Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malaikkottai Marmam
Malaikkottai Marmam
Malaikkottai Marmam
Ebook143 pages51 minutes

Malaikkottai Marmam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சந்திரகிரி என்ற கிராமத்திற்கு அணைக்கட்ட பிரேம்நாத் என்ற அரசு அதிகாரி குடும்பத்துடன் வருகிறான். அங்கு மணிமாறன் என்ற சிறுவன் மாட்டுவண்டி ஓட்டி வருகிறான். பிரேம்நாத்தின் பசங்களான அஸ்வினி, ஆனந்த் இருவரையும் பள்ளிக்கு அழைத்துச் செல்வது மணிமாறனின் வழக்கம் ஒருநாள் இரவு ஊர் மக்கள் அனைவரும் அங்குள்ள மலைக்கோட்டையை நோக்கி செல்கின்றனர். அதை ஆனந்தம், மணிமாறனும் பார்த்து அதிர்ச்சடைகின்றனர். அந்த மலைக்கோட்டையில் என்ன உள்ளது? ஊர் மக்கள் அங்கு செல்ல காரணம் என்ன? மலைக்கோட்டையில் ஒளிந்திருக்கும் மர்மம்தான் என்ன? வாசித்து அறியுங்கள்...

Languageதமிழ்
Release dateMar 16, 2024
ISBN6580160510481
Malaikkottai Marmam

Read more from W.R. Vasanthan

Related to Malaikkottai Marmam

Related ebooks

Reviews for Malaikkottai Marmam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malaikkottai Marmam - W.R. Vasanthan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மலைக்கோட்டை மர்மம்

    (ஏ.வி.எம். அறக் கட்டளையின் தங்கப் பதக்கம் பரிசு பெற்ற சிறுவர் நாவல்)

    Malaikkottai Marmam

    Author:

    வி.ர. வசந்தன்

    W.R. Vasanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/wr-vasanthan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. வண்டியை உருட்டிய வெள்ளம்

    2. ஆபத்தில் சிக்கினர்

    3. குடிசை எரிந்தது!

    4. மீண்டும் அந்த மனிதன்!

    5. புதிய திட்டம்

    6. சந்தேகம்

    7. முத்தையாவின் கதை

    8. தந்திரம் வென்றது

    9. புதிய செய்திகள்

    10. எதிர்பாராத உதவி

    11. இன்னா செய்தாரை...

    12. மர்மம் நீங்கியது!

    முன்னுரை

    எத்தகைய மன உறுதி கொண்டவர்களையும், வறுமை மிக எளிதில் நிலை குலைய வைத்துவிடும். பசி வந்துவிட்டால் பண்புகள் மறந்து போகும். வருமானமின்றி, வறுமையின் பிடியில் சிக்கிக் கொள்ளும் ஒரு கிராமம், தன் பசிப்பிணிக்கு பரிகாரம் தேடி, நேர்மையற்ற வழியை நாடிச் செல்கிறது, என்ற போதிலும் ஒரு சிறுவன் மட்டும் அதில் வீழ்ந்து விடாமல் தன்னைக் காத்துக் கொள்கிறான். அந்த அப்பாவிக் கிராம மக்களின் அறியாமையையும், இயலாமையையும் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு வஞ்சக குள்ளநரியின் கோபத்திற்கு ஆளாகி, தாங்க வொண்ணாத துன்பங்களையும், வேதனையையும் அனுபவிக்கிறான். சேற்று நீரால் தாமரைப் பூக்கள் களங்கமடைந்து விடுவதில்லையே! அது போலவே, சோதனைகளால் நேர்மை கொண்ட நெஞ்சங்கள் துவண்டு விடுவதில்லை. அச்சிறுவனது நற்பண்புகளும், சுயநலமற்ற அன்பும், இனிய குணமும், மற்றவர்களை கவர்ந்திழுத்து, அவனது ஆசைகள் நிறைவேற போராடும்படி வைத்துவிடுகிறது. கதாபாத்திரங்களோடு உறவாடி மகிழும்படி அன்புடன் உங்களை வரவேற்கிறேன்.

    குழந்தை எழுத்தாளர் சங்கம் 1990-ம் வருடம் நடத்திய ஏ.வி.எம். இலக்கியப் போட்டியில் முதல் பரிசான தங்கப் பதக்கத்தை இந்நாவல் பெற்றது. அதன்பின் ஒரு வருட காலம் ‘கோகுலம்’ பத்திரிகையில் தொடர்கதையாகவும் ஓடியது.

    கதையை நன்கு செப்பனிட்டு, தன் அனுபவத்தால் மெருகேற்றி நல்ல முறையில் வெளியிட்ட கௌரவ ஆசிரியர் ‘ரேவதி’ அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கதை ஆரம்பமான ஓரிரு மாதங்களிலேயே கதாநாயகனாகிய மணிமாறன் வாசகர்களை மிகவும் கவர்ந்துவிட்டான். கதை முடிய இருந்த தருவாயில், மனம் ஒன்றிப் பழகிய நெடுநாள் நண்பனைப் பிரிய இருக்கும் ஏக்கத்தோடு, பல அன்புத் தம்பி, தங்கைகள் கடிதம் எழுதி இருந்தார்கள். மணிமாறனுக்குப் பிரியாவிடை கொடுத்து அனுப்பிய ஆசிரியருக்கும், வாசகர்களுக்கும் என் நன்றி.

    இந்தக் கதை உங்கள் நெஞ்சங்களையும் கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

    வி.ர. வசந்தன்

    1. வண்டியை உருட்டிய வெள்ளம்

    அந்த அதிகாலை நேரத்தில் புகையைக் கக்கியவாறு பேரிரைச்சலோடு புவனபுரம் இரயில் நிலையத்தில் வந்து நின்றது பாசஞ்சர் இரயில். அதிலிருந்து முதலில் கீழிறங்கிய ஆனந்தும், அஸ்வினியும் ‘சில்’லென்று தங்கள் முகத்தில் மோதிய பனிக்காற்றைத் தாங்க முடியாமல் ‘வெடவெட’வென்று நடுங்கினர். அவர்களைத் தொடர்ந்து அப்பா பிரேம்நாத்தும், அம்மா கமலாவும் பெட்டி படுக்கையோடு இறங்க, இரயில் நகர்ந்தது.

    வானளாவி நிற்கும் மலைகளும், குன்றுகளுமே நாற்புறமும் தென்பட்டன. எங்கு பார்த்தாலும் பச்சை வர்ணத்தை அள்ளித் தெளித்ததுபோல் பயிர் பச்சைகளும், மரங்களும் செழித்தோங்கிக் கிடந்தன. வெண் மேகக் கூட்டங்கள் மலை முகடுகளை வருடியவாறு நகர்ந்து கொண்டிருந்த காட்சி பார்ப்பதற்கு ரம்யமாக இருந்தது.

    இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தனர். சந்திரகிரிக்கு இங்கேயிருந்து ரொம்ப தூரம் போகணுமா அப்பா? என்று கேட்டு அப்பாவின் முகத்தைப் பார்த்தான் ஆனந்தன்.

    பிரேம்நாத் அவனைப் பார்த்துப் புன்னகைத்தவாறு, எட்டு கிலோ மீட்டர் போகணும். ஆனால், மாட்டு வண்டிப் பயணம் ரொம்ப நல்லா இருக்கும் என்றார்.

    ஐயையோ! மாட்டு வண்டியிலா போகணும்? என்று அண்ணனும், தங்கையும் ஒரு சேர திகைப்படைந்து கேட்க, பிரேம்நாத் பதில் சொல்வதற்குள், ஐயா, வண்டி வேணுங்களா? என்று ஒரு குரல் அவர்கள் பின்னாலிருந்து கேட்டது.

    அங்கே பதின்மூன்று அல்லது பதினான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். கலைந்த தலையும், கிழிந்த ஆடைகளுமாக அவன் நின்றிருந்த போதிலும் அவன் முகத்தில் ஒரு வசீகரம் இருந்தது. அந்த நடுங்கும் குளிரில், அவன் உடம்பை ஒடுக்கியவாறு அரைகுறை ஆடைகளோடு நின்ற காட்சி இரக்கத்தைத் தோற்றுவிப்பதாக இருந்தது.

    பிரேம்நாத் அவனிடம், ஏன் தம்பி சந்திரகிரிக்குப் போகணும் வரியா? என்று கேட்டார்.

    சந்திரகிரிக்கா! என்று வியப்புடன் வாயைப் பிளந்த அச்சிறுவன், எனக்குக் கூட சந்திரகிரி தாங்க சொந்த ஊரு வாங்க, போகலாம் என்று உற்சாகத்துடன் சொல்லி மறுபேச்சுக்குக் காத்திராமல் அவர்கள் பெட்டி படுக்கைகளை எடுத்துப் போய் வண்டியில் வைத்தான்.

    அந்த மலைப்பாதையில் இப்படியும் அப்படியும் குலுங்கியவாறு வண்டி செல்ல, ஆனந்த் தலை குனிந்தவாறு சிந்தனையுடன் அமர்ந்திருந்தான். அஸ்வினியின் கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன. ஆட்டோவும், டாக்சியும், பரந்த விளையாட்டு மைதானங்களும், பள்ளிக்கூடமும், பொழுதுபோக்குகளும் நிறைந்த நகர வாழ்க்கையை விட்டு விட்டு, இப்படியொரு மலைக் கிராமத்துக்கு வசிக்க வருகிற அந்தக் குழந்தைகளின் மன நிலையை பிரேம்நாத்தால் புரிந்துகொள்ள முடிந்தது.

    வண்டிக்காரச் சிறுவன் திரும்பி பிரேம்நாத்தைப் பார்த்தான். நீங்கதானே வெள்ளியாற்றுக்குக் குறுக்கே அணை கட்ட வந்திருக்கும் என்ஜினியர் ஐயா? என்று கேட்டான். அவன் குரலில் அதிகப் பரபரப்பு இருந்தது.

    ஆமாம் தம்பி என்றார் பிரேம்நாத்.

    ஆனந்த் ஆற்றாமையோடு, ஏம்பா, நாம் போகிற ஊர்ல படிக்கிறதுக்குப் பள்ளிக் கூடமாவது இருக்கா? என்று கேட்டான்.

    அவன் கேள்விக்கு அவர் பதில் சொல்லுமுன் வண்டிக்காரச் சிறுவன் முந்திக்கொண்டு அந்த ஊர்ல பள்ளிக்கூடமெல்லாம் இல்ல. இங்கே புவனபுரத்துக்குத்தான் வரணும் என்றான்.

    இவ்வளவு தூரம் வந்தா படிக்கணும்? என்று கேட்ட அம்மா கமலாவின் குரலில் கலவரம் பெரிதும் தொனித்தது.

    ஆமாம்மா. இங்கதான் வந்தாகணும். புவனபுரத்திலதான் பெரிய பள்ளிக்கூடம் இருக்கு... சந்திரகிரியில மோட்டார் வசதி கூடக் கிடையாது. மாட்டு வண்டிதான். நான்கூட முன்னால பள்ளிக் கூடத்துக்கு வண்டி ஓட்டிக்கிட்டுத்தான் இருந்தேன்... இப்ப ஓட்டறதில்ல என்றான் சிறுவன்.

    ஏன் ஓட்டறதில்லே? என்று கேட்டான் ஆனந்த்.

    சுள்ளென்று கையிலிருந்த சாட்டைக் கம்பால் மாட்டை அடித்து உசுப்பி விட்டுத் திரும்பிய சிறுவன், சந்திரகிரியில இருந்து ரங்கனும், வேம்புவுந்தான் பள்ளிக்கூடத்துல படிக்கிறாங்க. இப்ப நாகராஜன் வண்டியில அவங்க போறாங்க... வண்டி ஓட்டறதுல என்னைவிட அவன் கெட்டிக்காரன்னு பேரு, அதான் என்று சிரித்தான்.

    சிந்தனையுடன் அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரேம்நாத், ஏன் தம்பி, இவங்க ரெண்டு பேரையும் பள்ளிக்கூடத்துக்கு அழைச்சுட்டுப் போக வண்டி வேணும்... அந்தப் பொறுப்பை நீ ஏத்துக்க முடியுமா? என்று கேட்டார்.

    அந்தச் சிறுவன் அதற்கு உடனே சம்மதம் தெரிவித்தான். நானே அழைச்சுட்டுப் போறேங்க... வேறயாரையும் நீங்க ஏற்பாடு பண்ண வேண்டாம்; அதோட வேற என்ன வேலை இருந்தாலும் சொல்லுங்க. செய்வேன் என்ற அவன் குரலில் மிகுந்த மகிழ்ச்சி இருந்தது.

    சிறுவனது அடக்கமும், பணிவும் அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. ரொம்ப நல்ல பிள்ளையா இருக்கான் இல்லே? என்று கணவரிடம் கேட்ட கமலா, அவனைப் பார்த்து, உன்பேரு என்ன தம்பி? என்று வினவினாள்.

    மணிமாறன் என்றான் அவன் சற்றுக் கூச்சத்துடன். வண்டி சந்திரகிரியை நெருங்கிக் கொண்டிருந்தது.

    ஆனந்தும், அஸ்வினியும் புவனபுரம் பள்ளியில் சேர்ந்து ஒரு வாரத்திற்குமேல் ஆகிவிட்டது. இப்போது அவர்களுக்கிருந்த ஒரே வெளியுலகத் தோழன் அந்த வண்டிக்காரச் சிறுவன் மணிமாறன்தான். காலையிலும், மாலையிலும் அவன் வண்டி ஓட்டியவாறு சொல்லும் கதைகள்தான் அவர்களுடைய பொழுதுபோக்கு. பெரும்பாலும் மணிமாறனின்

    Enjoying the preview?
    Page 1 of 1