Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ottran
Ottran
Ottran
Ebook242 pages1 hour

Ottran

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

P. Muthulakshmi has written many famous religious books.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110602002
Ottran

Read more from P. Muthulakshmi

Related to Ottran

Related ebooks

Related categories

Reviews for Ottran

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    No Chance. Sujatha reincarnated. But end is sudden. A la Sujatha

Book preview

Ottran - P. Muthulakshmi

http://www.pustaka.co.in

ஒற்றன்

Ottran

Author:

பி. முத்துலட்சுமி

P. Muthulakshmi

For more books
http://www.pustaka.co.in/home/author/p-muthulakshmi

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

அத்தியாயம் 26

அத்தியாயம் 27

அத்தியாயம் 28

அத்தியாயம் 29

அத்தியாயம் 30

அத்தியாயம் 31

அத்தியாயம் 32

அத்தியாயம் 33

அத்தியாயம் 34

அத்தியாயம் 35

அத்தியாயம் 36

அத்தியாயம் 37

அத்தியாயம் 38

அத்தியாயம் 39

அத்தியாயம் 40

அத்தியாயம் 41

அத்தியாயம் 42

அத்தியாயம் 43

அத்தியாயம் 44

அத்தியாயம் 45

அத்தியாயம் 46

அத்தியாயம் 47

ஒற்றன்

1

வேத காலத்தில் கிரிக்கெட் இருந்தது. 'கிரிக்கெட் பந்தின் வடிவத்தை அடிப்படையாக வைத்துதான் கடவுளர் பிரம்மாண்டமான இவ்வுலகப் பந்தைச் செய்தார்கள்' என பிராத்துமனாய சூத்திரம் தெரிவிக்கிறது.

லண்டன். பிபிசி இணைய தளத்தின் தலைமை அலுவலகம்.

"You Have Got A Mail'

கம்ப்யூட்டர் திரையின் வலது கீழ் மூலையில் தோன்றி அறிவித்த பெட்டியை அசுவாரஸ்யமாகப் பார்த்தான் ரிச்சர்ட். புது ஈமெயில் யாரிடமிருந்து வந்திருக்கிறது என்பதைக் கவனித்தவுடன் மெலிதாக விசில் அடித்தபடி அதை க்ளிக் செய்து திறந்தான்.

ஷபானாவின் ஸ்பெஷாலிட்டி நிதி, முதலீட்டு விவகாரங்கள்தான். ஆனால் அவள் தினந்தோறும் கொட்டி நிரப்பும்  டாலர், பவுண்ட், யூரோ புலம்பல்களைவிட, எப்போதாவது எழுதுகிற கிரிக்கெட் தொடர்பான கட்டுரைகள் வாசகர்களின் வரவேற்பை அள்ளிக்கொள்ளும்.

இன்றைக்கு ‘வேர்ல்ட் கப் ஸ்பெஷல்'க்காக ஒரு கட்டுரை தருவதாகச் சொல்லியிருந்தாள் ஷபானா. அதனால்தான் ரிச்சர்ட் ஆவலுடன் அவளுடைய ஈமெயிலைத் திறந்து பார்த்தான்.

வழக்கம்போல், ஒரு புதுமையான தலைப்பு. பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் அட்டகாசமாக விளையாடிப் புகழ் பெற்ற கிரிக்கெட் பிதாமகர் டான் பிராட்மென் இப்போது உயிரோடு இருந்தால், ஒருநாள் கிரிக்கெட் வேர்ல்ட் கப்பில் கலந்துகொண்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து எழுதியிருந்தாள் ஷபானா. வரிக்கு வரி நகைச்சுவை. அதனிடையே பொதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் விவரங்கள்.

ஒரே மூச்சில் படித்து முடித்த ரிச்சர்ட் தன் மேஜைமேல் குவிந்திருந்த காகிதங்களுக்கு நடுவே ஃபோனைத் தேடி எடுத்தான். ஷபானாவை அழைத்தான். "ஹேய்! ஹவ் ஆர் யு?'

"ஃபைன். மேட்டர் படிச்சுட்டியா?'

"ஆச்சு!'

"எப்படி இருக்கு?'

அட்டகாசம்' என்றான் ரிச்சர்ட். இந்தக் கேள்வியை உன்கிட்ட கேட்டுக் கேட்டு அலுத்துப்போச்சு. பொதுவா பெண் ரிப்போர்ட்டர்ஸுக்குக் கிரிக்கெட்ன்னாலே அலர்ஜி. உனக்குமட்டும் என்ன ஸ்பெஷல் ஆர்வம்?'

ஷபானா எப்போதும்போல் பெரிதாகச் சிரித்தாள். "இதுக்கெல்லாம் காரணம் கேட்கிறதுகூட ஒருவிதத்தில ஆணாதிக்கம்தான் மிஸ்டர் ரிச்சர்ட்!'

போச்சுடா! இனிமே நான் பேசமுடியாது' என்றபடி ஃபோனைத் தோள் இடுக்கில் செருகிக்கொண்டான் ரிச்சர்ட். சரி. நான் மேட்டரை லேஅவுட் செஞ்சு எடிட்டருக்கு அனுப்பிடறேன். ஈவினிங் பப்ளிஷ் ஆகிடும். எப்படி வந்திருக்குன்னு பார்த்துட்டுச் சொல்லு.'

"ஓகே!'

ஷபானா ஃபோனைக் கீழே வைப்பதற்குள் ரிச்சர்ட் பிபிசியின் புகைப்பட ஆல்பத்திற்குள் நுழைந்திருந்தான். டான் பிராட்மெனின் மூன்று நல்ல புகைப்படங்களாகத் தேர்ந்தெடுத்துக் கட்டுரைக்குள் நுழைத்தான். பிராட்மென்பற்றி மற்ற கிரிக்கெட்டர்கள் கொடுத்திருந்த ஆடியோ பேட்டிகளையும் ஆங்காங்கே தூவினான். அன்று மாலை நான்கு மணிக்குக் கட்டுரை வெளியாகும்படி செய்தான்.

உடனடியாக, அரட்டைப் பெட்டிக்கு நகர்ந்து எடிட்டரை அழைத்தான் ரிச்சர்ட். "ஹலோ பாஸ், சௌக்யமா?'

"யெஸ். எனிதிங் இம்பார்டண்ட்?'

வேர்ல்ட் கப் ஸ்பெஷலுக்காக ஷபானாவோட மேட்டர் ஒண்ணு லேஅவுட் செஞ்சு அனுப்பியிருக்கேன். கொஞ்சம் பாருங்க' என்றான் ரிச்சர்ட். உங்களுக்கு ஓகேன்னா இன்னிக்கு ஈவினிங் 4 மணிக்கு பப்ளிஷ் ஆகறமாதிரி ஷெட்யூல் செஞ்சிருக்கேன்.'

"ஓகே. ஏதாவது கரெக்ஷன் இருந்தா நான் பார்த்துக்கறேன்' என்றார் அவனுடைய எடிட்டர். 'வாட் நெக்ஸ்ட்?'

"இந்த வேர்ல்ட் கப் போட்டிகள் நடக்கப்போற ஒவ்வொரு நகரத்தைப்பத்தியும் சின்னச் சின்னக் கட்டுரைகள் செய்யச் சொன்னீங்க. ஃபோட்டோ ஃபீச்சர்மாதிரி. அதான் இப்ப ரெடியாகிட்டிருக்கு.'

"ஃபைன். நாம அப்புறம் பேசலாம்!'

அரட்டைப் பெட்டியை மூடிவிட்டு ரிச்சர்ட் தன் இருக்கையில் சாய்ந்துகொண்டான். ஐஃபோனில் ஃபேஸ்புக்கைத் திறந்து கொஞ்சம் மேய்ந்தான். ஒன்றும் புதுசாக இல்லை.

அவனுக்கு லேசாகத் தலை வலிக்கிறாற்போலிருந்தது. ஒரு காஃபி சாப்பிட்டால் சரியாகிவிடும்.

ரிச்சர்டுக்குப் பத்தடி தொலைவில் சின்னப் பூனைக்குட்டிமாதிரி ஒரு காஃபி மெஷின் உட்கார்ந்திருந்தது. அதிலிருந்த ஏராளப் பொத்தான்களில் சிலதைத் தேர்ந்தெடுத்து அழுத்தி ஒரு குவளை காஃபி நிரப்பிக்கொண்டான். இன்னொரு கையால் பக்கத்திலிருந்த பாட்டிலைத் திறந்து இரண்டு பிஸ்கட்களைக் கவ்விக்கொண்டான். பால்கனிக்கு நகர்ந்தான்.

காஃபிக் கோப்பையை உதட்டுக்குக் கொண்டுவருவதற்குள் அவனுடைய செல்ஃபோன் ஒலித்தது. "ஹலோ, யாரு?'

'ஹேய் ரிச்சர்ட், நான்தான் யமுனா!' எதிர்முனைக் குரலில் லேசான பதற்றம் தெரிந்தது. "ஹவ் ஆர்  யு?'

யமுனா ரிச்சர்டுடன் வேலை செய்கிறவள். இந்தியக் குடும்பம். ஆனால் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவள். புகைப்படங்களை இஷ்டம்போல் கலைத்துப்போட்டு மாற்றுவதில் நிபுணி. கொஞ்சநாளாக அவனோடு டேட்டிங் என்று சுற்றிக்கொண்டிருக்கிறாள். ஆனால் மற்ற பெண்களைப் போல் அத்தனை சுலபத்தில் கை வைக்க விடுவதில்லை!

ரிச்சர்ட் உற்சாகமாக விசிலடித்தான். "ஐயாம் ஃபைன். ஹவ் ஆர் யு டார்லிங்?'

லிஸன். எனக்கு ஒரு பெரிய பிரச்னை' என்றாள் யமுனா. நீ உடனடியா எங்க வீட்டுக்குப் புறப்பட்டு வரமுடியுமா?'

"என்ன பிரச்னை? நீ ரொம்ப அழகா இருக்கேன்னு சொல்லி போலிஸ் உன்னை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?'

"நேரம் காலம் தெரியாம ஜொள்ளு வடிக்காதேடா. மேட்டர் ரொம்ப அர்ஜென்ட். சீக்கிரமாப் புறப்பட்டு வா!'

"யமுனா, ஆர் யு சீரியஸ்?'

"யெஸ். நீ உடனடியா வராட்டி என் உயிருக்கே ஆபத்து! கம் ஃபாஸ்ட்!'

2

சாத்தானாகிய பாம்பு ஏவாளுக்கு அந்த ஆப்பிளைக் காண்பித்தது. உடனே அவள் "ஆஹா! அழகான சிவப்பு நிறப் பழம். கிரிக்கெட் பந்தைப்போலவே இருக்கிறது' என்று பரவசத்தோடு சொன்னாள்.

'ஸாரி சார், இன்று ஒருநாள்மட்டும் கார்களுக்கு உள்ளே அனுமதி இல்லை!'

அந்தக் காவலாளியை எரிச்சலோடு பார்த்தான் கிஷன். "நான் ஒண்ணும் அத்துமீறி உள்ளே நுழையலை. என்கிட்ட இன்விடேஷன் இருக்கு மேன்!' என்றான்.

இருக்கலாம் சார். ஆனா பாதுகாப்புக் காரணங்களுக்காக எந்தக் காரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க' என்றார் அவர். தயவுசெஞ்சு வெளியே எங்கேயாவது காரைப் பார்க் செஞ்சுட்டு வாங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில ப்ரெஸ் கான்ஃபரன்ஸ் ஆரம்பமாகப்போகுது!'

ஆத்திரத்தில் கிஷன் கொட்டிய ஆங்கிலக் கெட்டவார்த்தைகள் அவரிடம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. கூலாக அடுத்த காரைத் தடுத்து நிறுத்தச் சென்றுவிட்டார்.

கிஷன் வேண்டுமென்றே வேகமாகக் காரை ஒடித்துத் திருப்பினான். அது அந்த இன்னொரு காரின்மீது மோதப்போகும் கடைசி விநாடியில் ப்ரேக் அடித்து மீண்டும் திருப்பினான். அந்த நட்சத்திர ஓட்டலை ஒட்டியிருக்கும் சாலையில் அவனுடைய கார் விரைந்தது.

வரிசையாக எழுபத்து மூன்று கார்களை எண்ணியபிறகு ஒரு காலி இடம் தெரிந்தது. அங்கே குப்பைகள் கொட்டிக் குவிக்கப்பட்டிருந்தன.

மும்பையில் குப்பை இல்லாத இடம் ஏது? அங்கேயே காரை நிறுத்திவிட்டு வெளியே வந்தான் கிஷன். பின் இருக்கையில் இருந்த தன்னுடைய மொபைல் ஃபோனையும் அழைப்பிதழையும் எடுத்துக்கொண்டான். ஹோட்டல் வாசலை நோக்கி ஜாகிங் செய்ய ஆரம்பித்தான்.

அதே காவலாளி. அதே புன்னகையோடு அவனை வரவேற்றார். "வெல்கம் சார்!'

கிஷன் ஆத்திரத்தோடு அவருக்கு நடு விரலைக் காட்டினான். கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான். ரிசப்ஷனை நெருங்கினான்.

"எக்ஸ்க்யூஸ் மீ, வேர்ல்ட் கப் ப்ரெஸ் கான்ஃபரன்ஸ்...'

அவன் கேட்டு முடிக்குமுன் அவள் இடது பக்கம் கை காட்டினாள். "டேக் திஸ் லிஃப்ட். செகன்ட் ஃப்ளோர்.'

கிஷன் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு லிஃப்ட் பொத்தானை அழுத்தினான். மொபைலைத் திறந்து ட்விட்டர் அப்ளிகேஷனை உயிர்ப்பித்தான். "ஸ்டார் ஹோட்டல் என்று பெயர்தான். ஆனால் வருகிற விருந்தாளிகளை நாயைவிடக் கேவலமாக நடத்துகிறார்கள்' என்று எழுதி போஸ்ட் செய்தான்.

அதற்குள் லிஃப்ட் வந்திருந்தது. கிஷனோடு இன்னும் ஏழெட்டுப் பேர் அதில் ஏறிக்கொண்டார்கள். அநேகமாக எல்லோர் கையிலும் அந்த அழைப்பிதழ் இருந்தது.

இரண்டாவது மாடியில் மிகப் பிரம்மாண்டமான பால் ரூம் வெளிச்சத்தில் குளித்திருந்தது. அழைப்பிதழைச் சரிபார்த்துவிட்டுக் கிஷனை உள்ளே அனுமதித்தார்கள். தன்னுடைய சகாக்கள் யாரும் தென்படுகிறார்களா என்று கவனித்தபடி ஓரமாக அடுக்கியிருந்த தண்ணீர் பாட்டில்களில் ஒன்றை எடுத்துக்கொண்டான் அவன்.

அதிர்ஷ்டவசமாக, முதல் வரிசையிலேயே ஓர் இடம் காலியாக இருந்தது. அங்கே அமர்ந்துகொண்டான். பக்கத்தில் இருந்தவரைப் பார்த்துச் சிநேகமாக ஒரு புன்னகை செய்துவிட்டு மேடையின்பக்கம் பார்வையைத் திருப்பினான்.

அங்கே ஓர் ஆளுயரக் கார்ட்டூன் யானை பொம்மை நிறுத்தப்பட்டிருந்தது. அதன் இருபுறமும் ஏழெட்டு நாற்காலிகள். அதில் மூன்று பேர்மட்டும் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் யாரையும் கிஷனுக்கு அடையாளம் தெரியவில்லை. அழைப்பிதழைப் பிரித்துப் பார்த்தான். அப்போதும் தெரியவில்லை.

சில நிமிடங்களில் அந்தப் பெரிய ஹால் முழுவதுமாக நிரம்பிவிட்டது. ஓரமாகத் தண்ணீர், அல்லது ஜூஸ், அல்லது காபி, அல்லது விஸ்கி பருகியபடி அரட்டையடிக்கும் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், கிரிக்கெட் வாரியப் பெருந்தலைகள். எல்லோரும் முக்கிய விருந்தினர்களின் வருகைக்காகக் காத்திருந்தார்கள்.

ஆறு மணிக்குத் தொடங்கவேண்டிய கூட்டம் சரியாக ஆறு இருபதுக்குத் தொடங்கியது. இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் எல்லோரையும் வரவேற்றார். 'எங்கள் அழைப்பை ஏற்று இங்கே வந்திருக்கும் உங்களுக்கெல்லாம் நன்றி!'

'இன்னும் சில வாரங்களில் பத்தாவது கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டிகள் தொடங்கவிருப்பது உங்களுக்குத் தெரியும். இந்தமுறை போட்டிகளை நடத்தும் பொறுப்பு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.'

அவர் இப்படிச் சொன்னதும் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத் தலைவர்கள் எழுந்து நின்று கை அசைத்தார்கள். ஃப்ளாஷ்களின் வெளிச்சம் அவர்களுடைய கண்ணைக் கூசவைத்தது.

இப்போது நாம் இந்த உலகக்கோப்பைப் போட்டிகளின் கால அட்டவணையை வெளியிடப்போகிறோம்' என்றார் தலைவர். உங்களுக்குத் தரப்பட்டிருக்கும் மீடியா கிட்டில் அந்த விவரங்கள் இருக்கின்றன. தயவுசெய்து அவற்றை உங்கள் பத்திரிகைகளில் வெளியிட்டு உதவுங்கள்!'

வேற பொழப்பில்லை' என்று முணுமுணுத்தான் கிஷன். இன்னும் அஞ்சு நிமிஷத்தில அது பத்தாயிரம் வெப்சைட்ல பப்ளிஷ் ஆகிடும். இன்னும் இதைப் பேப்பர்ல அச்சடிக்கணுமா? மரங்களுக்குப் பிடிச்ச கேடு!'

அவன் நினைத்ததை உரக்கச் சொல்லிவிட்டான்போல. பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் மெல்லச் சிரித்தார். முதல் வரிசையில உட்கார்ந்துகிட்டு இப்படிக் கமென்ட் அடிக்கறதுக்கு ஒரு தனி தைரியம் வேணும் மிஸ்டர்' என்றார். ஹலோ, ஐயாம் மணவாளன். டெக்கான் ஹெரால்ட்!' என்று கை நீட்டினார்.

"ஹாய், ஐயாம் கிஷன். என்.டி.டிவி.'

"டிவிங்கறீங்க, கேமெரா எங்கே? மைக் எங்கே?'

'அதுக்கெல்லாம் தனி ஆளுங்க இருக்காங்க. என் வேலை ரிப்போர்ட் எழுதறதுதான்!' என்றான் கிஷன். "அதுக்கு நான் இங்கே நேர்ல வரணும்ன்னு அவசியமே இல்லை. சுத்த டைம் வேஸ்ட்!'

இப்போது மேடையில் உலகக்கோப்பைப் போட்டிகளின் சின்னமாகிய கார்ட்டூன் யானை அறிமுகப்படுத்தப்பட்டது. நான்கு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வாரியத் தலைவர்களும் அதன்மீது கை வைத்தபடி ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள்.

'யானையும் நாலு குருடங்களும்ன்னு ஒரு கதை உண்டு. தெரியுமா?' என்றான் கிஷன். "இந்தக் கூத்தைப் பார்க்கும்போது எனக்கு அதுதான் ஞாபகத்துக்கு வருது!'

"எக்ஸாக்ட்லி. நம்ம இந்தியர்களுக்கு யானைமேல அப்படி என்ன ஒரு அப்ஸெஷனோ தெரியலை. இங்கே எந்த

Enjoying the preview?
Page 1 of 1