Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mannikkathey Marakkathey
Mannikkathey Marakkathey
Mannikkathey Marakkathey
Ebook143 pages37 minutes

Mannikkathey Marakkathey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Mannikkathey Marakkathey

Read more from Rajeshkumar

Related to Mannikkathey Marakkathey

Related ebooks

Related categories

Reviews for Mannikkathey Marakkathey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mannikkathey Marakkathey - Rajeshkumar

    18

    1

    அந்த எக்ஸிக்யூடீவ் அறை ஊட்டியாய் மாறியிருக்க விஷ்வா டெலிபோனில் பேசிக்கொண்டே முக்கியமான ஃபைல்களை மேலோட்டமாய்ப் படித்து கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தான்.

    எனக்கு திறமைதான் முக்கியம். நோ... ரெக்கமண்டேஷன். இந்த ரெக்கமண்டேஷன் என்கிற வார்த்தையே எனக்குப் பிடிக்காது. இதுவும் ஒருவகை ஊழல்தான்... என்ன க்வாலிஃபிகேஷன். பி.ஈ. கம்ப்யூட்டர் சயின்ஸா...? க்வாலிஃபிகேஷன் போதாதே...? என்னோட கம்பெனிக்கு எம்.ஈ. வேணும்... ஸாஃப்ட்வேர் டெக்னாலஜியில் வெரி க்யூட் நாலேட்ஜ் வேணும்... எஸ்... எஸ்... அப்படிப்பட்ட கேண்டிடேட்ஸ் இருந்தா பயோடேட்டாஸ் அனுப்பிவையுங்க. ஒரு இண்டர்வ்யூவை கண்டக்ட் பண்ணி காலியாய் இருக்கிற ரெண்டு போஸ்ட்டை ஃபில்லப் பண்ணிக்கலாம்... லேடீஸுக்கு ஒண்ணு ஜெண்ட்ஸுக்கு ஒண்ணு...

    ரிஸீவரை வைத்துவிட்டு சுழல் நாற்காலியில் அரைவட்டமாய் சுழல - எதிரே ஸ்டெனோ த்ரிஷா கையில் பேடும் பேனாவுமாய் நின்றிருந்தாள்.

    என்ன த்ரிஷா...?

    வரச்சொல்லியிருந்தீங்க ஸார்...!

    ஓ... ஸாரி...! ப்ளூ லாகூனுக்கு ஒரு லெட்டர் டிக்டேட் பண்ணனும்... நோட்... த... பாய்ண்ட்ஸ்.

    ஸ... ஸார்...! த்ரிஷா குறுக்கிட்டாள்.

    என்ன...!

    ப்ளூ லாகூனுக்கு நேத்தே லெட்டர் அனுப்பியாச்சு. பதிலுக்கு அவங்க ஃபேக்ஸும் பண்ணிட்டாங்க...

    விஷ்வா கையில் வைத்து இருந்த பேனாவால் தன் முன் நெற்றியைத் தட்டிக் கொண்டான்.

    வாட் ஹேப்பண்ட் டூ மீ...?

    த்ரிஷா தன் ஒழுங்கான பல்வரிசையைக்காட்டிச் சிரித்தாள். எனி அதர் லெட்டர்.... ஸார்...?

    நாளைக்குப் பார்த்துக்கலாம்... யூ... மே... கோ...

    எஸ்... ஸார்...!

    ஒன் மினிட் த்ரிஷா...

    நகர முயன்ற அவள் நின்றாள்.

    ஸார்...!

    எம்.டி. வந்துட்டாங்களா...?

    இன்னும் வரலை ஸார்...

    வந்தா எனக்கு தகவல் கொடு...

    எஸ்... ஸார்...

    அப்புறம் உனக்கொரு மினி வார்னிங்...

    எ... என்ன ஸார்...?

    இன்னிக்கு நீ பயங்கர லோஹிப். இப்படியே போய் எம்.டி.க்கு முன்னாடி நின்னுடாதே...! மெமோ வாங்கிக்க வேண்டிவரும்.

    ஸார்... இது மைசூர் சில்க் க்ரேப் ஸாரி. கட்டினா லோஹிப் மாதிரிதான் தெரியும்... அதுவும் இல்லாமே...

    நோ... எக்ஸ்ப்ளனேஷன்...! எம்.டி.யைப் பார்க்கப் போகும்போது ட்ரஸ் சென்ஸ் நீட்டா இருக்கணும்...? அதர்வைஸ் யூ ஹேவ் டூ ஃபேஸ் த ப்ராப்ளம்ஸ்.

    ஐ... நோ... ஸார்... லேசாய் முகம் மாறிய த்ரிஷா அறையினின்றும் வெளியேற - விஷ்வா பார்த்துக் கொண்டிருந்த ஃபைலில் தீவிரமானான். இரண்டு ஃபைல்களைப் பார்த்து முடித்திருந்தபோது சில்வர் உடம்பாலான செல்போன் ஒரு ‘மியூஸிக் நோட்’டை வெளியிட்டது. செல்லை எடுத்து மானிட்டரில் நம்பர் பார்த்து மலர்ந்து போய் காதுக்குக் கொடுத்தான்.

    அருணா...!

    மறுமுனையில் பெண் குரல் வெடித்தது. என்கிட்ட பேசாதீங்க... நான் உங்ககிட்ட ‘டூ’...

    நான் பழம்...

    ஒண்ணும் வேண்டாம்...

    அட... என்ன கோபம்... என்னோட அருணாவுக்கு?

    இந்த அருணாவோட ஞாபகம் உங்களுக்கு இருக்கா...?

    இல்லாமே...?

    அப்படி இருக்கிற மாதிரி தெரியலையே...! ரெண்டு நாளா நீங்க என்னைப் பார்க்க வரலை...

    கம்பெனியில் ஒர்க் நிறைய இருக்கு...! ரெண்டு நாளைக்கு உன்னைப் பார்க்க வரமுடியாதுன்னு ஏற்கெனவே சொல்லியிருந்தேனே...?

    சரி... வரவேண்டாம்...! போனாவது பண்ணியிருக்கலாமே...?

    ஸாரி... அருணா...! ரெண்டு நாளா கம்பெனி ஆடிட்டர்களோடு உட்கார்ந்து பாலன்ஸ்ஷீட்டை ப்ரிப்பேர் பண்ணியதில் மூளையே அல்வா பதத்துக்கு மாறிப்போயிருக்கு. இன்னிக்குத்தான் கொஞ்சம் ஃப்ரீ. மத்தியானத்துக்குள் நானே உனக்கு போன் பண்ணலாம்ன்னு இருந்தேன்...

    பொய்யி...!

    பொய் கிடையாது. நிஜம்...!

    சரி... இப்ப நீங்க ஃப்ரீயா...?

    பார்க்கவேண்டிய ஃபைல்ஸ் இன்னும் கொஞ்சம் இருக்கு...

    அதையெல்லாம் எடுத்து ஓரமா போட்டுட்டு உடனே புறப்பட்டு... கன்னிமாரா... ரெஸ்டாரெண்ட்டுக்கு வாங்க...

    நீ இப்போ கன்னிமாரா ரெஸ்டாரெண்ட்லயிருந்தா பேசிட்டிருக்கே...?

    ஆமா... வீட்ல உட்காரப் பிடிக்கலை. லான்ஸரை எடுத்துட்டு வந்துட்டேன். இடது கையில் பெப்ஸி. வலது கையில் செல்போன். ரெஸ்டாரண்ட் கூட்டம் இல்லாமே அமைதியாயிருக்கு. வர்றீங்களா... கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம்...?

    கொஞ்ச நேரம்ன்னா...?

    ஒரு மணி நேரம்...

    வெயிட் பண்ணு... வந்துடறேன்...

    வெயிட் பண்றதா...! நோ... நோ... உங்களுக்கு இன்னும் பதினஞ்சு நிமிஷம்தான் டைம். அதுக்குள்ளே நீங்க எனக்கு முன்னாடி உட்கார்ந்திருக்கணும். இல்லேன்னா நான் பாட்டுக்கு கிளம்பிப் போய்கிட்டேயிருப்பேன்...

    என்ன... அருணா... விளையாடறியா...? என்னோட ஆபீஸ் எங்கேயிருக்கு... நீ பெப்ஸி குடிச்சுட்டு உட்கார்ந்திட்டிருக்கிற கன்னிமாரா ரெஸ்டாரண்ட் எங்கேயிருக்கு...! கார்ல எவ்வளவுதான் வேகத்துல வந்தாலும் ரெஸ்டாரண்ட் வந்து சேர எப்படியும் அரைமணி நேரமாயிடும்... அதுவும் இப்ப பீக் ஹவர்ஸ். ட்ராஃபிக் ஜாம் எப்படியிருக்கும்ன்னு உனக்கே தெரியும்...

    இந்த நொண்டிச்சாக்கெல்லாம் எனக்கு வேண்டாம். இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல நீங்க கன்னிமாரா ரெஸ்டாரெண்ட்டுக்கு வரமுடியுமா... முடியாதா...?

    அருணா... ப்ளீஸ்...! ஒரு அரைமணி நேரம் டைம் கொடு...

    ஸாரி... ஸாரி... வெரி ஸாரி...!

    சரி! அரைமணி நேரம் வேண்டாம்... ட்வெண்டி ஃபைவ் மினிட்ஸ்...!

    "நோ...! இப்ப மணி சரியா பதினொண்ணு. பதினொண்ணே

    Enjoying the preview?
    Page 1 of 1