Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sarasa Kattalai
Sarasa Kattalai
Sarasa Kattalai
Ebook136 pages49 minutes

Sarasa Kattalai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Thiruvarur Babu
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466848
Sarasa Kattalai

Read more from Thiruvarur Babu

Related authors

Related to Sarasa Kattalai

Related ebooks

Related categories

Reviews for Sarasa Kattalai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sarasa Kattalai - Thiruvarur Babu

    1

    (நூறு வருடங்களுக்கு முன்)

    வானம் உறுமியது. அடிவானில் மின்னல் தெறித்தது. சூரியன் முழுவதுமாய் மறைந்து போயிருக்க, அந்த மதிய நேரம் - ‘இது பகல்தானா’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    அலிவலம் சமஸ்தானத்துக்கு சொந்தமான நாகலிங்க பூபதியின் ஜமீன் மாளிகை பிரம்மாண்டமாய் தோற்றம் அளித்துக் கொண்டிருந்தது. மாளிகையின் முகப்பு விதவிதமான வர்ணங்களால் பளபளத்துக் கொண்டிருந்தது. பின்பகுதியில் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த அனைத்து மாடுகளும் வானத்தின் உறுமலுக்குப் பயந்து அடித்தொண்டையில் குரலெழுப்பின. இடியின் சப்தத்துக்கு இணையாக அந்த சத்தம் கேட்டது.

    நான்கு கட்டுகள் கொண்டது மாளிகை. முதலாவது கட்டில் நான்கடி உயரத்தில் இருந்த கட்டிலில் படுத்திருந்த நாகலிங்க பூபதி, ஜன்னல் வழியே இருட்டிய வானத்தைப் பார்த்தார். உடனே கட்டியிருந்த பட்டு வேஷ்டியை படுத்திருந்தபடியே அவிழ்த்துக் கட்டிக்கொண்டு குரல் கொடுத்தார்.

    சரசு...

    கனமான குரல். அடுத்த கட்டுக்குள் பாய்ந்து அங்கே அமர்ந்திருந்த சரஸ்வதியை அந்தக் குரல் சேர்ந்தது.

    கணவனின் குரல் கேட்டு எழுந்த சரஸ்வதிக்கு இரட்டை சரீரம். உடம்பு முழுவதையும் மறைத்து அந்த மதிய நேரத்திலேயே தங்கத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தாள். நெஞ்சுப் பகுதி முழுவதும் பரவியிருந்த மார்பகங்களை தங்கச் சங்கிலிகள் அழுத்தியிருந்தன.

    நடந்தாள். மெதுவான, ஆனால் கம்பீரமான நடை.

    என்னங்க... என்றாள் - கணவனின் அறைக்குள் நுழைந்து. குரலில் ஒருவிதமான அலட்சியம் இருந்தது.

    பசுபதி கொல்லைப் பக்கத்துல இருக்கானா...?

    ஏன்? - கொஞ்சம் அதட்டலாகவே கேட்டாள்.

    வானம் உறுமுது. மழை வரும் போலிருக்கு. தோட்டம் என்ன நிலையில இருக்குன்னு தெரியலை. ஆளுங்க வேலை செஞ்சிகிட்டு இருந்தாங்க. வண்டி பூட்டிகிட்டு போய் பார்த்துட்டு வந்தா தேவலை. இருந்தா கூப்பிடு அவனை... - பணிவாய் சொன்னார்.

    பார்க்கிறேன் என்றவள், பொறுமையாய் மெல்ல, மெல்ல அசைந்து கொல்லைப் பக்கம் நோக்கி நடந்தாள் - இல்லை நகர்ந்தாள்.

    இரண்டு நிமிட நடை.

    கொல்லையின் இரண்டு பக்கமும் மாட்டுத் தொழுவம் நீளமாக இருந்தது. மாடுகள் குடிப்பதற்கு வசதியாக தாழக்கட்டப்பட்டிருந்த மேல் தொட்டியில் தண்ணீர் நிரம்பி இருந்தது.

    தொழுவத்தை தாண்டி... வேப்ப மரத்துக்கு அந்தப் பக்கம் தேங்காய் உரித்துக் கொண்டிருப்பான் என்று நினைத்து மெதுவாக அந்தப் பக்கம் நோக்கி நடந்த சரஸ்வதி... இடது பக்கத் தொழுவத்தின் கடைசியில் இருந்த வைக்கோல் போரிலிருந்து வந்த அந்த சத்தத்தை கவனித்தாள்.

    உடனே செவியை உன்னிப்பாய் தீட்டி... வைக்கோல் போர் ஓரமாக ஒதுங்கினாள்...

    சத்தம்... கொலுசு சத்தம்.

    பார்வையை கூர்மையாக்கி வைக்கோல் போருக்குள் ஆராய்ந்தவளின் கண்கள் கோவைப்பழமாய் சிவந்தன.

    (நூறு வருடங்களுக்குப் பின்)

    பருத்தியூர் அதிகாலை ஐந்து மணிக்கே கண் விழித்துக் கொண்டிருந்தது. முந்தைய இரவில் ஆந்தகுடி டெண்ட் கொட்டகையில் நள்ளிரவு காட்சியில் காமப் படம் பார்த்து வந்த பெரிசுகள் எல்லாம் இரவு நினைப்பிலேயே வாயில் வேப்பங்குச்சியுடன் வயல் வாய்க்கால் நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.

    ஊரின் தொடக்கத்திலேயே இருந்த அந்த டீ கடையின் பாய்லருக்கு குங்குமப் பொட்டு வைத்துவிட்டு - மிஞ்சிய குங்குமத்தை கழுத்தில் தேய்த்துவிட்டுத் கொண்ட மலையாள முதலாளி, கடை வாசலில் நின்று, உதிக்கத் தொடங்கியிருந்த சூரியனைப் பார்த்து வணங்கிவிட்டு உள்ளே நுழைந்து டேப்பை தட்டிவிட்டார்.

    ஸ்பீக்கரில் சமீபத்திய தமிழ் பாடல் அதன் கலாச்சார அர்த்தங்களுடன் சத்தமாய் ஒலித்தது.

    கிராமத்து மக்கள் சரக் சரக் என்று வாசல் தெளித்தார்கள் - கோலம் போட்டார்கள் - அவிழ்த்தார்கள் - குளித்தார்கள்.

    அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்று கடகடவென சத்தம் எழுப்பிக்கொண்டு ஊர்ந்து வந்து கடைத்தெருவில் நின்றது.

    பருத்தியூர் கடைத்தெரு இறங்கு கண்டக்டர் சத்தமாய் சொல்ல - பேருந்துக்குள் சில அவசர அசைவுகள்.

    என்ன டிரைவரண்ணே... இன்னைக்கு பத்து நிமிஷம் முன்னாடியே வந்துட்டிங்க

    முழிப்பு வந்துடிச்சு. வெறுமனே படுத்திருக்க என்னவோ போல இருந்துச்சு. சரின்று வண்டிய எடுத்துட்டேன்.

    சரிதான். உங்களுக்கென்ன முழிப்பு வந்துடுச்சுன்னு முன்னாடியே வந்துட்டிங்க. முன்னாடியே வண்டிய எடுத்துகிட்டு போயிடாதீங்க... பள்ளிக்கூடம் போற புள்ளங்க - பாவம் இஸ்கூலுக்குப் போக அதுகளுக்கு வேற வழி கிடையாது என்ற ஒரு பெரிசு, பேருந்திலிருந்து இறங்கிய அந்த இருவரையும் பார்த்து பேச்சை நிறுத்திக் கொண்டது.

    பேருந்திலிருந்து வேகமாய் இறங்கி அமுதாவின் கையிலிருந்து சூட்கேஸை ராகவன் இடது கையால் வாங்கிக் கொண்டான். அவளைப் பார்த்து சிரித்தான். விடிந்து கொண்டிருந்த பருத்தியூரை அமுதா வியப்பாய் பார்த்தாள். இரவு சரியாக தூங்காவிட்டாலும், அமுதா அழகாக இருந்தாள்.

    என்ன அமுதா அப்படியே மலைச்சுப் போயி நின்னுட்ட...? - ராகவன் மெதுவாகக் கேட்டான்.

    இல்லை... கிராமம்னு சொன்னீங்களே தவிர இப்படி ஒரு குக்கிராமம்னு நீங்க சொல்லவே இல்லையே...?

    ராகவன் சிரித்தான்.

    கிராமம் எப்படி இருந்தா என்ன? அங்க பாரு டிஷ் ஆன்டெனா... புதுப்படம் ஓடற தியேட்டர். இப்ப நமக்கு முக்கியம் தங்கறதுக்கு இடம். ஊருக்கு தலைவருன்னு யாராச்சும் இருப்பாங்க. அவுங்கள மொதல்ல சந்திக்கணும். என்றவன், ஆச்சரியமாக அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் தம்பி... இந்த ஊர் தலைவர் வீடு எங்க இருக்கு? என்றான்.

    அவன் ஓரிரு வினாடிகள் இருவரையும் உற்றுப் பார்த்துவிட்டு... யார் நீங்க? எதுக்கு அவரைப் பார்க்கணும்? என்றான்.

    யாருன்னு சொன்னாதான் சொல்வியா? இல்லேன்னா சொல்லமாட்டியா?

    சொல்லமாட்டேன் என்றான் அவன் பிடிவாதமாய்.

    உன்னை விட்டா இங்க வேற யாரும் இல்லை. அதனால சொல்லிடறோம். நாங்க மெட்ராஸ்லேந்து வர்றோம். உங்க ஊரைச் சுத்தி இருக்கிற கோவிலைப் பத்தி ஆராய்ச்சி செஞ்சி ஒரு கட்டுரை எழுதப் போறோம். அதுக்காக ரெண்டு மாசம் உங்க ஊருல தங்கணும். தங்கறதுக்கு இடம் வேணும். அதுக்குத்தான் தலைவரைப் பார்க்கணும்.

    அப்படியா? தலைவரு இப்ப எழுந்திருச்சிருக்க மாட்டாரு. இருந்தாலும் வழி சொல்றேன். இந்தாத் தெரியுது பாருங்க ஒத்த அடிப்பாதை. அதுவழியா ஒரு ரெண்டு பர்லாங் போங்க. குளம் ஒண்ணு வரும். குளத்தோட தென்கரையில பெரிய ஓட்டுவீடு இருக்கும். அதான் தலைவரோட வீடு. புரியுதா? என்றான் பெரிய மனுஷ தோரணையில்.

    இருவரும் நடந்தார்கள்.

    அவன் சொல்றதபார்த்தா ரொம்ப தூரம் போகணும் போல இருக்கே ராகவன்!

    போயிடலாம் வா.

    வானம் இப்போது முழுவதுமாய் விடிந்திருந்தது.

    சூரியன் ஆரஞ்சு நிறத்தில் வெளிச்சத்தை இறைத்துக் கொண்டிருந்தான். சாலைகளில் மாட்டு வண்டிகளில் செல்பவர்களும், வயல் வேலைக்கு நடந்து செல்பவர்களும் இருவரையும் வியப்பாய் பார்த்துக்கொண்டு போக –

    இந்த கிராமத்தில இன்னும் இரண்டு மாசம் எப்படி குப்பை கொட்டப் போறோமோ? – அமுதா சிரித்துக் கொண்டே சொன்னாள்.

    சரியாக பத்து நிமிட பயணம்.

    அவன் சொன்ன அடையாளங்கள் அந்த வீட்டுக்குப் பொருந்தியிருக்க - நின்றார்கள்.

    ஸார்... - ராகவன் மெலிதாக அழைத்தான்.

    திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த அந்த பாவாடை தாவணி உடனே வேகமாய் எழுந்து வந்தது.

    யார் நீங்க...? என்ன வேணும்?

    ஊர் தலைவரு வீடு இதுதான?

    ஆமாம்...

    அவரைப் பார்க்கணும்.

    என் அப்பாதான். கொஞ்சம் இருங்க கூப்பிடறேன் என்றவள் வேகமாய் உள்ளே போன சில விநாடிகளுக்கெல்லாம் - வெற்று மார்போடு அவர் வந்தார். சில விநாடிகள் இருவரையும் குழப்பமாய் பார்த்துவிட்டு, "உள்ள

    Enjoying the preview?
    Page 1 of 1