Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பன்னீர் பூ பந்தல்
பன்னீர் பூ பந்தல்
பன்னீர் பூ பந்தல்
Ebook97 pages32 minutes

பன்னீர் பூ பந்தல்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"எ... எ... என்ன... சொன்னே...?" - சபேசன் விநாடி நேரத்தில் நாக்கு உலர்ந்து போய் - பேச பேச நடுங்கினார்.
 அந்தப் பெண் குரலை உயர்த்தினாள். "பைலட் வருணோட முதல் பெண்டாட்டி... நான்'னு சொன்னேன். கேக்கலையா ஸார்...?"
 "எ... எ... எங்கிருந்து பேசறே...?"
 "இப்போ... உங்க பொண்ணோட ரிசப்ஷன் நடந்துட்டிருக்கிற கல்யாண மண்டபத்திலிருந்து இரு நூறு மீட்டர் தூரத்தில் இருக்கிற - தெருமுனை டெலிபோன் பூத்திலிருந்து பேசிட்டிருக்கேன். ரிஸீவரை வெச்சுட்டு நடக்க ஆரம்பிச்சா... அஞ்சு நிமிஷத்துல என்னால மண்டபத்துக்கு வர முடியும். ஒரு புயலையும் என்னால எழுப்ப முடியும்...! வரட்டுமா ஸார்...?"
 "வராதே...!"
 "அப்படீன்னா நீங்க இங்கே வர்றீங்களா?"
 "நா... நான் எதுக்காக வரணும்...?"
 "எ... என்ன ஸார் இது... பச்ச அநியாயமா இருக்கு... என்னோட சம்மதம் இல்லாமே... உங்க பொண்ணை... என்னோட கணவர்க்கு ரெண்டாவது சம்சாரமா கட்டி வெச்சிருக்கீங்க... உங்ககிட்டே நான் நியாயம் கேக்காமே... வேற யார்கிட்டே நியாயம் கேக்க முடியும்...? வருண்கிட்டே தான் கேக்கணும்ன்னு நீங்க சொன்னா நான் இப்பவே கல்யாண மண்டபத்துக்கு புறப்பட்டு வந்து அத்தனை ஜனத்துக்கு முன்னாடியும் கேட்கட்டுமா?"
 "நீ... நீ... சொல்றதெல்லாம் நிஜமா...?"
 "அத்தனையும் அப்படியே 'அக்'மார்க் நிஜம்."
 "இந்த உண்மையை முன்னாடியே நீ ஏன் எனக்கு சொல்லலை...?

அரை மணி நேரத்துக்கு முந்திதானே... இந்த சங்கதியே எனக்குத் தெரியும். விஷயம் தெரிஞ்சதுமே மண்டபத்துக்கு ஓடி வந்தேன். அங்கே இருக்கிற பெரிய பெரிய மனுஷங்களையும் - சந்தோஷமான ஆரவாரத்தையும் பார்த்துட்டு - கலாட்டா பண்ணி உங்க மானத்தை வாங்க நான் தயாராயில்லை... அதான் உங்களுக்கு போன் பண்ணி நியாயம் கேட்கிறேன். நீங்க இங்கே வர்றிங்களா? நான் அங்கே வரட்டுமா?"
 "உ... உம்... பேரென்ன...?"
 "தாரா..."
 "உனக்கு வீடு எங்கே...?"
 "எல்லாத்தையும் டெலிபோனிலேயே பேசணுமா ஸார்...?"
 "சரி... நீ டெலிபோன் பூத்துக்கு பக்கத்திலேயே நில்லு... நான் பத்து நிமிஷத்துல வந்துடறேன்..."
 "சரியா பத்து நிமிஷத்துக்குள்ளே வந்துடுவீங்களா?"
 "வந்துடறேன்..."
 "வரலைன்னா... பதினோறாவது நிமிஷம்... நான் இங்கிருந்து புறப்பட்டுடுவேன்."
 சபேசன் பதறினார்.
 "நீ வந்துடாதே..."
 "அப்படீன்னா... பத்து நிமிஷத்துக்குள்ளே வாங்க..."
 சபேசன் ரிஸீவரை வைத்துவிட்டு - சொதசொதவென்று வியர்த்துப் போயிருந்த முகத்தை பட்டு அங்க வஸ்திரத்தால் ஒற்றிக் கொண்டார். அறையின் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து - மண்டபத்துக்குள் சிதறியிருந்த ஜனங்களின் நடுவே பார்வையைத் துரத்தி - குளிர்பானங்களை விநியோகித்துக் கொண்டிருந்த - ஒரு ஆளை கையசைத்துக் கூப்பிட்டார்.
 "மாதவா..."
 அவன் ஓடி வந்தான்

"அய்யா...!"
 "கார் டிரைவர் எங்கே...?"
 "உள்ளே இருக்காருங்க...! கூப்பிடவா?"
 "வேண்டாம்...! நான் கேட்டேன்னு கார் சாவியை மட்டும் வாங்கிட்டு வா போதும்..."
 "சரிங்கய்யா..."
 அவன் உள்ளே ஓடி ஒரு நிமிடம் கழித்து - சாவியோடு திரும்பி வந்தான். சாவியை வாங்கிக் கொண்ட சபேசன் - மெல்லிய குரலில் மாதவனிடம் சொன்னார். "யாராவது என்னைக் கேட்டா... பங்களா வரைக்கும் போயிருக்கிறதா சொல்லு."
 "ஆகட்டுங்கய்யா."
 சபேசன் வியர்த்த முகத்தோடு மண்டபத்துக்கு வெளியே ரோட்டோரமாய் நிறுத்தியிருந்த கார் பார்க்கிற்கு வந்து - தன்னுடைய காரை நெருங்கி - கதவின் லாக்கரை விடுவித்து உள்ளே போனார். கதவை அறைந்து சாத்திக் கொண்டு - இக்னீஷியனை உறுமவிட்டு - காரை நகர்த்தி ஆத்திரமாய் புறப்பட்டார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 18, 2023
ISBN9798223035176
பன்னீர் பூ பந்தல்

Read more from Rajeshkumar

Related to பன்னீர் பூ பந்தல்

Related ebooks

Related categories

Reviews for பன்னீர் பூ பந்தல்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பன்னீர் பூ பந்தல் - Rajeshkumar

    1

    "மீனம்மா... மீனம்மா... கண்கள் மீனம்மா..." - கல்யாண மண்டப மேடையில் சகலவிதமான வாத்திய முஸ்தீபுகளோடு - ‘எலைட்ஸ் ஆர்க் கெஸ்ட்ரா’ இளையராஜா மியூஸிக்கை ‘ஜெராக்ஸ்’ எடுத்த மாதிரி இசைத்துக் கொண்டிருக்க ரோஜா மாலைகளில் சிக்கி களைத்து போயிருந்தார்கள் வந்தனாவும், வருணும். மண்டபம் முழுக்க ஜனக் கும்பல். காற்று உஷ்ணமாகியிருந்தது.

    ‘வந்தனா – வருண்’ இருவரையும் இரண்டே வார்த்தைகளில் வர்ணித்து விடலாம்.

    ‘அழகான ஜோடி!’ - (ஒரு பாராவை வீணாக்காமல் கதைக்குப் போய்விடலாம்) கழுத்து ரோஜா மாலையை சரி செய்கிற மாதிரி - தலையை கீழே தாழ்த்தி - மெல்லிய குரலில் - எட்டுமணி நேரத்திற்கு முன்னால் - தனக்கு ‘மனைவி’ ஸ்தானத்தை கொடுத்த வருணைக் கூப்பிட்டாள்.

    எ... என்னங்க...? குரலில் வெல்வெட் மென்மை.

    ம்...

    எனக்கு இடுப்பே போச்சு... உதடு அழகாய் சிணுங்கியது.

    ஏன்...?

    நிமிஷத்துக்கொருவாட்டி யாராவது ஒருத்தர் வர்றாங்க...! எந்திரிச்சு நின்னு வணக்கம் சொல்லிச் சொல்லி - வாழ்க்கையே வெறுத்துப் போச்சு... பேசாமே எந்திரிச்சே நின்னுக்கலாம்...

    வருண் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

    என்ன சிரிக்கறீங்க?

    இடுப்பு ரொம்ப வலிக்குதா...?

    பின்னே...?

    இன்னிக்கு ராத்திரி அந்த ‘இடுப்புவலி’ காணாமே போயிடும். அதுக்கு நான் கியாரண்டி...

    ச்சீய்ய்...!

    நீ ‘ச்சீய்ய்’ன்னு சொல்ற சமாச்சாரத்துக்காகத்தான் உங்கப்பா ‘ஒரு லட்சம்’ செலவு பண்ணி இந்த கல்யாணத்தை நடத்திட்டிருக்கார்.

    அசிங்கமா பேசாதீங்க...

    சரி. கந்தர் சஷ்டி கவசம் சொல்லட்டுமா...? காக்க... காக்க கனகவேல் காக்க... நோக்க... நோக்க...

    போதும்... போதும்... எங்க சங்கு மாமா வர்றார்... எந்திரிச்சு நில்லுங்க...

    யாரு? பாதி உடம்பை தொப்பையாலே வளர்த்து - கையில ஒரு சின்ன கிப்ட் பாக்ஸோட ‘யானை நடை’ நடந்து வர்றாரே... அவரா...?

    வந்தனா முறைத்தாள்.

    ஸாரி... வந்தனா...

    சங்கு மாமா ‘உசிலை மணி சைஸ்’ உடம்பை சிரமமாய் நகர்த்திக் கொண்டு வந்து - மணமக்களுக்குப் பக்கத்தில் வந்தார். தாம்பூலம் தரித்த வாயில் காற்றில் சிவப்பு புள்ளிகள் பறக்க பேசினார்.

    என்னம்மா... வந்து...? உனக்கே உடம்பு எலுமிச்சம் பழ நிறம்... மாப்பிள்ளைக்குப் பக்கத்துல நீ நிக்கும் போது - உன்னோட நிறம் டல்லடிக்குதே...?

    வந்தனா சிரித்தாள். கணவனிடம் திரும்பி சொன்னாள். என்னங்க இவர்தான் சங்கு மாமா... அப்பாவுக்கு ரொம்ப சிநேகிதம். பம்பாய்ல பெரிய பிசினஸ்...

    சங்குமாமா வருணின் கையைப் பற்றிக் கொண்டார். மாப்ளே! சிங்கப்பூரிலிருந்து இன்னிக்கு காலையில்தான் வந்தேன். வந்து பார்த்தா என்னோட மேஜைமேலே... வந்துவோட கல்யாண இன்விடேஷன். எனக்கு ஆனந்த ஷாக்...

    ஸாரி... ஸார்! இது திடீர்னு முடிவான கல்யாணம்... வந்தனாவோட ஃபாதர் உங்களுக்கு எல்லாத்தையும் சொல்லியிருப்பாரே...?

    அவனை இன்னும் பார்க்கவேயில்லையே...?

    அதோ... அப்பா...! உங்களைப் பார்த்துட்டு வேகவேகமா வர்றார் மாமா...

    சங்கு மாமா பிரயாசைப்பட்டு உடலைத் திருப்பப்பட்டு வேஷ்டியிலும், பட்டு சட்டையிலும், தோளில் அங்க வஸ்திரம் புரள - சபேசன் வந்து கொண்டிருந்தார்.

    வாடா சங்கு! மத்தியானமே உன்னை எதிர்பார்த்தேன்.

    என்னடா... இது... திடீர் இட்லி, திடீர் வடை மாதிரி திடீர் கல்யாணம். போன மாசம் இங்கே வந்து உன்கூட பேசிட்டிருந்தப்பக் கூட... நீ வந்தனாவோட கல்யாணத்தைப் பத்தி மூச்சுக் காட்டலையே...

    சபேசன் சிரித்தார்.

    வந்தனாவுக்கு பிரஸண்ட் பண்ணிட்டியா?

    இன்னும் இல்ல...

    பண்ணிட்டு வா... டிபன் சாப்பிட்டுகிட்டே எல்லாத்தையும் விபரமா சொல்றேன்...

    சங்கு மாமா கையிலிருந்த சின்ன கிப்ட் பாக்கெட்டைப் பிரித்தார். உள்ளே சதுரமாய் ஒரு வெல்வெட் பெட்டி. பெட்டியையும் திறந்தார்.

    இரண்டு மோதிரங்கள் டாலடித்தது. ஒரே மாதிரியான டிசைன்.

    வந்தனா! நீ ஒரு மோதிரத்தை எடுத்து மாப்பிள்ளை விரல்ல போடு. அதே மாதிரி மாப்பிள்ளையும் ஒரு மோதிரத்தை எடுத்து - உன் விரல்ல போடட்டும்...

    போட்டுக் கொண்டார்கள்.

    சங்கு மாமா சிரித்தார். மாப்ளே! குட்! எங்க பொண்ணோட அழகுக்கு ஏற்ற மாதிரியே - அந்தக் கால ஜெமினி கணேசன் மாதிரி நீங்களும் அழகாகவே இருக்கீங்க...

    தாங்க்ஸ்...

    ஹனி மூனுக்கு பம்பாய் பக்கம் வந்துடுங்களேன்... மலபார் ஹில்ஸ்ல அம்சமா ஒரு பங்களா கட்டியிருக்கேன். ஒரு பக்கத்துல கமலா நேரு பார்க் கார்டன். இன்னொரு பக்கம் சமுத்திரக்கரை. அமர்க்களமா இருக்கும்.

    ஸாரி... ஸார்... நாங்க சிம்லா போறோம்...

    சிம்லா போய்ட்டு ரிடர்ன் ஆகும்போது பாம்பே வாங்களேன் சங்கு மாமா சொல்லிக் கொண்டே சபேசனோடு நடந்தார்.

    ‘உன்ன நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன்... தங்கமே... ஞானத் தங்கமே...’ - ஆர்க்கெஸ்ட்ரா பீறிக் கொண்டிருக்க இருவரும் மண்டபத்தின் முதல் மாடியிலிருந்த டிபன் செக்சனை நோக்கிப் போனார்கள்.

    சபேசா...

    ம்...

    "வந்தனா

    Enjoying the preview?
    Page 1 of 1