Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thodarum Thozhan
Thodarum Thozhan
Thodarum Thozhan
Ebook89 pages57 minutes

Thodarum Thozhan

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

சென்ற நாவலான இந்தியன் தோழனின் தொடர்ச்சியாக வரும் இரண்டாம் பாகமே இந்த தொடரும் தோழன் முதல் பாகத்தின் தந்திச் சுருக்கம் தரப்பட்டுள்ளது.

சில்வெஸ்டர் என்பவர் துப்பறியும் பணி புரிபவன் இவன் இராணுவ ரகசிய பிரதிகளை அடைய சிலர் சதி செய்ய..அவர்களைக் கைது செய்யும் கடமையில் ஈடுபடுகிறார். அவ்வாறு இராணுவ உளவுச்சதியில் ஈடுபட்ட மறைமுக பிரபலமான மனிதர்களை டோனி மற்றும் சில்வெஸ்டர் கண்டறிந்தனரா? யார் அந்த உளவாளி? காண்போம் தொடரும் தோழனில்...

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580100907001
Thodarum Thozhan

Read more from Pattukottai Prabakar

Related to Thodarum Thozhan

Related ebooks

Related categories

Reviews for Thodarum Thozhan

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    G o o o d s t o r y

Book preview

Thodarum Thozhan - Pattukottai Prabakar

https://www.pustaka.co.in

தொடரும் தோழன்

Thodarum Thozhan

Author:

பட்டுக்கோட்டை பிரபாகர்

Pattukottai Prabakar

For more books

https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

(இந்தியத் தோழனின் இரண்டாம் பாகம்)

அன்புள்ள உங்களுக்கு...

வணக்கம்.

சென்ற நாவலான இந்தியன் தோழனின் தொடர்ச்சியாக வரும் இரண்டாம் பாகமே இந்த தொடரும் தோழன். முதல் பாகத்தின் தந்திச்சுருக்கம் தரப்பட்டுள்ளது.

இந்தியத் தோழன்

முதல் பாகத்தின் கதைச் சுருக்கம்:

கோபால்தாஸ். டெல்லி பாதுகாப்பு அமைச்சகத்தின் கம்யூனிகேஷன் பிரிவில் தலைமை டெலக்ஸ் ஆபரேட்டராக வேலை. முக்கியமான இராணுவ செய்திகளை சாமர்த்தியமாகத்திருடி லாரன்ஸ் என்பவனிடம் ஒப்படைக்கிறார். ரகசியமாக நிறைய சொத்து சேர்த்துவிடுகிறார்.

கோபால்தாஸின் மனைவி பார்கவி, மகள் கல்லூரியில் படிக்கும் ஹேமாவதி, மகன் சிறுவன் சுரேந்தர்.

கோபால்தாசை CBI சந்தேகிக்கிறது. மூத்தஅதிகாரி குமார்பேனர்ஜி கோபால்தாஸை கைதுசெய்வதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துக்கொடுக்கும் பொறுப்பை ஒருதனியார் துப்பறியும் நிறுவனத்திடம் ஒப்படைக்கிறார்.

அந்த நிறுவனம் FIDA. (FRIENDS INDIA DETECTIVE AGENCIES) நிறுவனத்தின் தலைவன் கேப்டன் என்று அழைக்கப்படும் சில்வெஸ்டர். திருமணமானவன், மனைவி நந்தினி. புத்திசாலியான இளைஞன். அவனுக்கு டோனி, ரஞ்சித், சிந்தியா, மாதவகுப்தா என்று நிறைய உதவியாளர்கள். ஆனால் முக்கியமானவன் டோனி. பெண்கள் விஷயத்தில் டோனி ஒரு PLAYBOY.

சில்வெஸ்டரும், டோனியம் ஹேமாவதியைக் கடத்தி வைத்துக்கொண்டு, கோபால்தாசை மிரட்டி ஐந்து லட்சம் வேண்டுமென்கிறார்கள். கோபால்தாஸ் பணத்திற்கு எங்கேபோகிறார், யாரை தொடர்புகொள்கிறார் என்பதைக் கண்காணிக்கிறார்கள்.

பல சாகச நடவடிக்கைகளுக்குப் பிறகு கோபால்தாஸ் தான் ரகசியமாகசேர்த்த சொத்துக்களின் தஸ்தாவேஜுக்களை எங்கே பத்திரப்படுத்தியிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். தவிர கோபால்தாசுக்கு உத்தரவுகள் தருகிற லாரன்சையும் கண்டுபிடிக்கிறார்கள்.

கோபால்தாஸை கைதுசெய்ய CBIயின் ஒருபடை செல்கிறது. மற்றொருபடை லாரன்சை கைதுசெய்ய வருகிறது. லாரன்சை கைதுசெய்து ஜீப்பில் ஏற்றும் சமயம் ஏதோ ஒரு திசையிலிருந்து வரும் தோட்டா லாரன்சின் உயிரைக்குடிக்கிறது.

CBI அதிகாரி குமார்பேனர்ஜி, சில்வெஸ்டர், டோனி அனைவரும் அதிர்ச்சியோடு நிற்கிறார்கள்.

கடைசியாக டோனி சொன்ன வசனமாவது:

இதுதான் கேப்டன், இந்த ஸ்பை விவகாரங்களில் கடைசிவரை செயினைப்பிடித்து நெட்வொர்க் முழுவதையும் மடக்கமுடிவதே இல்லை. திடீரென்று முகத்தில் கதவுசாத்தப்பட்டுவிடும். இவன் மனதில் இருந்த உண்மைகள் எல்லாம் இதோ இவன் மரணத்தோடு கலந்துவிட்டன.

இனி... தொடரும் தோழன்

1

அந்த ரகசியமான விசாரணை அறையில் இடுப்பில் பேண்ட்டோடு, மேலே சட்டையில்லாமல் நிற்கவைக்கப்பட்டிருந்தார் கோபால்தாஸ். உயரத்திலிருந்து வந்த இரண்டு சங்கிலிகளோடு அவருடையகைகள் பிணைக்கப்பட்டிருந்தன.

உயரமான மதில்சுவர்களில் ஒரேஒரு சுவரில்மட்டும் சிறியவட்ட வெண்டிலேட்டர் போனால்போகிறதென்று கொஞ்சமாக சூரிய வெளிச்சத்தை உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தது. ஆனாலும் இருட்டு. கண்களை உறுத்தும்படி சரியாக கோபால்தாசின் முகத்திற்குமட்டும் ஒருபோகஸ் விளக்கு அடித்துக்கொண்டிருந்தது.

கோபால்தாஸின் ஒருமூக்கு துவாரத்தில் இருந்து ரத்தம்வழிந்து அவரின் மீசையை நனைத்து ஒருபக்க மீசையின்முனை வழியாக தாடையில் பயணம்செய்து தரையில் சொட்டிக்கொண்டிருந்தது.

ஒரு அதிகாரி தன் குச்சியால் கோபால்தாஸின் தாடையை உயர்த்தி கனத்த குரலில் உறுமினார்.

"வலி என்றால் என்னவென்று தெரிகிறதா கோபால்தாஸ்? நமது நாட்டில் நடக்கிற நிறைய வன்முறைகளின் பின்னணியில் சில வெளிநாடுகள் தான் இருக்கின்றன என்று பிரதமரே பேசுகிறார். வன்முறைச் சம்பவங்களில் எத்தனை உயிர்கள் துடிதுடித்துச் செத்திருக்கின்றன! செத்திருந்தால்கூட பரவாயில்லை என்றுச் சொல்லும்படியாக எத்தனை உயிர்கள் ஆஸ்பத்திரியில் வேதனையில், வலியில் துடித்திருக்கின்றன. உனக்கு கரன்சிசேர்ப்பது ஒன்றேக்குறியாகப் போய்விட்டதில்லை? அந்த வெளிநாடுகளுக்கு நம்

Enjoying the preview?
Page 1 of 1