Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சிவப்பு நவம்பர்
சிவப்பு நவம்பர்
சிவப்பு நவம்பர்
Ebook159 pages39 minutes

சிவப்பு நவம்பர்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அறையின் வெளிப்பக்கம் தாழ்ப்பாளைப் போட்டுக் கொண்டு அவன் வெளியேறிப் போய்விட, அறையின் மூலையில் சுவரோரமாய் நின்றிருந்த காசிராஜன், துளசி, சிட்டிபாபு மூன்று பேரும் டீபாயின் மேல் வைக்கப்பட்டிருந்த பிஸ்டலையே பார்த்தார்கள். முகங்களில் தண்ணீர் தெளிக்கப்பட்ட தினுசில் வியர்வை முத்துக்கள்.
 காசிராஜன் மகனை ஏறிட்டார்.
 "எ... எ... என்ன பண்ணலாம் சிட்டி..?"
 "போலீஸுக்கு போன் பண்ணலாம்பா..."
 "முட்டாள்தனமா உளறாதே..! இது அவுட்டர்ல இருக்கிற பங்களா. போலீஸ் வந்து சேர்றதுக்குள்ளே அவன் கொடுத்து இருக்கிற பத்து நிமிஷ அவகாசம் முடிஞ்சுடும்."
 "அப்பா..! ஒரு விஷயத்தை நீங்க மறந்துட்டீங்க?"
 "என்ன..?"
 "அவன் பத்து நிமிஷம் கழிச்சு இந்த அறைக்குள்ளே வரமுடியாது."
 "நீ என்ன சொல்றே..?"
 "அவன் வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டுகிட்டு போயிருக்கான். நாம உட்பக்கமா தாழ்போட்டுகிட்டா அவனால எப்படி உள்ளே வர முடியும்..? அப்படியே மீறி அவன் உள்ளே வந்தாலும் பிஸ்டல் நம்ம கையில் இருக்கு..."
 காசிராஜன் மௌனமாய் இருந்தார்.
 "என்னப்பா யோசனை..?""இப்ப நீ சொன்னதெல்லாம் அவனுக்கும் தெரியாமலா இருக்கும்..? ஒருத்தன் இவ்வளவு துணிச்சலா பிஸ்டலை வெச்சுட்டு போவானா..?"
 "அப்பா..! எப்படிப்பட்ட புத்திசாலியும் திட்டம் போடும்போது ஏதாவது ஒரு பக்கம் கோட்டை விட வாய்ப்பு இருக்கு..."
 "அவனைப் பார்த்தா முட்டாள் மாதிரி எனக்குத் தெரியலை..."
 காசிராஜன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே - அவருடைய செல்போன் குரல் கொடுத்தது.
 எடுத்தார்.
 "ஹலோ..."
 மறுமுனையில் அவன் குரல்.
 "என்ன... எக்ஸ் மினிஸ்டர் ஸார்...! நான் கொடுத்த பத்து நிமிஷ அவகாசத்துல ரெண்டு நிமிஷம் காணாமே போயிடுச்சு... இன்னும் எட்டு நிமிஷம்தான் இருக்கு... இப்ப யார் கையில பிஸ்டல் இருக்கு..?"
 "யா... யா... யார் கையிலேயும் இல்லை..."
 "என்னது..! பிஸ்டலை இன்னுமா யாரும் எடுக்கலை?"
 "இதோ பார்...! எங்களுக்குள்ளேயே ஒருத்தரையொருத்தர் சுட்டுக் கொல்லக்கூடிய அளவுக்கு அரக்க குணம் கிடையாது."
 "ஓ...! உங்களுடைய உறவுகள்ன்னா அந்த உயிர்க்கு உள்ள மதிப்பு தனி போலிருக்கு..! பணம் கொடுத்தா போதும்; ஊர்ல இருக்கிற யாரை வேணும்ன்னாலும் வெட்டுவீங்க... குத்துவீங்க... இப்ப உங்க உறவுகள்ன்னு வரும்போது பிஸ்டலைத் தொடக்கூட உங்களால முடியலை... பார்த்தீங்களா? ஆனா உங்கள்ல யாராவது ஒருத்தர் கண்டிப்பா பிஸ்டலை எடுத்து அதை உபயோகம் பண்ணியேயாகணும். ஒண்ணு பிஸ்டலை எடுத்து நீங்களே உங்களை சுட்டுகிட்டு தற்கொலை பண்ணிக்கணும். இல்லேன்னா உங்க மனைவி அல்லது மகன் ரெண்டு பேர்ல யாரையாவது சுட்டுத்தள்ளணும்........."
 "என்ன பேச்சையே காணோம்?"
 "என்னால முடியாது..."
 "சரி..! செல்போனை உங்க பையன்கிட்டே கொடுங்க..."
 கொடுத்தார்.
 "என்ன சிட்டிபாபு...! உங்கப்பா பிஸ்டலை கையில் எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டார். நீயாவது எடு... பெத்தவங்க ரெண்டு பேர்ல யாரையாவது ஒருத்தரை சுட்டுத்தள்ளு. பெத்து வளர்த்து ஆளாக்கினவங்களை சுட மனசு இல்லேன்னா உன்னை நீயே சுட்டுகிட்டு உயிர்த்தியாகம் பண்ணு. இன்னும் ஏழு நிமிசம்தான் இருக்கு... பெத்தவங்க ரெண்டு பேரும் உயிரோடு இருக்கட்டும்..."
 சிட்டிபாபு இறுக்கமான முகத்தோடு மௌனமாய் இருக்க, அவன் சிரித்தான்.
 "பெற்ற பாசம் உன்னைத் தடுக்குதுன்னு நினைக்கிறேன். பட் நான் நினைச்ச காரியம் நடக்கணும். உங்க மூணு பேர்கள்ல யாராவது ஒருத்தர் பிஸ்டலை எடுத்து ஒரு தோட்டாவை உபயோகப்படுத்தியே ஆகணும். இல்லேன்னா ஏழு நிமிஷம் கழிச்சு நான் அறைக்குள்ளே வரும் போது கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். உன்னோட மனசுக்குள்ளே இப்போ ஒரு எண்ணம் இருக்கலாம். அதாவது நான் கதவைத் திறந்துகிட்டு அறைக்குள்ளே வரும் போது என்னை அதே பிஸ்டலாலே சுட்டுக் கொல்லத் திட்டம் போட்டு இருக்கலாம். அப்படியொரு திட்டம் உன் மனசுக்குள்ளே இருந்தா அந்த திட்டம் நிறைவேற வாய்ப்பு இல்லை. என்னை முட்டாளாக்க உன்னாலும் முடியாது. உன் அப்பாவினாலும் முடியாது. இன்னும் சரியா ஆறு நிமிஷம்தான் இருக்கு. அதுக்குள்ளே துப்பாக்கி வெடிக்கணும்..."
 மறுமுனையில் செல்போன் தொடர்பு அறுந்து போக, சிட்டிபாபு செல்போனை அணைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டபடி அப்பா காசிராஜனை ஏறிட்டான். 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 9, 2024
ISBN9798224710638
சிவப்பு நவம்பர்

Read more from Rajeshkumar

Related to சிவப்பு நவம்பர்

Related ebooks

Related categories

Reviews for சிவப்பு நவம்பர்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சிவப்பு நவம்பர் - Rajeshkumar

    பொருளடக்கம்

    நவம்பர் 1

    நவம்பர் 2

    நவம்பர் 3

    நவம்பர் 4

    நவம்பர் 5

    நவம்பர் 6

    நவம்பர் 7

    நவம்பர் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    ஜோதியின் டைரியிலிருந்து.

    'சூரியனைப் பார்க்க நாம் விளக்கு எடுத்துக்கொண்டு போவது இல்லை. சூரியனின் ஒளியிலேயே நாம் சூரியனைப் பார்க்கிறோம். அதே போல் கடவுளைக் காண நிமக்கு கடவுளின் அருள்தான் தேவை. பிற சாதனங்களால் நாம் கடவுளைக் காண இயலாது.' - சத்ய சாயிபாபா சொன்ன இந்த பொன் மொழியை ஒரு நூறு தடவையாவது படித்துப் பார்த்திருப்பேன். எனக்குப் புரியவில்லை. எனக்கு தோன்றிய ஒரே ஒரு எண்ணம்: ‘கடவுள் எதற்காக நம்மைப் படைக்க வேண்டும்? படைத்துவிட்டு அவரை நாம் வணங்க வேண்டும்; அவரையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் ஏன் விரும்ப வேண்டும்..? மனிதனை படைப்பானேன்..? அவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பானேன்..?’ கடவுள் என்கிற ஒரு விஷயம் என்னுடைய மனசுக்குள் ஒரு பெரிய குழப்பம்.

    நவம்பர் 1

    முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் காசிராஜனின் பங்களா.

    காலை மணி ஒன்பது.

    பூஜையறையிலிருந்து வெளிப்பட்ட காசிராஜன் தன் மனைவி துளசி நீட்டிய காப்பி டம்ளரை வாங்கிக் கொண்டே கேட்டார்.

    கட்சித் தொண்டர்கள் யாராவது வந்து இருக்காங்களா..?

    எவனும் வரலை... நீங்க பதவியில் இல்லாதபோது எந்த தொண்டன் வருவான்..?

    பத்திரிகைக்காரங்க..?

    யாரும் வரலை...

    காசிராஜன் மெல்ல நடந்து போய் சோபாவுக்கு சாய்ந்து உட்கார்ந்து ஒரு வாய்க் காப்பியை உறிஞ்சினார். அறைக்குள் நுழைந்தான் அவருடைய மகன் சிட்டிபாபு. வயது முப்பது. அப்படியே அப்பாவின் சாயல். வலது கை மணிக்கட்டில் தங்கத்தாலான ப்ரேஸ்லெட் பளபளத்தது.

    அப்பா..!

    என்ன சிட்டி..?

    நிச்சயதார்த்தம் பண்ண ஒரு பார்ட்டி வருது...

    காசிராஜன் நிமிர்ந்து உட்கார்ந்தார். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நிச்சயதார்த்தம். காப்பியை ஒரே மூச்சில் குடித்தார்.

    துளசி கேட்டாள்.

    பார்ட்டி யார்ரா..?

    துவாரகா பிரசாத்ன்னு பேர்... சேட்டு..! சௌகார் பேட்டையில் டைமண்ட் பிசினஸ்...

    பார்ட்டி எப்ப வருது..?

    பத்து நிமிஷத்துக்குள்ளே வர்றதா சொன்னார்...

    சரி... வந்தா... மாடி ரூமுக்கு கூட்டிட்டுப் போயிடு. அப்புறமா எனக்கு தகவல் கொடு...

    சிட்டிபாபு தலையை ஆட்டிவிட்டு வெளியே போனான். சரியாய் பத்து நிமிஷம் கழித்ததும் இன்டர்காம் கூப்பிட்டது. காசிராஜன் ரிஸீவரை எடுத்தார். சிட்டிபாபு பேசினான்.

    அப்பா...! பார்ட்டி வந்தாச்சு...

    கூட யாராவது வந்து இருக்காங்களா..?

    இல்லை...

    சரி... வந்துடறேன்... ரிஸீவரை வைத்த காசிராஜன் துளசி எடுத்துக் கொடுத்த ஜிப்பாவை மாட்டிக்கொண்டு மாடிப்படிகள் ஏறி அறைக்குள் நுழைந்தார்.

    டால்டாவை சாப்பிட்டு சாப்பிட்டு டால்டாவின் நிறத்திலேயே இருந்த சேட் துவாரகா பிரசாத் எழுந்து நின்று கை கூப்பினார். பெரிய தொப்பையோடு நமஸ்கார்... சொன்னார்.

    உட்கார்ங்க... சேட்...

    துவாரகா பிரசாத் உட்கார்ந்தார். எனக்கு ஒரு பிராப்ளம். அதை நீங்கதான் சுத்தம் பண்ணணும்...

    காசிநாதன் சிரித்தார். சுத்தம் பண்ணத்தானே நாங்க இருக்கோம்... என்ன பிரச்னை...! சொல்லுங்க சேட்.

    துவாரகா பிரசாத் தன் கையில் வைத்து இருந்த ஒரு இளைஞனின் போட்டோவைக் காட்டினார்.

    இவன் பேரு கலைச்செல்வன். வேலையில்லா பட்டதாரி. பொழைப்புக்கு பானி பூரி வியாபாரம் பண்றான். நம்ம பங்களா இருக்கிற தெருமுனையில்தான் வியாபாரம். எப்படியோ என்னோட பொண்ணு சந்தியாவை மடக்கிட்டான். ரெண்டு பேரும் லவ் பண்றாங்க... என் பொண்ணுக்காக அமெரிக்க மாப்பிள்ளையை பார்த்து வெச்சிருக்கிற இந்த நேரத்துல இப்படியொரு இடி என் தலைமேல் இறங்கியிருக்கு... முளை விட்டிருக்கிற இந்த காதலை உடனடியா சுத்தம் பண்ணணும்... நம்ம தொகுதி எம்.எல்.ஏ.கிட்டே போய் விஷயத்தை சொன்னேன். அவர்தான் உங்களைப் பார்க்கச் சொன்னார்...

    காசிநாதன் அந்த போட்டோவை வாங்கிப் பார்த்தார். கலைச்செல்வன் என்கிற அந்த இளைஞன் ஒரு ஹீரோவின் கெட்டப்பில் இருந்தான். பெண் காதலித்ததில் தப்பில்லை.

    சேட்...! இந்த காதல் விவகாரம் சம்பந்தமாய் உங்க பெண்ணை கண்டிச்சீங்களா..?

    இல்லை... எனக்கு இந்த விஷயமே தெரியாதது போல்தான் காட்டிக்கொண்டு இருக்கிறேன்... என்னுடைய மனைவிக்கும் கூட தெரியாது...

    நல்ல வேலை பண்ணியிருக்கீங்க... காதும் காதும் வெச்ச மாதிரி பிராப்ளத்தை சுத்தம் பண்ணிடலாம்... கலைச்செல்வன் அடுத்தவாரம் இந்நேரத்துக்கெல்லாம் உயிரோடு இருக்கமாட்டான். அவனோட ஃபேமிலி பேக்க்ரௌண்ட் என்னான்னு தெரியுமா?

    தெரியும்...

    சொல்லுங்க...

    பெரிய மேட்டுக் குப்பத்துல வீடு. சாராயம் குடிச்சு குடிச்சே அப்பன் செத்துப் போயிட்டான். இப்போ வீட்ல அம்மாவும் ஒரு தங்கச்சியும் மட்டும்தான். கலைச்செல்வன் எம்.ஏ. வரைக்கும் படிச்சுட்டு வேலை கிடைக்காததால பானிபூரி வண்டியைத் தள்ள ஆரம்பிச்சுட்டான்.

    நீங்க சொல்றதைப் பார்த்தா அடிச்சுப் போட்டாலும் ஏன்னு கேட்க நாதியில்லை..?

    கண்டிப்பா...

    அப்படீன்னா... முடிச்சுடுவோம்...

    என் மேல சந்தேகம் வந்துடாதே..?

    "வராது சேட்...! என்னோட ஆட்கள் பானிபூரி சாப்பிட அவனோட வண்டிகிட்டே போவாங்க... அவன் போட்டுக் கொடுத்த பேல்பூரியில் கரப்பான் பூச்சி இருந்ததாய் சொல்லி தகராறு பண்ணுவாங்க. கலைச்செல்வனை வம்புக்கு இழுப்பாங்க. அவன் ஏதாவது பேசாமே இருப்பானா? பேசுவான். அதையே காரணமா வெச்சு எங்க ஆட்கள் போட்டுத் தள்ளிட்டு போயிடுவாங்க... ஏதோ சண்டை சச்சரவால ஏற்பட்ட கொலைன்னு போலீஸ் கேஸை ஃபைல் பண்ணி ஆட்களை தேடுவாங்க... என்னோட ஆட்கள் கிடைக்க மாட்டாங்க.

    Enjoying the preview?
    Page 1 of 1