Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தூரத்தில் ஒரு சிகப்புக்கொடி
தூரத்தில் ஒரு சிகப்புக்கொடி
தூரத்தில் ஒரு சிகப்புக்கொடி
Ebook105 pages1 hour

தூரத்தில் ஒரு சிகப்புக்கொடி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 11, 2024
தூரத்தில் ஒரு சிகப்புக்கொடி

Read more from ராஜேஷ்குமார் Rajeshkumar

Related to தூரத்தில் ஒரு சிகப்புக்கொடி

Related ebooks

Related categories

Reviews for தூரத்தில் ஒரு சிகப்புக்கொடி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தூரத்தில் ஒரு சிகப்புக்கொடி - ராஜேஷ்குமார் Rajeshkumar

    1

    டெலிபோன் கிணுகிணுத்தது. சன் டி.வியில் நடிப்பு இமயம் சிவாஜியின் நினைவுக் கவியரங்க நிகழ்ச்சியைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த ரூபலா எழுந்து போய் ரிஸீவரை எடுத்தாள்.

    ஹலோ... யார் பேசறது...?

    மறுமுனையில் உன்னோட பிராணநாதன் என்றான் விவேக்.

    என்ன மத்தியான சாப்பாட்டுக்கு ஆளையே காணோம்...

    வர முடியலை... ஐ.ஜி. ஆபீஸ்ல ஒரு மீட்டிங்...

    சரி... ராத்திரி டிபன் சாப்பிடவாவது வருவீங்கள்ல...?

    இன்னும் பத்து நிமிஷத்துல அங்கே வர்றேன்...

    இப்பவே வர்றீங்களே...? எதுக்கு என்னை சினிமா கூட்டிட்டுப் போறீங்களா...?

    மண்டு! உன்னை அது மாதிரியெல்லாம் கூட்டிட்டு போய் இம்சை படுத்துவேனா...? இன்னிக்கு தேதி எவ்வளவு...?

    பத்து...

    மேஜை மேல் என்னோட டயரி இருக்கா...?

    இருக்கு...

    எடுத்து... பத்தாம் தேதியில் என்ன எழுதியிருக்குன்னு பாரு...

    விவேக் சொன்னதும் ரூபலா இடது கையை நீட்டி... மேஜையிலிருந்த டயரியை எடுத்து பத்தாம் தேதியைப் புரட்டிப் பார்த்து விட்டு சொன்னாள்.

    அடடே

    என்ன...?

    உங்க ஃப்ரெண்ட் கோவர்த்தனின் தம்பி தருண்குமாருக்கு கல்யாணம். ரிசப்ஷன் ஆறு மணிக்கு...

    உன்னை ஞாபகப்படுத்தச் சொல்லியிருந்தேனா... இல்லையா...?

    ஸாரிங்க... மறந்துட்டேன்...

    "நான் உன்னை மன்னிக்கணும்ன்னா... நீ ஒரு காரியம் பண்ணணும்...

    என்ன...?

    இப்ப மணி எவ்வளவு...?

    அஞ்சு அம்பது...

    உனக்கு சரியா பத்து நிமிஷம் தர்றேன் ஆறுமணிக்குள்ளே நீ ட்ரஸ் பண்ணி ரெடியாக வாசல்ல வந்து நிக்கணும். நான் வந்ததும் பைக் பில்லியன்ல தொத்திக்கணும். உடனே ரிசப்ஷனுக்குப் போறோம்...

    நீங்க பேஸ் வாஷ் பண்ணி ட்ரஸ் பண்ண, வேண்டாமா?

    வேண்டாம்...! சிலர்க்கு அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் ஒரே மாதிரியான புத்துணர்ச்சி. "...

    நேர்ல வாங்க! உங்க புத்துணர்ச்சி எப்படி இருக்குன்னு பார்க்கிறேன்.

    ரூபலா ரிஸீவரை வைத்து விட்டு- டி.வி திரையில், ஒ... இமயமே உன் தலைமுடியும் நடிக்கும், என கவிதை வாசித்துக் கொண்டிருந்த ஒரு கவிஞனின் முகத்தைக் காணாமல் போக்கிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

    இரண்டு நிமிஷத்தில் முகம் கழுவி - நான்காவது நிமிஷத்தில் வேறு சேலைக்கு மாறி, எட்டாவது நிமிஷம் ட்ரஸ்ஸிங் டேபிளுக்கு முன்னால் நின்று, முகத்தை பளபளப்பாக்கி வாசலுக்கு வந்த போது,

    விவேக்கின் யமஹா ‘ர்ர்ரீரீ’ ஹார்ன் சத்தத்தோடு பிரசன்னமானது. விவேக் அவரசப்படுத்தினான்.

    ம்... வீட்டைப் பூட்டு...

    ரூபலா வீட்டைப் பூட்டிக் கொண்டு பைக் பில்லியனுக்கு வந்து தொற்றினாள்.

    உங்களுக்கு எப்படி ரிசப்ஷன் ஞாபகம் திடீர்ன்னு வந்தது...?

    கோகுல்நாத்தான் போன் பண்ணி சொன்னார்.

    ரிசப்னுக்கு அவர் வரலையா...?

    வர்றேன்னு சொன்னார்...

    ரிசப்ஷன் எங்கே?

    கோவர்த்தனன் பங்களாவிலேயேதான்...

    அப்படீன்னா... க்ரீம்ஸ் ரோடு போகணும்?

    "ஆமா... விவேக் பைக்கை விரட்டி க்ரீம்ஸ் ரோட்டுக்கு போய்ச் சேர்ந்தபோது ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் காண்டசாக்கள், மாருதிகள், சான்ட்ரோக்கள். கோவர்த்தனின் பங்களா பூராவும் இல்யூம்னேஷன் சர விளக்குகள், நியான் போர்டில் ஒரு தாமரை விரித்து விரித்துக் குவிய கீழே WELCOME வாசகம் பளிச்சிட்டது.

    என்னங்க... இவ்வளவு கூட்டம்...?

    கோவர்த்தனன் புது பணக்காரன். கும்பலுக்கு கேக்கணுமா? தன் யமஹாவை ஓரமாய் நிறுத்தி... கீழே இறங்கினான் விவேக். பைக்கை லாக் செய்து கொண்டு இருவரும் பங்களாவின் முகப்பை நோக்கி நடந்தார்கள். பங்களாவுக்குள்ளே வயலின் இழைந்தது.

    விவேக்கையும், ரூபலாவையும் பார்த்து காமிராக்கள் உயிர்ப்புக்கு வந்து வெளிச்சத்தைக் கொட்ட, யார் கூடவோ பேசிக் கொண்டிருந்த கோவர்த்தனன் பட்டு வேஷ்டியும் தொப்பையுமாய் ஓடி வந்தான்.

    வாங்க க்ரைம் பிராஞ்ச் சிங்கமே...! வாங்க சிஸ்டர்.

    ஸாரி கோவர்தனன், கொஞ்சம் லேட்டாயிடுச்சு...

    தெரியுமே! என்னிக்குமே உனக்கு ஸாரி சொல்லித்தானே பழக்கம்? விவேக்கின் தோளில் கைபோட்டு பெண்ணும் மாப்பிள்ளையும் உட்கார்ந்திருந்த சோபாவுக்குக் கூட்டிப்போனான் கோவர்த்தன். ஜிகினா வேலைப்பாடுகள் செய்த கனமான லில்லி மாலைகளுக்குள் சிக்கியிருந்த மணமகன் தருண்குமாரும், மணமகள் அனுஷாவும் கைகளைக் கூப்பிக் கொண்டு எழுந்தார்கள்.

    விவேக் தருண்குமாரின் கையைப் பற்றிக் குலுக்கினான்.

    விஷ்...யூ...ஏ... ஹேப்பி... மேரீட் லைஃப்...

    தாங்க்யூ...

    அவரசத்தில் ப்ரசண்டேஷன் வாங்கிட்டு வராமே வந்துட்டேன். கையைப் பாக்காதே மனசுக்குள்ளே திட்டாதே...

    நீங்க வந்ததே பெரிய பிரசண்டேஷன் மாதிரிதான் ஸார்...

    இந்த மாதிரி இளமையான ஜோடியைப் பார்த்து ரொம்ப... நாளாச்சு! பதிலுக்கு நான் ஐஸ் வெச்சுட்டேன். கோவர்தனா! டிபன் சாப்பிட போலாமா?

    வா... வா...?

    என்ன அயிட்டம்ஸ்...?

    முந்திரி கேக்... வெஜிடபிள் கிச்சிடி, தயிர் சேமியா, மைசூர் போண்டா, பாதாம்கீர்...

    ஆஹ்ஹா! என் வயிறே! இன்று உனக்குப் பொன்னாள்.

    ரூபலா விவேக்கின் இடுப்பில் குத்தினாள்.

    அலையாதீங்க...

    "கோவர்தனன் டிபன் செக்ஷன் இருக்கும் - மாடிக்கு விவேக் - ரூபலாவை கூட்டிக் கொண்டு போக மணமகன் தருண்குமார் - மனைவியாகிப் பத்துமணி நேரமே ஆன தன் புது மனைவியிடம் சொன்னான்.

    "இன்னிக்கு இண்டர்நேஷனல் அளவில் க்ரைம் பிராஞ்ச் டிபார்ட்மெண்ட்டை பொருத்தவரைக்கும் விவேக் ஒரு பவர்ஃபுல் பர்சன்.’’

    அனுஷா புன்னகைத்தாள், இன்னிக்குத்தான் நான் அவரைப் பார்க்கிறேன்...

    "ரொம்ப... ரொம்ப ஜோவியல்...

    Enjoying the preview?
    Page 1 of 1