Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மண்டே மர்டர் டே!
மண்டே மர்டர் டே!
மண்டே மர்டர் டே!
Ebook157 pages36 minutes

மண்டே மர்டர் டே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்த அதிகாலை வேளையில் பூக்கடைக்கு முன்பாய் வந்து நின்ற காரினின்றும் ட்ரைவிங் சீட்டில் உட்கார்ந்திருந்த பிரகவ்யா எட்டிப் பார்த்து பூக்கடையில் உட்கார்ந்திருந்த அந்த நபரிடம் கேட்டாள்.
 "அந்தப் பெரிய ரோஜாப்பூ மாலை என்ன விலை...?"
 "நூறு ரூபாய் ஆகும்மா..."
 "ஒரு வாழையிலையில் கட்டி காரோட பின் சீட்ல கொண்டு வந்து வைய்யி..."
 ரோஜா மாலை மணக்க மணக்க ஒரு வாழையிலையால் கட்டப்பட்டு பின் சீட்டுக்கு வந்தது. நூறு ரூபாய் நோட்டு கைமாறியதும் காரை நகர்த்தினாள்.
 கிண்டிப்பாலம் வரைக்கும் காரை எண்பதில் விரட்டிய பிரகவ்யா அதற்குப் பின் காரின் வேகத்தைக் குறைத்துக் கொண்டு டாஷ் போர்டைத் திறந்து செல்போனை எடுத்து இடது கை ஆட்காட்டி விரலால் சில எண்களைத் தட்டிவிட்டு பேச ஆரம்பித்தாள்.
 "மீனம்பாக்கம் ஏர்போர்ட்... என் கொய்ரி?"
 "எஸ்..."
 "சிங்கப்பூர் ஃப்ளைட் வந்தாயிற்றா?"
 "இன்னும் இல்லை..."லேட்டா...?"
 "ஆமாம். அதனோட கரெக்ட் ஷெட்யூல் டைம் 5.45. பட் இன்னிக்கு அரைமணி நேரம் லேட்..."
 "அப்படீன்னா ஃப்ளைட் ஆறேகால் மணிக்குத்தான் வரும்...?"
 "எஸ்..."
 "தேங்க்யூ..." பிரகவ்யா தன் மணிக்கட்டில் இருந்த வாட்ச்சைப் பார்த்தாள். நேரம் 5.35.
 காரின் வேகத்தை அதிகரித்தாள்.
 காற்று காருக்குள் நுழைந்து ரோஜா மாலையை அலம்பியதில் பின் சீட்டில் இருந்த ரோஜா மாலை மூச்சையடைக்கிற மாதிரி மணத்தது.
 பிரகவ்யா அந்த அதிகாலை வேளையில் 
 வெறிச்சோடிப் போயிருந்த சாலைகளில் காரை ஒரு ஏவுகணை மாதிரி செலுத்திக் கொண்டு ஏர்போர்ட் வந்து சேர்ந்த போது - 
 நேரம் சரியாய் ஆறு மணி.
 காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு பின்சீட்டில் இருந்த ரோஜா மாலையை வாரி எடுத்துக் கொண்டு விமான நிலைய வளாகத்துக்குள் நுழைந்தான். முன்புறத்தில் இருந்த விசாரனை கௌண்டரில் விசாரித்தான்.
 "சிங்கப்பூர் ஃப்ளைட் எப்போது வரும்...?"
 "சரியாய் ஆறேகால் மணிக்கு."
 "மறுபடியும் லேட் கிடையாதே...?"
 "இல்லை..."
 பிரகவ்யா நுழைவுச்சீட்டை வாங்கிக் கொண்டு ஏர்போர்ட் லௌன்ஞ்சுக்குள் நுழைந்தாள். ரன்வேயைப் பார்த்தபடி பாலிவினைல் நாற்காலிகள் வரிசையாய் வண்ண வண்ணமாய் போட்டிருக்க, பிரகவ்யா ஒரு நாற்காலியில் போய் உட்கார்ந்தாள்ஏர்போர்ட்டில் கூட்டம் அவ்வளவாக இல்லை. பயணிகளை வரவேற்க வந்தவர்களும், பறக்க காத்திருந்த பயணிகளும் ஆங்காங்கே திட்டுத்திட்டாய் தெரிந்தார்கள்.
 மணிக்கட்டில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த பிரகவ்யாவை பின்பக்கமிருந்து அந்த குரல் ஈர்த்தது.
 "ஏய்... பிரகவ்யா..."
 பிரகவ்யா திரும்பிப் பார்த்தாள்.
 அவளுடைய ஃப்ரண்ட் பூஜா மஞ்சள் சுடிதாரில் ஒரு பெரிய சூரியகாந்திப் பூவைப் போல் நின்றிருந்தாள். இடுப்பில் ஆறுமாத குழந்தை.
 "பூஜா... நீயா...?"
 அந்த பூஜா சிரித்தாள்.
 "நானே...! என்னடி ஏர்போர்ட்ல தனியா வந்து உட்கார்ந்துட்டிருக்கே...? ஏதோ அரசியல் தலைவர்க்கு போடப் போகிற மாதிரி பக்கத்துல ஒரு பெரிய மாலை வேற..."
 பிரகவ்யா புன்னகைத்தாள்.
 "ஹரிஷங்கர் ஸ்டேட்ஸிலிருந்து வர்றார்."
 "ஹரிஷங்கரா...?" கேட்டுவிட்டு ஒரு விநாடி திகைத்த பூஜா "ஓ...! உன்னோட அத்தை மகனா...? அவர் இன்னமுமா ஸ்டேட்ஸ்ல படிச்சிட்டிருக்கார்...?" என்று வியந்தாள்.
 "படிப்பை போன வருஷமே முடிச்சிட்டார். படிச்ச உடனேயே வேலை கிடைச்சதால அங்கேயே ஒரு வருஷம் தங்கிட்டார்."
 "இப்ப லீவ்ல வர்றாரா...?"
 "ஆமா..."
 "என்ன... வந்ததுமே கல்யாணமா...?"ஆமா... கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு நானும் அவரோடவே ஸ்டேட்ஸ் போயிடப் போறேன்..." என்று சொல்லி வெட்கத்தோடு சிரித்த பிரகவ்யா பூஜாவைப் பார்த்து தலை சாய்த்தபடி கேட்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 15, 2023
ISBN9798223652076
மண்டே மர்டர் டே!

Read more from Rajeshkumar

Related to மண்டே மர்டர் டே!

Related ebooks

Related categories

Reviews for மண்டே மர்டர் டே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மண்டே மர்டர் டே! - Rajeshkumar

    மண்டே மர்டர் டே!

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    ஆக்ஸிஜனுக்கு நம் முன்னோர்கள் சூட்டிய அழகான - பொருத்தமான பெயர் பிராணவாயு. நாம் பிராணனுடன் (அதாவது உயிரோடு) இருக்கத் தேவையான வாயு என்பதால் இந்தப் பெயர். இந்த ஆக்ஸிஜன் வாயுவைக் கண்டு பிடித்தவர் யார் தெரியுமா? இரண்டாவது அத்தியாயத்தின் பாக்ஸில் அவர் காத்துக் கொணடிருக்கிறார்.

    திருமண அழைப்பிதழ்களை கவர்க்குள் போட்டு கவரின் நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவிக் கொண்டிருந்த, அந்த அழகான திலோத்தமாவை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு திங்கட்கிழமையின் காலை நேரத்தில் இந்த நாவல் ஆரம்பமாகிறது.

    ‘யாருடைய திருமண அழைப்பிதழ்’ என்று கேட்கிறீர்களா...?

    கல்யாணம் திலோத்தமாவுக்குத்தான். இப்போது ‘மிஸ்’ ஆக இருப்பவள் பதினைந்து நாள் கழித்து நீங்கள் பார்க்கும்போது ‘மிஸஸ்’ ஆக இருப்பாள். அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிற மாறன் இப்போது அமெரிக்காவின் டெக்சாஸில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் தன் மூளையை உருக்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆறு மாதங்களுக்கு முன்பே பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட கல்யாணம் இவ்வளவு லேட்டாக கெட்டி மேளம் கொட்டப்படுவதற்குக் காரணம் மாறனுக்கு லீவு கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்தான்.

    இந்த ஆறுமாத காலத்தில் திலோத்தமாவும் மாறனும் செல்போனில் பேசிப் பேசியே பணத்தை ஆயிரக் கணக்கில் கரைத்துவிட்டார்கள். இந்த நேரம் என்று இல்லை... எப்போது வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

    பார்த்தீர்களா...? நான் இப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே திலோத்தமாவின் செல்போன் சிணுங்குகிறது. சென்னையில் இப்போது காலை நேரம் என்றால் டெக்சாஸில் இப்போது ராத்திரி நேரம். இது மாறன்தான்.

    திலோத்தமா செல்போனை எடுத்து டிஸ்ப்ளேயில் அழைப்பது யார் என்று பார்த்துவிட்டு சந்தோஷமாய் காதுக்கு ஒற்றினாள்.

    திலோ...! குட்மார்னிங்...

    நீங்க ஒண்ணும் என்கூட பேச வேண்டாம்.

    அட... ஏன்...?

    உங்க கூட நான் டூ... அதாவது காய்.

    நான் பழம்...

    நேத்திக்கு போன் பண்றதா சொல்லிட்டு ஏன் போன் பண்ணலை...?

    போலீஸ் சார்ஜெண்ட் என்னோட செல்போனை வாங்கி வெச்சுகிட்டு பனிரெண்டு மணி நேரம் கழிச்சுத்தான் கொடுத்தார்.

    ஏன்... என்னாச்சு...?

    கார்ல நூறு கிலோ மீட்டர் வேகத்துல போக வேண்டிய ரோட்ல நான் எண்பது கிலோ மீட்டர் வேகத்துல போயிட்டேனாம். போலீஸ் பேட்ரோல் வேன் பின்னாடியே வந்து மென்னியைப் பிடிச்சுட்டான்... ஸ்பாட் ஃபைன் நூறு டாலர் போட்டான். கையில பணமில்லைன்னு சொன்னேன். செல்போனை வாங்கிட்டுப் போய்ட்டான். கோர்ட்டுக்கு போய் பணம் கட்டின பிறகுதான் செல்போன் கைக்கு வந்தது...

    சத்தம் ரொம்ப அதிகமா இருக்குங்க...

    என்ன சத்தம்...?

    ரீல் விடற சத்தம்தான்...

    திலோ! இது ரீல்ன்னு சொல்றியா?

    பின்னே...! எனக்கு போன் பண்ண நேரமில்லைன்னு டைரக்டா சொல்லிட்டு போக வேண்டியதுதானே... அதை விட்டுட்டு டெக்சாஸ் போலீஸை ஏன் இழுக்கறீங்க...?

    சரி...! ஃபேக்ஸ் பண்ணட்டுமா?

    எதை...?

    நான் கோர்ட்ல கட்டின நூறு டாலர் ஃபைனுக்கு டெக்சாஸ் டிராஃபிக் கோர்ட் ஒரு ரசீது கொடுத்து இருக்காங்க. அதை ஒரு பத்து நிமிஷத்துக்குள்ளே ஃபேக்ஸ் பண்றேன். பார்த்துக்க... நான் எப்பவும் எதுக்காகவும் பொய் சொல்லமாட்டேன்... தெரியுமா...?

    சரிங்க...! நான் உங்களை நம்பறேன்...

    அப்படி... வா... வழிக்கு...! மறுமுனையில் வாய்விட்டு சிரித்த மாறன் கேட்டான்.

    உன் வீட்ல இப்போ யாரும் இல்லை போலிருக்கே?

    அட... எப்படிக் கண்டு பிடிச்சிங்க...?

    வீட்ல யாராவது இருந்தா செல்போன்ல இவ்வளவு சத்தமா நீ பேச மாட்டியே... கம்பளியைப் போர்த்திகிட்டு தூங்கற மாதிரி கமுக்கமா பேசுவியே...!

    அப்பாவும் அம்மாவும் கல்யாண அழைப்புக்காக காஞ்சிபுரம் போயிருக்காங்க... திரும்ப ராத்திரியாயிடும். தங்கச்சி கண்மணி காலேஜுக்குப் போயிருக்கா... அவளும் காலேஜைவிட்டு வர எப்படியும் சாயந்தரமாயிடும்... வீட்ல இப்ப வேலைக்காரி கோகிலா மட்டும்தான். அவளுக்கும் ஒரு காதுதான் கேட்கும்...

    அப்படீன்னா இன்னிக்கு பூராவும் செல்போன்ல பேசிட்டிருக்கலாம்...

    நோ...

    ஏன் திலோ...?

    இனிமே நீங்க போன் பண்ணினாலும் சரி! நான் போன் பண்ணினாலும் சரி... பத்து நிமிஷத்துக்கு மேல பேசக்கூடாது...

    அதுதான் ஏன்...?

    அநாவசிய செலவுகளைக் குறைக்கணும்...

    என்ன திலோ...! கல்யாணம் பக்கத்துல வர வர புதுசு புதுசா கண்டிஷன் போடறே...?

    கண்டிஷன்ஸ் லிஸ்ட் இதோடு முடியலை... கைவசம் நிறைய இருக்கு...! கல்யாணம் முடிஞ்சு ஃபர்ஸ்ட் நைட்ல எல்லாத்தையும் சொல்றேன்...

    சரி... ஃபர்ஸ்ட் நைட்ல ‘அது’வாவது உண்டா?

    எது...?

    சத்தமா சொல்லட்டுமா... மெதுவா சொல்லட்டுமா?

    சத்தமாவே சொல்லுங்க...

    எம்.ஆர். ப்ளே...

    அப்படீன்னா...?

    " ‘எம்’ன்னா மன்மதன். ‘ஆர்’ ன்னா ரதி. ‘ப்ளே’ன்னா என்னான்னு

    Enjoying the preview?
    Page 1 of 1