Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஷீலா சிம்லா சிறிது ரத்தம்
ஷீலா சிம்லா சிறிது ரத்தம்
ஷீலா சிம்லா சிறிது ரத்தம்
Ebook161 pages38 minutes

ஷீலா சிம்லா சிறிது ரத்தம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டெல்லி ரயில்வே ஸ்டேஷன். பதினோராவது பிளாட்பாரத்தில் 'கால்கா மெயில்' நின்று கொண்டிருக்க - அதன் ஏ.ஸி. கம்பார்ட்மெண்ட்டுக்கு வெளியே ஷீலாவும், அவளுடைய கணவன் பாலச்சந்திரனும் குளிர்பான பாட்டில்களோடு தெரிந்தார்கள். நேரம் இரவு 10.05.
 பாலச்சந்திரன் சொன்னான். "எனக்கு நினைக்க நினைக்க ஆச்சர்யமாக இருக்கு ஷீலு..."
 எது...?"
 "உன்னோட ஹார்ட் ஆபரேஷன்தான்..."
 "உண்மையிலேயே அது ஒரு அற்புதம்... டாக்டர் பாப்ஹோனை ஒரு கடவுள்ன்னே சொல்லலாம். சிம்லாவில மூணுமாசம் நான் இருந்துட்டு வந்த பின்னாடி... டென்னீஸ் கூட விளையாடலாமாம். எங்கப்பாவுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா...?"
 "அவரையும் சிம்லாவுக்கு கூப்பிட்டிருக்கலாம்..."
 "நான் கூப்பிட்டேன்... பத்து நாள் கழிச்சு வர்றாராம்..."
 "இங்கிதம் தெரிஞ்ச மாமனார்..."
 "ஏய்..." கணவனின் விலாவில் தன் இடது கை ஆட்காட்டி விரலால் மெல்லக்குத்தினாள் ஷீலா. பிறகு கேட்டாள்.
 "சிம்லா ரொம்பவும் குளிருமா...?"
 "எக்கச்சக்கமா குளிரும். ஆமா! நீ நிஜமாகவே சிம்லாவுக்கு போனதில்லையா... ஷீலு..."ஊ... ஹூ...ம்..."
 "ஒரு மில்லேனியரோட டாட்டர்... எப்படி போகாமே இருந்தே...?"
 "போகணும்ன்னு தோணலை. ஊட்டி கொடைக்கானல் போய் தங்கறதோடு சரி...'
 "சிம்லா... அழகான இடம்..."
 "ட்ரெயின் எத்தனை மணிக்கு சிம்லா போய்ச் சேரும்...?"
 "இந்த கால்கா மெயில் நாளைக்கு காலையில் ஆறேகால் மணிக்கெல்லாம் கால்கா போய் சேர்ந்துடும்."
 "கால்காங்கிறது ஒரு ஊரா...?"
 "ஹிமாசலப்பிரதேசத்தோட நுழைவு வாயிலே அதுதான்... கால்காவிலிருந்து சிம்லா நூறு கிலோ மீட்டர் தூரம். மினி ரயில்ஸ் நிறைய இருக்கு. அதுல ஒண்ணை பிடிச்சுக் கிளம்பினா மத்தியானமெல்லாம் சிம்லா போய் சேர்ந்துடலாம்..."
 "கால்காவிலிருந்து சிம்லாவுக்கு கார்ல போக முடியாதா?"
 "போலாம். ஆனா ட்ரெய்ன்ல போகிற த்ரில்லிங் அதுல கிடைக்காது. மினி ரயில் நெளிந்து நெளிந்து இருபது குட்டி ரயில்வே ஸ்டேஷன்களையும் நூத்தி நாலு குகைகளையும் - கடந்து போகிற பயணம் அற்புதமாக இருக்கும்... வழி பூராவும் ஆப்பிள், ஆப்ரிகாட் பழங்கள் கொத்து கொத்தா காய்ச்சி தொங்கறது கண்கொள்ளாக் காட்சி... 'ப்ரோக் டன்னல்'ங்கிற மலைக்குகைக்குள்ளே மினி ரயில் அஞ்சு நிமிஷம் ஓடறப்போ ஏற்படுகிற சந்தோஷம் இருக்கே... அதுக்கு இணையே கிடையாது..." பாலச்சந்திரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே - அந்த ஏ.ஸி. கம்பார்ட்மெண்டில் டி.டி.ஈ. கையில் சார்ட்டோடு அவர்களை நெருங்கினார்.
 "நீங்கள் இந்த ஏ.ஸி. கம்பார்ட்மெண்டா...?"
 "ஆமாம்..."
 "ஷோ... மீ... யுவர் டிக்கெட்ஸ்..."பாலச்சந்திரன் டிக்கெட்டுகளை எடுத்துக் காட்ட - அவர் அதை வாங்கி பார்த்தபடி - சார்ட்டை ஒப்பிட்டவாறு கேட்டார்.
 "நீங்கள்... மிஸ்டர் விவேக்... அண்ட் மிஸஸ் ரூபலா விவேக்...?"
 பாலச்சந்திரன் இல்லையென்று மறுத்து - தலையாட்ட முயன்ற விநாடி - பின்பக்கத்திலிருந்து அந்த அவசரக் குரல் கேட்டது.
 "தட் ஈஸ் அவர்ஸ்..." டி.டி.ஈ. திரும்பினார்.
 விவேக்கும் ரூபலாவும் - சூட்கேஸ்களோடு நின்றிருந்தார்கள். விவேக் தன் பாக்கெட்டில் இருந்த டிக்கெட்டுகளை எடுத்து அவரிடம் நீட்டினான். அவர் வாங்கிப் பார்த்து - சார்ட்டில் டிக் அடித்து - பெர்த் எண்களைச் சொன்னார்.
 "தாங்க்யூ..."
 இருவரும் கம்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்தார்கள். ரூபலா பெரு மூச்சுவிட்டாள். "அம்மா! எப்படியோ ட்ரெயின் புறப்படறதுக்குள்ளே வந்து சேர்ந்துட்டோம்..."
 "ட்ரெயின் நகர முழுசா இன்னும் பதினஞ்சு நிமிஷம் இருக்கு...
 அந்த நாலாவது சப்பாத்தியையும் சாப்பிட்டே வந்திருக்கலாம்."
 "புலம்பாதீங்க...'
 சீட் நெம்பர்களைப் பார்த்து உட்கார்ந்தார்கள். விவேக் கேட்டான். "ரூபலா! பிளாட்பாரத்தில் நின்னுட்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தியா?"
 "பார்த்தேன்... அவ போட்டிருந்த சூரிதார் நல்லாயிருந்தது. பஞ்சாபிகாரி போலிருக்கு..."
 "அவ பஞ்சாபிகாரியில்லை. நம்ம தமிழ் பொண்ணுதான்."
 "எப்படி சொல்றீங்க...?"
 "கால்ல மெட்டி போட்டிருக்கா..."மெட்டி போட்டிருந்தா தமிழ் பெண்ணா? இப்பெல்லாம்... மெட்டி போறது ஃபேஷன்... யார் வேணுமின்னாலும் போட்டுக்கிறாங்க... அவ பஞ்சாபிகாரிதான்."
 "சரி... அந்த பொண்ணு கிட்டேயே கேட்டு பார்த்துடுவோமா?"

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 14, 2023
ISBN9798223598633
ஷீலா சிம்லா சிறிது ரத்தம்

Read more from Rajeshkumar

Related to ஷீலா சிம்லா சிறிது ரத்தம்

Related ebooks

Related categories

Reviews for ஷீலா சிம்லா சிறிது ரத்தம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஷீலா சிம்லா சிறிது ரத்தம் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    1

    சிம்லா. இரவு பதினோரு மணி. வானத்திலிருந்து கோலப்பொடி தூவுகிற சைஸில் பனி. ஹோட்டல் 'ஓபேராய் க்ளார்க்ஸ்' காம்பௌண்ட் கேட்டுக்குள் அந்த நிஷாந்த் கார் நுழைந்து- பனியில் நனைந்து கொண்டிருந்த கார் வரிசையில் போய் நின்று - எல்லா விளக்குகளையும் அணைத்துக் கொண்டது.

    ட்ரைவிங் ஸ்தானத்திலிருந்து அவன் இறங்கினான். கனமான கம்பளியாலான ஓவர் கோட். தலையில் வெள்ளை நிற 'ஸ்பர்' தொப்பி. க்ளவுஸ் அணிந்த கைகள். வலது கை விரல்களில் - புகையும் சாக்லெட் நிற வெளிநாட்டு சிகரெட்.

    காரின் கதவை நோகாமல் சாத்திவிட்டு - பனியில் நனைந்து ஈரமாயிருந்த பேவ்மெண்டில் நடந்து - ஹோட்டலின் வரவேற்பறைக்குள் நுழைந்தான். ஜெர்கின் கோட் அணிந்து - கெளண்டர்க்குள் நின்றிருந்த இளைஞனை நெருங்கினான். எதையோ எழுதிக் கொண்டிருந்த அவன் நிமிர்ந்தான்.

    எஸ்...

    மிஸ்டர்... நம்பி... எந்த அறையில் தங்கியிருக்கிறார் என்று சொல்ல முடியுமா...?

    அவன் சார்ட்டைப் பார்த்துவிட்டுக் கேட்டான். மிஸ்டர் ஏ. நம்பி ஃப்ரம் மெட்ராஸ்...?

    "ஆமாம்.

    ஃபிப்த் ஃப்ளோர், ரூம் நெம்பர் ஃபைவ் நாட் நைன்...

    தாங்க்யூ... சொன்ன கம்பளிக்கோட்காரன் விரலிடுக்கில் புகைந்து கொண்டிருந்த - சிகரெட்டை - மேஜையின் மேலிருந்த ஆஷ்ட்ரேயில் இட்டு நசுக்கிவிட்டு லிஃப்ட்டை நோக்கி நடந்தான். விரியக் கிடந்த லிஃப்ட்டில் நுழைந்து முப்பது விநாடிகள் தனியாய் பயணித்து - ஐந்தாவது மாடியைத் தொட்டு - 509 எண்ணிட்ட அறைக்கு முன்பாய் வந்து நின்றான்.

    காலிங் பெல்லுக்கு வேலை கொடுக்க - கதவு திறந்தது.

    உள்ளே - நைட் கவுனில் நின்றிருந்த இளைஞன் சிரித்தான். வா... ஜனா... என்று சொல்லி - அவனை உள்ளே இழுத்துக் கொண்டு - கதவை மூடினான். பத்து மணிக்கே போன் பண்ணினேன். இவ்வளவு லேட்டா வர்றியே...?

    ஸாரி... நம்பி...! கோட்காரிலிருந்து ஹோட்டலுக்கு வரும் பத்து கிலோ மீட்டர் ரோட்டிலும் கடுமையான பனி. கார் பனிச்சகதியில் - சிக்கிக் கொண்டு ரெண்டு தடவை... ஏகப்பட்ட சிரமம். வேகமா வந்தா... காரோடு சேர்ந்து நானும் அதளபாதாளத்துக்கு போக வேண்டியதுதான்...

    சரி... என்ன சாப்டறே...? நம்பி பெருவிரலை காட்டி கேட்டான்.

    எதுவானாலும்...?

    விஸ்கி...?

    பேஷா... ஆனா... சோடா கலக்காமே...

    முன்னைக்கு இப்போ... உடம்பு பெருத்துட்டே...!

    எல்லாம் என் பெண்டாட்டி செத்த சந்தோஷம்தான்.

    நம்பி திடுக்கிட்டான். ஜனா! நீ என்ன சொல்றே? ராஷ்மி செத்துட்டாளா...? எப்போ...?

    ஆறுமாசமாச்சு...

    பின்னே எனக்கு நீ தகவலே சொல்லலை...?

    நான் யார்க்குமே சொல்லலை...

    ஏன்...?

    அவளோட மரணம் அப்படி...

    எனக்குப் புரியலை...

    தற்கொலை பண்ணிக்கிட்டா...

    தற்கொலையா... ஏ... ஏன்...?

    நான் கண்டிச்சேன்...

    எதுக்காக கண்டிச்சே...?

    விஸ்கி... ப்ளீஸ்...

    நம்பி கண்ணாடி டம்ளரில் - ஒரு 'லார்ஜ்' ஊற்றி நீட்டினான். அவன் அதை வாங்கி விழுங்கிவிட்டு ஒன் மோர் என்றான்.

    ராஷ்மியை எதுக்காக கண்டிச்சேன்னு சொல்லு...

    சொன்னா நீ ஆச்சர்யப்படுவே...

    சொல்லு...

    என்னோட ஆப்ரிகாட் தோட்டத்தில் சூபர்வைஸரா வேலை பார்த்த ஒருத்தனுக்கும் ராஷ்மிக்கும் தொடர்பு இருந்தது.

    அடப்பாவமே!

    ரெண்டு பேரையும் ஒரே கம்பளிப் போர்வைக்குள்ளே கையும் களவுமா பிடிச்சேன். அவன் தப்பிச்சு ஓடிட்டான். நான் ராஷ்மியை கண்டிச்சேன். மறுநாள் காலையில் அவ வெண்டிலேட்டர் கம்பியில் தூக்கு போட்டுகிட்டா...

    ராஷ்மி அப்படிப்பட்டவளா...? என்னால் நம்ப முடியலை...

    அந்த விபச்சாரி செத்துப்போனதுக்காக நான் ஒரு சொட்டு கண்ணீர் கூடவிடலை...! விஸ்கி ஒன் மோர் லார்ஜ்...

    நம்பி - ஊற்றிக் கொடுத்தான். ஜனா அதையும் வாங்கி ஒரே மடக்கில் விழுங்கிவிட்டு அவனை ஏறிட்டபடி கேட்டான்.

    என்னோட கதை இருக்கட்டும். நீ இப்போ என்ன பண்றே?

    அதே கோல்ட் பிஸ்கெட் பிஸினெஸ்தான்.

    போன தடவை பார்த்தப்ப... விட்டுடப் போறதா சொன்னே...?

    விட முடியலை...! அதை விட்டுட்டா வேற தொழில் என்ன பண்றதுன்னும் தெரியலை... அதான் பிஸ்கெட் பிசினஸையே கண்டினியூ பண்ணிட்டிருக்கேன்...

    கஸ்டம்ஸ் கெடுபிடி இப்போ அதிகமாமே...?

    என்ன கெடு பிடி இருந்தாலும் என்ன...? எல்லா ஏர்ஃபோர்ட்களிலேயும்... எனக்கு விசுவாசமான ஆட்கள் இருக்காங்க...

    சரி... இனி விஷயத்துக்கு வருவோம்...! இந்த ராத்திரி வேளைல் என்னை எதுக்காக உடனே புறப்பட்டு வரச்சொன்னே...?

    காரணமில்லாமே வரச் சொல்லுவேனா...?

    என்ன சொல்லு...

    இந்த சிம்லாவில் ஒரு வாரம் தங்கி... இருபது லட்ச ரூபாயை சம்பாதிக்கிறதுக்காக வந்திருக்கேன்...

    நம்பி... நீ... என்ன சொல்றே...? இருபது லட்ச ரூபாய் சம்பாதிக்கப் போறியா...?

    ஆமா... ஆமா...! அதுக்கு நீ உதவி பண்ணினா... பணம் உனக்குப் பாதி... எனக்குப் பாதி...

    ஜனா ஆர்வமானான்.

    "உன்னோட திட்டமென்ன... சொல்லு...'

    நம்பி எழுந்துபோய் - தன் சூட்கேஸை திறந்து - ஒரு கார்டு சைஸ் போட்டோவைக் கொண்டு வந்து

    Enjoying the preview?
    Page 1 of 1