Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Suvadugalum Suvadigalum
Suvadugalum Suvadigalum
Suvadugalum Suvadigalum
Ebook175 pages54 minutes

Suvadugalum Suvadigalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மானுடத்தின் வாழ்வியல் சுவடுகளைக் கோடிட்டு காட்டும் அற்புதமான சிறுகதைகளைப் படைத்த ஆசிரியர், அவற்றைச் சங்க இலக்கியங்கள் பலவற்றின் இலக்கியச் சுவையும் நயமும் மிகுந்த பாடல் மற்றும் பொருள் விளக்கத்தோடு ஒப்பமைத்துத் தேன் மெழுகிய நல்மருந்தைப் போல் நமக்கு அளித்துள்ளார், சுவடுகளும் சுவடிகளும் என்னும் இந்த நூலில் வாருங்கள் வாசித்து அறிந்து கொள்வோம்...

Languageதமிழ்
Release dateNov 4, 2023
ISBN6580160509848
Suvadugalum Suvadigalum

Read more from W.R. Vasanthan

Related to Suvadugalum Suvadigalum

Related ebooks

Reviews for Suvadugalum Suvadigalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Suvadugalum Suvadigalum - W.R. Vasanthan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சுவடுகளும் சுவடிகளும்

    (சிறுகதைகள்)

    Suvadugalum Suvadigalum

    (Sirukathaigal)

    Author:

    வி.ர. வசந்தன்

    W.R. Vasanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/wr-vasanthan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. மரப்பாச்சி

    2. மடல் குதிரை

    3. அண்மை

    4. பாலைநிலம்

    5. அழியாத ஓவியங்கள்

    6. கூனியக்கா

    7. தாய்மை நெஞ்சம்

    8. காந்தள் கிழங்கு

    9. மணல் மேடுகள்

    10. மங்கிய சுடர்

    11. கண் வலை

    12. கல்லூறு

    13. புலிக்குரல்

    14. கரியுண்ட கண்கள்

    15. ஆரல் பார்த்த நாரை

    16. காக்கை விருந்து

    17. இசையாத இசை

    18. செப்பு மலர்

    19. சிறுகண் யானை

    20. பொய்வல் காளை

    முன்னுரை

    சங்க இலக்கியங்கள் தோன்றிய காலம் சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன்னர் என்று வரையறை செய்யப்பட்டிருக்கிறது. அக்காலத்து தமிழ் மண்ணின் மணத்தை நுகர்வதற்குக் கிடைத்த பெரும் புதையல்கள் அவை. மக்கள் வாழ்ந்த வாழ்க்கையை, அவர்தம் பண்பாட்டை, சிந்தனைப்போக்கை, பழக்க வழக்கங்களைக் காட்டும் காலக்கண்ணாடிகள் என்பது உண்மைக் கூற்றாகும். உள்ளங்கை நெல்லிக்கனிபோல், நம் மூதாதையர்களை நமக்கு இவை அடையாளம் காட்டிவிடுகின்றன.

    மானுட மனப்பண்புகளை நுணுக்கமாக ஆய்வோருக்கு, அகத்துறைப் பாடல்கள் அள்ளிக் கொடுக்கும் அமுதசுரபிகளாகத் திகழ்பவை. அவைகளில் மலிந்து கிடக்கும் மெல்லிய உணர்வுகள் பயிலுந்தோறும் இன்பம் பயப்பவை.

    நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு போன்ற சங்கப் பனுவல்களில் திரட்டிக் கோர்த்த கவிதை முத்துக்களைப் பொறுக்கியெடுத்து ஆயும்போது அவற்றில் மின்னும் மனித இயல்புகள், அவர்தம் அகச் சிக்கல்கள், ஆழ்மன உணர்வுகள் எல்லாம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். மானுடவியல் பட்டம் பெறாது மானுடத்தைப் பயின்ற புலவர் பெருமக்களின் நுண்மான் நுழைபுலம் வியப்பின் உச்சத்திற்கு நம் விழிகளை உயர்த்தும்.

    ‘சுவடுகளும் சுவடிகளும்’ எனும் இந்நூலில் சங்ககால முத்துச் சரங்களிலிருந்து இருபது முத்துப் பாடல்களைத் தேர்வு செய்து, அவற்றில் பயிலும் உணர்வை, இன்றைய நம் வாழ்வில் கண்ட நிகழ்வுகளோடு ஒப்பீடு செய்திருக்கிறேன்.

    ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம் பெறும் நிகழ்வுகள் உண்மையானவையா என்றால் இல்லை என்பதுதான் என் பதில். கற்பனையா என்றால் அதுவும் இல்லை. இவற்றில் முன்னிலைப்படுத்தப்படும் ‘நான்’ என்பவன் நானுமல்லன்.

    என் வாழ்வில் கண்டனவும், கேட்டனவும், உணர்ந்தனவும், பட்டனவுமே ‘நானாக’ மாறியிருக்கிறது. இதுபோன்ற அனுபவங்கள் உங்களுக்கும் இருக்கக்கூடும். இடம்பெறும் மாந்தர்கள் ஒருவேளை கற்பனையாக இருக்கலாம். ஆனால், அவர்களில் இழையோடும் உணர்வுகளே இந்நூலின் ஆதாரநாதம்.

    அவற்றைத்தான் சங்கப் பனுவல்களில் காணும் உணர்வுகளோடு ஒப்பீடு செய்திருக்கிறேன்.

    கால மாற்றங்கள் மனித சிந்தனைப்போக்கையும், பண்பாட்டையும் செழுமைப்படுத்தியிருக்கிறதா, சீரழித்திருக்கிறதா என்பதெல்லாம் இந்நூலின் ஆய்வுப் பொருள் இல்லை. மாறாக, கால ஓட்டத்தில் மனிதர்கள் எந்த வேடமிட்டாலும், அடிப்படை உணர்வுகள் என்றும் மாறாதவையாகவே இருக்கின்றன என்பதே அடிநாதமாக இழையோடும் ஆய்வாகும். இதில் நான் எந்த வாதத்தையும் முன்வைக்கவில்லை. யதார்த்தத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறேன்.

    நாகரீக வளர்ச்சியில் அடுத்த முயற்சியாக சிந்தனைப் போக்கைத் திசைத்திருப்பி, அடிப்படை உணர்வுகளைச் சிதைத்து எதிலும் புதிய கண்ணோட்டத்துடன் புதுயுகம் காணத் துடிக்கும் விஞ்ஞான உலகம் ஒன்றை சுலபமாக மறந்துவிடுகிறது. மன நிம்மதி என்பதை விலையாகக் கொடுத்துத்தான் வரைமுறைகள் அற்ற வாழ்வை வாங்க முடியும். முடிவில் மிஞ்சுவது விரக்தியும் தோல்வி மனப்பான்மையுமாகத்தான் இருக்கும். இன்றைய இளந்தலைமுறையிடம் இத்தகைய உணர்வுகள் மேலோங்கி வருவதே இதற்குச் சான்று.

    ‘கதம்பம்’ இலக்கியச் சிற்றிதழின் இருபது இதழ்களில் ‘இலக்கியக் காட்சி’ என்ற தலைப்பில் தொடராக வந்த ஒப்பீட்டு நிகழ்வுகளே ‘சுவடுகளும், சுவடிகளும்’ என்ற தலைப்பில் நூலாக உருவாகியிருக்கிறது.

    காட்சிகளைக் கண்வயப்படுத்த தூரிகையையும் நானே கையிலெடுத்தேன். திரு. மணியம் செல்வன் அவர்களின் நிகரற்ற ஓவியங்கள்மீது எனக்கு என்றும் மாறாத காதல் உண்டு. அவற்றில் பல, இதில் இடம் பெறும் சித்திரங்களை எழுத மாதிரிகளாக உதவின. அவருக்கு என் நன்றி.

    வி.ர. வசந்தன்

    1. மரப்பாச்சி

    காலை ஆறு மணிக்கு வீட்டு அழைப்புமணி சிணுங்கியபோது எனக்குச் சலிப்பாக இருந்தது. மழை வேறு நசநசவென்று தூறிக்கொண்டிருந்த வேளையில் அது யாராக இருக்கும் என்று எண்ணியவாறு எழுந்து சென்று கதவைத் திறந்தேன். வெளியே நீண்ட தாடியும், மெலிந்த உடலும், அழுக்கு வேட்டி, சட்டையுமாக ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார்.

    புருவங்களைச் சுருக்கிய நான் யாருங்க என்ன வேணும்? என்று கேட்டேன். மனதுக்குள் தூக்கம் கலைந்த எரிச்சல்.

    தம்பி என்னைத் தெரியல்லியா? என்றார் வெளியே நின்றவர். அடர்ந்த தாடி மீசைக்குள்ளிருந்து பற்கள் மட்டும் எட்டிப்பார்த்தன.

    அடிக்கடி கேட்ட குரலாக இருக்கிறதே என்று நினைத்தபடி, அவர் கண்களை உற்றுநோக்கிய எனக்கு சட்டென்று அடையாளம் தெரிந்துவிட்டது.

    அடடே, நீங்க பரிகாரி வேலாயுதந்தானே என்றேன் அவசரமாக.

    ஆமாம், என்பதுபோல மெல்ல தலையசைத்த அவரது குழிவிழுந்த கண்கள் சற்று கலங்கியிருந்தன. கையில் ஒரு மஞ்சள் பையைச் சுருட்டி வைத்திருந்தார். கட்டுத்திட்டாக உடல் தசைகள் திமிற, குறுந்தாடியோடு எப்போதும் சிரித்த முகமாக இருந்த அந்தப் பரிகாரியா இவர்? என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை. எப்படி இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டார். இவ்வளவு நாட்கள் கழிந்து எங்கிருந்து விலாசம் கிடைத்து வந்தார்?

    வேலாயுதத்தின் முடிதிருத்தும் கடை எப்போதும் ஜேஜே என்றிருக்கும். வெறுமனே முடிவெட்டிக் கொள்வதற்காக வருபவர்கள் மட்டுமன்றி பல்வேறு பிரச்சனைகளுக்கு அவரிடம் ஆலோசனை கேட்க வருபவர்கள்தான் அப்படி மொய்த்துக்கொண்டிருப்பார்கள்.

    அவருக்குக் கொஞ்சம் கைவைத்தியம் தெரியும். குறிப்பாக குழந்தைகளுக்கு வரும் வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு அவர் தரும் மருந்தில் கைமேல் பலன் கிடைக்கும். வயிற்றுப் பொருமல், குடலேற்றம், வாந்தி, பேதி என்று யார் எப்போது வந்து கூப்பிட்டாலும், தட்டாமல் சென்று மருந்து கொடுப்பார்.

    எந்தப் பிரச்சனைக்கும் அவரிடம் தத்துவார்த்தமான பதில் உண்டு. கைரேகை பார்ப்பார். யோகாசனம் கற்றுத் தருவார். குண்டலினியை எழுப்புவது பற்றி விவாதிப்பார். மாலை நேரத்தில் களத்து மேட்டில் களரிப் பயிற்று செய்வார். அவரிடம் சிலம்பம் கற்றுக்கொண்டவர்கள் நிறைய பேர், நான் உட்பட.

    ஊருக்கெல்லாம் பரிகாரம் சொன்ன பரிகாரியின் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இல்லை என்பதுதான் சோகம். அவருடைய மனைவி ஒரு தீராத சீக்காளி. மருத்துவ வசதிகள் அதிகம் இல்லாத அந்த நாட்களில் சயரோகத்தால் பீடிக்கப்பட்டு, சதா இருமிக்கொண்டே படுக்கையில் கிடந்தவளுக்கு அவரது கைவைத்தியம் ஒன்றும் கைகொடுக்கவில்லை. மூன்று வயதுப் பெண் குழந்தையை விட்டுவிட்டு அவள் கண்களை மூடியபோது அவர் தவித்துப் போனார்.

    அந்தக் குழந்தையிடம் பாசத்தைப் பொழிந்து தன் கவலையை மறந்தார். அவர் ஊரே எடுத்துச்சொல்லியும் மறுகல்யாணம் செய்துகொள்ள கண்டிப்பாக மறுத்துவிட்டவர். மார்பிலும் தோளிலுமாக அந்தக் குழந்தையைத் தாங்கி வளர்த்தார்.

    அதன்பிறகு எங்கள் குடும்பம் அந்த ஊரைவிட்டு வந்துவிட்டதால், அவரைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை.

    வாங்க, வேலாயுதம் உள்ள வாங்க என்று நான் அழைக்க தயங்கிக்கொண்டே வந்த அவரை என் மனைவியிடம் அறிமுகப்படுத்தினேன்.

    அவர் ஏதோ உதவி கேட்டுத்தான் வந்திருக்கிறார் என்பது முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. அவராக சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தேன்.

    தம்பி, நீங்க இங்க பெரிய சோலியில் இருக்கிறதா கேள்விப்பட்டேன்... உங்க பால்ய சினேகிதர் முத்து கிட்டத்தான் விலாசம் தெரிஞ்சுக்கிட்டேன்... இவ்வளவு நாள் கழிச்சு உங்கள தேடி வந்ததுக்குக் காரணம் ஒரு ஒத்தாச கேட்டுத்தான்.

    தணிந்த குரலில் சொன்ன அவர் முகத்தில் இயலாமை படர்ந்திருந்தது.

    என்ன வேணும் சொல்லுங்க.

    ஒண்ணுமில்ல தம்பி, முதியோர் இல்லத்துல சேரணும். அதுதான் நீங்க ஒரு வார்த்தை வந்து சொன்னாப்போதும்.

    ஊருக்கெல்லாம் ஒத்தாசை செய்த பரிகாரி ஆதரவற்று நிற்பதைப் பார்க்க மனம் நொந்தது. ஏன் இப்படி என்று நான் கேட்கவில்லை. அவரே சொன்னார்.

    C:\Users\ASUS\Desktop\imagecompressor (1)\1-min.jpg

    ஊரு முன்னப்போல இல்ல, ரொம்ப முன்னேறிப்போச்சு... தெருவுக்கு ஒரு சலூன் கடை வந்துருச்சு. ரெண்டு மூணு டாக்டருங்க ஆஸ்பத்திரி போட்டிருக்காங்க... படிப்பறிவும் பெருகிப் போச்சா, நம்மக்கிட்ட யாரும் வர்றதில்ல... முன்னப்போல ஓடியாடி தொழில் செய்ய உடம்பிலேயும் தெம்பில்ல. கடைசி காலத்த ஓட்ட வேறவழி தெரியல தம்பி அதுதான்...

    கலங்கிய கண்களுடன் சொன்ன வேலாயுதத்தை

    Enjoying the preview?
    Page 1 of 1