Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

விவேக் விஷ்ணு வெற்றி
விவேக் விஷ்ணு வெற்றி
விவேக் விஷ்ணு வெற்றி
Ebook138 pages33 minutes

விவேக் விஷ்ணு வெற்றி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்டர்காம் கூப்பிட்டது.
பார்த்துக் கொண்டிருந்த ஃபைலினின்றும் பார்வையை எடுக்காமல் கைநீட்டி ரிஸீவரை எடுத்தான் சித்தார்த்தன். முப்பது வயது. ஐந்தடி பத்து அங்குல உயர உடம்பு. மெலிதான இள நீல நிற சூட் - இவைகளின் கூட்டணியில் இருந்த சித்தார்த்தன் ரிஸீவரை காதுக்கு ஒட்டவைத்து “எஸ்” என்றான்.
“மிஸ்டர் சித்தார்த்தன்...! அயம் காமேஷ்வரன். உங்கக்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. ஒரு பத்து நிமிஷம் எனக்கு அப்பாய்ன்மென்ட் கொடுக்க முடியுமா...?”
சித்தார்த்தன் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை தள்ளி வைத்துவிட்டு பவ்யமாய் எழுந்தான்.
“அப்பா...! இப்படியெல்லாம் பேசி என்னோட மனசைக் கஷ்டப்படுத்தாதீங்க... உங்க மகனைப் பார்க்க நீங்க எப்ப வேணும்ன்னாலும்... வரலாம்...!” சொல்லிக் கொண்டே அறையின் கதவுக்குப் போய் தாழ்ப்பாளைப் பிடித்து இழுத்தான்.
வெளியே –
செல்போனோடு அவனுடைய அப்பா காமேஷ்வரன்.
“உள்ளே வாங்கப்பா...”
“பத்தே பத்து நிமிஷம் போதும். பதினோராவது நிமிஷம் வெளியே போயிடுவேன்... அப்பாய்ண்மென்ட் கிடைக்குமா...?”
“நீங்க மொதல்ல உள்ளே வாங்கப்பா...!”அறைக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த காமேஷ்வரனுக்கு அறுபது வயது. சற்று ஒடிசலான சிவப்பு நிற தேகம். மெலிதான நரைமுடியை படிய வாரியிருந்தார். மொட மொடப்பான கதர் வேஷ்டியும் சர்ட்டும் அவருடைய உடம்புக்கு பாந்தமாய் பொருந்தியிருந்தது.
“உட்கார்ங்கப்பா...!”
“நான் உட்காரலை... மொதல்ல இந்தப் போட்டோக்களைப் பாரு...!”
ஒரு ப்ரெளன் கவரை நீட்டினார்.
சித்தார்த்தன் நெற்றியில் பெரிதாய் ஒரு கேள்விக்குறி...!
“என்ன போட்டோஸ்?”
“வாங்கிப் பாரு... தெரியும்...”
வாங்கிப் பார்த்தான். கவர்க்குள்ளே ஐந்து போஸ்ட் கார்ட் சைஸ் போட்டோக்கள். ஒவ்வொரு போட்டோவிலும் ஒரு பெண் நேர்பார்வை பார்த்து புன்னகைத்தாள்.
“என்னப்பா இதெல்லாம்...?”
“பொண்ணுங்க எப்படி இருக்காங்க...?”
“நல்லாத்தான் இருக்காங்க...”
“இதுல யாராவது ஒரு பொண்ணை செலக்ட் பண்ணிச் சொல்லு... நாளைக்கு பெண் பார்க்க போலாம்.”
“அ... அப்பா...”
“என்ன...?”
“எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்...! இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்...”
“எதுக்கு ரெண்டு வருஷம் வாய்தா கேட்கிறே?”
“கம்பெனியோட பிசினஸ் கிராப் இப்பத்தான் ரெய்ஸாகியிருக்கு... அதை இன்னும் டெவலப் பண்ணிட்டு...இதோ பார்ரா... கம்பெனியோட பிசினஸ் கிராப்பைப் பத்தி நீ கவலைப்படாதே... உனக்கு கீழே ஒரு ஏ.வி.பி., ஒரு ஜி.எம்., ரெண்டு டி.ஜி.எம்., நாலு மேனேஜர்ஸ், ஒரு அட்மினிஷ்ட்ரேஷன் ஆபீஸர், பத்து அக்கவுண்ட் ஆபீஸர்ஸ் இருக்காங்க. இவங்க எல்லாரும் கம்பெனியோட பிசினஸ் கிராப்பை பார்த்துக்குவாங்க.”
“அப்பா...! நான் என்ன சொல்ல வர்றேன்னா...?”
“நோ... ஆர்க்யூமெண்ட் ப்ளீஸ்... போட்டோக்களைப் பாரு...! அஞ்சுல ஒண்ணை செலக்ட் பண்ணு.”
“உடனேவா...?”
“உடனே... உடனே...!”
“எனக்கு அவகாசம் வேணும்...”
“எப்ப எனக்கு உன்னோட முடிவைச் சொல்லுவே?”
“இன்னிக்கு ராத்திரி ஒன்பது மணிக்கு உங்க கையில இந்த போட்டோக்களில் ஏதாவது ஒண்ணு இருக்கும்.”
“நிஜமாத்தானே சொல்றே...?”
“இதுல பொய் சொல்ல என்னப்பா இருக்கு...?”
“சித்தார்த்...! இந்தப் போட்டாக்களில் இருக்கிற பெண்கள் எல்லாமே நம்ம ஸ்டேட்டஸுக்கு ஏத்த மாதிரி பெரிய இடத்துப் பெண்கள். இதுல நீ யாரை செலக்ட் பண்ணினாலும் எனக்கு சந்தோஷமே!”
“ராத்திரி நான் வீட்டுக்கு வரும்போது உங்களுக்கு போட்டோவைக் கொடுத்துடறேன். போதுமா...?”
“போதும்...! நான் புறப்படறேன்... நீயும் வீட்டுக்கு சீக்கிரமே வந்து சேரு… உழைப்புக்கும் ஒரு எல்லை இருக்கு... ஆறு மாசத்துக்கு முன்னாடி இருந்த உடம்பு இப்போ இல்லை. கண்ணாடிக்கு முன்னாடி ஒரு ரெண்டு நிமிஷம் நின்னு உன்னையே நீ பார்த்துக்கிட்டாத்தான் தெரியும்... எப்படி இளைச்சு போயிருக்கேன்னு...!”
சித்தார்த் சிரித்தான். “அப்பா...! அடுத்த மாசம் ஊட்டிக்குப் போய் பதினஞ்சு நாள் ரெஸ்ட் எடுக்கப் போறேன். அந்த ரெஸ்ட்ல பழைய உடம்பு வந்துடும்...! கவலைப்படாதீங்க...!உன்னோட அம்மா உயிரோடு இருந்திருந்தா இப்படி உன்னை விட்டிருக்கமாட்டா... எப்பவோ கல்யாணத்தை பண்ணி வெச்சிருப்பா... நீயும் ஒரு பேரப் பிள்ளையையோ பேத்தியையோ பெத்து கொடுத்து இருப்பே...!’ காமேஷ்வரன் தனக்குள் முனகிக் கொண்டே அறையைவிட்டு வெளியேறினார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 8, 2024
விவேக் விஷ்ணு வெற்றி

Read more from ராஜேஷ்குமார்

Related to விவேக் விஷ்ணு வெற்றி

Related ebooks

Related categories

Reviews for விவேக் விஷ்ணு வெற்றி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    விவேக் விஷ்ணு வெற்றி - ராஜேஷ்குமார்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    ஜிம்பாப்வேவை இந்தியா கஷ்டப்பட்டு ஜெயித்துக் கொண்டிருக்க - விவேக் டீ.வி.யில் அந்த பகல் இரவு ஆட்டத்தை பார்க்கலாமா வேண்டாமா என்று யோசித்த விநாடி டெலிபோன் கூப்பிட்டது. ஹர்பஜன்சிங் வீசிய பந்தில் ஆன்டி ஃப்ளவர் க்ளீன் போல்டாகி - மட்டையை கக்கத்தில் அதக்கி - க்ளவுஸை கழற்றியபடி பெவிலியனை நோக்கிப் போக விவேக் ரிஸீவரை எடுத்தான்.

    ஹலோ

    மிஸ்டர் விவேக்...? நடுத்தர வயதுள்ள ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

    எஸ்.

    நான் யார்ன்னு உங்களால தெரிஞ்சுக்க முடியுதா மிஸ்டர் விவேக்…?

    ஒரு இருபது விநாடி எனக்கு அவகாசம் கொடுக்க முடியுமா...?

    எடுத்துக்குங்க...!

    விவேக், டீ.வி.யில் ஐஸ்வர்யா ராய் பெப்ஸி குடிப்பதைப் பார்த்துக் கொண்டே யோசித்தான்.

    சரியாய் 19 - வது விநாடி ரிஸீவரில் குரல் கொடுத்தான்.

    கண்டுபிடிச்சுட்டேன்...

    சொல்லுங்க... பார்க்கலாம்.

    வார்டன் கிறிஸ்டிதானே…?

    விவேக்! யூ... ஆர்… கிரேட்…! ஒரே ஒரு தடவைதான் ஹாஸ்ட்டல் டே ஃபங்க்ஷன்ல என்னை மீட் பண்ணி பேசியிருக்கீங்க... அதுவும் பத்து நிமிஷம்தான் பேசியிருப்போம். எப்படி என் குரலை வெச்சே கண்டுபிடிச்சீங்க...?

    உங்க தமிழ் உச்சரிப்புத்தான்! என்னோட பேரை நீங்க சொல்லும்போது கொடுக்கிற அழுத்தம் மத்தவங்க சொல்றதிலிருந்து நிறையவே வேறுபடுது...! அதை ஹாஸ்ட்டல் டே ஃபங்க்ஷன் அன்னிக்கே அப்ஸர்வ் பண்ணிட்டேன். ஸோ... இன்னிக்கும் இதே தமிழ் உச்சரிப்புதான் காட்டிக் கொடுத்தது. பை... த... பை... இந்த ராத்திரி வேளையில் போன் பண்ணியிருக்கீங்க... எனி அர்ஜென்ஸி வார்டன்...?

    எஸ்...!

    சொல்லுங்க...

    ஐ. நீட் யுவர் ஹெல்ப்...! நீங்க உடனே புறப்பட்டு எங்க காலேஜ் ஹாஸ்ட்டலுக்கு வரமுடியுமா...?

    உடனே…?

    எஸ்...

    விவேக் தன் மணிக்கட்டில் இருந்த ரேடியம் வாட்ச்சைப் பார்த்தான். மணி பத்தே கால்.

    விஷயம் என்னான்னு சொல்ல முடியுமா?

    ஒரு பர்சனல் ப்ராப்ளம்...

    சொல்லுங்க வார்டன்...

    டெலிபோனிக் கான்வர்சேஷன் எதுவும் வேண்டாம். நீங்க நேர்ல வந்துட்டா பரவாயில்லை... ப்ளீஸ்...! இப்போது வார்டன் கிறிஸ்டியின் குரலில் பயமும் பதட்டமும் தெரிந்தது.

    இன்னும் ஒரு அரைமணி நேரத்துக்குள்ளே உங்க ஹாஸ்ட்டல்ல இருப்பேன் வார்டன்...

    தேங்க்யூ...!

    விவேக் டெலிபோன் ரிஸீவரை அதனிடத்துக்கு கொடுத்துவிட்டு எழுந்தான். இந்தியா ஜிம்பாப்வேயை ஜெயித்துவிட்ட சந்தோஷத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் அதிர்ந்து கொண்டிருந்தது. மைக்கில் ஒரு வழுக்கைத் தலையும், முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்தியா ஏதோ உலகக் கோப்பையையே ஜெயித்துவிட்ட மாதிரி மாறிமாறி பேசி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

    விவேக் வேறு சர்ட் பேண்ட்டுக்கு மாறினான். ரூபலா படுக்கையறையிலிருந்து எட்டிப் பார்த்துக் கேட்டாள்.

    மன்னர் இந்த இரவு வேளையில் எங்கே புறப்பட்டு விட்டார்...?

    ஒரு அவசரப் பணி தேவி.

    இது முன்னிரவு நேரம்... இரண்டாம் சாமம் துவங்கும் நேரம். இந்த வேளையில் அப்படியென்ன பணி...?

    போய்ப் பார்த்தால்தான் தெரியும்...

    தொலைபேசியில் அழைத்தது யார்...?

    வார்டன் கிறிஸ்டி…

    என்ன செய்தி...?

    தொலைபேசியில் எதுவும் சொல்லவில்லை. நேரில் வரும்படியாய் அழைப்பு... போய்விட்டு வரட்டுமா தேவி...?

    ………...

    என்ன தேவி... பதிலையே காணோம்...

    தேவிக்கு கோபம்...

    போய்விட்டு வந்து தேவியின் கோபத்தை ஒரு வழி பண்ணிவிடுகிறேன்...

    விவேக் கார் சாவியோடு வெளியே வந்தான். கான்வாஸ் படுதாவுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ‘மாருதி ஜென்’னுக்கு உயிர் கொடுத்து ரோட்டுக்கு கொண்டு வந்தான்.

    சென்னையின் பத்தரை மணி சாலைகள் காலியான கல்யாண மண்படங்களைப் போல் வெறிச்சோடி கிடக்க மாருதி ஜென் டாப் கியரில் பறந்தது.

    சரியாய் இருபது நிமிஷ பயணம். வேப்பேரிப் பகுதியின் கடைக் கோடியில் இருந்த ‘சேரிங் க்ராஸ் ஹாஸ்ட்டல்’ வந்தது. கேட்டில் இருந்த வாட்ச்மேன் கேட் கதவுகளை அகலமாய் திறந்து வைக்க, கார் உள்ளே போயிற்று. ஹாஸ்ட்டலின் எழுபது சதவிகித ஜன்னல்கள் சாத்திக் கிடக்க பாக்கி ஜன்னல்களில் ட்யூப்லைட் வெளிச்சம் ஒட்டியிருந்தது. ‘ஜீசஸ் ஈஸ் த ஒன்லி ஆன்ஸர்...!’ என்கிற குரோமியம் போர்டு வாசகம் ஃபோகஸ் லைட் வெளிச்சத்தில் பிரதானமாய் தெரிந்தது.

    ஹாஸ்ட்டலின் போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1