Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Eastmen Nira Nizhalgal
Eastmen Nira Nizhalgal
Eastmen Nira Nizhalgal
Ebook137 pages34 minutes

Eastmen Nira Nizhalgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Eastmen Nira Nizhalgal

Read more from Rajeshkumar

Related to Eastmen Nira Nizhalgal

Related ebooks

Related categories

Reviews for Eastmen Nira Nizhalgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Eastmen Nira Nizhalgal - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    ஜூலை மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமை. ராத்திரி 11.45. டில்லி துர்தர்ஷனின் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் ஸ்டார் டி.வி.யில் இத்தாலிக்கும் - டென்மார்க்குக்கும் இடையில் நடந்து கொண்டிருந்த ஃபுட்பால் மேட்ச்சை தத்ரூப் நிறத்தில் ரசித்துக் கொண்டிருந்த விவேக், ரூபலா தனக்குப் பக்கத்தில் வந்து நின்றதும் - நிமிர்ந்தான்.

    என்னமா... ஆடறானுக... பந்து எவன் காலுக்குக் கிடைச்சாலும் சரி அவன் சொன்னபடியெல்லாம் கேட்குது...

    மணி எவ்வளவு தெரியுங்களா?

    தெரியும்.

    எவ்வளவு...?

    'லெவன் ஃபார்ட்டி ஃபைவ்..."

    தூக்கம் வரலையா?

    மேட்ச் முடிகிற வரைக்கும் தூக்கம் வராது. அந்த டென்மார்க் கோல் கீப்பரைப் பாரு... இந்த கோல் கம்பத்துக்கு பக்கத்துல இருந்துகிட்டு பந்தை உதைச்சான்னா... எதிர்சைடுல இருக்கிற கோல் கம்பத்துக்கு பந்து போகுது. இதே கால்ல அவன் பொண்டாட்டி உதை வாங்கினா அவ உடம்பு என்னத்துக்கு ஆகும்?

    அது அவனோட பொண்டாட்டி படவேண்டிய கவலை... நீங்க டி.வி.யை ஆஃப் பண்ணிட்டு பெட்டுக்கு வாங்க...

    நீ போய் படுத்துக்க ரூபி. மேட்ச் இன்னும் அரைமணி நேரத்துல முடிஞ்சுடும்... இது ஓர் அபூர்வமான மேட்ச். நாலு வருஷத்துக்கு ஒரு தடவைதான் இதை பார்க்கக்கூடிய பாக்கியம் கிடைக்கும்...

    சரி... வால்யூமை கம்மியா வெச்சுக்கிட்டு பாருங்க. தூங்கிட்டிருக்கிற பாரத் விழிச்சுக்கிட்டான்னா... அதுக்கப்புறம் அவனை மறுபடியும் தூங்க வைக்கிறது கஷ்டம். அப்புறம் விடிய விடிய உங்க முதுகு மேல யானை சவாரிதான்...

    ஹம்மாடி... என் முதுகு தாங்காது...

    விவேக் போலியாய் பயப்பட்டு டி.வி.யின் வால்யூமை குறைப்பதற்காக எழுந்தான்.

    உள் அறையில் டெலிபோன் அடித்தது.

    ரூபி! போய்ப் பாரு...

    ரூபலா திரைச்சீலையைத் தள்ளிக் கொண்டு - உள்ளே போய் ரிஸீவரை எடுத்தாள்.

    ஹலோ...

    என்னம்மா ரூபலா... விவேக் தூங்கிட்டிருக்காரா... முழிச்சிட்டிருக்காரா...? கோகுல்நாத்தின் குரல் கேட்டது.

    ரூபலா மலர்ந்தாள்.

    நீங்களா அங்கிள்...? அவர் ஸ்டார் டி.வி.யில் ஃபுட்பால் மேட்ச் பார்த்துட்டிருக்கார். ஆமா... அங்கிள்... என்ன இந்த நேரத்துல போன்?

    ஓர் அசம்பாவிதம் நடந்துடுச்சும்மா.

    கேஸா...?

    ரூபலா பெருமூச்சுவிட்டாள்.

    அது ரிஸீவருக்குள் புயல்காற்றாய் புகுந்து மறுமுனையில் இருந்த கோகுல்நாத்தை கலக்கியது.

    இருங்க... அங்கிள் அவரையே கூப்பிட்டு விடறேன்.

    ரிஸீவரை ஒருக்களித்து வைத்துவிட்டு, டி.வி. பார்த்துக் கொண்டிருந்த விவேக்கிடம் வந்தாள். விவேக் ஃபுட்பால் மேட்ச்சைவிட்டு கண் எடுக்காமல் கேட்டான்.

    போன்ல யாரு...?

    உங்க முதல் பொண்டாட்டி...

    கோகுல்நாத்தா?

    ம்...

    எதுக்குன்னு விபரம் சொன்னாரா?

    அதை வேற கேக்கணுமாக்கும்? அங்கிள் ஏதோ நடுராத்திரி கேஸைக் கொண்டு வந்திருக்கார். போனை அட்டெண்ட் பண்ணி விபரம் என்னான்னு கேட்டுட்டு உடனே வெளியே போய் பைக்கை மிதிங்க... ரூபலா படபடவென பொரிந்துவிட்டு - உள்ளே போக, விவேக் தோள்களை குலுக்கிவிட்டு வேகமாய் போய் ரிஸீவரை எடுத்தான்.

    சொல்லுங்க கோகுல்நாத்.

    ஸாரி ஃபார்... த... டிஸ்டர்பன்ஸ்...

    உங்க ஸாரி ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. விஷயத்தைச் சொல்றீங்களா கோகுல்நாத்?

    மெட்ராஸுக்கு டூரிஸ்டா வந்த ஓர் அமெரிக்க பெண்ணையும் அவளோட புருஷனையும் ஊஞ்சம்பாக்கம் சவுக்குத் தோப்புல வெச்சு கண்ட துண்டமா வெட்டி கொலை பண்ணியிருக்காங்க.

    சம்பவம் எப்ப நடந்தது?

    தெரியலை... கள்ளச்சாராய கோஷ்டியை பிடிக்கப் போன ஊஞ்சம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் சையத் முஸ்தபா, கண்ட துண்டமா வெட்டப்பட்ட உடல்களைப் பார்த்திருக்கார். உடனே க்ரைம் பிராஞ்சுக்கு தகவல் வந்தது. நான் புறப்பட்டு வந்தேன்... கொலை செய்யப்பட்டவங்க வெளிநாட்டைச் சேர்ந்தவங்க. கொலைக்கான மோட்டீவ் என்னவாயிருக்கும்ன்னு கண்டுபிடிக்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம்னு டி.ஐ.ஜி. ஃபீல் பண்ணினார்.

    உடல்களுக்குப் பக்கத்தில் ஆயுதம் ஏதாவது கிடந்ததா?

    நாட் ஃபவுண்ட்...

    அந்த அமெரிக்கப் பெண் கெடுக்கப்பட்டதுக்கான அறிகுறிகள் ஏதாவது...?

    கெடுக்கப்பட்டிருக்கலாம். ஏன்னா அந்தப் பெண்ணோட உடம்புல துணியே இல்லை.

    இளம் பெண்ணா?

    முப்பது வயசு இருக்கலாம்...

    ஆணுக்கு...?

    நாற்பது வயசு இருக்கலாம்.

    உடனே புறப்பட்டு வர்றேன்... விவேக் ரிஸீவரை வைத்துவிட்டு திரும்ப, ரூபலா கையில் ஜெர்கின் கோட்டோடு நின்றிருந்தாள்.

    குட்...

    ஜெர்கின் கோட்டை வாங்கி, அதற்குள் நுழைந்தான். ரூபலா இடது கையில் வைத்திருந்த பைக் சாவியை நீட்ட - விசிலடித்து வாங்கிக் கொண்டான்.

    ஆஹா...! நம்ப முடியவில்லையே...! இது என் ரூபிதானா?

    என் கோபம் தலைக்கு ஏர்றதுக்குள்ளே உடனடியா கிளம்பிப் போயிடுங்க... ரூபலா மார்புக்கு குறுக்காய் கைகளைக் கட்டிக்கொண்டு எங்கோ பார்த்தாள்.

    ரூபி...

    ......

    ரூபி...

    ம்...

    திரும்பினாள். விவேக் புன்னகைத்தான்.

    ஒரு சந்தேகம்...

    என்ன...?

    இப்ப கோபம்... எதுவரைக்கும் ஏறியிருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?

    ரூபலா விழிகளை விரித்து முறைக்க, விவேக் பைக்

    Enjoying the preview?
    Page 1 of 1