Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கொல்லாமல் வராதே..!
கொல்லாமல் வராதே..!
கொல்லாமல் வராதே..!
Ebook84 pages26 minutes

கொல்லாமல் வராதே..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்த நீள் வட்ட வடிவ மேஜையை போலீஸ் பெரிய தலைகள் தெரிய, அவர்களுக்கு முன்னால் ஃபைல்களும் பேப்பர்களும் மொய்த்திருந்தன. எல்லாருடைய முகத்திலும் கடுகு வெடித்திருந்தது. தலைக்கு மேலே நாலைந்து உஷாக்கள் சுழன்று கொண்டிருந்தன. மேஜையின் கோடியிலிருந்த பிரதான நாற்காலி கமிஷனரின் வருகைக்காகக் காத்திருந்தது.
 மணி 10.10 ஆனபோது-
 கமிஷனர் உள்ளே வர-
 எல்லாரும் எழுந்து நின்றார்கள்.
 கமிஷனர் வடக்கத்திய சாயலை முகத்தில் பெற்றிருந்தார். கன்னத்து தசை மத்தளத்துத் தோல் மாதிரி இறுகிக் கிடந்தது. காதோர கிராப் நரையைத் தூவியிருந்தது. தீர்க்கமான கண்கள். புஷ்டியான மீசைக்குக் கீழே சின்ன உதடுகள், யூனிபார்மின் தோள்பட்டையிலும் மார்பிலும் நிறைய வெள்ளி சமாச்சாரங்கள்.
 இருக்கைக்கு முன்னாலிருந்த பேப்பர்களின் மேல் கொஞ்சநேரம் பார்வையை ஓடவிட்டார் கமிஷனர்.
 பின்- கண்களை உயர்த்தினார்.
 கரகரப்பான தம் குரலை வெளியிட்டார்.
 "போலீஸ்மென்! இந்த மீட்டிங்கோட நோக்கம் உங்களுக்கெல்லாம் தெரியும்... கடந்த மூணு வாரமா சிட்டியில் திருட்டு, கொள்ளை அதிகமாகிட்டு வருது... ஒரு கும்பல் முகமுடி அணிஞ்சுகிட்டு ராத்திரி நேரங்களில் வீடுகளில் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளை அடிச்சிட்டிருக்காங்க... இதுவரைக்கும் பல இடங்களில் இந்த முகமுடிக் கொள்ளை நடந்திடுச்சு... பெரும்பாலும் ரிமோட் ஏரியாவில் நடந்திட்டிருந்த இந்த கொள்ளை ரெண்டு மூணு நாளா சிட்டிக்குள்ளேயே ராம் நகர், ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ்னு பரவலா நடக்க ஆரம்பிச்சுடுச்சு... பட்நாம இதுவரைக்கும் அதை தடுக்கறதுக்காக எந்தவித முயற்சியும் மேற்கொண்ட மாதிரி தெரியலை..."
 ஒரு அதிகாரி எழுந்தார். நிமிர்த்தி வைத்த ஸ்கேல் மாதிரி நின்றார்.
 "எக்ஸ்க்யூஸ்மி... ஸார்..."
 "எஸ்..."
 "நாம முயற்சி எடுத்திருக்கிறோம் ஸார்... ராத்திரி நேரங்கள்ல போலீஸ் ரோந்தை அதிகப்படுத்தியிருக்கோம்... சந்தேகப் பட்டவங்களை உடனடியா விசாரிச்சிட்டிருக்கோம்..."
 கமிஷனர் மறுத்தலாய்த் தலையசைத்தார்.
 "இது சம்பந்தமா யாராவது ஒருத்தரை பிடிச்சிருக்கோமா? முகமுடிக் கொள்ளை குறைஞ்சிருக்கா? இல்லை. ஸோ, பொதுமக்கள், பத்திரிகை பார்வையைப் பொறுத்தவரை நாம் இதுவரைக்கும் கையைக் கட்டிட்டு சும்மா உட்கார்ந்திருக்கற மாதிரிதான் தோணும்... நாம ஸ்டெப்ஸ் எடுத்தும்கூட அவங்களைப் பிடிக்க முடியலையின்னா நாம எடுத்து இருக்கற ஸ்டெப் தப்புன்னு அர்த்தம்... வேற வழியில் அவங்களைப் பிடிக்க முயற்சி பண்ணனும்... என்ன செய்யலாம்?"
 கேட்டுவிட்டு நிறுத்தினார் கமிஷனர்.
 ஹால் முழுக்க நிசப்தம்.
 "லார்..."
 "எஸ்..."
 "அதுக்கு அந்தந்த ஏரியா இன்ஸ்பெக்டர்கள் கொஞ்சம் ரெஸ்பான்ஸ் எடுத்துக்கணும்... பொதுமக்களோட ஒத்துழைப்பை பெறணும்..."
 "எப்படி?"
 "ஏதாவது ரிவார்டு அனௌன்ஸ் பண்ணலாம்…"
 "ஓ.கே... நெக்ஸ்ட்...? எனி வேல்யுபிள் சஜஷன்?"டுத்தடுத்து-
 ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கருத்துக்களைச் சொல்ல ஆரம்பித்தார்கள். எல்லாவற்றையும்- பரிசீலனைக்குக் கொண்டு வந்து செயல் வடிவம் கொடுக்க முனைந்தார்கள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 4, 2024
ISBN9798224542673
கொல்லாமல் வராதே..!

Read more from Rajeshkumar

Related to கொல்லாமல் வராதே..!

Related ebooks

Related categories

Reviews for கொல்லாமல் வராதே..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கொல்லாமல் வராதே..! - Rajeshkumar

    1

    காலை ஆறு மணி.

    கிழக்கில் யாரோ சுவிட்ச் போட்டுவிட்ட மாதிரி சிவப்பாய் சூரிய பல்பு எரிய ஆரம்பித்திருந்தது. ரத்தத்தில் நனைந்த பஞ்சுகளை நினைவுபடுத்துகிற தினுசில் வானப் பிரதேசத்தில் அங்கங்கே மேகத் துணுக்குகள், லேசான குளிர்காற்று. மருதமலையின் கோயில் பிரகாரம் அவ்வளவாக ஜன சந்தடி இல்லாமல் இருந்தது.

    சன்னதிக்கு முன்பாக அந்த சின்ன கும்பல் கூடியிருந்தது. ஆர்வமில்லாத முகங்கள்.

    கும்பலுக்கு நடுவே-மாலையும் கழுத்துமாய் நின்றிருந்தார் மகேந்திரன். சராசரி உயரமுள்ள மகேந்திரனுக்கு அறுபதுக்கு இரண்டு வருஷம் குறைவான வயது. முப்பத்தைந்து சதவீதம் வழுக்கை வாங்கியிருந்த தலைப் பிரதேசத்தில் இருந்த சொற்ப முடியும் நரை வாங்கியிருந்தது. தங்கப் ஃபிரேம் கண்ணாடி கண்களை கவ்வியிருக்க-அந்த வயதிலும் கண்களில் ஒரு லேசர் கூர்மை தெரிந்தது. அதிகமாய் புன்னகைக்கிற போது ஒரே ஒரு பல் மட்டும் தங்க டாலடித்தது. பணத்தை வாரிக்கொட்டும் ரஞ்சிதா மெடிகல்ஸ் கம்பெனியின் எம்.டி.

    கர்ப்பக் கிரகத்துக்குள்ளிருந்து வெளிப்பட்டார் அந்த மித வயது அர்ச்சகர். கையில் இருந்த பூக்கூடையில் தேங்காய், பழம் இத்யாதிகள்.

    பொண்ணு, மாப்பிள்ளையைக் கூப்பிடுங்கோ...

    அர்ச்சகர் சொல்ல –

    மகேந்திரன் திரும்பினார்.

    கொஞ்சம் தள்ளி நின்றிருந்த சுவர்க்காவைப் பார்த்தார்.

    அந்த சுவர்க்கா ஒரு இருபத்தியொரு வயது கவிதையாய் தெரிந்தாள். படபடக்கிற பெரிய விழிகளில் ஒரு உப மின்நிலையம் உட்கார்ந்திருந்தது. நிமிண்ட தூண்டுகிற நாசி, யோசித்து கீழே இறங்கியிருந்தது. சின்ன சிவப்பு ரப்பர் துண்டுகளாய் ஈரப்பட்ட உதடுகள். சுவர்க்கா புன்னகை செய்தால் வரிசை இழக்காத கோர்த்த பற்கள் ‘பளிச்’சடிக்கும்.

    சுவர்க்கா...

    மகேந்திரன் அழைக்க-

    தாழ்த்தியிருந்த தலையை உயர்த்தித் திருப்பினாள். கண்கள் படபடத்தன.

    இங்கே வாம்மா...

    சுவர்க்கா நடையைப் பெயர்த்து அவர் அருகே வந்தாள். கழுத்து மாலையை சரி செய்து கொண்டாள். மாலைக்கு உள்ளே புதைந்திருந்த சற்று முன் கட்டப்பட்ட தாலிக்கொடி பூசிய மஞ்சளோடு தெரிந்தது.

    இரண்டு பேருமாய் அர்ச்சகர் அருகே வர-

    பூக்கூடையை நீட்டி-

    ‘ஆயுள் ஆரோக்ய, ஜஸ்வர்ய சம்பத்து நமஹ’

    வாழ்த்தினார். தட்டில் நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்துப் போட்ட மகேந்திரன் தலையசைத்தார்.

    அப்ப நாங்க வரட்டுமா அர்ச்சகரே...

    ம்...சந்தோஷமா போய்ட்டு வாங்க...

    பின்னால் திரும்பி நண்பர்களிடம் கைகூப்பினார் மகேந்திரன்

    என்னோட அழைப்புக்கு மதிப்பு கொடுத்து எளிமையா நடந்த இந்த கல்யாணத்துக்கு வந்திருந்த உங்க அனைவர்க்கும் என்னோட நன்றி. சாயந்தரம் எல்லோரும் வீட்டுக்கு வந்து நான் தர்ற பார்ட்டியில கலந்துக்கணும்...

    அவர்கள் தலையசைக்க-

    மகேந்திரன் சுவர்க்காவோடு நடந்தார். பிரகாரத்தைக் கடந்து வெளியே வந்தார்கள். கீழே பனிரெண்டு கி. ட்டருக்கு அப்பால் கோவை நகரத்தின் வீடுகள், கட்டிடங்கள் சின்னச் சின்னப் புள்ளிகளாய்த் தெரிந்தன. சதுரம் சதுரமாய் பச்சை தீற்றியிருந்த வயல்வெளிகள் கண்ணுக்குத் தட்டுப்பட்டன. பாரதியார் பல்கலைக் கழக கட்டிடங்கள் சூரியனின் ஆரஞ்சு நிற வெளிச்சத்தில் ஒரு அரண்மனை மாதிரி தெரிந்தது.

    படிக்கட்டுகளைக் கடந்து- கார் பார்க்கிங்குக்கு வந்தார்கள். ஐந்தாறு டாக்ஸிகள், ஒன்றிரண்டு மினி வேன்கள் ஒரு மரத்தின் ஓரமாய் இளைப்பாறிக்கொண்டிருந்தன.

    கொஞ்சம் தள்ளி-

    மகேந்திரனின் ரத்த நிற மாருதி கார் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க-

    அதைச் சமீபித்தார்கள்.

    மகேந்திரன் முன் கதவைத் திறந்துவிட்டார்.

    உக்காரு... சுவர்க்கா...

    சுவர்க்கா உள்ளே நிரம்பினாள். கதவைச் சாத்திவிட்டு பானட்டைச் சுற்றிக்கொண்டு டிரைவிங் இருக்கைக்கு வந்தார். இக்னிசியன் துவாரத்தில் சாவியை சொருகினார்.

    மாலையை பின்னாடி சீட்ல வச்சிடலாமா...?

    கேட்டபடியே கையிலிருந்த மாலையை பின் ஸீட்டில் போட்டார். சுவர்க்காவின் கையிலிருந்த மாலையையும் வாங்கி பின்னால் போட்டுவிட்டு

    சாவியைத் திருகினார்.

    சின்ன உறுமலுக்குப் பின் ஸ்டார்ட் ஆனது. ஆக்ஸிலேட்டரில் காலை வைத்தார். கார் முழுக்க ரோஜா மணம்.

    கார் மலைப் பாதையைப் பற்றிக் கொண்டு கீழே

    Enjoying the preview?
    Page 1 of 1