Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

விவேக்கின் 1000 நிமிஷங்கள்
விவேக்கின் 1000 நிமிஷங்கள்
விவேக்கின் 1000 நிமிஷங்கள்
Ebook103 pages1 hour

விவேக்கின் 1000 நிமிஷங்கள்

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ஏர்ஃபோர்ட் வழியில் - ரோட்டோரமாய் மரங்களுக்கு மத்தியில் மறைந்து நின்றிருந்தது. அந்த ஜோர்டான் மெர்ஸிடிஸ் 500 SPL மாடல் ஜீப். இந்த நூற்றாண்டின் அதிவேக ஜீப் உச்சபட்ச வேகம் நூற்றி ஐம்பது கிலோமீட்டர்.
ஜீப்புக்குள் அவனும் அவளும் காத்திருந்தார்கள்.
அவன்? - மனோ
அவள்? - தேவி.
இருபத்தைந்து வயதான மனோ - ஒரு ராயல் ஷுட்டர். கடந்த இரண்டு வருஷ காலமாய் இந்தியாவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு பாயிண்ட்டுகளை குவித்து ராயல் ஷுட்டர் பெயரை வாங்கிக் கொண்டவன். எந்த ரக துப்பாக்கியானாலும் சரி... அது மனோவின் கைகளுக்கு வந்து விட்டால், அவன் சொன்னபடி தான் கேட்கும் அவன் ‘எய்ம்’ பண்ணுகிற இடத்தில்தான் தோட்டாவை அனுப்பும். பிடிவாதமான உயரம் ‘வினோத் கன்னா’வை ஞாபகம் படுத்துகிற இறுக்கமான முகம்.
இருப்த்தேழு வயதான தேவி, துப்பாக்கி சுடுவதில் பயிற்சி பெறுவதற்காக மனோவிடம் மாணவியாக சேர்ந்து, பின் காதலியாக பிரமோஷன் வாங்கிக் கொண்டவள் ஏர்ஹோஸ்டல் வேலைக்கு அப்பிளிகேஷன் போட்டால் - தயக்கம் காட்டாமல் ‘ஏர் இந்தியா’ அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வழங்குகிற அளவுக்கு அழகு யோக்கியாதாம்சங்கள்.
இரண்டு பேரும் ஸ்டோன்வாஷ் பேண்ட் ஷர்ட்டுக்குள் நுழைந்து இருந்தார்கள். கண்களில் பைனாகுலர் கண்ணாடி.
“மனோ...”“ம்…”
“அந்த பிளாஸ்க்கை எடுங்க...”
“என்ன காப்பியா.”
“ஆமா...”
“இப்பத்தானே பத்து நிமிஷத்துக்கு முன்னாடி கொட்டிகிட்டே?”
“அது எப்பவோ ஆவியா போயிடுச்சு...”
“நாமென்ன பிக்னிக்கா வந்திருக்கோம்.... பிஸ்கெட்டை. கொரிச்சிட்டு காப்பி சாப்பிட்டுகிட்டு...! சை! உன்னை கூட்டிக்கிட்டு வந்திருக்கக்கூடாது...?”
“ஸாரி... மனோ...’’
“இதோ பார் தேவி... இங்கே காத்திட்டிருக்கிறது ஒரு காக்காயையோ குருவியையோ சுடறதுக்கு இல்லை. லாஸ்வேகா நாட்டுப் பிரதமர் ஆர்லேண்டோவை இந்த ஏ.கே. 47 ரக துப்பாக்கியாலே சுட்டுக் குதறத்தான் மத்தியானம் மூணு மணியிலிருந்து உட்கார்ந்திட்டிருக்கோம்.”
“எனக்குத் தெரியாதா என்ன...?”
“அந்த சீரியஸ்னெஸ்ஸே உன்கிட்டே இல்லையே...? மரத்துல வந்து உட்கார்ற குருவிகளைப் பார்க்கிறதும் - ரோட்ல போற கார்களை எண்ணறதும். பத்து நிமிஷத்துக்கொரு ‘க்ராக் ஜாக்’ பிஸ்கெட்டை கொரிச்சு காப்பியை விழுங்கறதும்...”
“சரி... இனிமே நான் சீரியஸ்” - தேவி பைனாகுலரைப் பொருத்தி கொண்டு தொலைவில் தெரிந்த ஏர்ஃபோர்ட்டைப் பார்த்தாள். விமானம் ஒன்று புறப்படும் தருவாயில் ப்ரொப்பலர்களை சுழற்றிக் கொண்டிருந்தது.
“ஆர்லேண்டோவுக்கு செக்யூரிட்டி ஏற்பாடுகள் எப்படியிருக்குன்னு பார்...?”
பைனா குலரை நகர்த்தினாள் தேவி. உதடுகள் 0 வடிவத்தில் குவிந்தது..

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 8, 2024
விவேக்கின் 1000 நிமிஷங்கள்

Read more from ராஜேஷ்குமார்

Related to விவேக்கின் 1000 நிமிஷங்கள்

Related ebooks

Related categories

Reviews for விவேக்கின் 1000 நிமிஷங்கள்

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    விவேக்கின் 1000 நிமிஷங்கள் - ராஜேஷ்குமார்

    1

    டெல்லி.

    ஒரு மே மாதத்தின் வியாழக்கிழமை மத்தியான நேரம். நூற்றியேழு டிகிரி உஷ்ணத்தில் டில்லி மொத்தமும் வறுபட்டுக் கொண்டிருக்க - அக்பர் ரோட்டில் பாதுகாப்பு அமைச்சரகத்தைச் சேர்ந்த ஒரு வெண்ணெய் நிற கட்டிடத்தின் ஏ.ஸி. கசியும் அறைக்குள் ராணுவ மந்திரி முரளிதர் பாண்டே அந்த ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

    எதிரே ராணுவத் தளபதி குர்நாம் உட்கார்ந்திருக்க, பக்கவாட்டில் ராணுவ உயரதிகாரிகள் - கிரேக்க சிற்பங்கள் மாதிரி நேர்பார்வை பார்த்துக் கொண்டு நின்றார்கள் ஏர்க்கண்டிஷனர் ‘ர்ர்ர்ர்ம்ம்ம்ம்’ என்று சுருதி கூட்டிக் கொண்டிருக்க, மந்திரி முரளிதர் ஆங்கிலத்தில் ஒரு வரியும் - ஹிந்தியில் ஒரு வரியும் மாற்றி மாற்றி பேசினார்.

    "லாஸ்வேகா நாட்டுப் பிரதமர் டெல்லி ஏர்ஃபோர்ட் வருகிறார். அவருடைய வருகை வெகு ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. ஆர்லேண்டா தன்னுடைய நாட்டிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு வருகிறார். அவர் டெல்லியில் தங்கியிருக்கப் போகிற மொத்த நேரமே... மூன்று மணி நேரம் தான் இந்த மூன்று மணி நேரத்தில் - இரண்டு கட்ட பேச்சு வார்த்தைகள் நடக்க உள்ளன. இரு நாடுகளுக்கும் மத்தியில் - சில ரகசிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகப் போகிறது. பிரதமரும், ஜாதிபதியும் தனித்தனியே சந்தித்துப் பேசுகிறார்கள். ராஜ ரகசியங்களை பரிமாறிக் கொள்ளப் போகிறார்கள்.

    ராணுவத் தளபதி குர்நாம் - நிமிர்ந்து உட்கார்ந்து, தன் பச்சை நிறக் கண்களை மந்திரி முரளிதர் பாண்டேயின் அகலமான முகத்தில் நிறுத்தி - அவரையே பார்த்துக் கொண்டிருக்க அவர் தொடர்ந்தார்.

    "உங்களுக்கு நன்றாகவே தெரியும். லாஸ்வேகா நாடு இரண்டு வல்லரசுகளுக்கும் இணக்கமான நாடு. செல்வச் செழிப்பான அந்த நாட்டோடு நாம் உறவு கொள்வது நமக்கு உபயோகமாக இருக்கும். ஆனால் நம் நாட்டில் இருக்கும் எதிர்கட்சிகள் நாம் லாஸ்வேகாஸ் நாட்டோடு தொடர்பு கொள்வதை எதிர்க்கின்றன.

    காரணம்?

    "இந்த நாட்டின் முன்னாள் பிரதமர் நோவியா நாரா... நம் நாட்டை பகை நாடாக கருதி - அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்: நமக்கு பகை நாடுகளாக விளங்கும். அண்டைய நாடுகளோடு அவர் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்.

    நோவியா நாரா ஒரு விமான விபத்தில் இறந்து போனதும் - ஆர்லேண்டோ புதிய பிரதமராக பதவியேற்றார். இவர் நம் நாட்டோடு ராஜ்ய உறவுகளையும் கலாச்சார உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்து. நம் பிரதமருக்கும், நம் ஜனாதிபதிக்கும்... கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார். இந்த கடிதங்களின் அடிப்படையில்தான். இந்த திடீர் சந்திப்பு."

    தொண்டையைச் செருமிவிட்டு - மறுபடியும் தொடர்ந்தார். மந்திரி முரளிதர் இது ஒரு ரகசிய ஏற்பாடு என்றாலும் எதிர்கட்சி தலைவர்களுக்கு... மூக்கில் வேர்க்காமல் இருக்காது. ‘லாஸ்வேகா நாடு’ என்று சொன்னால்... ரத்தத்தை உஷ்ணமாக்கிக் கொள்கிற, சில இயக்கங்களுக்கு டெல்லியில் இருக்கின்றன. அந்த இயக்கங்களுக்கு விஷயம் கசிந்திருக்குமானால் அவர்கள் ஆர்லேண்டோவை... சுட்டுக் கொல்ல முயற்சிப்பார்கள்.

    தளபதி குறுக்கிட்டுக் கேட்டார்.

    கொலை முயற்சி நடைபெறும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

    "நம் பிரதமர் அப்படி நினைக்கிறார். ஆர்லேண்டோ... நம் நாட்டில் தங்கியிருக்கிற அந்த மூன்று மணி நேரமும், அவருடைய உயிர்க்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியை நீங்கள் தான் மேற்கொள்ளவேண்டும்.

    மிஸ்டர் ஆர்லேண்டோ எத்தனை மணிக்கு வருகிறார் ஸார்?

    மாலை ஆறுமணிக்கு

    அவருடைய ப்ரோக்ராம் ஷெட்யூல் விபரம் தெரியுமா ஸார்?

    ஒரு நிமிஷம் என்ற முரளிதர் மேஜையின் மேலிருந்து கான்ஃபிடென்ஷியல் பைலை எடுத்து புரட்டிக் கொண்டே, ஏற்கனவே இருந்த மூக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டு லென்ஸ் கண்ணாடியைக் மாட்டிக் கொண்டார்.

    பைலைப் பார்த்து - ஒரு பக்கத்தில் விரலை நிறுத்தினார். மெல்லிய குரலில் சொன்னார்.

    "ஆர்லேண்டோ விமானம் சரியாய் ஆறுமணிக்கு டெல்லி ஏர்ஃபோர்ட்டுக்கு வருகிறது. எளிமையான வரவேற்பு. பிரதமரோ ஜனாதிபதியோ

    வரவேற்க வரமாட்டார்கள் மந்திரிகளில் நான் மட்டுமே... ஏர்ஃபோர்ட்டில் இருப்பேன். வரவேற்பு முடிந்ததும் புல்லட் ஃப்ருப் காரில் ராஷ்டிரபதி பவனுக்கு பயணம். ராஷ்டரபதியோடு அரைமணி நேரபேச்சு. பிறகு பிரதமரோடு பேச்சு. ஒன்பது மணிவரைக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்து. அது முடிந்ததும்... உடனே ஏர்ஃபோர்ட்டுக்கு புறப்பாடு."

    ராணுவ தளபதி குர்நாம், தனக்குப் பக்கத்தில் நின்றிருந்த இரண்டு அதிகாரிகளை ஏறிட்டார்.

    ஏர்ஃபோர்ட்டிலிருந்து ராஷ்ட்ரபதிபவன் வந்து சேர்கிறவரைக்கும் இருக்கிற காலகட்டம்தான் இதில் முக்கியமானது. மோட் ஆப் ப்ரொடக்ஷனை எப்படி அமைக்கலாம் ஜோஷி

    ஜோஷி என்று அழைக்கப்பட்ட அந்த அதிகாரி, அட்டென்ஷனை விட்டு நழுவாமல் உதடுகளை மட்டும் அசைத்தார்.

    ப்ளையிங் செக்யூரிடி ஃபோர்ஸ் உத்தமம் ஸார்...

    அப்படியானால் சாலை போக்குவரத்து ஒரு மணி நேரத்துக்கு நிறுத்த வேண்டும்.

    மந்திரி முரளிதர் குறுக்கிட்டார்.

    இது வீண் ஆரவாரமாய் தெரியும்.

    பிரமர் - ஆர்லேண்டோவை கொலை செய்யும் சதித்திட்டம் ஏதாவது இருப்பதாக உங்களுக்கு தகவல் கிடைத்ததா ஸார்…?

    ‘‘அவர் கொலை செய்யப்படலாம் என்பது பிரதமர், ராஷ்ட்ரபதியின் அச்சம் அவர்களுடைய அச்சத்திற்குக் காரணம் இல்லாமல் இருக்க முடியாது."

    அருகிலிருந்த டெலிபோன் கிணு கிணுத்தது.

    முரளிதர்

    Enjoying the preview?
    Page 1 of 1