Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Usha Subramanian Kadhaigal Part - 4
Usha Subramanian Kadhaigal Part - 4
Usha Subramanian Kadhaigal Part - 4
Ebook164 pages1 hour

Usha Subramanian Kadhaigal Part - 4

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

She has written many Tamil novels and short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109401568
Usha Subramanian Kadhaigal Part - 4

Read more from Usha Subramanian

Related to Usha Subramanian Kadhaigal Part - 4

Related ebooks

Reviews for Usha Subramanian Kadhaigal Part - 4

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    All the stories are very true to life and the author is just great in writing the stories life-like!god bless her

Book preview

Usha Subramanian Kadhaigal Part - 4 - Usha Subramanian

http://www.pustaka.co.in

உஷா சுப்பிரமணியன் கதைகள்

பாகம் - 4

Usha Subramanian Kadhaigal

Part - 4

Author:

உஷா சுப்பிரமணியன்

Usha Subramanian

For other books

http://www.pustaka.co.in/home/author/usha-subramanian

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

1. லிஃப்ட் ப்ளீஸ்

2. வேலை

3. வேலை வெட்டி இல்லாதவ

4. அவள் எடுத்த முடிவு

5. உனுக்கொரு நாயம்... எனுக்கொரு நாயமா?

6. மறந்து விட்டோம்

7. லட்சுமி

8. சாட்சி

9. நேரமில்லை எனக்கு

10. சோலைவழிப் பாலைவனம்

11. முதல் முறையாக!

12. எது முக்கியம்?

13. மனைவி மனுஷியானால்

14. இதோ பணம் வருகிறது

1. லிஃப்ட் ப்ளீஸ்

மல்லி... மல்லிக்கண்ணா... ரெடியா? மாடியை நோக்கிக் கத்தினார் சம்பத்.

ஊஹூம்... நீங்க போங்க டாடி... எனக்கு டயமாகும். காலையிலே தலைக்கு ஷாம்பூ போட்டேன். அது இன்னும் காயலை. ஜீன்ஸை அயர்ன் செய்யணும்...

அட... ஜீன்ஸைக் கசக்கின்னா போட்டுப்பாங்க, அயர்ன் கூடச் செய்வாங்களா என்ன?

ஓ... இது ஜோக்கில்ல... இருங்க சிரிச்சுடறேன்... மல்லி குறும்பாக மேல் படியிலிருந்து எட்டிப் பார்த்தாள்.

நாட்டி கேர்ள்... மெதுவாகத் தலையை ஆத்திண்டு இருந்தேன்னா, காலேஜுக்கு லேட் ஆயிடும்... ஹும், கெட் ரெடி...

ஃபர்ஸ்ட் அவர் ஃப்ரீதான். அரை மணி கழிச்சுக் கிளம்பறேன்.

எப்படிப் போவே? பஸ்ஸெல்லாம் ஒவர் க்ரவுடட் ஆகிவிடுகிறது...

பரவாயில்லை, அப்படியானா ஐ வில் டேக் எ லிஃப்ட் கட்டை விரலைக் கீழே திருப்பி, உதட்டைப் பிதுக்கி, வெண் பல் தெரியச் சிரித்தாள் மல்லிகா.

கண்டவன் கிட்ட லிஃப்ட் கேட்டு, காரிலே ஏறிக்கிறது என்ன வழக்கம் பாருங்க... நீங்களாவது சொல்லக் கூடாது?

திரும்ப ஆரம்பிச்சுட்டியே மம்மி... மல்லிகா தடதடவெனப் படியிறங்கி வந்தாள். நீங்களே சொல்லுங்க டாடி... பேப்பர் படிச்சுப் படிச்சு வீட்டிலிருக்கிற லேடீஸுக்கெல்லாம் 'ஃபியர் காம்ப்ளெக்ஸே' வந்து விட்டது. எப்போ பார்த்தாலும் பெண்ணை எவனாவது ரேப் செய்து விடுவானோன்னு பயம். ரேப் செய்ய காருக்குத்தான் போகணுமா என்ன? எம் மேல கை வைக்கும் தைரியம் யாருக்கு உண்டு? 'ஹாய்... ஹாய் ஹூ...'" ஒரு கராத்தே பிடி அபிநயித்து, செங்கல் வெட்டுவது போல் கையால் வெட்டி காலைத் தூக்கி உதைத்துக் காண்பித்தாள்.

ஐ நோ டு ப்ரொடெக்ட் மைஸெல்ஃப்... என் ஹேண்ட் பாகில் எப்பவும் ஒரு பாக்கெட் கத்தி ரெடி. ஏதாவது விஷமம் பண்ணத் துணிஞ்சா ஒரு சின்னக் கீறல்... தட்ஸ் ஆல்.

சம்பத் குப்பென்று சிரித்து விட்டார்.

உங்க பெண் பேச்சைக் கேட்டுப் பெருமை வேறயாக்கும். புத்தி சொல்லுங்க... எவனாவது சோதா காரில் ஏறிக்கிட்டு...

மல்லி ஒடிச்சென்று ராஜியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்துடன் கன்னம் இழைத்துக் கொஞ்சினாள்.

மம்மீ... ஸ்வீட் மம்மீ... நான் கண்ட சோதாவிடமெல்லாம் லிஃப்டே கேட்க மாட்டேன். பயப்படாதே. டாடி மாதிரி, மிடில் ஏஜா, டீஸன்டா, எக்ஸிகூடிவ் டைப்பா குழந்தை குட்டிக்காரர்னு தோணறவங்க கிட்டத்தான், அதுவும் அவங்க தனியா இருந்தாத்தான் லிஃப்ட் கேட்பேன். ஒடற காரில், தனியா ஒட்டிப் போறவர் எந்த வம்பும் செய்ய முடியாது. கவலைப்படாதே... பை... பை... டாடி... அயர்ன் சூடாயிருக்கும்...

துள்ளிக் குதித்து மாடி ஏறும் இவளைப் பதினேழு வயதுக் குழந்தை என்பதா? பெரிய மனுஷி என்பதா? இந்தக் காலப் பெண்களுக்கு நடை, உடை, பாவனைகளில் வெகுளித்தனம் இருந்தாலும் மனதில் முதிர்ச்சியிருக்கிறது. இவளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. மகளைப் பற்றிய பெருமையுடன் சம்பத் காரில் ஏறினார்.

அண்ணா நகர் சந்து பொந்துகளில் புகுந்து, பூந்தமல்லி ஹைரோட்டில் வெளிவரும் திருப்பம் -

பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு வந்த அந்தப் பெண்ணுக்கு மல்லிகா வயதுதானிருக்கும். வழக்கமான மங்கிய நீல ஜீன்ஸ்... மேலே நெருங்கிப் பிடிக்கும் ஷர்ட்... தோள் வரைவெட்டிய முடி... வேகவேகமாக நடந்து கொண்டிருந்தவள், பின்னால் வந்த காரைப் பார்த்தவுடன், ஆவலுடன் நடு ரோட்டுக்கு வந்து, கட்டை விரலைக் கீழ் நோக்கி அசைத்து, எதிர்பார்ப்புடன் நிமிர்ந்து பார்த்தாள்.

சட்டென மல்லி ஞாபகம் வர, இந்தப் பால்வடியும் குழந்தை முகத்தையும், குண்டுக் கண்களையும் ஏமாற்ற மனமில்லாமல் காரை நிறுத்தினார்.

மவுண்ட் ரோட் பக்கமா அங்கிள்? டிரைவர் சீட்டினருகே குனிந்து கேட்டாள்.

யெஸ்... கெட் இன்... பனியனுள் பூனைக்குட்டிகள் துள்ள, குடுகுடுவென்று காரைப் பிரதட்சிணம் செய்து கொண்டு முன்பக்கம் ஏறித் 'தொப்'பென்று சீட்டில் விழுந்தாள்.

தாங்கள் இனிமேலும் பாப்பாக்கள் இல்லை என்று தங்கள் குழந்தைத்தனத்தை மறைக்கத்தான் இப்படி வளர்ச்சியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்களோ... மல்லியும் இப்படித்தான்.

'யெஸ்; மாடர்ன் கேர்ள்ஸுக்கு தங்கள் உடம்பைப் பற்றி, செக்ஸ் உணர்வுகளைப் பற்றி அனாவசிய உபாதைகள் இல்லை. ஒரு விஷயத்தில் இதுவும் நல்லதுதானே... மூடி மூடி வைத்து என்ன சாதித்துவிட்டோம்?'

அங்கிள்... உங்க கார் ரொம்ப நல்லாயிருக்கு. ஸ்டீரியோவில் என்ன காஸெட் வெச்சுருக்கிங்க... ஏதாவது ப்ளே பண்ணுங்களேன்... வெள்ளைச் சிரிப்பு தலையை ஆட்டி ஆட்டிப் பேசும் போது கொள்ளை அழகு.

ஓ.கே. பால் மோரியட் போடட்டுமா?

ஊ… க்ரூவி (Groovy) சீட்டில் எழும்பிக் குதித்தாள். காரே அதிர்ந்தது.

உம் பேரென்னம்மா...?

விநிதா, அங்கிள்... பேச்சுக்குப் பேச்சு அழுத்தமான அங்கிள். நீ முன் பின் தெரியாத, தனியாகப் போகும் ஆண், நான் உன்னை நம்பி ஏறியிருக்கும் பெண் என்கிற மாதிரி எந்த விகல்பமுமில்லாத கள்ளமற்ற உறவு.

என்னம்மா படிக்கிறே?

ஃபர்ஸ்ட் இயர் மேத்ஸ்... ஒரே போர். இந்த ஸெமஸ்டர் சிஸ்டம் சுத்த மோசம். இட் ஈஸ் ரியலி கில்லிங். எப்போ பார்த்தாலும் 'அஸைன்மென்ட்'தான்.

பின்னே, படிக்கத்தானே காலேஜ்ல சேர்ந்திருக்கிறீங்க?

"ஊம்... வேற வழி? உதட்டைப் பிதுக்கிக் கண்ணை உருட்டிப் பெருமூச்சு விட்டாள்.

எந்தக் காலேஜ்?

சொன்னாள்.

அண்ணா நகரிலிருந்து அவ்வளவு தூரம் எப்படி போவே?

சீக்கிரம் கிளம்பினா பஸ். அண்ணா ஊரிலிருந்த ஸ்கூட்டர் பில்லியன். மத்த அன்னைக்கு உங்க மாதிரி டீஸண்ட் ஜென்டில்மென் கிட்ட லிஃப்ட்.

என் டாட்டர் மல்லிகா ஸ்டெல்லாவில் சோஷியாலஜி ஃபர்ஸ்ட் இயர். அவகூட உன்னை மாதிரித்தான். என் வொய்ஃப்தான் சொல்லுவா, முன்னை பின்னை தெரியாதவங்க கிட்ட லிஃப்ட் கேட்கக்கூடாதுன்னு...

அதுல என்ன தப்பு அங்கிள்; நான் இப்ப உங்ககூட வரல்லியா?

கார் மெக்னிகல்ஸ் ரோடில் திரும்பி, வில்லேஜ் ரோடில் புகுந்து, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் நுழைந்தது. சம்பத்தின் சிந்தனை ஒட்டத்தில் அந்தப் பெண் குறுக்கிட்டாள். அங்கிள், உங்க பர்ஸ்லே எவ்வளவு பணமிருக்கு? கையைச் சொடக்கியவாறு, முத்துச் சிரிப்பு மாறாமல் முகத்தை நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள்.

வாட், என்ன கேட்டே?

பர்ஸ்லே எவ்வளவு பணமிருக்குன்னு... ஐ ஆஸ்க்ட் யூ டு ஹேண்ட் ஒவர் தி பர்ஸ் டு மீ...

திடுக்கிட்டு, செயலிழந்து காரை நிறுத்தினார் சம்பத். பின்னால் வரிசையாக வந்து கொண்டிருந்த ஹார்ன்கள் அலற, கியரைப் போட்டார்.

உனக்கு என்ன மூளை, கீளை கெட்டுவிட்டதா? கெட் டவுன் ஃபர்ஸ்ட்...

பர்ஸைக் குடுங்க, இறங்கறேன்.

யூ ஸ்கவுண்ட்ரல் முளைச்சு மூணு இலை விடலை. திருட்டுப் புத்தியா... 'பளார்'னு ஒண்ணு கன்னத்துலே வச்சுப் பிடிக்கக் கீழே தள்ளுவேன்.

ட்ரை பண்றீங்களா? அதுக்கு முன்னாடி நான் என் உதட்டு லிப்ஸ்டிக்கில் கொஞ்சம் தொட்டு உங்க கன்னத்துலே தடவி, காப்பாத்துங்க, காப்பாத்துங்கன்னு கத்துவேன். அப்புறம் பர்ஸிலே சின்ன ப்ளேடு இருக்கு... சட்டையைக் கொஞ்சமாகக் கிழிச்சுண்டு 'ஒ'ன்னு அலறுவேன். முன்னாலே, பின்னாலே எல்லாக் காரும் நின்னு விசாரிக்க வரபோது 'திஸ் டர்ட்டி ஒல்ட்மேன்'னு விசும்புவேன்... நீங்க ரொம்ப பாவம் அங்கிள்... காலேஜுக்கு நடந்து போயிட்டு இருக்கிற இந்த கேர்ள் ஸ்டுடண்ட்ஸ்ல நிறையப் பேர் உங்க டாட்டர் க்ளாஸ் மேட்ஸா இருப்பாங்க. 'அச்சச்சோ... நம்ம மல்லிகா ஃபாதர் இந்த வயசிலே...' அப்படின்னு முகம் சுளிப்பாங்க. இதைக் கேள்விப்பட்டு உங்க டாட்டர் லைஃப் டைமுக்கும் உங்களை வெறுத்துப் புழுவாப் பார்ப்பா... அப்புறம் இந்த ஆபீஸ் க்ரவுடில உங்க ஆபீஸோட சம்பந்தப்பட்டவங்க ஒரு பத்துப் பேராவது வேடிக்கைப் பார்க்க வரமாட்டாங்களா?

ஷட் அப்... ஐ வில் ஹேண்ட் யூ ஓவர் டு தி போலீஸ்...

ப்ளீஸ் டூ... நான் இப்பவே ஒப்பாரி ஆரம்பிக்கிறேன். நீங்கள் தவறா நடந்தீங்கன்னு நான் ப்ரூவ் பண்றதைவிட, அப்படி நடக்கலைன்னு நீங்க 'கன்வின்ஸ்' செய்யறது கஷ்டம். அது உங்களால முடியாது! எதுக்கு டைம் வேஸ்ட் பண்றீங்க...

அங்கிளாம் அங்கிள் - பல்லைத் தட்டிக் கையில் கொடுப்பேன்...

"அது என் வேலையை இன்னும் சுலபமாக்கும். நான் என்ன லட்சமா கேக்கறேன். ஏதோ ஸ்மால்

Enjoying the preview?
Page 1 of 1