவ் வங்கி வேலைக்காக நெல்லூரில் இருந்து சென்னை வந்த வாலிபர். இவர் சாவித்திரியின் உறவுக்காரப் பையன். சாமுண்டீசுவரியின் முறை மாப்பிள்ளை வகையறாவைச் சேர்ந்தவர்.

    இன்று சாவித்திரியின் குடும்பம் என்ற அடையாளம் ஆலமரமாய் விரிந்து இருக்கிறது என்றால், கோவிந்தராவின் பெயர்தான் அதன் ஆணிவேர்.

    சாவித்திரி செய்த எத்தனையோ நல்ல விடயங்களில் கோவிந்தராவை தனக்கு மருமகனாக்கிக் கொண்டதும் ஒன்று.

    திருமண நலுங்கு விழா தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. மறுநாள் திருமணம் என்பதால் சாவித்திரியின் உறவினர்களும், ஜெமினியின் உறவினர்களும் இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தார்கள்.

    05-12-1973-அன்று காலை சரியாக ஒன்பது மணியிலிருந்து பத்து மணிக்குள் சாமுண்டீசுவரி கோவிந்தராவ் திருமணம் நடைபெற்றது.

    தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என அத்தனை மொழிக் கலைஞர்களும் வருகை புரிந்து இருந்தார்கள்.

    நாகேசுவரராவ், சரோஜாதேவி, காஞ்சனா, கே.ஆர்.விஜயா, எம்.ஆர்.ஆர் வாசு, வி. நாகையா, கே.பாலாஜி, ஜமுனா, எஸ்.வி. இரங்கராவ், சந்தியா, நாகேஷ் என பட்டியல் நீளமானதாகவே இருந்தது.

    ஜெமினி தென்னாப்ரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபடியால் சாமுண்டீசுவரி திருமணத்திற்கு வர முடியவில்லை என்று சொல்லப்பட்டது. ஆந்திரா முறைப்படி நடைபெற்ற திருமண நிகழ்வுகளில் யாரும் பார்க்காத ஒரு புதுமை பதிவானது.

    மணமகன் கையில் பெண்ணைத் தாரைவார்த்துக் கொடுக்கும் நிகழ்ச்சியில் சாவித்திரியும், ஜெமினியின் இன்னொரு மனைவியான பாப்ஜியும் இணைந்து மகளை தாரை வார்த்துக் கொடுத்தனர்.

    ஒரு பெண்ணை இரு தாய்கள் இணைந்து ஒற்றுமையாக தாரைவார்ப்பது இதுதான் முதல்முறை என திருமணத்திற்கு வந்தவர்கள் இரசித்துப் பாராட்டிப் பேசினார்கள்.

    தனது மகளை உரிய இடத்தில் சேர்த்து விட்டதில் சாவித்திரிக்கு மன நிம்மதி.

    Enjoying the preview?
    Page 1 of 1