Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thik Thik December
Thik Thik December
Thik Thik December
Ebook161 pages1 hour

Thik Thik December

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Thik Thik December

Read more from Rajeshkumar

Related to Thik Thik December

Related ebooks

Related categories

Reviews for Thik Thik December

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thik Thik December - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    அம்மா!

    பால் குக்கர் விசிலடிப்பதற்காக காஸ்ஸ்டவ் அருகே காத்திருந்த சொர்ணம், சமையலறை வாசலில் எழுந்த குரலைக் கேட்டுத் திரும்பினாள்.

    மகன் ஹரீஷ் நின்றிருந்தான். கையில் நீளமாய் ஒரு ப்ரெளன் கவர். முகம் முழுக்க சந்தோஷம், பவுடர் பூசியது மாதிரித் தெரிந்தது.

    என்ன ஹரீஷ்... லைப்ரரிக்குப் போய்ட்டு வர்றேன்னு கிளம்பினே! கையில ஏதோ கவரோடு வந்து நிக்கறே? என்ன கவர் அது?

    அம்மா...! இப்ப எதுவும் கேக்காதே! மொதல்ல கிழக்குப் பார்த்து நில்லு.

    எதுக்குடா?

    நில்லு சொல்றேன்.

    பால் குக்கர் இப்போ விசில் குடுத்துடும்.

    குடுக்கட்டும். நில்லும்மா.

    இவன் ஒருத்தன் நேரம் காலம் தெரியாமே...

    செயற்கையாய் சலித்துக் கொண்டே கிழக்கு பார்த்து நின்றாள்.

    நின்னுட்டேன் என்னடா...?

    என்னை ஆசிர்வாதம் பண்ணும்மா. சொன்ன அந்த இருபத்தைந்து வயது அழகான ஹரீஷ் நெடுஞ்சாண்கிடையாக சொர்ணத்தின் கால்களில் விழுந்தான்.

    நல்லாயிரு! ஹரீஷின் தலையைத் தொட்ட சொர்ணம், சிரிப்போடு கேட்டாள், எதுக்காகடா இந்த அர்ஜெண்ட் ஆசீர்வாதம்?

    உன் மகனுக்கு வேலை கிடைச்சாச்சும்மா. இதோ அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர்.

    சொர்ணத்தின் கண்களில் நீர் முட்டிக் கொண்டது.

    என் ராஜா... நிஜமாவாடா சொல்றே? எந்த ஊர்ல வேலை கிடைச்சிருக்கு?

    "ஆமதாபாத்தில் இருக்கிற சிஸ்டம்ஸ் அண்ட் கண்ட்ரோல்ஸ் கம்பெனியில் அஸிஸ்டெண்ட் எலக்ட்ரானிக் எஞ்ஜினீயரா போஸ்டிங். அடுத்த வாரத்துக்குள்ளே வந்து ட்யூட்டியில் ஜாய்ன் பண்ணும்படியா ஆர்டர்ல இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்திருக்காங்க.

    சம்பளம் எவ்வளவு தெரியுமாம்மா?"

    எ... எவ்வளவு?

    எவ்வளவு இருக்கும்னு நினைக்கிறே?

    மூவாயிரம்...?

    ஏம்மா, நான் படிச்சிருக்கிறது எம்.ஈ. எலெக்ட்ரானிக்ஸ். வேலை பார்க்கப் போறதோ இந்தியாவில் இருக்கிற பெரிய கம்பெனிகளில் ஒன்றான சிஸ்டம்ஸ் அண்ட் கண்ட ரோல்ஸ்ல, சம்பளத்தை இப்படியா குறைச்சுச் சொல்றது?

    எனக்கென்னடா தெரியும்?

    சரி... சொல்றேன், கேட்டுக்க, மாசச் சம்பளம் எனக்குப் பன்னிரண்டாயிரம் ரூபாய். அலவன்ஸ் தனி. குடியிருக்கத் தனி க்வார்ட்டர்ஸ். கம்பெனிக்குப் போக வர கார்...

    சொர்ணம் கண்களை அகல விரித்துக் கொண்டு பிரமித்துப் போய் மகனைப் பார்த்தாள்.

    இப்படியொரு ராஜ வாழ்க்கைக்காகத்தானே இருந்த ஒரு வீட்டையும் விற்று ஹரீஷைப் படிக்க வைத்தாள்!

    ஹரீஸ் அவளுடைய கன்னங்களைத் தட்டினான்.

    என்னம்மா அப்படிப் பார்க்கிறே?

    இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்துக்க உங்க அப்பா உயிரோடு இல்லையேன்னு நினைச்சேன்.

    அம்மா! இந்த சந்தோஷ நேரத்துல அப்பாவை நினைச்சுட்டு அழ ஆரம்பிச்சுடாதே.

    ஆர்டர் தபால்லதானே வந்தது?

    ஆமாம்மா

    போஸ்ட்மேனுக்கு எதாவது குடுத்தியா?

    ம், குடுத்தேனே... ஒரு முத்தமும் பத்து ரூபாயும்.

    சொர்ணம் கண்ணீர் பொங்கச் சிரித்து, ஹரீஷின் முன்னுச்சி தலைமுடியைப் பிடித்து ஆட்டினாள்.

    சரி, நீ இப்போ உடனடியா ஒரு காரியம் பண்ணுனும்.

    என்ன?

    உனக்கு எப்போ வேலை கிடைக்கும்... தாலிக்காக எப்போ கழுத்தை நீட்டலாம்ன்னு காத்திட்டிருக்கிற மீராவுக்கு ஃபோன் பண்ணி மொதல்ல விஷயத்தைச் சொல்லு. விஷயத்தைக் கேட்டதும் சந்தோஷத்துல அவளுக்கு இறக்கையே முளைச்சிடும்.

    பால்குக்கர் விசிலடிக்க...

    இதோ... என்று பாய்ந்தான் ஹரீஷ், சந்தோஷம் மனசுக்குள் கன்றுக்குட்டியாய்த் துள்ளியது. இப்படியொரு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வாங்க எத்தனை இரவுத் தூக்கங்களைத் தியாகம் செய்திருப்பேன்? சினிமாவுக்குப் போகாமல், டீ.வி. பார்க்காமல், லைப்ரரிக்குப் போய் பாட சம்பந்தப்பட்ட புத்தகங்களைத் தேடிப்பிடித்து படித்து... அதன் சாராம்சங்களை மூளையின் ஸெல்களுக்குத் திணித்து பரீட்சைத் தாள்களில் கொட்டியது இப்படிப்பட்ட ஓர் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை ஸ்பரிசிக்கத்தானே?

    தெருவின் கோடியில் இருந்த டெலிஃபோன் பூத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த ஹரீஷுக்கு அந்தக் காலை நேர அழகான தெரு ஒரு சொர்க்கம் போல் காட்சியளித்தது. ஜனங்கள் எல்லோரும் கிரீடம் வைக்காத தேவர்கள் மாதிரித் தெரிந்தார்கள். வேக நடை போட்டு டெலிஃபோன் பூத்தை நெருங்கினான்.

    உடல் ஊனமுற்றோருக்கான டெலிஃபோன் பூத் அது. விரல்கள் சூம்பிப் போயிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்து சிநேகமாய்ச் சிரித்தான் ஹரீஷ். கமலா... ஒரு ஃபோன் பண்ணிக்கிறேன்.

    பண்ணிக்குங்க ஸார்.

    ஹரீஷ் பக்கத்தில் இருந்த கண்ணாடி பூத்துக்குள் நுழைந்து டெலிஃபோனைத் தொட்டு ரிஸீவரை எடுத்துக் கொண்டான். மீராவின் வீட்டு டெலிஃபோன் எண்களை மனதின் மையத்துக்குக் கொண்டு வந்து டயலில் தட்டினான்.

    மறு முனையில் ரிங் போயிற்று. உடனே ரிஸீவர் எடுக்கப்பட்டது.

    ஹலோ! அத்தையின் குரல் கேட்டது.

    அத்தே...! நான் ஹரீஷ் பேசறேன். அங்கே மீரா இல்லையா?

    இருக்காளே.

    கொஞ்சம் கூப்பிடுங்க அத்தே.

    என்ன ஹரீஷ்... அத்தைகிட்டே இரண்டு நிமிஷம் பேசக் கூடாதா?

    சாவகாசமா வீட்டுக்கு வந்து பேசறேன். இப்போ மீராவைக் கூப்பிடறீங்களா?

    இதோ... அவளே வந்துட்டா.

    அடுத்த சில வினாடிகளில் மீராவின் குரல் கேட்டது.

    ஹலோ ஹரீஷ்... வீணைத் தந்திகளின் மேல் தவறிப் போய் கைவிரல்கள் பட்டுவிட்ட மாதிரியான ஒரு சிலிர்ப்பு மீராவின் குரலில் பரவியிருந்தது.

    மீரா...!

    ம்...

    "அர்ஜெண்டா ஒரு முத்தம் கொடு.

    எதுக்கு?

    சொல்றேன், கொடு.

    அம்மா சோபாவில் உட்கார்ந்துட்டு என்னயே பார்த்துட்டு இருக்கா

    திரும்பி நின்னுக்கிட்டு கொடு.

    சரி, இந்தாங்க, இச்...

    என்ன...? பிச்சைக்காரனுக்கு செல்லாத அஞ்சு பைசாவைப் போடற மாதிரி இப்படி அலட்சியமா முத்தம் தர்றே? நான் சொல்லப் போற விஷயத்தைக் கேட்டியானா, என்னை முத்த மழையில் நனைச்சுடுவே.

    மொதல்ல விஷயத்தைச் சொல்லுங்க!

    எனக்கு வேலை கிடைச்சாச்சு.

    ஹை...

    ஆமதாபாத்தில் இருக்கிற சிஸ்டம்ஸ் அண்ட்கன்ட ரோல்ஸ் கம்பெனியில் வேலை.

    ஹை...

    சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒரு டஜன் ஆயிரம்.

    ஹை...! ஹரீஷ், நான் உடனே உங்களைப் பார்க்கணும்.

    முத்த மழையில் நனைய நான் தயார்.

    வீட்டுக்கு இப்ப வர்றேன்.

    வா, என் தேவதையே! வா! ஹரீஷ் ரிஸீவரை வைத்துவிட்டுத் திரும்பி பூத்தின் கண்ணாடிக் கதவைத் திறக்க முயன்ற வினாடி -

    தலைக்குள் அந்த மாற்றம் நிகழ்ந்தது.

    ரத்தம்

    Enjoying the preview?
    Page 1 of 1