Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vellai Maligai
Vellai Maligai
Vellai Maligai
Ebook82 pages27 minutes

Vellai Maligai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Thiruvarur Babu
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466848
Vellai Maligai

Read more from Thiruvarur Babu

Related authors

Related to Vellai Maligai

Related ebooks

Related categories

Reviews for Vellai Maligai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vellai Maligai - Thiruvarur Babu

    1

    முன்பு தஞ்சை மாவட்டம் என்று அழைக்கப்பட்டு இப்போது நாகை காயிதே மில்லத் மாவட்டம் என்ற பெயரால் பிரிந்து வாழுகின்ற நாகப்பட்டினத்திலிருந்து பனிரெண்டு கிலோ மீட்டர் தொலைவில்... சோழவித்தியாபுரம் மிக அழகான கிராமம்.

    அழகான கிராமம் என்பதன் பொருள் கடலோர கிராமம். செழித்து வளர்ந்திருக்கின்ற தென்னை மரங்கள். பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள். தோப்புகள், துறவுகள். இவற்றோடு அழகான பெண்கள்.

    அழகு ஒரு பக்கம் இருக்க... இந்திய அளவில் ஆபத்தான மற்றும் அந்நிய நாட்டு சக்திகள் நடமாடுகின்ற இடங்கள் என்று இந்திய பாதுகாப்புத் துறையும், ராணுவத்தின் உளவுப் பிரிவான ‘ஜி’ அமைப்பும் வைத்த புள்ளியில் சோழவித்தியாபுரத்தைச் சார்ந்த கடற்பகுதியும் உண்டு.

    சோழவித்தியாபுரம் கிராமத்திற்கு ஒரு தனித்தன்மை உண்டு. மிகமிகக் குளிர்ச்சியான மண்வளம். சராசரிக்கு மேல் ஈரப்பதம் கொண்ட காற்று. ஆகவே கிராமத்தின் தட்பவெப்ப நிலையை ஆராய்ந்த புவியியல் நிபுணர்கள் பாதுகாப்புத் துறைக்கு இந்த கிராமத்தைப் பரிந்துரை செய்து குறிப்பு எழுத...

    கிராமத்தை ஒட்டிய கடற்பகுதியில் ஒரு தற்காலிக கடற்படை தளம் அமைக்கப்பட்டு கடலோர நடமாட்டங்கள் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டன. இருபத்து நான்கு மணி நேரமும் கடலோரப் பகுதிகளைக் கண்காணித்தபடி ஹெலிகாப்டர்கள்.

    சோழவித்தியாபுரத்திலிருந்து வேளாங்கன்னி எட்டு கிலோ மீட்டர். இது தரைவழி தூரம். கடல் வழியாக நான்கே கடல் மைல்கள்.

    சோழவித்தியாபுரத்தைப் பற்றி இவ்வளவு விரிவான, ஆராய்ச்சிக்கு என்ன காரணம் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள்தானே? அது ரகசியமானது.

    சோழவித்தியாபுரத்து மக்கள், கிராமத்திற்கு வடக்கே கிட்டத்தட்ட நான்கு வேலி இடத்தை ஆக்ரமித்து, சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டி அதற்கு மேல் முள் வேலி அமைத்து... எந்நேரமும் இயந்திரத் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நடமாடிக் கொண்டிருக்கக் காரணம் என்ன என்று யாரும், யோசிக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை முள்வேலிக்கு மத்தியில் வெள்ளைவெளேரென்று இருக்கும் பெரிய கட்டிடம் ஒ.என்.ஜி.சிக்குச் சொந்தமானது என்று நம்பினார்கள். அதனை உறுதிப்படுத்துவது போல் இரும்பு கிரில் கதவில் ‘ஓ.என்.ஜி.சி.ஆயில் எக்ஸ்பிரிமெண்ட் சென்டர்’ என்று எழுதப்பட்டு இரண்டு புறமும் மண்டை ஓட்டின் படம் போடப்பட்டு கட்டாயமாக அந்நியர்கள் உள்ளே பிரவேசிக்கக்கூடாது; மீறிப் பிரவேசிப்பவர்கள் சுடப்படுவார்கள் என்று எழுதப்பட்டதைப் பார்த்தபின் யாரும் அந்தப் பக்கமே வர பயப்பட்டார்கள்.

    மக்கள்தான் வரத் தயங்கினார்களே தவிர, அவ்வப்போது சர்வசாதாரணமாக ஹெலிகாப்டர்கள் வந்து இறங்குவதுண்டு. ஹெலிகாப்டரில் வந்து இறங்குகின்ற அதிகாரிகள் யாரென்று தமிழக காவல்துறைக்கேத் தெரியாது.

    அவர்களைப் பொறுத்தவரை ஓ.என்.ஜி.சி. தொடர்புடைய மத்திய அரசு நிறுவனம். அவ்வளவுதான்.

    ஆனால்...?

    பத்திரை வெயில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க... உற்றுப் பார்த்தால் மட்டும் தெரியக்கூடிய தொலைவில் அந்த ஹெலிகாப்டர் சோழவித்தியாபுரத்தைக் குறி வைத்து வட்டமடித்தது. பின் சிக்னல் பெறப்பட்டு மெதுவாகக் கீழே இறங்கியது. காற்றையும், தூசியையும் அரைத்துக்கொண்டு மிகச் சரியாக சிவப்பு வட்டம் போடப்பட்டிருந்த இடத்தில் தனது உடலை இறக்கியதும், புரொபல்லர்கள் ஓயும் வரைக் காத்திருந்து உள்ளிருந்து இரண்டு அதிகாரிகள் இறங்கி வேகமாக அந்தக் கட்டிடத்தை நோக்கி நடந்தார்கள்.

    கட்டிடத்திற்கு உள்ளே செல்லுவதற்கு முன் அவர்களின் பி.பி., டெம்பரேச்சர், ஈ.சி.ஜி. பார்க்கப்பட்டது.

    பின் அணிந்திருந்த கோட்டைக் கழட்டிக் கொடுத்துவிட்டு உடம்பை முழுதுமாக மூடக்கூடிய கவச உடை அணிந்து கொண்டார்கள். சின்ன ஆக்ஸிஜன் சிலிண்டர் முதுகு பின்னே இருந்து சுவாசம் வழங்கிக் கொண்டிருக்க... கட்டிடத்திற்கு உள்ளே நுழைந்தார்கள். மெதுவாக நடந்தார்கள். அவர்களைப் போன்றே அனைவரும் அங்கே மௌனமாக இயங்கிக் கொண்டிருக்க... உதட்டருகில் இருந்த மைக்ரோ ரிசீவரில் செய்தி பரிமாறிக் கொண்டார்கள்.

    அந்த சின்ன ஃபைபர் அறையை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டார்கள். நிறுவனத்தின் டைரக்டரான கிருஷ் சந்திரகாந்த் விரலை நீட்டி ரிசீவரில் ஏதோ சொல்ல, அவர்கள் தலையை மட்டும் ஆட்டினார்கள். சரியாக பத்தாவது நிமிடம் இருவரும் வெளியே வந்தார்கள். வந்ததற்கு அடையாளமாய் கம்ப்யூட்டரிடம் முகம் காட்டிவிட்டு பழையபடி கோட் அணிந்து கொண்டு கட்டிடத்தோடு இணைக்கப்பட்டிருந்த அறை நோக்கி நடந்தார்கள்.

    அறைக்குள் வந்து சோபாவில் அமர்ந்த இருவரில் ஒருவர் பிரதமரின்

    Enjoying the preview?
    Page 1 of 1