Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnodu Oru Nimidam
Unnodu Oru Nimidam
Unnodu Oru Nimidam
Ebook94 pages50 minutes

Unnodu Oru Nimidam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

She has written many Tamil novels and short stories.
Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580109404796
Unnodu Oru Nimidam

Read more from Usha Subramanian

Related to Unnodu Oru Nimidam

Related ebooks

Reviews for Unnodu Oru Nimidam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnodu Oru Nimidam - Usha Subramanian

    http://www.pustaka.co.in

    உன்னோடு ஒரு நிமிடம்

    Unnodu Oru Nimidam

    Author:

    உஷா சுப்பிரமணியன்

    Usha Subramanian

    For more books

    http://www.pustaka.co.in/home/author/usha-subramanian-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    வெளியே வெயில் கொக்கரித்துக் கொண்டிருந்தது. பத்து மணி காலைக்கு இது ரொம்ப அதிகம் என்றே தோன்றியது.

    நாற்காலியில் உட்கார்ந்து காலை மேஜை மேல் தூக்கிப் போட்டபடி நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தான் கார்த்திக். இனியும் கடிக்க நகம் பாக்கியில்லை என்று நிச்சயமான பிறகு அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியுடன் எழுந்தான்.

    வாசற்கதவில் தொங்கிய 'கார்த்திக் டிடெக்டிவ் ஏஜென்ஸி' என்ற வெண்கலப் பெயர்ப் பலகையைப் பள பளவெனத் துடைத்து மாட்டினான். மின் விசிறியைச் சுழலவிட்டான். ஹைதர் காலத்து பேன் டொடங் டொடங் என்று சப்தமிட்டபடி அனல் காற்றைச் சுற்றிப் பரப்பியது.

    அப்பா மாதா மாதம் நெல் விற்ற பணம், மிளகாய்க் குத்தகைப் பணம் என்று அனுப்பி வந்ததால் சாப்பாட்டுக்கு, சிகரெட்டுக்கு, சினிமா பார்க்க, ஸ்கூட்டர் பெட்ரோல் போட என்று கவலைப் படாமல் இருக்க முடிந்தது. ஆனாலும் இந்த வேலையில்லாத் திண்டாட்டம் ரொம்பத் தான் சிரமம்.

    பேசாமல் போலீஸ் வேலையிலேயே இருந்திருக்கலாம். ராதாவும், அப்பாவும் சேர்ந்து செய்த கலாட்டாவில், அவன் பிடித்து அரசிடம் ஒப்படைத்த துல்ஹான் தேவியின் ஆசை நாயகன் 'உன் வம்சத்தையே பூண்டோடு ஒழித்து விடுவேன்' என்று எழுதிய மிரட்டல் கடிதத்தைக் கண்டு பயந்து ஐ. பி. எஸ் என்ற அழகான அடைமொழியை உதறிவிட்டு ஓடிவந்து இப்படி ஊரோடு, வாசலோடு உட்கார்ந்ததன் பயன்...

    இப்படிப்பட்ட போர்டம். வேலை கிடைக்காமல் இருப்பது கூடத் தேவலை போலிருந்தது. செய்ய வேலையில்லாமல் திண்டாடுவது கஷ்டத்திலும் மிகக் கஷ்டமே.

    கையை உயரத் தூக்கி சோம்பல் முறித்தபடி கொட்டாவி விட்டான்.

    வாசலில் யாரோ ஓடிவரும் சப்தம் கேட்டது.

    கார்த்திக் மேஜையிலிருந்து காலை இறக்கிக் கீழே போடுவதற்குள் வந்தவர் மூச்சிரைக்க எதிரே நின்றார்.

    வயது நாற்பத்தைந்திருக்கலாம். முக்கால் வழுக்கை. அவரைப் பார்த்த பிறகு 'ஆண்களுக்கு வழுக்கை செக்ஸியான தோற்றத்தை அளிக்கிறது' என்ற எண்ணத்தை யாரும் மாற்றிக் கொள்வார்கள். 'சைட்வேசில்' சற்றே கழுகு போன்ற மூக்கு. அதன் மேல் தொத்திய மூக்குக் கண்ணாடி. மா நிறம். துப்பறியும் சாம்புவின் இரண்டாவது கஸின்போல் தோற்றமளித்தார் அந்த மனிதர்.

    ப்ளீஸ் ஸிட் டவுன். கார்த்திக் நாற்காலியைக் காட்டினான்.

    வந்தவர் உட்காரத் தயாராக இல்லை. அவர் கைகள் இரண்டும் உதறிக் கொண்டிருந்தது. பேசத் தொடங்கியவர் வாயெழும்பாமல் குமுறினார்.

    ஸார், காம் டவுன்... ப்ளீஸ் ஸிட்டவுன்... கார்த்திக் குரலில் குழைவை வரவழைத்துக் கொண்டான். கட்டாயமாக மனிதர் ஏதோ மிகப் பெரிய அபாயத்தில் இருக்கிறார். இல்லாவிட்டால் இப்படிப் பதற அவசியமில்லை.

    வந்தவர் இப்போது விசும்ப ஆரம்பித்தார். ஸார், என் மகளைக் காணோம். என் மகளை இழந்துட்டேன்.

    பல நாள் கழித்து வரும் கேஸ். கார்த்திக்கின் உடம்பு, மூளை எல்லாம் சுறு சுறுப்பாயிற்று. குரலில் தேனும், பாலும் கலந்தது. கவலையே படவேண்டாம் சார். குழந்தையானால் பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது ரிக்ஷா டயர் பங்க்சராகியிருக்கும். டீனேஜரானால் காதலனுடன் சினிமாவுக்குப் போயிருப்பாள். கலியாணமானவளாக இருந்தால் மாமியாருடன் சண்டை என்று ஒர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலில் ஒருநாள் அகதியாக இருப்பாள். எப்படியானாலும் எங்கள் டிடெக்டிவ் எஜென்ஸியை அடைந்த பிறகு நீங்கள் கவலையே படவேண்டாம். ஒரே நாளில் உங்கள் மகளை உங்களிடம் சேர்ப்பது எங்கள் பொறுப்பு... லாட்டரி டிக்கெட் விற்கும் தொனியில் கார்த்திக் தன் ஏஜென்ஸி புராணம் பாடினான்.

    சொல்லுங்கள் ஸார். உங்கள் மகள் பெயர், வயது, அட்ரெஸ், எப்போதிலிருந்து காணவில்லை. யார், யார் நண்பர்கள்...

    சொல்லுகிறேன். வந்தவர் நாற்காலியில் சோர்ந்து உட்கார்ந்தார். என் பெயர் சேஷாத்ரி... ஸ்மால் ஸ்கேல் இன்டஸ்டரி வைத்திருக்கிறேன் அம்பத்தூரில். ஒரே டாட்டர் ஸார்...லவ்லி கேர்ல்... நேற்று இரவு கூடச் சாதாரணமாகத்தான் பேசிக் கொண்டிருந்தாள். ஒளியும் ஒலியும் பார்த்தாள். பத்து மணிக்குத் தூக்கம் வருகிறது என்று படுக்கச் சென்றவள் காலையில் எட்டு மணிவரை எழுந்து வரவில்லையே என்று அறையில் எட்டிப் பார்த்தால் ஆளே காணும்.

    பெண் அறையில் இல்லை என்றால் அவள் காணோம் என்றோ, கடத்தப்பட்டாள் என்றோவா அர்த்தம்... நேற்று கல்லூரியில் நோட்ஸ் எழுதாதது நினைவுக்கு வந்திருக்கும், யாராவது ப்ரெண்ட் வீட்டிற்கு நோட்ஸ் வாங்கி வரப் போயிருப்பாள். அல்லது உடலை அழகாக வைத்துக் கொள்ள 'ஜாகிங்' செய்யச் சென்றிருக்கலாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1