Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உடைந்த நிலா
உடைந்த நிலா
உடைந்த நிலா
Ebook96 pages30 minutes

உடைந்த நிலா

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 11, 2024
உடைந்த நிலா

Read more from ராஜேஷ்குமார் Rajeshkumar

Related to உடைந்த நிலா

Related ebooks

Related categories

Reviews for உடைந்த நிலா

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உடைந்த நிலா - ராஜேஷ்குமார் Rajeshkumar

    1

    மியூசிக் அகாடமி ஹால்.

    ஜனத்திரள் நிரம்பி வழிய - மேடையில் மைக்கின் முன்னால் நின்றிருந்த மந்திரி தோளில் போட்டிருந்த துண்டை சரிப்படுத்தியபடி பேசிக் கொண்டிருந்தார்.

    உண்மையிலேயே நான் மனம் திறந்து பாராட்டுகிறேன். அரசு நிர்வாகத்தில் ஒரு அமைச்சராக இருக்கிற எனக்கு எவ்வளவோ பிரச்சனைகள். அந்த பிரச்சனைகளையெல்லாம் ஒரு இரண்டு மணி நேரத்திற்கு என்னால் மறக்க முடிந்ததென்றால் அதற்கு காரணம் திருமதி கலா பாஸ்கரன் அவர்களின் அற்புதமான நாட்டியம்தான். அவர் மேடையிலே ஆடும் போது எனக்கு அவர் ஒரு பெண்ணாக தோன்றவில்லை. ஒரு மின்னல் கீற்று மாதிரி தோற்றம் காட்டினார். அவருடைய கால்களும் கைகளும் பரத மொழியை தப்பில்லாமல் பேசின. தமிழ்நாட்டுக்கு இப்படிப்பட்ட ஒரு அரிய பொக்கிஷம் கிடைத்ததற்காக - கலைத்துறையில் இருக்கிற எல்லோருமே பெருமை பட்டுக் கொள்ளலாம். பரதக்கலைக்கு திருமதி கலா பாஸ்கரன் அவர்கள் செய்த சேவையை பாராட்டி மியூஸிக் அகாடமியின் சார்பாக அவர்க்கு ‘கலைநிறைச் செல்வி’ என்ற பட்டத்தை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

    அகாடமி ஹால் கைத்தட்டலால் நிரம்பி - ஓய - ஒரு நிமிடம் பிடித்தது. மந்திரி தொடர்ந்தார்.

    திருமதி கலா பாஸ்கரன் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். அவர் இன்னமும் ஒரு நாட்டியப்பள்ளி தொடங்கவில்லை என்று கேள்விப்பட்டேன். அப்படி தொடங்காதது வருத்தத்துக்குரிய விஷயமாகும். அவர் உடனடியாய் ஒரு நாட்டிய பள்ளியை தொடங்கி - பரதநாட்டியக் கலையில் சிறந்து விளங்கும் பெண்களை உருவாக்க வேண்டும். பள்ளி தொடங்குவதற்கு இடம் தேவைப்பட்டால் இந்த அரசு உதவ காத்திருக்கிறது...

    மறுபடியும் கைத்தட்டல்.

    கலைநிறைச் செல்வி பட்டத்தைப் பெற்றுக்கொள்ள திருமதி கலா பாஸ்கரன் அவர்களை மேடைக்கு வரும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்...

    கலா பாஸ்கரன் பரதநாட்டிய உடையோடு - மேடையின் வலது பக்க மூலையிலிருந்து வெளிப்பட்டாள். கத்திரிப்பூ நிற சேலைக்கட்டு அவளுடைய பொன்னிறத்தை எடுப்பாக்கி காட்டியது. முறையான நாட்டியப் பயிற்சியின் காரணமாக உடம்பு ஒரு பெண்ணுக்கு வேண்டிய சாமுத்திரிகா லட்சணங்களோடு இருந்தது. வைரமூக்குத்தி மேடை விளக்கு வெளிச்சத்தில் ஸ்பெஷலாய் மின்னிக் காட்டியது.

    கலா பாஸ்கரன் சபையைப் பார்த்து வணக்கம் சொல்ல ஆரவாரம் கிளம்பியது.

    மந்திரி பொன்னாடையை போர்த்தி - கேடயத்தை வழங்கிவிட்டு - மைக்கை அவளுக்கு பக்கமாய் நகர்த்தி வைத்து விட்டு - உட்கார்ந்தார். கைத்தட்டல் மறுபடியும் கிளம்பி ஓய்ந்ததும் – கலா பாஸ்கரன் தொண்டையை மெலிதாய் செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

    மேடையில் ஆடித்தான் எனக்கு பழக்கமே தவிர பேசி பழக்கம் கிடையாது. இந்த பரதக்கலைக்கு நான் எதையும் பெரிதாக செய்து விடவில்லை. அப்படி ஏதாவது நான் செய்ததாய் நீங்கள் நினைத்தால் அந்த முழு பெருமைக்கும் காரணமானவர் என் கணவர்தான். என்னை பெண் பார்க்க வந்தவர்கள் எல்லாம் கல்யாணமான பிறகு ஆடுவதை நிறுத்திவிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தபோது - இவர் மட்டும் கல்யாணத்துக்கு பிறகும் நீ ஆடுவதாக இருந்தால்தான் உன் கழுத்தில் தாலி கட்டுவேன் என்று சொன்னார்.

    சபையில் சந்தோஷ ஆரவாரம்.

    இப்போது எனக்குக் கிடைத்திருக்கிற இந்த பாராட்டும் விருதும் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கிற என் கணவர்க்கு போய் சேர வேண்டியவை. நான் நாட்டியப்பள்ளி ஒன்றை தொடங்க வேண்டும் என்று அமைச்சர் சொன்னார். எனக்கும் என் கணவர்க்கும் அந்த எண்ணம் இருக்கிறது. விரைவில் அந்த எண்ணத்தைச் செயல்படுத்துவோம்...

    கலா பாஸ்கரன் பேச்சை முடித்துக்கொண்டு - மேடையின் பின் பக்கத்தை நோக்கிப் போனாள்.

    கைத்தட்டல் எழுந்து அடங்கியது.

    மேடையில் நன்றியுரை நிகழ்ந்து கொண்டிருக்க - முன் வரிசையில் உட்கார்ந்திருந்த பாஸ்கரன் எழுந்து - மேடையின் பின்பக்கம் போனான். கலா காமிரா ப்ளாஷ்களுக்கு மத்தியில் சிரித்துக் கொண்டிருந்தாள். கணவனைப் பார்த்ததும் கையில் இருந்த பொன்னாடையைப் போர்த்தி - கேடயத்தை திணித்தாள்.

    என்ன... கலா... இதெல்லாம்...?

    இதெல்லாம் உங்களுக்கு சேர வேண்டியது...

    ஆடினது... நீ...

    ஆட வெச்சது நீங்கதானே...?

    சபா செக்ரட்ரி வேகவேகமாய் பக்கத்தில் வந்தார்.

    விழா முடியப் போகுது... விழா முடிஞ்சுட்டா கும்பல் உங்களை பார்க்க வந்துடும். ஆட்டோகிராப் போட்டோகிராபின்னு உயிரை வாங்கிடும். கட்டிடத்துக்குப் பின்னாடி கார் தயாராயிருக்கு. இப்பவே புறப்பட்டீங்கன்னா... நிம்மதியா வீடு போய் சேர்ந்துடலாம். எப்படி வசதி...?

    கலாவும் பாஸ்கரனும் காமிரா ப்ளாஷ்களுக்கு மத்தியில்

    Enjoying the preview?
    Page 1 of 1