Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நிழல்கள்
நிழல்கள்
நிழல்கள்
Ebook124 pages29 minutes

நிழல்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அப்பா... நான் எந்தக் காரை எடுத்துட்டுப் போகட்டும்?"
 புத்தகங்களை அணைத்த மார்போடு - பழுப்பு நிற சூடிதாரில் வந்து நின்ற மகள் சௌகாந்திகாவை ஏறிட்டார் சபாநாயகம்.
 நரைத்த தலைக்கு சாயம் அடித்திருந்த சபநாயகத்துக்கு 2009-ல் சஷ்டியப்தப் பூர்த்தி வரும். தாட்டியான உடம்பு. உடம்பைக் காட்டாத உயரம். இந்த வயசில் கமல் மாதிரி மீசை வைக்க ஆசைப்பட்டு - உடம்பின் ஆன்ட்ரோஜோன்கள் ஒத்துழைக்காததால் தோற்றுப் போயிருந்தார். கணிசமான தொந்தியைச் சேர்த்து வைத்திருந்தார் இந்த ஐம்பத்து நாலு வயசிலும் விடாமல் பேண்ட்டையும் கோட்டையும் போட்டார். சபாநாயகம் ஸ்பின்னிங் மில்ஸ், சபாநாயகம் பேப்பர் அண்ட் போர்ட்ஸ், சபாநாயகம் போரிங் கம்பிரஷர் ஒர்க்ஸ், இன்னும் ஏழெட்டு செமர்த்தியான ஸ்தாபனங்களுக்கு மானேஜிங் டைரக்டர், சபாநாயகம் மகளைப் பார்த்துச் சிரித்தார்.
 "இருக்கிற மூணு கார்ல நீ எந்த காரை வேணுமின்னாலும் எடுத்துட்டுப் போம்மா. நீ மிச்சம் வெக்கிற ரெண்டு கார்ல ஒண்ணை உன்னோட அண்ணன் கதிர் எடுத்துட்டுப் போகட்டும். லாஸ்ட் சாய்ஸை நான் எடுத்துக்கறேன்."
 "நான் ஹெரால்டை எடுத்துட்டுப் போறேன்."
 "தாராளமா எடுத்திட்டுப் போம்மா."
 சௌகாந்திகா போர்டிகோவை நோக்கி உற்சாக ஓட்டம் ஓடினாள். சௌகாந்திகாவை வர்ணிக்க கணிசமாய் ஒரு பாராவைச் செலவு பண்ண வேண்டும். வேண்டாம். தந்தி பாஷையில் வர்ணித்து விடலாம். வயது 20. உடம்பு - மயில். முகம் - நடிகை ராதா சாயல். குரல் - ஐஸ்க்ரீம். கண்கள் - (ஏதும் தோன்றவில்லை ) உதடு -ஆப்பிள் துண்டம். கழுத்து - சங்கு. (பழைய உவமையாக இருந்தாலும் பரவாயில்லை ) கழுத்துக்குக் கீழே... (வாசகரே! உங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. நீங்கள் எதிர் பார்த்த முக்கியமான அயிட்டங்களை வர்ணிப்பதற்குள் சௌகாந்திகாவின் அண்ணன் கதிர் நாவலின் இந்தப் பக்கத்திற்கு வந்து விட்டான். தன்னுடைய அப்பா சபாநாயகத்தோடு பேசவும் ஆரம்பித்து விட்டான்.)
 "அப்பா!"
 "என்னடா?"
 "செள அந்த ஹெரால்ட் காரை எடுத்துட்டுப் போறா."
 "போகட்டுமே."
 "இந்த வண்டி எனக்கு வேணும்ன்னு நேத்து ராத்திரியே உங்ககிட்ட சொல்லியிருந்தேன்."
 "அப்படியா! மறந்துட்டேன்."
 "அவ அந்த வண்டிய எடுத்துட்டுப் போய் நாசம் பண்றா."
 "நாசம் பண்றாளா? எப்படி?"
 "காலேஜ் அவர்ஸை கட் பண்ணிட்டு தன்னோட சிநேகிதிங்க நாலைஞ்சு பேர்க்கு ரேஸ் கோர்ஸ் ரோட்ல கார் டிரைவிங் சொல்லித் தர்றா. அந்த அரை வேக்காடுங்க... கியரைப் போட்டு உலுக்கி எடுத்து காரே கட்ட வண்டி மாதிரி ஆயிடுச்சு..."
 "அப்படியா பண்றா செள...?"
 "ஆமாப்பா..."
 "சௌ சாயந்தரம் வரட்டும்... நான் விசாரிக்கிறேன்."
 "அவளுக்கு நீங்க ரொம்பவும் செல்லம் குடுத்திட்டீங்கப்பா... நீங்க தர்ற செல்லத்துல அவ என்னை அண்ணன்னு கொஞ்சம் கூட மதிக்கிறதேயில்லை." சொல்லிக் கொண்டே நகர முயன்றான் கதிர்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798223869177
நிழல்கள்

Read more from Rajeshkumar

Related to நிழல்கள்

Related ebooks

Reviews for நிழல்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நிழல்கள் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    இந்த நாவல் ஆரம்பமாகிற நிமிஷம், சத்தியனும் மத்திய சிறையினின்றும் விடுதலையாகி வெளியே வந்து சுதந்திரமான முதல் சுவாசத்தை இழுக்க ஆரம்பித்தான்.

    ஒன்றரை வருஷ ஜெயில் தண்டனை அவனுடைய நிறத்தைக் கொஞ்சம் மங்க அடித்து - தோலின் பளபளப்பைக் குறைத்திருந்தது. நாக்குக்கு ருசி மறந்து போயிருந்தது. உள்ளங்கைகள் இரண்டும் விளாம்பழ ஓட்டைப் போல் தடித்துப் போயிருந்தது. மோவாயை வருடிய போது குத்துக் குத்தாய் ரோமப் பயிர் ஸ்பரிசம் மாகியது. முதலில் இதை மழிக்க வேண்டும் என்று நினைத்து ரோட்டுக்கு வந்த போது ரோட்டோரத்தில் இருந்த அந்த டீக்கடை அவன் கண்ணில்பட்டது.

    அஸ்கா சர்க்கரை டீக்காக நாக்கில் ஜல் ஜலவென்று நீர் ஊறியது. கடைக்குள் போனான். இருந்த நாலு மரப் பெஞ்சுகளும் காலியாய் கிடக்க, டீக்கடை நாயர் மலையாள மனோரமாவை எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டிருந்தான்.

    'ஆக... இவ்விடத் தன்னில்... கார்ய நிஸ்ஸாராம்... சந்திய...'

    சத்தியன் தொப்பென்று பெஞ்சின் முனையில் உட்கார - நாயர் கலைந்தான். மலையாளம் கலக்காத தமிழில் கேட்டான்.

    என்ன ஸார் வேணும்?

    சர்க்கரை ஜாஸ்தியா ஒரு டீ...

    சத்தியனின் பரட்டைத் தலையும், கட்டையான முக ரோமமும் நாயரின் முகத்தை சுளிக்க வைத்தன. ஆளை நன்றாய் பார்க்காமல் ஸார்' போட்டது தப்பு.

    டம்ளரைக் கழுவாமல் அலட்சியமாய் ஒரு டீயைப் போட்டு - கண்ணாடி டம்ளரை சத்தியனின் முன்னால் டொக் என்று வைத்தான். குரலில் கேலி ஒட்டிக் கொள்ளக் கேட்டான்.

    இன்னிக்குத்தான் ரிலீஸோ?

    ஆமா... சத்தியன் சொல்லிவிட்டு டீயை உறிஞ்சினான்.

    எத்தினி வருஷம்?

    ஒன்றரை வருஷம்...

    திருட்டா?

    இல்லே ஸ்மக்ளிங்...

    இதே ஊரா?

    ம்...

    ஒரு நல்ல வேலையா பார்த்துக்கப்படாதா?

    முயற்சி செஞ்சேன். கிடைக்கலை.

    சர்க்கார் உத்யோகம் கிடைக்குமான்னு அலைஞ்சிருப்பே! நாயர் சிரித்தபடி சொல்ல - சத்தியன் அவனுக்குப் பதில் சொல்ல முயன்ற அதே நேரம் -

    டீக்கடை வாசலில் அந்த வெளிநாட்டு ஹிப்பி இளைஞன் தெரிந்தான். பவ்யமாய் குனிந்து கேட்டான்.

    குட் யூ டெல் மீ த எக்ஸாக்ட் லொகேஷன் ஆப் த ஸ்டேட் பஸ் ஸ்டேண்ட்?

    நாயர் அந்த ஹிப்பியிடம் சலித்துக் கொண்டான்.

    உம் பாஷை இங்க யாருக்கய்யா தெரியும்? எவனாவது இங்கிலீஷ் தெரிஞ்சவன் கிட்ட போய் கேளு. யூ... கோ... கோ.

    ஸாரி ஹிப்பி இளைஞன் நகர முயன்றான்.

    ஒன் மினிட் ப்ளீஸ்...

    அந்த ஹிப்பி இளைஞன் நின்றான்.

    சத்தியன் இவனை நெருங்கி வந்து கேட்டான்.

    வேர் டு யூ வான்ட் டு கோ?

    ஸ்டேட் பஸ் ஸ்டேண்ட்.

    யூ கோ ஸ்ட்ரெயிட் அண்ட் தென் டேக் ஏ ஷார்ப் லெப்ட் யூ கேன் பைண்ட் த போர்ட். ஜஸ்ட் டூ மினிட்ஸ் வாக் பிரம் ஹியர்...

    தேங்க் யூ வெரிமச்.

    ஹிப்பி தன் அழுக்கான கேன்வாஸ் பையை, முதுகில் சரியாய்ப் பொருத்திக் கொண்டு நடந்தான். நாயர் சத்தியனை பிரமிப்பாய்ப் பார்த்தான். இந்த ஜெயில் ரிடர்ன்ட் ஆசாமி அசத்தலாய் இங்கிலீஷ் பேசுகிறானே? இவனுக்கு ஆரம்பத்தில் போட்ட 'ஸார்’ சரிதான்.

    உனக்கு இங்கிலீஷும் தெரியுமா?

    சத்தியன் சிரித்தான்.

    பி.ஏ. பாஸ் பண்ணிட்டு இங்கிலீஷ் தெரியாமே இருக்குமா?

    பி.ஏ. வா?

    ம்.

    "பி.ஏ. வரைக்கும் படிச்சுட்டு எதுக்காக ஸார் ஸ்மக்ளிங்

    Enjoying the preview?
    Page 1 of 1