Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பாராசூட் பாவங்கள்
பாராசூட் பாவங்கள்
பாராசூட் பாவங்கள்
Ebook102 pages34 minutes

பாராசூட் பாவங்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டெல்லி. ஏர்ஃபோர்ஸ், பேராட் ரூப்பர்ஸ் ஹெட்குவார்ட்டர்ஸ் கட்டிடம். கட்டிட மையத்தின் உள்ளே ஏ.ஸி உறுமிக் கொண்டிருக்கும் ஒரு அறை.
 உள்ளே –
 கறுப்பு குஷன் நாற்காலிகளில் ஏர்ஃபோர்ஸ் அதிகாரிகள் கவலையாய் தெரிந்தார்கள். ஏர்வைஸ் மார்ஷல் ரஞ்சித் ஷேத்தி, ஏர் கமாண்டர் மாலிக், க்ரூப் காப்டன் குல்தீப் யாதவ், விக் கமாண்டர் முகேஷ்கன்னா, நான்கு ஸ்க்வாட்சன் லீடர்கள், நான்கு ஃப்ளைட் லெப்டினென்ட்கள், இரண்டு ஃபிளையிங் ஆபீஸர்கள்.
 ஏர்வைஸ் மார்ஷல் ரஞ்சித் ஷேத்தி குரல் கரகரக்க - ஆங்கிலத்திலும் இந்தியிலும் மாறி மாறி பேசிக்கொண்டிருந்தார்.
 "இது நாம் எதிர்பார்க்காத ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். டெட்ராய்ட் தீவில் இறங்கிய ஏழு பேராட் ரூப்பர்ஸும் சுடப்பட்டு இறந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. விமானம் ராடார் எல்லைக்குள் சிக்காமல் பறந்தபோதும் - தீவின் எதிரிகளால் - நம் விமானத்தின் பறப்பு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது..."
 "அது சாத்தியமில்லையே...?" என்றார் ஏர் கமாண்டர் மாலிக்.
 "சாத்தியப்பட்டிருக்கிறது..."
 "எப்படி...?"
 "டெட்ராய்ட் தீவுக்கு கிழக்காசிய நாடுகளின் ஆதரவும், அமெரிக்காவின் ஆதரவும் இருக்கிறது. இந்த ஆதரவு அதற்கு யானை பலம். அந்த நாடுகளிலிருந்து கணிசமான ஆயுத உதவியையும் பெற்று வருகிறது டெட்ராய்ட் தீவு. இதில் பல நவீன சாதனங்களும் அடக்கம். நம் இந்திய உளவுத்துறைக்குக் கிடைத்திருக்கிற தகவல்படி - அமெரிக்கா அந்த தீவுக்கு ஃபைட்டர் எர்கிராஃப்ட்கள், 'மெய்ன் பாட்டில் டாங்க்' என்று சொல்லப்படுகிற எம்.பி.டி.ந்யூக்கிளியர் ரீசர்ச் ரீயாக்டர், எலக்ட்ரானிக் சப்-மரீன், எஸ்-யூ - ஸெவன்டி ஃபைவ் ஹண்டர்ஸ், அஜீட்ஸ், மிக் ட்வெண்டி ஒன்ஸ், ஹெச். எஃப்ட்வெண்டி ஃபோர்ஸ், டகோட்டர்ஸ் போன்றவைகளை சப்ளை செய்திருக்கின்றன... விமானம் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் - அதை ராடார் திரைக்கு கொண்டு வரும் சாமார்த்தியம் படைத்த –டெக்னாலஜி சமாச்சாரங்கள் அமெரிக்காவால் சப்ளை செய்யப்பட்டிருக்கலாம்..."
 அறையில் நிலவிய - சில விநாடி நிசப்தத்திற்கு பிறகு - விங்க் கமாண்டர் முகேஷ்கன்னா கேட்டார்.
 "அப்படியானால் டெட்ராய்ட் தீவில் நம் பாராட் ரூப்பர்ஸ் இறங்கவே முடியாதா?"
 "முடியும்...! ஆனால் திட்டம் இன்னும் கூர்மையாக இருக்க வேண்டும். அவசர காலத்தில் திட்டமிட்டு – பாராட் ரூப்பர்களை அனுப்புவது... பலி கொடுப்பதற்கு சமம்... கடற்படை உதவியோடு அந்தத் தீவை நெருங்கி - உள்ளே ஊடுருவி போவது என்பது இயலாத காரியம். இருக்கிற வழி ஆகாய மார்க்கம்தான். சாமார்த்தியமாக பாராட் ரூப்பர்களை அந்தத் தீவில் இறக்குவதை தவிர வேறு உபாயம் கிடையாது..."
 க்ரூப் காப்டன் குல்தீப் யாதவ் தொண்டையை செருமியபடி குறுக்கிட்டார். "நான் ஒரு யோசனையை சொல்லலாமா...?"
 "வெல்கம்..."
 "நேற்றைய திட்டம் தோல்வியடைந்ததற்குக் காரணம் பாராட் ரூப்பர்களை லேண்ட் செய்ய நாம் தேர்ந்தெடுத்த இடம். அடர்ந்த காட்டுப் பகுதி. பாராட் ரூப்பர்கள் ஒளிந்து கொள்ள வசதியாய் இருக்கும் என்று எண்ணினோம். ஆனால் அதுவே நமக்கு விபரீதமாயிற்று. கிழக்கு எல்லைப் பகுதி வரைக்கும் - விமானம் சென்றதால்தான் - ராடார் திரைக்குள் சிக்கிக் கொள்ள நேரிட்டது. அதற்குப் பதிலாக - வடக்கு எல்லையிலேயே - அவர்களை லேண்ட் செய்திருந்தால் - எதிரிகளுக்கு விமானம் தட்டுப்பட்டிருக்காது."
 வைஸ் மார்ஷல் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
 "மிஸ்டர் குல்தீப் யாதவ்! நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?"
 "நாம் தேர்ந்தெடுத்த லேண்டிங் ஸ்பாட் தவறு...தீவின் வடக்கு எல்லையிலேயே லேண்ட் செய்திருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?"
 "ஆமாம்..."
 "வடக்கு எல்லையில்... மறைவிடங்கள் கிடையாது. வெறும் கடல் பகுதிதான். பாராட் ரூப்பர்களின் லாண்டிங் பொஸிஷன் அதுதான் என்றால் - அவர்கள் கடலில்தான் இறங்க வேண்டும். கடலில் இறங்கினால் தீவை அடைய ஒரு கிலோ மீட்டர் தூரம் நீந்த வேண்டும்."
 "பாராட் ரூப்பர்ஸ் நீந்த மாட்டார்களா என்ன...?"
 லிங்க் கமாண்டர் முகேஷ்கன்னா கேட்டார். "ஸார்! நீங்கள் சொல்கிற திட்டம் எந்த வகையில் பாதுகாப்பானது என்று சொல்ல முடியுமா...?"

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 18, 2023
ISBN9798223848141
பாராசூட் பாவங்கள்

Read more from Rajeshkumar

Related to பாராசூட் பாவங்கள்

Related ebooks

Related categories

Reviews for பாராசூட் பாவங்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பாராசூட் பாவங்கள் - Rajeshkumar

    1

    இந்து மகா சமுத்திரத்தின் வடக்குக்கோடியில் அந்த ஸாபர்ஜெட் விமானம் - அருவி கொட்டுகிற மாதிரி - ஒரு ஓசையை எழுப்பிக் கொண்டு பறக்க - பத்தாயிரம் அடிக்குக் கீழே கடல் கறுப்பாய் அசைந்தது. ஆகாயத்தில் சொற்பமாய் நட்சத்திரங்கள் மேகங்களுக்கு மத்தியில் எப்போதாவது தெரிந்து மறைந்தது. காற்று வேகமாக இருந்தது. நேரம் நள்ளிரவு 1.05.

    கோ-பைலட் சிக்கந்தர் விமானத்தை இயக்கிக் கொண்டிருக்க - பைலட் ஹரி - சங்கர் பிளாஸ்டிக் குவளையில் – கறுப்பு காப்பியைச் சப்பிக் கொண்டிருந்தார்.

    காப்டன்... ப்யூவல் இண்டிகேட்டரை பார்த்துக்கொண்டே கூப்பிட்டான் சிக்கந்தர்.

    ம்...

    இன்னும் இருபது நிமிடத்தில் தீவைத் தொட்டுவிடுவோமா?

    நிச்சயமாய்...

    ராடர்க்கு சிக்காமல் பறப்பது சாத்தியமா காப்டன்?

    அது நம் திறமையில்தான் இருக்கிறது.

    எனக்கு உதறலாக இருக்கிறது காப்டன்.

    இந்த யூனிபார்மை மாட்டிக் கொண்ட பின்னாடியுமா...?

    வீட்டில் அழகான மனைவி... ரோஜாப் பூவைப்போல் ஆறு மாதக் குழந்தை... கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்...

    மாதம்... உனக்கு பனிரெண்டாயிரம் ரூபாய் சம்பளம்... அதை நினைத்துப் பார்த்தாயா...?

    சிக்கந்தர் புன்னகைத்தான்.

    இந்த டென்ஷன், மரண பயம் இல்லாமல் ஆட்டோ ரிக்ஷா ஓட்டப் போயிருக்கலாம்... அநியாயத்துக்கு வாடகை லால்ஜி மனைவியை சந்தோஷப்படுத்தியிருக்கலாம். எதிரியின் ராடார் எல்லைக்குள் மாட்டுவோமா... ஆன்டி - ஏர்கிராஃப்ட் கண்களில் சிக்கி - எரிகிற விமானத்தில் கரியாய் எரிந்து போவோமா என்கிற பயம் இருந்திருக்காது...

    வேண்டாம். வயிறு ஏற்கெனவே கலங்கிக் கொண்டிருக்கிறது. காப்பியைக் குடித்தால் நான் டாய்லெட்டுக்குப் போக வேண்டியிருக்கும்...

    காக்பிட் அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்க்க பாராசூட் விங் கமாண்டர் முகேஷ்கன்னனா உள்ளே வந்தார்.

    டெட்ராய்ட் தீவை நெருங்குகிறோம்... இல்லையா காப்டன்?

    ஆமாம்...

    சொன்னதெல்லாம் நினைவிருக்கிறதா?

    பேஷாக! விமானம் ராடார் எல்லைக்குள் போகும் முன்பாக உங்களுடைய பாராசூட் விங்க்... தீவின் தலையில் குதிக்க வேண்டும்... சரியா...?

    சரிதான்... ஆனால் அது சாத்தியமா?

    சாத்தியம்தான்... நமது இந்திய விமானப்படைக்கு எதுவும் சாத்தியம் தான். பாராசூட் விங்க்கில் இடம் பெற்ற - ஏழு பேரும் கீழே குதிப்பதற்கு தயார் நிலையில் இருக்கிறார்களா...?

    அவர்கள் அரைமணி நேரத்திற்கு முன்பே தயாராகிவிட்டார்கள். உங்களிடமிருந்து உத்தரவு கிடைத்ததும்... அவர்கள் குதிக்க ஆயத்தமாவார்கள்... காப்டன்... முகேஷ்கன்னா சொல்லிக்கொண்டிருக்கும் போதே - எதிரேயிருந்த மானிட்டர் திரையில் - பச்சை விளக்குகள் ஒளிர்ந்தன. வயர்லஸ் கூப்பிட்டது.

    காப்டன் ஹரிசங்கர் ஹெட்போனை தலையில் கவிழ்த்துக் கொண்டு உதட்டுக்கு நேரே இருந்த சிறிய மைக்கில் பேசினார்.

    ஏ. ஜே. ஃபார்ட்டி ஓன்... காப்டன் ஹரிசங்கர்.

    இது... இந்திய விமானப்படை ஹெட்குவார்ட்டர்ஸ்... பயணத்தில் எந்த சிக்கலும் இல்லையே...?

    இல்லை... எல்லாம் சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது.

    இப்போது நேரம் 1.10. இன்னும் பதினைந்து நிமிடத்தில் டெட்ராய்ட் தீவின் எல்லை வந்துவிடும். பாரசூட் லிங்க்கைச் சேர்ந்த ஏழு பேரும்... தீவில் குதிக்கத் தயார் நிலையில் இருக்கிறார்களா...?

    துடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    தீவை நெருங்கும் சமயம்... ஏதாவது ஆபத்து - சமிக்ஞைகளை உணரும் பட்சத்தில்... நீங்கள் விமானத்தை திருப்பிக் கொண்டு வந்துவிடலாம்.

    அதற்கு அவசியம் நேராது... என்று நினைக்கிறேன். ஏனென்றால் எல்லாம் திட்டமிட்டபடியே நடந்து வருகின்றன... தீவின் கிழக்கு எல்லையில், அடர்ந்த காடுகள் அதிகம். பாராசூட் லிங்க்கைச் சேர்ந்த ஏழு பேரையும்... அங்கே இறக்கி விடுவதில் எந்த மாற்றமும் இல்லையே?

    இல்லை...

    பாராசூட் வீரர்கள் இறங்கியதும்... மறுபடியும் ஹெட்குவார்ட்டர்ஸை தொடர்பு கொள்கிறேன் ரோஜார்...

    வயர்லெஸ்ஸை அணைத்தார் ஹரிசங்கர். விங்க் கமாண்டர் முகேஷ்கன்னா விமானத்தின் வயிற்று பாகத்திற்கு வந்தார்.

    முதுகுகளில் சுமந்த பாராசூட் மூட்டைகளோடு அந்த ஏழு பேரும் - நேர் பார்வை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ‘ஜம்ப்’ என்கிற அந்த ஒரு வார்த்தைக்காகவே ஜனித்த மாதிரி காத்திருந்தார்கள்.

    முகேஷ்கன்னா அவர்களுக்கு முன்பாய் வந்து நின்றார். மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார். கடந்த ஒரு மாத காலமாய் நீங்கள் என் தலைமையின் கீழ் மேற்கொண்ட பயிற்சிகள் - இனி வரப்போகிற நிமிஷங்களில் உதவப்போகின்றன. சரியாய் 1.25-க்கு டெட்ராய்ட் தீவின் கிழக்குப் பக்க எல்லையில் - அடர்ந்த மரங்களுக்கு மத்தியில் குதிக்கப் போகிறீர்கள். இந்தத் தீவின் காடுகளில்... சல்வேனியா மரங்கள் அதிகம் என்பதை ஏற்கெனவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள். அதன் அடிமர முட்கள் விஷத்தன்மை வாய்ந்தது. உடம்பின் எந்த பாகத்தில் கீறிக் கொண்டாலும் கண் பார்வை பாதிக்கப்படும். எதிலும் அஜாக்கிரதை வேண்டாம்... இந்த விங்க்கிற்கு பிரணாப்சிங் லீடர்... பிரணாப்சிங்கின் கட்டளைக்கு மற்றவர்கள் அடிபணிய வேண்டும்.

    பிரணாப்சிங்கைத் தவிர மற்ற ஆறு பேரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

    வி... வில் ஓபே... ஸார்...

    "இது இறுதிக்கட்டம். எனவே... மறுபடியும் நீங்கள் ஏழு பேரும் செய்ய வேண்டிய - மூன்று மகத்தான பணிகளை ஞாபகப்படுத்துகிறேன்... டெட்ராய்ட் தீவு உலகின் மிகப்பெரிய

    Enjoying the preview?
    Page 1 of 1