Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iniya Idhayam
Iniya Idhayam
Iniya Idhayam
Ebook121 pages42 minutes

Iniya Idhayam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகம் தோன்றிய அன்றிலிருந்து அன்றாடம் நிகழும் காட்சிகள்தாம் இவை. என்றாவது ஒருநாள் இயற்கை தன் வேலையை செய்ய மறந்திருக்கிறதா? ஆனால் இந்த மனிதர்களின் சிந்தனைகளும் செயல்களும் மட்டும் ஏன் இப்படி நேரத்துக்கு நேரம், காலத்துக்கு காலம் மாறிக் கொண்டிருக்கின்றன? 'இனிய இதயம்' என்ற சிறுகதையின் தலைப்பே நூலின் தலைப்பாக இருந்தாலும், அனைத்துக் கதைகளிலும் சில நல்ல மனம் படைத்த மனிதர்களை நீங்கள் சந்திப்பீர்கள். அந்த நல்ல உள்ளங்கள், அறியாமை, ஆவணம், தன்நலம் போன்ற இருளில் நடப்பவர்களின் பாதையில் வெளிச்சம் வீசி, அவர்களுக்குப் புதுப் பாதைகளைக் காட்டுவதையும் வாசித்து அறிந்து கொள்வோம்...!

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580160510487
Iniya Idhayam

Read more from W.R. Vasanthan

Related to Iniya Idhayam

Related ebooks

Reviews for Iniya Idhayam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iniya Idhayam - W.R. Vasanthan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இனிய இதயம்

    Iniya Idhayam

    Author:

    வி.ர. வசந்தன்

    W.R. Vasanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/wr-vasanthan

    பொருளடக்கம்

    முன்னுரை

    அன்னையின் வேதனை

    கட்டுமரம்

    அனுபவ விளக்கு

    இனிய இதயம்

    கடையாணி

    உனக்குள் ஒரு நீதிபதி

    ஆடிப்பெருக்கு

    தாய்ப் பறவை

    உடைந்த கண்ணாடி

    மடுவும் மலையும்

    முன்னுரை

    அடிவானம் சிவக்க, பொன்னொளியைப் பரப்பிக்கொண்டு கதிரவன் உதயமாகிறான். பறவைக் கூட்டம் கலகலவென்று வானில் சிறகடிக்கிறது. புத்தம் புது வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கி காற்றில் அசைந்தாட, பட்டாம் பூச்சிகள் அதில் கண்ணாமூச்சி விளையாடுகின்றன. பகலெல்லாம் வெளிச்சம் தந்து, மாலையில் கதிரவன் மறைய, கீழ் வானத்தில் தங்கத்தட்டு போல் சந்திரன் தோன்றுகிறான். அந்த நிலவின் தண்ணொளி பட்டு, இரவுப் பூக்கள் மலர்ந்து கம்மென்று மணம் வீசுகின்றன. தென்றல் தவழ்ந்து தாலாட்ட, இரவின் மடியில் உலகம் நிம்மதியாகத் துயில் கொள்கிறது.

    உலகம் தோன்றிய அன்றிலிருந்து அன்றாடம் நிகழும் காட்சிகள்தாம் இவை. அதற்கு இப்போது என்ன வந்தது என்றுதானே கேட்கிறீர்கள்? இதில் ஒரு பாடம் இருக்கிறது!

    என்றாவது ஒரு நாள் இயற்கை தன் வேலையைச் செய்ய மறந்திருக்கிறதா? இரவும், பகலும், வெயிலும், நிலவும், காற்றும் மழையும் தன்னை மாற்றிக் கொண்டதுண்டா? அப்படி மாற்றிக் கொண்டால் இந்த மனித இனம் உயிர் வாழுமா? நல்லோரென்றும், தீயோரென்றும் பாராமல் இயற்கை தன் கடமையைச் செய்கிறதே!

    ஆனால் இந்த மனிதர்களின் சிந்தனைகளும் செயல்களும் மட்டும் ஏன் இப்படி நேரத்துக்கு நேரம், காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டிருக்கின்றன? தான் என்ற ஆணவமும் தனக்கு என்ற பேராசையும் இன்று மனித குலத்தை ஆட்டிப் படைக்கும் நோய்கள். இந்தத் தன்நல வளையத்திற்குள் அவன் தன்னைக் குறுக்கிக் கொள்வதால்தான், குறுகிய நோக்கங்கள் வளர்ந்து, யுத்தங்களின் கோரங்களும் தீவிரவாதத்தின் பயங்கரங்களும் தலைவிரித்து ஆடுகின்றன.

    இயற்கை தரும் வளங்களைக்கூட, தனக்கு மட்டும் என்று அள்ள துடிக்கிறான் மனிதன்.

    இந்தத் தொகுப்பில் இடம்பெறும் ‘ஆடிப் பெருக்கு’ என்ற கதையை எழுதிய போது, ஏக்கப் பெருமூச்சுதான் வந்தது. ஆடி மாதம் வந்து விட்டால் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு ஓடும் காவிரியாற்றில், இன்று மணல் நனையக்கூட தண்ணீரில்லை. பத்தாண்டுகளுக்கு முன்பு, அதில் வெள்ளம் அலை மோதுவதைப் பார்ப்பதே ஒரு கண்கொள்ளாக் காட்சி. ஆனால் இன்று? பிறர் நலன் கருதா மனப்போக்கின் விளைவல்லவா இது.

    சுயநலப் பாலையில் மனிதன் பாதை தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாலும், ஆங்காங்கே பாலைவன நீருற்றுப்போல் தென்படும் சில இனிய இதயங்களால்தான் மனிதத் தன்மையும், இவ்வுலகும் வாழ்கின்றன.

    ‘இனிய இதயம்’ என்ற சிறுகதையின் தலைப்பே நூலின் தலைப்பாக இருந்தாலும், அனைத்துக் கதைகளிலும் சில நல்ல மனம் படைத்த மனிதர்களை நீங்கள் சந்திப்பீர்கள். அந்த நல்ல உள்ளங்கள், அறியாமை, ஆணவம், தன்நலம் போன்ற இருளில் நடப்பவர்களின் பாதையில் வெளிச்சம் வீசி, அவர்களுக்குப் புதுப் பாதைகளைக் காட்டுகின்றன.

    உங்கள் இதயங்களிலும் இக்கதைகள் நல்ல நோக்கங்களை வளர்க்க உதவும் என்ற நம்பிக்கையுடன் இத்தொகுப்பினை உங்கள் முன் வைக்கிறேன்.

    வி.ர. வசந்தன்

    அன்னையின் வேதனை

    சிவபாலனின் அதீதத் துணிச்சலும், முரட்டுத்தனமும், யார் சொல்வதையும் கேட்காமல் செயல்படும் தான்தோன்றித்தனமும் அவனது அன்னையை மிகவும் கவலையுற வைத்தன. அவன் வீட்டைவிட்டு வெளியே கிளம்பிவிட்டாலே, பத்திரமாக வந்து சேர வேண்டுமே என்ற கவலை அவளைப் பாடாய் படுத்தத் தொடங்கிவிடும். அசட்டுத்தனத்தால் எத்தனையோ முறை தனக்குத்தானே ஆபத்தை வருவித்துக் கொண்ட போதிலும் அவன் திருந்துவதாக இல்லை.

    அவனது நண்பன் நரசிம்மன் கூட பலமுறை கடிந்துகொண்டு விட்டான். ஆனால் அதையும் அவன் கேட்பதாக இல்லை.

    முதலாளிக்குத் தெரியாமல் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வாகன நெரிசலான சாலையில் தாறுமாறாக ஓட்டுவதும், சாரம் இல்லாமலே கட்டிட உச்சியில் ஏறி வேலை செய்வதும் அவனுக்கு வீர விளையாட்டாக இருந்தது. யாராவது எச்சரித்தால் ‘இதுக்குப் போய் பயந்தா எப்படி’ என்று வீராப்புடன் பேசி கேலியும் செய்வான். உயிரோடு விளையாடுவது விவேகமல்ல என்று கட்டிட காண்டிராக்டரான அவனது முதலாளி பலமுறை எச்சரித்து விட்டார். எல்லாவற்றுக்கும் அவனிடமிருந்து ஒரு அலட்சிய புன்னகையே பதிலாக வரும்.

    சிவபாலனின் இந்தத் துடுக்குத் தனத்திற்குக் காரணம், அவனை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் திரைப்படங்களில் வரும் போலி காட்சிகளே என்பது அவனது நண்பன் நரசிம்மனுக்கு நன்கு தெரிந்திருந்தது. ஆனால் அவனை எப்படித் திருத்துவது என்பதுதான் புரியவில்லை.

    அன்று நகரின் விரிவாக்கப் பகுதியில், புதிதாக உருவாகிக் கொண்டிருந்த ஒரு பலமாடிக் கட்டிடத்தின் உச்சியில் ஒரு பகுதியில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அதன் அருகிலேயே மற்றொரு கட்டிடம் அரையும் குறையுமாக எழுந்து கொண்டிருந்தது.

    பூச்சு வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த கொத்தனாருக்கு அன்று சிவபாலன் தான் கையாள்.

    வாயில் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலையை ஓரமாக புளிச்சென்று உமிழ்ந்த கொத்தனார் அவனைப் பார்த்து, ரசமட்டத்தை எடுப்பா என்றார்.

    ரசமட்டத்தைத் தேடிய சிவபாலன், அது இல்லாததைக் கவனித்துவிட்டு, அங்க இல்லீங்களே, எங்க வச்சீங்க என்று கேட்க,

    அட இல்லேன்னா என்னப்பா, பக்கத்துல வாங்கு என்று சலிப்புடன் கத்தினார் கொத்தனார்.

    அங்குமிங்கும் நோட்டமிட்ட சிவபாலன் பக்கத்துக் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களிடம் ரசமட்டம் இருப்பதைப் பார்த்துவிட்டு, "அந்த ரச மட்டத்தைக் கொஞ்சம் இப்படித் தூக்கிப் போடுங்க... மட்டம் பார்த்துட்டுக் கொடுத்துடறோம்’’ என்று இங்கிருந்து உரக்க சத்தமிட்டுக் கேட்டான்.

    அங்கு வேலை செய்து கொண்டிருந்த சிறுவன் ஒருவன் அவனிடம், தூக்கிப் போட நாங்க என்ன தூக்குத் தூக்கியா ...வேணும்னா வந்து எடுத்துட்டுப் போ என்றான் இடக்காக.

    அவசரம் தெரியாமல் விளையாடுகிற அவன்மீது கோபம் கோபமாக வந்தது சிவபாலனுக்கு.

    அட, இதுக்குப் போய் இவ்வளவு தூரம் இறங்கி ஏறி வரணுமா... இப்படி போடுப்பா என்று கையை நீட்டினான் அவன்.

    எதுக்கு இறங்கி ஏறணும்... ஒரே தாவா தாவிவாயேன்... நீ தான் பெரிய வீர சிம்மனாச்சே என்று அவன் சிரிக்க,

    சிவபாலனுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது. அவனது அபிமான திரைப்படக் கதாநாயகர் மனதுக்குள் கண் சிமிட்டிப் புன்முறுவல் செய்தார்.

    "என்னடா, வரமுடியாதுன்னு நினைச்சியா... இப்பப்

    Enjoying the preview?
    Page 1 of 1