Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Silent Killers
Silent Killers
Silent Killers
Ebook166 pages1 hour

Silent Killers

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Silent Killers

Read more from Rajeshkumar

Related to Silent Killers

Related ebooks

Related categories

Reviews for Silent Killers

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Silent Killers - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரம், அந்த சாயந்தர நேரத்தில் சூரிய வெளிச்சத்தைத் தொலைத்து விட்டு – செயற்கைப் பகலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

    ஏராளமான உயரத்துக்கு வளர்ந்திருந்த ஹோட்டல் ஃப்ளெமிங்கோ ஹில்டனின் மொட்டைமாடியில் நின்று - கையை உயர்த்தி சோம்பல் முறித்தால் ஆகாயம் இடித்தாலும் இடிக்கலாம்.

    அந்த ஹோட்டலின் ஐந்தாம் தளத்தில் இருந்த ரூபலா பரபரவென்று கையைத் தேய்த்துக்கொண்டு சொன்னாள்.

    என்னமா குளிருது...?

    ரிமோட் கன்ட்ரோலின் உதவியால் டிவி சேனல்களை மாற்றிக் கொண்டிருந்த விவேக் புன்னகையோடு சொன்னான்.

    குளிரைப் போக்க உனக்கு இப்போ ரெண்டு வழி இருக்கு... ஹீட்டர் நாபைத் திருகி ரூம் டெம்பரேச்சரை அதிகப்படுத்தலாம்... இன்னொரு வழி...

    ரூபலா வெட்கத்தோடு குறுக்கிட்டாள்.

    வேண்டாம். சொல்ல வேண்டாம்...

    ஏன்?

    நீங்க கண்ணியமான போலிஸ் ஆபீஸர்... ரொமான்ட்டிக் ஹீரோ இல்லை. பெண்டாட்டிகிட்டே பேசினாலும் கண்ணியம் குறையக்கூடாது...

    போச்சுடா... ரூமுக்குள்ளே இருந்தாலும் பரவாயில்லை... ஓவர் கோட் எடுத்து மாட்டிக்கோ... அதுதான் குளிரைப் போக்க இன்னொருவழின்னு சொல்ல வந்தேன்... அதில் என்ன கண்ணியம் குறைஞ்சு போச்சு...?

    ரூபலா புன்னகைத்தாள்.

    சாமர்த்தியமா பேச்சை மாத்திட்டிங்க... உண்மையைச் சொல்லுங்க... இதைத்தான் சொல்ல வந்திங்களா...?

    அவளுக்கு பதில் சொல்லும் முன் விவேக்கின் கவனம் மாறிப்போனது. அவனுடைய பார்வை டிவியில் உன்னிப்பானது. டிவி கேமரா காரிடார்களில் வேகமாய் நகர்ந்து ஒரு பெரிய ஹாலுக்குள் நுழைந்தது.

    காரிடாரில் துவங்கி ஹால் வரையிலும் ஏராளமான ஜனக்கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது.

    அலங்கரிக்கப்பட்ட மேடையில் வலம் வந்தது அந்தக் கேமரா.

    என்ன பதிலே பேச மாட்டேங்கறிங்க...? ரூபலா கேட்ட போது - டிவியில் இருந்து கண்ணைப் பெயர்க்காமலே அவன் சொன்னான்.

    ரூபலா... இப்ப டிவியில் காட்டிட்டிருக்காங்களே... இந்த இடத்தை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே...?

    ரூபலா சலிப்பான வார்த்தைகளை உதிர்த்தாள்.

    மூணு வார டூர் ஷெட்யூலில் அமெரிக்கா வந்திருக்கோம்... தினம் ஒரு ஊர் மாறிப் போறோம்... நயாகரா... எம்பயர் ஸ்டேட் பில்டிங்... யுனிவர்ஸல் ஸ்டுடியோன்னு ஏராளமான இடங்கள்... இந்த அமெரிக்கா ட்ரிப் ஒரு குழப்பமான கனவு மாதிரி இருக்கு... டிவியில் இப்ப காட்டற இடம் எதுன்னு எனக்குத் தெரியலை...

    கொஞ்சம் டிவி வால்யூமை அதிகரித்து வர்ணனையாளரின் வேகமான ஆங்கில உச்சரிப்பைக் காதில் வாங்கியவன் தன் சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொண்டு சொன்னான்.

    இப்ப டிவியில் நீ பார்த்துட்டிருக்கிறது நாம் தங்கியிருக்கும் இந்த ஹோட்டல்தான் ரூபலா...

    அவள் ஆச்சர்யப்பட்டாள்.

    இந்த ஹோட்டலா...?

    ஆமா... காரிடார் தூண்களை வெச்சுத்தான் நான் கண்டுபிடிச்சேன்...

    உங்களுக்குக் கூர்மையான பார்வையும்... நல்ல ஞாபக கதியும் இருக்கு...

    அதனால தானே க்ரைம் ப்ராஞ்சில் பேசப்படற அளவுக்கு வளர முடிஞ்சது...?

    இந்த ஹோட்டலை எதுக்காக டிவியில் பட்டறாங்க...? ஏன் இத்தனை ஜனக் கூட்டம்...? நம்ம ஊரை விட மோசமா டிசிப்ளினே இல்லாம் முட்டி மோதிட்டிருக்காங்களே...? அவள் கேட்ட போது - கதவு தட்டப்பட்டது.

    விவேக் கதவைத் திறக்க - கனத்த கோட்டுக்குள் நிரம்பியிருந்த அந்த நபர் உற்சாகப் புன்னகையோடு உள்ளே வந்தார்.

    வாங்க மிஸ்டர் பாலகிருஷ்ணன்...?

    விவேக் அவரை வரவேற்று அமர வைத்து விட்டு - ரூபலாவிடம் அறிமுகப்படுத்தினான்.

    இவர் மிஸ்டர் பாலகிருஷ்ணன், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர், பதினைஞ்சு வருஷத்துக்கு மேலா இங்கேயே செட்டில் ஆயிட்டார்... சக்ஸஸ் ஃபுல்லா பிசினஸ் பண்ணிட்டு இருக்கார்...

    ரூபலாவணக்கம் சொல்லிக்கொண்டே புருவங்களை உயர்த்தினாள்.

    அமெரிக்கா மாதிரியான வளர்ந்த நாட்டில் பிசினஸ் நடத்த நல்ல துணிச்சலும் திறமையும் வேணும்... முணுக்ன்னா இங்கே கோர்ட்டுக்குப் போயிடுவாங்க... சர்வீஸ் க்வாலிட்டி இல்லைன்னா தாக்குப் பிடிக்க முடியாது...

    அந்த பாலகிருஷ்ணன் புன்னகைத்தார்.

    வாஸ்தவம்தான் மேடம்... கடவுள் அருளால் எந்தப் பிரச்னையும் இல்லாம பிசினஸ் நல்லாப் போயிட்டிருக்கு... ஏராளமான அமெரிக்க நண்பர்களும் கிடைச்சிருக்காங்க... அப்படிக் கிடைச்ச நண்பர் ஒருத்தருக்கு இங்கே - வர்றதுக்கு முன்னாடி வாக்குறுதி கொடுத்துட்டு வந்திருக்கேன்...

    என்ன வாக்குறுதி...?

    மிஸ்டர் விவேக்கை அழைச்சிட்டு வர்றேன்னு பிராமிஸ் பண்ணிட்டு வந்திருக்கேன்... விவேக் அவரை நிமிர்ந்து பார்த்தான்.

    என்னை அழைச்சிட்டு வர்றேன்னு யார் கிட்டே ப்ராமிஸ் பண்ணினிங்க...?

    போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மிஸ்டர் ஆர்தர். உங்களைப் போலவே அவரும் என்னோட நண்பர்தான். அவர்கிட்டே உங்களைப் பத்தி பல முறை சொல்லியிருக்கேன்... சந்தர்ப்பம் கிடைக்கிறப்ப உங்களை நேரில் சந்திச்சுப் பேசணும்ன்னு எப்பவுமே சொல்லுவார். நீங்க லாஸ்வேகாஸ் வந்திருக்கிங்கன்னு சொன்னதும் கண்டிப்பா மீட் பண்ணணும்ன்னு சொல்லிட்டார்... மிஸ்டர் விவேக்... நாளைக்குக் காலையில் நீங்க அவரோட ஆபீஸுக்கு வரணும்...

    விவேக் புன்னகைத்தான்.

    போலிஸ் யூனிஃபார்மைப் பார்க்காம பத்து நாளா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு... அமெரிக்காவைச் சேர்ந்த உயர் போலிஸ் அதிகாரியைச் சந்திக்கறதில் எனக்கு சந்தோஷம்தான் பாலகிருஷ்ணன்...

    தேங்க்யூ வெரிமச்... நாளைக்குக் காலையில் பத்து மணிக்கு நானே உங்களைக் கூட்டிட்டுப் போறேன்...

    ரூபலா தலையில் கையை வைத்துக் கொண்டு அந்த பாலகிருஷ்ணனைப் பார்த்தாள்.

    இருபத்துநாலு மணி நேரமும் போலீஸ் கேஸ்க்காக மண்டையை உடைச்சுக்கிறார். அதிலிருந்து ரிலாக்ஸ் பண்ணிக்கத்தான் இந்த அமெரிக்கா ட்ரிப்... இங்கேயும் போலிஸ் டிபார்ட்மென்ட்டுக்கு விசிட் பண்ணணுமா...? விவேக் அவளை சமாதானப்படுத்தினான்.

    நான் கேஸ் பார்க்கப் போகலை ரூபலா... ஃப்ரெண்ட்லி மீட் தானே...?

    சொன்ன விவேக்கின் கவனம் மீண்டும் டிவியில் பதிந்த்து.

    டிவி திரையில் ஜனக் கூட்டம் இன்னும் ஏராளமாய் திரண்டிருந்தது.

    ஜிகுஜிகுவென உடை அணிந்திருந்த ஒருவன் சுறுசுறுப்பாய் மேடையில் தாவி மைக்கைப் பிடித்தான்.

    கூட்டம் ஸ்பீக்கர் கிழிந்து போகிற டெசிபலில் ஆரவாரம் செய்தது. விவேக் பாலகிருஷ்ணனிடம் கேட்டான்.

    டிவியில் இந்த ஹோட்டலைத்தான் காட்டிட்டிருக்காங்க போலிருக்கே...? அவர் தலையசைத்தார்.

    "பிரபலமான பாப் ஸிங்கர் கம் மியூசிஷியன் வாட்ஸன் இன்னிக்கு இங்கே ஷோ

    Enjoying the preview?
    Page 1 of 1